'புஷ்பா 2' சாமி பாடல் ஸ்டெப்புக்கு நடனம் ஆடிய ஹன்சிகா... வீடியோ வைரல்

தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில் வெளியான 'சாமி...' பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில் வெளியான 'சாமி...' பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
'புஷ்பா 2' சாமி பாடல் ஸ்டெப்புக்கு நடனம் ஆடிய ஹன்சிகா... வீடியோ வைரல்
Published on

கடந்த 2021-ம் ஆண்டு அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான திரைப்படம் 'புஷ்பா தி ரைஸ்'. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சுனில், பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். இந்த படம் அனைத்து மொழி ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று கிட்டத்தட்ட ரூ.400 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது. அதேசமயம், இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்களும் ரசிகர்களிடம் பெரிதும் கவனம் பெற்றன. இந்த படத்தின் பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து, புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது.

'புஷ்பா 2 தி ரூல்' என்ற தலைப்பில் உருவாகி வரும் இந்த படம் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் 'புஷ்பா 2 தி ரூல்' படத்தின் டீசரும் அதனைத் தொடர்ந்து படத்தின் 'புஷ்பா புஷ்பா' என்ற முதல் பாடலின் லிரிக் வீடியோவும் வெளியாகி வைரலானது. படம் வெளியாக இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில், படத்திற்கான புரோமோஷன் வேலைகளையும் படக்குழு தொடங்கியுள்ளது. தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில் வெளியான 'சாமி...' பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

இந்தப் பாடலின் ஹூக் ஸ்டெப்புக்கு ரசிகர்கள் பலரும் நடனம் ஆடி வீடியோ பகிர்ந்து வந்தனர். இந்த டிரெண்டில் தற்போது ஹன்சிகாவும் இணைந்துள்ளார். ராஷ்மிகாவின் சாமி ஹூக் ஸ்டெப்புக்கு பாவாடை, தாவணியில் நடனம் ஆடி அசத்தி இருக்கிறார். இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com