என் மலர்tooltip icon

    இந்தியா

    பாதுகாவலரின் கனவை நனவாக்கிய இன்ஸ்டா பிரபலம்
    X

    பாதுகாவலரின் கனவை நனவாக்கிய இன்ஸ்டா பிரபலம்

    • பாதுகாவலரை விமானத்தில் அழைத்து சென்றுள்ளார்.
    • பாதுகாவலரின் கனவை நனவாக்கிய சம்பவம் வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    ஒவ்வொருவரும் தங்களது கனவை நனவாக்கவே போராடுகின்றனர். ஆனால் இன்ஸ்டாகிராம் பிரபலம் ஒருவர் தனது பாதுகாவலரின் கனவை நனவாக்கிய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இன்ஸ்டாகிராம் மூலம் பிரபலமாகியவர்களில் அனிஷ்பகத் என்பவரும் ஒருவர் ஆவார். இவரிடம் பியாஸ்ஜி என்ற 65 வயதான முதியவர் ஒருவர் பாதுகாவலராக பணியாற்றி வந்தார்.

    தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் பியாஸ்ஜியை அறிமுகப்படுத்தி அவரிடம் அனிஷ்பகத், இந்த வயதில் ஏன் வேலை செய்கிறீர்கள் என கேட்கிறார். அதற்கு பியாஸ்ஜி, எனக்கு ஒரே ஒரு மகன் இருக்கிறான். ஆனால் அவன் என்னை கைவிட்டு விட்டான் என கூறுகிறார்.

    உடனே அவரிடம் அனிஷ்பகத் என்னை மகனாக கருதி கொள்ளுங்கள். உங்களுடைய ஆசை என்ன? என கேட்கிறார். அதற்கு பியாஸ்ஜி, அயோத்தி ராமர் கோவிலுக்கு செல்ல வேண்டும் என்பது தான் எனது கனவு என்கிறார்.

    உடனே பாதுகாவலரின் கனவை நனவாக்க அனிஷ்பகத் அயோத்திக்கு டிக்கெட் போட்டு தனது பாதுகாவலரை விமானத்தில் அழைத்து சென்றுள்ளார்.

    இது தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் பயனர்கள் பலரும் அனிஷ்பகத்தின் செயலை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    Next Story
    ×