search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செல்பி"

    • திருப்பதி உயிரியல் பூங்காவில் செல்பி எடுக்க சிங்கம் இருக்கும் பகுதியில் குதித்த நபர், சிங்கம் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார்
    • இந்த உயிரியல் பூங்காவில் ஒரு பெண் சிங்கம், 2 ஆண் சிங்கங்கள் என மொத்தம் 3 சிங்கங்கள் உள்ளன.

    திருப்பதி உயிரியல் பூங்காவில் செல்பி எடுக்க சிங்கம் இருக்கும் பகுதியில் குதித்த நபர், சிங்கம் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து பார்வையாளர்களை உடனடியாக பூங்காவில் இருந்து வெளியேற்றி, சிங்கத்தை கூண்டில் அடைத்தனர்

    ஆந்திர மாநிலம் திருப்பதியில் ஸ்ரீவெங்கடேஸ்வரா உயிரியல் பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவில் ஏராளமான வனவிலங்குகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் டிக்கெட் எடுத்து உயிரியல் பூங்காவுக்குள் சென்று வனவிலங்குகளை நேரில் பார்த்து ரசிக்கலாம். இந்த பூங்காவில் வழக்கம்போல் இன்றும் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

    இந்த உயிரியல் பூங்காவில் ஒரு பெண் சிங்கம், 2 ஆண் சிங்கங்கள் என மொத்தம் 3 சிங்கங்கள் உள்ளன. இந்நிலையில் சிங்கங்கள் அடைக்கப்பட்டுள்ள இடத்தில் தடுப்புகளை தாண்டி இளைஞர் ஒருவர் உள்ளே குதித்தார். இதை அங்கிருந்த ஊழியர் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

    இதற்கிடையே அந்த நபர் சிங்கத்தின் அருகே சென்று ‛செல்பி' எடுக்க முயன்றார். இந்த வேளையில் துங்கார்பூர் என்ற பெயர் கொண்ட ஆண் சிங்கம் அவரது கழுத்தை ஆக்ரோஷமாக கடித்தது. இதனால் அவர் அலறினார். இதை பார்த்த ஊழியர் மற்றும் சக பார்வையாளர்கள் கூச்சலிட்டனர். ஆனால் சிங்கம் அவரை விடவில்லை. சிங்கத்திடம் இருந்து தப்பித்து மரத்தில் ஏற அந்த நபர் முயன்றார். ஆனால் சிங்கத்தின் பிடியில் இருந்து அவரால் விடுபட முடியவில்லை. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இதையடுத்து வனஊழியர்கள், உயிரியல் பூங்கா ஊழியர்கள், காவல்துறையினர் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டனர். சிங்கம் தாக்கி இறந்த நபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.

    விசாரணையில் திருப்பதி ஸ்ரீவெங்கடேஸ்வரா உயிரியல் பூங்காவில் சிங்கம் தாக்கி பலியான நபர் ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டம் பன்சூர் பகுதியை சேர்ந்த பிரகலாத் குஜ்ஜார் என்பதும், அவருக்கு வயது 34 என்பதும் தெரியவந்தது. இந்த சம்பவம் இன்று திருப்பதி ஸ்ரீவெங்கடேஸ்வரா உயிரியல் பூங்காவில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

    • ஸ்டிர்லிங் தனது செல்பி புகைப்படத்தை பகிர்ந்ததை கண்ட போலீசார் அதன் மூலம் அவரது இருப்பிடத்தையும் கண்டுபிடித்தனர்.
    • கைதானவரிடம் இருந்து ஏராளமான செல்போன்கள் மற்றும் கஞ்சா, நூற்றுக்கணக்கான போதை மாத்திரைகள், சிக்னல் ஜாமர் கருவி ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இங்கிலாந்து நாட்டில் உள்ள எசெக்ஸ் பகுதியை சேர்ந்தவர் டேரன் ஸ்டிர்லிங். 58 வயதான இவர் மீது போதைப்பொருள் வினியோகம் செய்த வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகளில் தலைமறைவாக இருந்த அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்நிலையில் சமீபத்தில் ஸ்டிர்லிங் ஆன்லைனில் சட்ட விரோதமான பொருட்களை பரிமாறி கொள்வதற்காக பயன்படுத்தப்படும் என்க்ரோசாட் தளத்தில் தனது 'செல்பி' புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில், அவர் ஒரு கப்பலில் மேல் சட்டை அணியாமல் இருந்தார். இதற்கிடையே போலீசார் ஸ்டிர்லிங்கை பிடிப்பதற்காக என்க்ரோசாட் தளத்தை கண்காணித்து வந்த நிலையில் ஸ்டிர்லிங் தனது செல்பி புகைப்படத்தை பகிர்ந்ததை கண்ட போலீசார் அதன் மூலம் அவரது இருப்பிடத்தையும் கண்டுபிடித்தனர்.

    அதன்படி கப்பலில் பதுங்கி இருந்த அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஏராளமான செல்போன்கள் மற்றும் கஞ்சா, நூற்றுக்கணக்கான போதை மாத்திரைகள், சிக்னல் ஜாமர் கருவி ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • கிராம மக்களிடம் சிக்கி தவித்த சிறுத்தையை மீட்டு இந்தூரில் உள்ள வன பூங்காவுக்கு கொண்டு சென்றனர்.
    • சிறுத்தை கூண்டுக்குள் அடைக்கபட்டு அதற்கு தேவையான மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்தூர்:

    மத்திய பிரதேச மாநிலம் தேவாஸ் மாவட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன.இந்த வனப்பகுதியில் இருந்த நோயால் பாதிக்கப்பட்ட சிறுத்தை ஒன்று அருகில் உள்ள இக்லேரா கிராமத்திற்குள் புகுந்தது.

    அந்த சிறுத்தை நடக்க முடியாமல் கஷ்டப்பட்டு மெதுவாக சென்றது. இதை பார்த்த அக்கிராமத்தை சேர்ந்த சிலர் அந்த சிறுத்தை அருகில் சென்றனர். பின்னர் அந்த சிறுத்தையை சுற்றி நின்று கொண்டு அதன் வேதனையை பற்றி கவலைப்படாமல் கைத்தட்டி சிரித்தனர். மேலும் அதனை கையால் தள்ளி சித்ரவதை செய்தனர். அந்த சிறுத்தையுடன் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.

    அந்த கும்பலை சேர்ந்த ஒருவர் சிறுத்தை மீது ஏறி சவாரி செய்யவும் முயன்றார். இதை பார்த்த சிலர் அந்த கும்பலிடம் இது போன்று செய்யாதீர்கள், பாவம் சிறுத்தை உடல் நலம் சரியில்லாமல் உள்ளது என்று கூறினார்கள், ஆனாலும் அதை பற்றி கவலைப்படாமல் அவர்கள் தொடர்ந்து சிறுத்தையை கொடுமை படுத்துவதிலேயே மும்முரமாக இருந்தனர்.

    மேலும் ஒரு சிலர் அந்த சிறுத்தையை ஊருக்குள் கொண்டு செல்ல வேண்டும் என்று கூறினார்கள். ஆனால் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் அதனை காட்டுக்குள் விரட்ட முயன்றனர். இது பற்றி தகவல் கிடைத்ததும் வனத் துறையினர் விரைந்து சென்று கிராம மக்களிடம் சிக்கி தவித்த சிறுத்தையை மீட்டு இந்தூரில் உள்ள வன பூங்காவுக்கு கொண்டு சென்றனர்.

    அந்த சிறுத்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு 24 மணி நேரமும் கண் காணிக்கப்பட்டு வருகிறது. சிறுத்தை கூண்டுக்குள் அடைக்கபட்டு அதற்கு தேவையான மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கிராம மக்கள் சிறுத்தையை கொடுமைப்படுத்தும் காட்சிகள் சமூக வலை தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கோவிலுக்கு சென்று நீண்ட நேரம் ஆகியும் திரும்பாத அமித்குமாரை தேடி அவரது நண்பர்கள் சென்றபோது அவர் மலை மீது இருந்து தவறி விழுந்தது தெரியவந்தது.
    • 30 அடி ஆழத்தில் விழுந்த அமித்குமாரை 3 மணி நேரம் கடுமையாக போராடி மீட்டனர்.

    கிருஷ்ணகிரி:

    உத்தரபிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்தவர் அமித்குமார் (வயது 25).

    இவர் தற்போது கிருஷ்ணகிரியில் தங்கி பழைய பேட்டையில் உள்ள மரக்கடையில் வேலை பார்த்து வருகிறார்.

    இவர் நேற்று மாலை காட்டிநாயனப்பள்ளி முருகன் கோவிலுக்கு சென்றுள்ளார்.

    அப்போது கோவில் பின்புறம் உள்ள மலையில் ஏறிய அவர், செல்பி எடுக்க முயன்ற போது தவறி விழுந்துள்ளார்.

    இதில் அவருக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளது. அவரது மொபைலும் உடைந்துள்ளது.

    கோவிலுக்கு சென்று நீண்ட நேரம் ஆகியும் திரும்பாத அமித்குமாரை தேடி அவரது நண்பர்கள் சென்றபோது அவர் மலை மீது இருந்து தவறி விழுந்தது தெரியவந்தது.

    இது குறித்து தகவலறிந்த கிருஷ்ணகிரி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    தீயணைப்பு துறை நிலைய அலுவலர் வெங்கடாசலம் தலைமையில் சற்குணம், ராஜி, இளவரசன், மஞ்சூர் அஹமத், அன்பு, நவீன் குமார் ஆகிய தீயணைப்பு வீரர்கள் செங்குத்தான பகுதியில், 30 அடி ஆழத்தில் விழுந்த அமித்குமாரை 3 மணி நேரம் கடுமையாக போராடி மீட்டனர்.

    பின்னர் அவரை தீயணைப்பு படை வீரர்கள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    இன்று அதிகாலை 3 மணியிலிருந்து காலை 6.30 மணி வரை அமித்குமாரை மீட்கும் பணியில் தீயணைப்பு படை வீரர்கள் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

    • அனைவரும் வீடுகளில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    • புகைப்படத்தை இதற்கென உருவாக்கப்பட்டுள்ள hargartiranga.com என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும்

    புதுடெல்லி:

    ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினவிழாவையொட்டி அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள், வணிக நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் தேசிய கொடி ஏற்றப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு 75-வது ஆண்டு சுதந்திரதின பவள விழாவையொட்டி தேச பக்தியை வெளிப்படுத்தும் வகையில் பொது மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என மத்திய அரசு வேண்டுகோள் விடுத்தது.

    அதன்படி கடந்த ஆண்டு நாடு முழுவதும் பெரும்பாலானவர்கள் தங்கள் வீடுகளில் தேசிய கொடி ஏற்றி உற்சாகத்துடன் கொண்டாடினார்கள்.

    அதே போல இந்த ஆண்டு சுதந்திரதினவிழா 75- வது ஆண்டு நிறைவுவிழாவை முன்னிட்டு அனைவரும் வீடுகளில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதற்கான கொண்டாட்டம் வருகிற 13-ந்தேதி தொடங்கி 15- ந்தேதி வரை 3 நாட்கள் நடைபெறுகிறது.

    இந்த விழாவை கொண்டாட இப்போது இருந்தே பொதுமக்கள் தயாராகி வருகின்றனர். இதற்காக தபால் நிலையங்கள் மூலம் தேசிய கொடிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு தேசிய கொடி ரூ.25-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னை மண்டலத்தில் உள்ள தபால் நிலையங்களில் 4.50 லட்சம் தேசிய கொடிகள் விற்பனைக்காக வைக்கப்பட்டு உள்ளது. பொது மக்கள் ஆர்வத்துடன் தேசிய கொடிகளை வாங்கி செல்கின்றனர்.

    இந்நிலையில் அனைத்து அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சுதந்திரதினத்தையொட்டி தங்கள் வீடுகளில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இது தொடர்பாக மத்திய கலாச்சாரதுறை சார்பில் அனைத்து அரசு துறை அலுவலகங்களுக்கும் கடிதம் அனுப்பி உள்ளது.

    நாடு சுதந்திரம் அடைந்து 75- வது ஆண்டு நிறைவு பெறுவதை கொண்டாடும் வகையிலும், பொதுமக்களிடம் தேச பக்தி மற்றும் தேசிய கொடி பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் 3 நாட்கள் நடைபெறும் கொண்டாட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து வீடுகளிலும் மூவர்ண கொடியை ஏற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    அரசு ஊழியர்கள் தங்கள் வீடுகளில் ஏற்றப்படும் தேசிய கொடியுடன் செல்பி எடுத்து அந்த புகைப்படத்தை இதற்கென உருவாக்கப்பட்டுள்ள hargartiranga.com என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும் என்றும் கலாச்சார அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.

    • மூத்த தலைவர்களை முந்தியடிக்கும் வகையில் அண்ணாமலையின் நடைபயணம் அமைந்திருந்தது.
    • இஸ்லாமியர்களுக்கு எதிரான கட்சியாக எதிர்க் கட்சிகளால் குத்தப்பட்ட முத்திரையை தகர்த்தெறியும் வகையில் அவரது செயல்பாடுகள் இருந்தன.

    ராமநாதபுரம்:

    2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான சுய பரிசோதனையாக என் மண், என் மக்கள் நடைபயணத்தை தொடங்கியுள்ள தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தேசத்தையும், தேசியத்தையும் மதிக்கும் மண்ணான ராமநாதபுரத்தில் பிரதமர் மோடி போட்டியிட்டு மீண்டும் பிரதமராக பொதுமக்கள் சூளுரைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

    ஆன்மீக பூமியான ராமேசுவரத்தில் நேற்று முன்தினம் மத்திய மந்திரி அமித்ஷா தொடங்கி வைத்த இந்த பிரமாண்ட நடைபயணம் நேற்று இரண்டாவது நாளில் சற்றும் தளர்வின்றி, மிகுந்த உற்சாகத்துடன் நடைபெற்றது. ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோவில் பகுதியில் தொடங்கி கேணிக்கரை வழியாக அரண்மனை வாசலை அடைந்தது.

    சுமார் 5 கி.மீ. தூரம் நடைபெற்ற இந்த நடைபயணத்தில் அண்ணாமலையுடன் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டு வந்தனர். மூத்த தலைவர்களை முந்தியடிக்கும் வகையில் அண்ணாமலையின் நடைபயணம் அமைந்திருந்தது. காரணம் வழிநெடுகிலும் பெண்கள், தொண்டர்கள் என பல்வேறு தரப்பினர் மலர்களை தூவி வரவேற்றனர்.

    ஆனால் அண்ணாமலை ஒரு மாநில தலைவர் என்பதை மறந்து, மக்களோடு மக்களான கலந்தார். அதேபோல் செல்லும் வழியெல் லாம் தன்னுடன் செல்பி எடுக்க வந்தவர்களிடம் சிரித்த முகத்துடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார். ஒரு சிலரிடம் அவர்களின் செல்போனை வாங்கி, அவர்களை அருகில் அழைத்து நிற்கவைத்து தானே செல்பி போட்டோ எடுத்து அசரவவைத்தார்.

    நடந்து சென்ற தூரம் 5 கி.மீ. என்றாலும் சற்றும் ஆர்வம் குறையாத அண்ணாமலை யாருடனும் முகம் சுழிக்காமல், முக மலர்ச்சியோடு பேசினார். அதேபோல் இஸ்லாமியர்களுக்கு எதிரான கட்சியாக எதிர்க் கட்சிகளால் குத்தப்பட்ட முத்திரையை தகர்த்தெறியும் வகையில் அவரது செயல்பாடுகள் இருந்தன. நடைபயணத்தின் போது தன்னை நோக்கி வந்த இஸ்லாமிய பெண்கள், கிறிஸ்தவ பெண்களிடம் கை குலுக்கியும், நலம் விசாரித்தும் குறைகளை கேட்டறிந்த அண்ணாமலை, அனுபவத்தில் மிளிர்ந்தார்.

    அத்துடன் வழியெங்கிலும் அண்ணாமலையை வரவேற்ற கட்சியினர், பெண்கள் தங்களுடன் அழைத்து வந்த குழந்தையை கொடுத்து வாழ்த்த சொன்னார்கள். அப்போது குழந்தைகளை தூக்கி கொஞ்சி மகிழ்ந்த அண்ணாமலை அவர்களுக்கு பரிசு பொருட்களையும் வழங்க தவறவில்லை.

    மொத்தத்தில் பல்வேறு தலைப்புகளில் நடைபயணம் மேற்கொண்ட முன்னோர்கள், தலைவர்களை பின்னுக்கு தள்ளும் அளவுக்கு அண்ணாமலையின் நடைபயணம் அமைந்திருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். நடைபயணம் தொடங்கியதில் இருந்து முடிவடைந்த 5 கி.மீ. தூரமும் மிகவும் எளிமையாகவும், நெருங்கியும் வந்த அண்ணாமலை, 3-வது நாளான இன்று முதுகுளத்தூரில் காலை 9.30 மணிக்கு நடைபயணத்தை தொடங்கினார்.

    அங்குள்ள செங்கியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அவர்கள் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். மாலையில் பரமக்குடியில் நடைபயணம் மேற் கொள்கிறார்.

    • பொதுமக்கள், கலைஞர் நூலகத்திற்கு சுற்றுலா தலம் செல்வது போல் இரவிலும் படையெடுத்தனர்.
    • குழந்தைகளுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

    மதுரை

    மதுரை புதுநத்தம் சாலை–யில் ரூ.216 கோடி மதிப்பீட் டில், 8 தளங்கள், நவீன வசதிகளுடன் கூடிய கலை–ஞர் நூற்றாண்டு நூலகம் உலகம் தரம் வாய்ந்த அள–வில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று மாலை நடைபெறு–கிறது.

    இந்நிலையில் பிரமாண்ட–மாக கட்டப்பட்டுள்ள கலை–ஞர் நூலக திறப்பு விழாவை முன்னிட்டு நூலகத்தை சுற் றிலும் லேசர் ஒளிரும் விளக்குகளாலும், நூலகத் தில் சுற்றுச்சுவர் தொடங்கி நூலகத்தில் சுற்று வட்டார பகுதி முழுவதும் வண்ண, வண்ண அலங்கார விளக்கு–களால் அலங்கரிக்கப்பட்டுள் ளது.

    இதனால் இரவில் மின் னொளியில் ஜொலித்த தென்னகத்தின் புத்தக களஞ்சியமாக மாறியுள்ள கலைஞர் நூற்றாண்டு நூல–கத்தின் வெளிப்புறத்தை கண்டு ரசிக்க ஏராளமான பெண்கள், இளைஞர்கள், குழந்தைகள் இரவிலும் சுற்றுலா தலங்களுக்க செல் வதுபோல் படையெடுத்து வந்தனர். ஒவ்வொருவரும் மின்னொளியில் ஜொலித்த கலைஞர் நூலகத்தின் முன் பாக குழந்தைகள், குடும்பத் தினருடன் செல்பி மற்றும் புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர்.

    இன்று மாலை திறக்கப்ப–டவுள்ள நிலையில் குழந்தை–களுக்கான பிரத்யேக நூலக பிரிவு உள்ளே வாகனங்க–ளுடன், விமானத்தில் அமர்ந்து படிப்பது போன் றும், இயற்கை சூழலி்ல் படிப்பது போன்ற அமைப்பு–களும் மற்றும் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியுடன் உரை–யாற்றுவது போன்ற தொழில் நுட்பத்தில் உரு–வாக்கப்பட்ட மெய்நிகர் அறையும் உள்ளது.

    அதனை காண்பதற்காக–வும், கலைஞர் நூலகத்தில் உள்ள லட்சக்கணக்கான நூல்களை பார்க்கவும், படிக்கவும் ஆர்வத்தோடு மதுரை மட்டுமின்றி தென் மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் எதிர்பார்ப்போடு காத்தி–ருக்கி–றார்கள்.

    • 3 பேர் சாலையோரம் நின்று தங்களது செல்போனில் ‘செல்பி’ எடுத்து கொண்டிருந்தனர்.
    • அந்த வழியாக கூட்டமாக சென்ற யானைகள் 3 பேரையும் விரட்டி உள்ளன.

    உத்தர பிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் கெரி மாவட்டத்தில் துத்வா புலிகள் சரணாலய பகுதி வழியாக 3 பேர் சென்றுள்ளனர். நேபாளத்திற்கு செல்லும் வழி பாதையான இப்பகுதி வழியாக வன விலங்குகள் கூட்டமாக செல்வது வழக்கம். இந்நிலையில் இவ்வழியாக சென்ற 3 பேர் சாலையோரம் நின்று தங்களது செல்போனில் 'செல்பி' எடுத்து கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக கூட்டமாக சென்ற யானைகள் 3 பேரையும் விரட்டி உள்ளன. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் 3 பேர் தலை தெறிக்க ஓடி உள்ளனர். இதை அந்த வழியாக சென்ற ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே இந்த பகுதியில் யானைகள் கூட்டமாக செல்லும் போது அவைகளுக்கு இடையூறு விளைவிக்க கூடாது என்று வனத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை செய்திருந்தனர். இந்நிலையில் தற்போது நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து இணைய பயனர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

    • ரெயில் தண்டவாளத்தில் நின்று செல்போனில் செல்பி எடுத்துள்ளனர்.
    • விதிகளை மீறி தண்டவாளத்தை கடந்து சென்றாலோ, தண்டவாளத்தில் நின்று செல்பி எடுக்க முயன்றாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருப்பூர் ரெயில்வே போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    திருப்பூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த தாமரைக்கரையைச் சேர்ந்தவர் பாண்டியன் (23).இவரது நண்பர் அதே ஊரைச் சேர்ந்த விஜய் (23), இவர்கள் இருவரும் திருப்பூரில் உள்ள நிட்டிங் நிறுவனத்தில் தொழிலாளர்களாக பணியாற்றி வந்தனர்.

    இந்தநிலையில் நேற்று விடுமுறையை முன்னிட்டு இருவரும் அணைப்பாளையம் பகுதிக்குச் சென்றுள்ளனர். அப்போது ெரயில் தண்டவாளத்தில் நின்று செல்போனில் செல்பி எடுத்துள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த வழியாக வந்த ெரயில் மோதி இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

    இதுகுறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த திருப்பூர் ரெயில்வே காவல் துறையினர் இருவரது உடலையும் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    நேற்று விடுமுறை என்பதால் பாண்டியன், விஜய் இருவரும் நண்பர்களுடன் சேர்ந்து ரெயில் தண்டவாளம் பகுதிக்கு வந்துள்ளனர். அங்கு மது அருந்திய பின்னர் பாண்டியன், விஜய் மட்டும் ரெயில் வரும்போது ரெயிலுடன் சேர்த்து 'செல்பி' எடுக்க வேண்டும் என்று முடிவு செய்து தண்டவாளத்தை ஒட்டி நின்றுள்ளனர்.

    அப்போது நெல்லையில் இருந்து பிலாஸ்பூர் செல்லும் பிலாஸ்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் 2 பேர் மீதும் மோதியது. இதில் பாண்டியன், விஜய் இருவரும் தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    2 பேரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரெயில் மோதி பலியான 2 பேரின் உடல்களை பார்த்து அவர்களுடன் வந்த நண்பர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதது பரிதாபத்தை ஏற்படுத்தியது.'செல்பி' மோகத்தால் வாலிபர்கள் 2 பேர் ரெயில் மோதி பலியான சம்பவம் திருப்பூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    எனவே விதிகளை மீறி தண்டவாளத்தை கடந்து சென்றாலோ, தண்டவாளத்தில் நின்று செல்பி எடுக்க முயன்றாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருப்பூர் ரெயில்வே போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    • நேற்று விடுமுறை என்பதால் பாண்டியன், விஜய் இருவரும் நண்பர்களுடன் சேர்ந்து ரெயில் தண்டவாளம் பகுதிக்கு வந்துள்ளனர்.
    • 2 பேரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் காலேஜ் ரோடு அணைப்பாளையம் பகுதியில் ரெயில் தண்டவாளம் அருகே வாலிபர்கள் 2 பேர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

    அப்போது அங்கு நின்றிருந்த வாலிபர்கள் சிலரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், ரெயில் மோதி இறந்த 2 பேர் ஈரோடு மாவட்டம் பர்கூர் பகுதியை சேர்ந்த பாண்டியன் (வயது 22), விஜய் (25) என்பது தெரிய வந்தது. அவர்கள் இருவரும் திருப்பூர் ரங்கநாதபுரம் பகுதியில் தங்கி, அங்குள்ள பனியன் நிட்டிங் நிறுவனத்தில் பணியாற்றி வந்ததும் தெரிய வந்தது.

    நேற்று விடுமுறை என்பதால் பாண்டியன், விஜய் இருவரும் நண்பர்களுடன் சேர்ந்து ரெயில் தண்டவாளம் பகுதிக்கு வந்துள்ளனர். பின்னர் அவர்கள் இருவர் மட்டும் ரெயில் வரும்போது ரெயிலுடன் சேர்த்து 'செல்பி' எடுக்க வேண்டும் என்று முடிவு செய்து தண்டவாளத்தை ஒட்டி நின்றுள்ளனர்.

    அப்போது திருநெல்வேலியில் இருந்து பிலாஸ்பூர் செல்லும் பிலாஸ்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் இருவர் மீதும் மோதியது. இதில் பாண்டியன், விஜய் இருவரும் தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    இதையடுத்து 2 பேரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து திருப்பூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    முன்னதாக ரெயில் மோதி பலியான 2 பேரின் உடல்களை பார்த்து அவர்களுடன் வந்த நண்பர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதது பரிதாபத்தை ஏற்படுத்தியது.

    • போலீஸ்காரர் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டார்.
    • பணக்குவியலுடன் போலீஸ் அதிகாரி ஒருவர் இருப்பது போன்ற படம் அவரது வேலைக்கும் வேட்டு வைத்துள்ளது.

    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் சந்திர சஹானி. போலீஸ் நிலைய பொறுப்பாளராக பணியாற்றி வந்த இவர் பண மூட்டைகளுடன் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் சமீபத்தில் எடுத்துக்கொண்ட செல்பி சமூக வலைதளங்களில் வைரலானது.

    அந்த படத்தில் ரமேஷ் சந்திர சஹானியின் மனைவி மற்றும் குழந்தைகள் 500 ரூபாய் நோட்டு கட்டுகளுடன் போஸ் கொடுத்தவாறு இருந்தனர்.

    இது தொடர்பாக சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் பணக்குவியலுடன் செல்பி எடுத்து அதை வெளியிட்ட போலீஸ் அதிகாரி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    இது தொடர்பான விமர்சனங்களும் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கின. இதையடுத்து அந்த போலீஸ்காரர் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டார். அப்போது அந்த போலீஸ் அதிகாரி தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் தனக்கு சொந்தமான சொத்து ஒன்றை விற்றதன்மூலம் கிடைத்த ரூ.14 லட்சம் பணம் என்று தெரிவித்தார்.

    மேலும், அவர் தன்னை நியாயப்படுத்தும் வகையிலான கருத்துகளை விசாரணையின்போது தெரிவித்துள்ளார். அந்த படம் கடந்த 2021 நவம்பர் மாதம் 14-ந்தேதி எடுக்கப்பட்டது என்றும், அது முறைகேடாக சம்பாதித்த பணம் இல்லை என்றும் தெரிவித்து இருந்தார்.

    ஆனாலும் பணக்குவியலுடன் போலீஸ் அதிகாரி ஒருவர் இருப்பது போன்ற படம் அவரது வேலைக்கும் வேட்டு வைத்துள்ளது.

    விசாரணை நிறைவில் போலீஸ் அதிகாரியான ரமேஷ் சந்திர சஹானி காவல் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி ஒருவரின் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அதில் போலீஸ்காரரின் மனைவி மற்றும் அவரது குழந்தைகள் நோட்டு மூட்டைகளுடன் உள்ளனர்.

    இந்த விவகாரத்தை நாங்கள் கவனத்தில் கொண் டுள்ளோம், அந்த போலீஸ் காரர் காவல் துறையின் சாதாரண பணிக்கு மாற்றப்பட்டுள்ளார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும்அவர் தெரிவித்துள்ளார்.

    • சுற்றுலா பயணிகள் அதிக அளவு வருவது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்
    • விதிகளை மீறும் சுற்றுலாப் பயணிகள் மீது வனத்துறை அபராதம் விதிக்க வேண்டும்.

    ஊட்டி

    ஊட்டி கூடலூர் சாலையில் தலைகுந்தா பகுதியில் அமைந்துள்ள பைன் மரக் காடு, பலநூறு ஆண்டுகள் பழமையான பைன் மரங்களின் தோப்பாகும்

    இந்த இடம் திரைப்படங்கள் மூலம் பிரபலமான சுற்றுலா தலம் ஆகும். இங்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவு வருவது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்

    மேலும் காமராஜர் அணை உள்ளது. இங்கு சுற்றுலா பயணிகள் விதியை மீறிய செயலில் ஈடுபட்டு வருகின்றனர் ஆபத்தை உணராமல் புகைப்படங்களை எடுப்பது அணையின் நீர் பிடிப்பு பகுதியில் உள்ள பாறையின் மேல் அமர்ந்து புகைப்படம் எடுப்பது போன்ற சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

    உயிர் சேதத்தை தவிர்க்கும் வகையில் புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுக்க வனதுறை தடை விதிக்கும் அறிவிப்பு பலகைகளை வைப்பதோடு கண்காணிப்பு பணியிலும் ஈடுபட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்

    ×