என் மலர்

  நீங்கள் தேடியது "Fighting"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கணவர் அடிக்கடி குடித்து விட்டு வந்ததால் அவர்களுக்கிடையே சண்டை ஏற்பட்டது.
  • வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு மாட்டி தற்கொலை செய்து ெகாண்டார்.

  நீடாமங்கலம்:

  ஆடுதுறை தெற்கு அக்ரஹாரத்தை சேர்ந்தவர் ராஜகுரு. இவரது மனைவி இந்துமதி (வயது 24). இத்தம்பதிகளுக்கு திருமணம் ஆகி நான்கு ஆண்டுகள் ஆகிறது. 9 மாத ஆண் குழந்தை உள்ளது.

  கடந்த இரண்டு வருடங்களாக தனியாக வசித்து வந்த நிலையில் ராஜகுரு அடிக்கடி குடித்து விட்டு வந்ததால் அவர்களுக்கிடையே சண்டை ஏற்பட்டு இந்துமதி அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு அவரை சமாதானம் செய்து வீட்டிற்கு ராஜகுரு அழைத்து வந்துள்ளார். இதனிடையே இந்துமதி வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு மாட்டி தற்கொலை செய்தார். இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சிரியாவின் கடைசி பகுதியை ஐ.எஸ். பயங்கரவாதிகளிடம் இருந்து மீட்டெடுப்பதற்கு, அவர்களுடன் அமெரிக்க கூட்டுப்படைகள் கடும் சண்டையில் ஈடுபட்டுள்ளன.
  டமாஸ்கஸ்:

  உலகையே அச்சுறுத்தி வந்தவர்கள் ஐ.எஸ். பயங்கரவாதிகள். அமெரிக்க நகரங்களில் விமானங்களை மோதி தாக்குதல்களை நடத்தி உலகையே பதற வைத்த அல்கொய்தா பயங்கரவாதிகளை விட ஐ.எஸ். பயங்கரவாதிகள் மோசமானவர்கள் என்று அமெரிக்காவே ஒப்புக்கொண்டது.

  2 ஆண்டுகளுக்கு முன்னர் சிரியா, ஈராக் நாடுகளின் முக்கிய நகரங்களை ஐ.எஸ். பயங்கரவாதிகள் தங்கள் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தனர். அவர்களை ஒழித்துக்கட்டுவது என்பது உள்நாட்டுப்படைகளுக்கு கடினமான காரியம் என்பதை அமெரிக்கா உணர்ந்தது.

  இதனால் ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக அமெரிக்க கூட்டுப்படைகள் இவ்விரு நாடுகளிலும் களம் இறங்கின. உள்நாட்டுப்படைகளுடன் கரம் கோர்த்து நடத்திய தாக்குதல்களில் பெரிய அளவுக்கு அமெரிக்க கூட்டுப்படைகளுக்கு வெற்றியும் கிடைத்தது.

  அவை, பல முக்கிய நகரங்களை ஐ.எஸ். பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து மீட்டெடுத்து விட்டன. இது ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு பின்னடைவாக அமைந்தது.

  இருப்பினும் இவ்விரு நாடுகளிலும் இன்னும் 14 ஆயிரம் முதல் 18 ஆயிரம் ஐ.எஸ். பயங்கரவாதிகள் இருப்பதாக ஐ.நா. சபை புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

  சிரியாவைப் பொறுத்தமட்டில், கடந்த சில மாதங்களாக ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வந்த வட கிழக்கு பகுதியில் அமைந்துள்ள நகரங்கள், கிராமங்களில் அமெரிக்க கூட்டுப்படைகள், உள்நாட்டு படைகளுடன் கடும் தாக்குதல் நடத்தின.

  அங்கிருந்து ஐ.எஸ் பயங்கரவாதிகளை விரட்டியடித்தன.

  இதையடுத்து ஐ.எஸ். பயங்கரவாதிகளை முற்றிலும் ஒழித்து விட்டதாக கடந்த டிசம்பர் மாதம் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்தார். சிரியாவில் இருந்து அமெரிக்க படை வீரர்கள் 2 ஆயிரம் பேரையும் திரும்பப்பெறுவதாகவும் அவர் அறிவிப்பு வெளியிட்டார்.

  இருப்பினும் சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகளை முற்றிலும் ஒடுக்க வில்லை என்பதை இப்போது உணர்ந்த டிரம்ப், ஐ.எஸ். பயங்கரவாதிகளை முழுமையாக ஒழித்துக்கட்டி விட்டோம் என்ற அறிவிப்பை அடுத்த வாரம் வெளியிடுவோம் என கடந்த 6-ந் தேதி அறிவித்தார்.

  இந்த நிலையில் சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஆதிக்கத்தில் உள்ள கடைசி பகுதி, ஈராக் எல்லையில் அமைந்துள்ள டெயிர் அல் ஜோர் மாகாணத்தின் பாகுஸ் கிராமம் என தெரிய வந்தது.

  அங்கு கடுமையான தாக்குதல்களை நடத்தி, முழுமையான வெற்றி பெற அமெரிக்கா திட்டம் தீட்டியது. இந்த தாக்குதல்கள் நடத்துவதற்கு முன்னதாக அப்பாவி உள்ளூர் மக்கள் 20 ஆயிரம் பேரையும் அங்கிருந்து பத்திரமாக வெளியேறச்செய்ய வேண்டும் என விரும்பியது. அதற்கு ஒரு வார கால அவகாசம் தரப்பட்டது. அதன்படி அவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு விட்டனர்.

  இதையடுத்து அந்த பகுதியில் அமெரிக்க கூட்டுப்படைகள், ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் உக்கிரமாக சண்டை போட்டு வருகின்றன.

  இதுபற்றி சிரியா படை செய்தி தொடர்பாளர் கருத்து தெரிவிக்கையில், “ தாங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகிற கடைசி பகுதியில், அனுபவம் வாய்ந்த பயங்கரவாதிகள் கடுமையாக சண்டையிட்டு வருகின்றனர்” என குறிப்பிட்டார்.

  இந்த சண்டையின் முடிவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் சிரியாவில் இருந்து முழுமையாக ஒடுக்கப்பட்டு விடுவர் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஏமனில் நிகழும் கடும்போரில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 47 பேரும், அதிபர் ஆதரவு படையினர் 11 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #Yemen
  ஏடன்:

  ஏமன் நாட்டில் அதிபர் அப்துரப்பா மன்சூர் ஹாதி படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் 2015-ம் ஆண்டு, மார்ச் மாதம் 22-ந்தேதி உள்நாட்டுப்போர் மூண்டது. 4-வது ஆண்டாக அந்தப் போர் நீடிக்கிறது.

  அதிபர் படைகளுக்கு ஆதரவாக சவுதி கூட்டுப்படைகள் களத்தில் குதித்துள்ளன.

  அங்குள்ள செங்கடல் துறைமுக நகரமான ஹொதய்தா, 2014-ம் ஆண்டு முதல் கிளர்ச்சியாளர்கள் வசம் இருந்து வருகிறது. அங்கு 6 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர்.  அந்த நகரை மீட்பதற்காக அதிபர் ஆதரவு படைகள், சவுதி கூட்டுப்படைகள் உதவியுடன் களத்தில் குதித்து கடந்த ஒரு வாரமாக மூர்க்கத்தனமாக சண்டையிட்டு வருகின்றன.

  ஒரு பக்கம் தரை வழி தாக்குதலும், இன்னொரு பக்கம் வான்தாக்குதலும் நடந்து வருகிறது. நேற்று நடந்த கடும்போரில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 47 பேர் கொல்லப்பட்டனர். அதிபர் ஆதரவு படையினர் 11 பேர் உயிரிழந்தனர்.

  இது தொடர்பாக அதிபர் படை வட்டாரங்கள் கூறுகையில், “கிளர்ச்சியாளர்களின் பதுங்கு குழிகளாலும், கண்ணி வெடிகளாலும்தான் நாங்கள் ஹொதய்தா நகரை நெருங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது” என்று தெரிவித்தன.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா. அமைதி பேச்சுவார்த்தை பலனளிக்காத நிலையில் ஏமன் நாட்டில் பாதுகாப்பு படையினருக்கும் போராளிகளுக்கும் இடையிலான மோதலில் 84 பேர் உயிரிழந்தனர். #Yemenvonflict #Hodeidafighting #Yementalksfail
  சனா:

  ஏமன் நாட்டில் அதிபர் அப்ட்-ரப்பு மன்சூர் ஹாதி தலைமையிலான சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரசை கடந்த 2015-ம் ஆண்டு நிலைகுலையச் செய்த ஹவுத்தி போராளிகள் தலைநகர் சனா நகரத்தை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். 

  மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக மற்றொரு போட்டி அரசாங்கத்தை நடத்திவரும் இவர்கள்மீது உள்நாட்டுப் படைகளும் அண்டைநாடான சவுதி அரேபியா தலைமையிலான நேசநாட்டுப் படைகள் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றன.

  அந்நாட்டின் இரண்டாவது பெரிய துறைமுகம் அமைந்துள்ள ஹொடைடா மாகாணத்தில் ஹவுத்தி போராளிகளின் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஈரான் அரசு மறைமுகமாக ஆயுத உதவிகளை அளித்து வருவதாக குற்றம்சாட்டப்படுகிறது.

  ஹொடைடா மாகாணத்துக்குட்பட்ட அனைத்து பகுதிகளையும் மீட்கும் நோக்கத்தில் சவுதி அரேபியா தலைமையிலான அமீரகப் படைகள் சமீபத்தில் அங்கு முற்றுகையிட்டு உச்சகட்ட தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதல்களில் 10 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். 30 லட்சம் பேர் தங்களது வசிப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளனர்.

  ஏமன் அரசுக்கும் ஹவுத்தி போராளிகளுக்கும் இடையே சமரசம் ஏற்படுத்த ஐக்கிய நாடுகள் சபை முயன்றது. இருதரப்பினருக்கும் இடையிலான அமைதி பேச்சுவார்த்தைக்கு தலைமை தாங்க ஐ.நா. சபை சிறப்பு பிரதிநிதியாக மார்ட்டின் கிரிஃபித்ஸ் என்பவர் நியமிக்கப்பட்டார்.

  சுவிட்ஸர்லாந்து நாட்டின் தலைநகர் ஜெனிவாவில் மார்ட்டின் கிரிஃபித்ஸ் கடந்த 3 நாட்களாக ஏமன் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வந்தார்.  இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க ஹவுத்தி போராளிகள் சில நிபந்தனைகளை விதித்தனர்.

  அரசு தரப்பினர் இதற்கு சம்மதம் தெரிவிக்காததால் ஹவுத்தி போராளிகள் இந்த அமைதி பேச்சுவார்த்தையில் பங்கேற்காமல் புறக்கணித்தனர். இதை தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபையின் முயற்சி நேற்று தோல்வியில் முடிந்தது.

  இந்நிலையில், செங்கடலை ஒட்டியுள்ள ஹோடைடா நகரில் சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் கடந்த 24 மணிநேரமாக நடத்திய தாக்குதல்களில் 73 ஹவுத்தி போராளிகள் கொல்லப்பட்டனர். இருதரப்பு மோதல்களில் பாதுகாப்பு படையை சேர்ந்த 11 வீரர்களும் உயிரிழந்தனர்

  பல போராளிகளும் 17 ராணுவ வீரர்களும் காயம் அடைந்தனர் என ஏமன் நாட்டு ஊடகங்கள் இன்றிரவு செய்தி வெளியிட்டுள்ளன. #Yemenvonflict #Hodeidafighting #Yementalksfail
  ×