search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Selfi"

    • நாங்கள் இருவரும் 50 ஆண்டு கால நண்பர்கள் எனக்கு அவர் சகோதரர் மாதிரி
    • பொது இடத்தில சால்வையை தூக்கி எரிந்தது என்னுடைய தவறு. மன்னிப்பு கேட்கிறேன் என்று சிவகுமார் தெரிவித்துள்ளார்

    பொது இடத்தில் சால்வையை தூக்கி எறிந்தது என்னுடைய தவறுதான் மன்னிப்பு கேட்கிறேன் என நடிகர் சிவகுமார் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் சிவகுமாரும் அவரது நண்பரும் பேசியுள்ளனர்.

    அதில், "நான் சால்வையை தூக்கி எறிந்த நபர் வேறு யாருமில்லை. நாங்கள் இருவரும் 50 ஆண்டு கால நண்பர்கள் எனக்கு அவர் சகோதரர் மாதிரி. 1971-ல் மன்னார்குடியில் ஒரு நாடகத்தை தலைமை தாங்க போயிருந்தேன். அப்போதுதான் இவரை சந்திந்தேன். 1974-ல் நடைபெற்ற எனது திருமணதிற்கு இவர் வந்திருக்கிறார். பின்பு இவரின் கல்யாணத்தையே நான்தான் செய்து வைத்தேன். அதுமட்டுமில்லை அவரின் மகன், பேரன் திருமணத்திற்கும் நான் சென்றுள்ளேன்.

    பொது இடத்தில சால்வை அணிவிப்பது எனக்கு பிடிக்காது. ஆனாலும் பொது இடத்தில சால்வையை தூக்கி எரிந்தது என்னுடைய தவறு. மன்னிப்பு கேட்கிறேன்" என்று சிவகுமார் தெரிவித்துள்ளார்.

    இதற்கு முன்பு ஒருமுறை செல்பி எடுக்க முயன்ற ரசிகர் ஒருவரின் செல்போனை சிவகுமார் தட்டி விட்டது சர்ச்சையானது. அப்போதும் சிவகுமார் மன்னிப்பு கேட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • போல்டர் நகரில் 46,000 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய உயிரியல் பூங்கா அமைந்துள்ளது.
    • விலங்குகளின் நடமாட்டத்தை கண்காணிப்பதற்காக 9 ‘மோஷன் டிடெக்டிங்’ கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

    வாஷிங்டன் :

    அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தின் வடக்கு பகுதியில் உள்ள போல்டர் நகரில் 46,000 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய உயிரியல் பூங்கா அமைந்துள்ளது. இங்கு விலங்குகளின் நடமாட்டத்தை கண்காணிப்பதற்காக 9 'மோஷன் டிடெக்டிங்' கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

    இந்த கேமராக்கள் விலங்குகள் கடந்து செல்லும் போது புகைப்படங்கள் மற்றும் சிறிய வீடியோக்களை பதிவு செய்யும். பொதுவாக விலங்குகள் உணவு மற்றும் ஓய்வெடுக்கும் இடங்களைத் தேடி செல்லும்போது கேமராக்களில் பதிவாகும்.

    ஆனால் அங்குள்ள கரடி ஒன்று ஒவ்வொரு முறையும் வேண்டுமென்றே கேமராவுக்கு அருகில் வந்து நின்று, மனிதர்கள் செல்போனில் 'செல்பி' புகைப்படம் எடுப்பதுபோல விதவிதமான போஸ் கொடுத்து வருகிறது. ஒரு கேமராவில் பதிவான 580 படங்களில் கிட்டத்தட்ட 400 படங்கள் அந்த கரடியின் படங்கள் என பூங்கா ஊழியர்கள் ஆச்சரியத்துடன் கூறுகின்றனர். மேலும் கரடியின் 'செல்பி' படங்கள் சிலவற்றையும் டுவிட்டரில் அவர்கள் பகிர்ந்துள்ளனர். அவை தற்போது வைரலாக பரவி வருகின்றன.

    • ராமேசுவரம் பகுதியில் கடந்த சில நாட்களாக கடல் சீற்றமாக காணப்பட்டு வருகிறது.
    • போலீசார், சுற்றுலா பயணிகளை எச்சரித்து அனுப்பி வைத்த வண்ணம் இருந்தனர்.

    ராமேசுவரம் :

    தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. கடலோர பகுதிகளில் இன்னும் சில நாட்களுக்கு பலத்த சூறாவளி காற்று வீசும், கடல் சீற்றமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.

    ராமேசுவரம் பகுதியில் கடந்த சில நாட்களாக கடல் சீற்றமாக காணப்பட்டு வருகிறது. இதனால் ராமேசுவரம் பகுதியில் 4-வது நாளாக விசைப்படகு மற்றும் நாட்டுபடகு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல மீன் துறை அதிகாரிகளால் தடை விதிக்கப்பட்டது. பாம்பன், தங்கச்சிமடம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகுகள் மீன்பிடிக்க செல்லவில்லை.

    கடல் சீற்றத்தால் தனுஷ்கோடி எம்.ஆர்.சத்திரம் கடற்கரையில் உள்ள மீன் பிடி துறைமுகத்தில் மோதி கடல் அலைகள் பல அடி உயரத்திற்கு சீறி எழுந்து வருகின்றன.

    பாதுகாப்பு கருதி துறைமுக பகுதிக்குள் சுற்றுலா பயணிகள் செல்ல போலீசாரால் தடை விதிக்கப்பட்டு அங்கு தடுப்பு கம்புகளும் வைக்கப்பட்டு உள்ளன.

    ஆனால் நேற்று வந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் அந்த தடுப்புகளை அகற்றிவிட்டு துறைமுக பகுதிக்குள் உள்ளே சென்று கடல் அலை சீறி எழுவதை மிக அருகில் நின்று செல்பி எடுத்தபடி ஆபத்தான முறையில் வேடிக்கை பார்த்தனர். போலீசார், சுற்றுலா பயணிகளை எச்சரித்து அனுப்பி வைத்த வண்ணம் இருந்தனர்.

    ×