search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சண்டை"

    • கட்சிகாரங்கள் தொடர்பாக வழக்கறிஞர் விஜய் சிங் மற்றும் மோஹித் ஆகிய இருவரிடையில் வாக்குவாதம் ஏற்பட்டது
    • மற்ற வழக்கறிஞர்களும் இரு தரப்பாக பிரிந்து ஒருவரை ஒருவர் தள்ளிவிட்டு சண்டையிட்டுக்கொண்ட வீடியோ இணையத்தில் பரவியது.

    தலைநகர் டெல்லியின் சகார்பூர் [Shakarpur] பகுதியில் உள்ள சிறப்பு நிர்வாக மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில்  வழக்கறிஞர்களுக்கிடையில் கைகலப்பு ஏற்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தங்களது கட்சிக்காரர்கள் தொடர்பாக வழக்கறிஞர் விஜய் சிங் மற்றும் மோஹித் ஆகிய இரண்டு வழக்கறிஞர்களுக்கிடையில் நீதிமன்ற வளாகத்தில் வாக்குவாதம் ஏற்பட்டு சண்டை மூண்டுள்ளது.

    இது கைகலப்பாக மாறவே அங்கிருந்த மற்ற வழக்கறிஞர்களும் இரு தரப்பாக பிரிந்து ஒருவரை ஒருவர் தள்ளிவிட்டு சண்டையிட்டுக்கொண்ட வீடியோ இணையத்தில் பரவியது.

    இதுகுறித்து துணை பாதுகாப்பு ஆணையர் பேசுகையில், இந்த விவகாரம் வழக்கறிஞர்களின் பார் அசோசியேசன் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்ட்டு நீதிமன்ற வளாகத்துக்குள் அமைதியை குலைக்கும் வகையில் நடந்துகொண்ட குற்றத்துக்காக சட்டப்பிரிவு 126/169 பாரதீய நகரிக் சுரக்ஷ சன்ஹிதா சட்டம் [ முன்னதாக சிஆர்பிசி 107/150] கீழ் நடவடிக்கை எடுக்கப்டும் என்று உறுதியளித்துள்ளார்.

    • பல்வேறு வீடியோக்கள் ஏற்கனவே சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
    • சண்டையை நிறுத்துவதற்காக விலக்கிவிட்ட போது அவரை ஒருவர் அறைந்தார்.

    டெல்லி மெட்ரோ ரெயில் நிலையத்தில் பயணிகள் இருக்கைக்காக சண்டையில் ஈடுபட்ட காட்சிகள், இளம்ஜோடிகளின் அத்துமீறல், ஆபாசமாக உடை அணிந்து வந்த பயணிகள் என பல்வேறு வீடியோக்கள் ஏற்கனவே சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

    இந்நிலையில், தற்போது இணையத்தில் பரவி வரும் ஒரு வீடியோவில், டெல்லி மெட்ரோ ரெயில் நிலையத்தில் டோக்கன் கவுண்டரில் 2 பயணிகளுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொள்ளும் காட்சிகள் வைரலாகி வருகிறது.

    அப்போது சக பயணி ஒருவர், அவர்களின் சண்டையை நிறுத்துவதற்காக விலக்கிவிட்ட போது அவரை ஒருவர் அறைந்தார்.

    இதுதொடர்பான வீடியோ எக்ஸ் தளத்தில் வைரலாகி 10 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. இதைப்பார்த்த பயனர்கள் கேலியான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • இப்போதே சண்டையென்றால் மாமியார் வீட்டில் என்னவெல்லாம் நடக்கும்.
    • இந்த விவகாரத்தில், மணமகன் உட்பட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

    உத்தரப்பிரதேச மாநிலம் பல்லியாவில் ஏர் கூலர் அருகில் யார் உட்காருவது என மணமகன் - மணமகள் வீட்டார் சண்டையிட்டுக் கொண்டதால் கோபத்தில் மணப்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் நடந்துள்ளது.

    இப்போதே சண்டையென்றால் மாமியார் வீட்டில் என்னவெல்லாம் நடக்கும் எனக்கூறி மணப்பெண் இந்த திருமணத்தை நிறுத்தியுள்ளார்.

    இந்த விவகாரத்தில், மணமகன் உட்பட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். 

    • அந்தப் பெண்ணும் மணப்பெண்ணாக திருமண நிகழ்ச்சிக்காக காத்திருந்தாள்.
    • திருமணத்துக்கு வந்திருந்தவர்களிடையே திடீரென சலசலப்பு ஏற்பட்டது.

    உத்தரபிரதேச மாநிலம் ஃபிரோசாபாத்தில் உள்ள ஹிமாயுபூர் கிராமத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும், ராம்நகரைச் சேர்ந்த விகாஸ் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஜூலை 10 அன்று திருமண நிகழ்விற்காக விகாஸ் ஊர்வலமாக ஹிமாயூபூரில் உள்ளபெண் விட்டிற்கு அழைந்து வந்தனர்.

    அங்கு இருந்தவர்கள் மணமகனை வரவேற்றனர். 

    இந்நிலையில் இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, திருமணத்துக்கு வந்திருந்தவர்களிடையே திடீரென சலசலப்பு ஏற்பட்டது.

    திருமண விருந்தின் போது உணவு குறைந்ததாக கூறி, திருமண வீட்டினரை மக்கள் கட்டையால் தாக்கினர். திருமண விருந்தினர்கள் மற்றும் இல்லத்தரசிகள் ஒருவருக்கொருவர் நாற்காலிகளை வீசினர். இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, திருமணம் முறியும் அளவுக்கு மாறியது. இரு தரப்பினருக்கும் இடையே நடந்த மோதலில் 6 பேர் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    இருதரப்பினரிடையேயும் ஏற்பட்ட மோதல் வீடியோ இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது.

    • சுற்றுலா பயணிகள் ராப்டிங் எனப்படும் நீர் சாகச விளையாட்டுகளிலும் ஈடுபடுவார்கள்.
    • ஒரு பயனர், சுற்றுலா பயணிகளை இவ்வாறு நடத்தக்கூடாது எனபதிவிட்டிருந்தார்.

    இந்தியாவில், ஜூன் மாதம் சுற்றுலாப் பயணிகளின் பரபரப்பான மாதம். நீதிமன்றங்கள், கல்லூரிகள் மற்றும் பிற கல்வி வசதிகள் மூடப்பட்டுள்ளதால், பலர் நாடு முழுவதும் நன்கு அறியப்பட்ட இடங்களுக்குச் செல்வார்கள். குறிப்பாக ரிஷிகேஷ் ஆன்மீக சுற்றுலா செல்வது மிகவும் விரும்பும் சுற்றுலா தலமாகும். இங்கே, பார்வையாளர்கள் வெள்ளை நீர் ராஃப்டிங் போன்ற உற்சாகமான உல்லாசப் பயணங்களை மேற்கொள்கின்றனர். கோயில்களைக் கண்டறியலாம் மற்றும் கண்கவர் கங்கா ஆரத்தி போன்றவற்றில் பங்கேற்பார்கள்.

    இந்நிலையில் உத்தரகாண்டில் உள்ள ரிஷிகேஷில் ஏராளமான பிரசித்தி பெற்ற கோவில்கள் உள்ளன. மேலும் அங்குள்ள ஆற்றில் படகு சவாரி செல்லவும் ஏராளமான சுற்றுலா பயணிகள் செல்வது வழக்கம். அவ்வாறு செல்லும் சுற்றுலா பயணிகள் ராப்டிங் எனப்படும் நீர் சாகச விளையாட்டுகளிலும் ஈடுபடுவார்கள். இந்நிலையில் ரிஷிகேஷில் சுற்றுலா பயணிகளுக்கும் ராப்டிங் வழிகாட்டிகளுக்கும் இடையிலான மோதல் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.

    அதில் சுற்றுலா பயணிகளும், ராப்டிங் வழிகாட்டிகளும் படகை நகர்த்தி செல்ல பயன்படுத்தப்படும் துடுப்புகளால் ஒருவரை ஒருவர் தாக்கும் காட்சிகள் உள்ளன. வைரலான இந்த வீடியோ 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றது. வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ஒரு பயனர், சுற்றுலா பயணிகளை இவ்வாறு நடத்தக்கூடாது எனபதிவிட்டிருந்தார். அதே நேரம் சில பயனர்கள், வழிகாட்டிகளுக்கு ஆதரவாகவும் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

    • பாகிஸ்தானில் தரையிறங்க அனுமதி கோரப்பட்ட நிலையில் அனுமதி மறுக்கப்பட்டது.
    • பாதுகாப்பு அதிகாரிகள் ஜெர்மன் தூதரகத்துடன் தொடர்பு கொண்டுள்ளனர்.

    ஜெர்மனியில் இருந்து பாங்காக்கை நோக்கி எல்எச்772 லுஃப்தான்சா விமானம் பறந்துக் கொண்டிருந்தது. அப்போது, விமானத்தில் பயணித்த ஜெர்மன்- தாய்லாந்தை சேர்ந்த கணவர்- மனைவி இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.

    ஆரம்பத்தில் தம்பதி இடையே வாக்குவாதமாக தொடங்கிய பிரச்சனை அதுவே பெரிய தகராறாகவும் மாறியுள்ளது. இதனால், கணவரின் நடத்தையால் தனக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி மனைவி விமானியின் உதவியை நாடினார்.

    இதை அடுத்து விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையத்திடம் புகார் தெரிவிக்கப்பட்டது.

    பின்னர் விமானத்தை தரையிறக்க முடிவு செய்யப்பட்டதை தொடர்ந்து, டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதி கோரப்பட்டது. முன்னதாக, பாகிஸ்தானில் தரையிறங்க அனுமதி கோரப்பட்ட நிலையில் அனுமதி மறுக்கப்பட்டது.

    இந்நிலையில், லுஃப்தான்சா விமானம் டெல்லி விமான நிலையத்தில் இன்று காலை தரையிறக்கப்பட்டது. பின்னர், கணவரை விமானத்திலிருந்து இறக்கப்பட்டு விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக சிவில் விமான போக்குவரத்து இயக்கநரகத்தின் வட்டாரங்கள் தெரிவித்தன.

    இந்த சம்பவம் குறித்து பாதுகாப்பு அதிகாரிகள் ஜெர்மன் தூதரகத்துடன் தொடர்பு கொண்டுள்ள நிலையில் அந்த நபர் விமான நிலைய அதிகாரிகளிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். அந்த நபர் இந்திய பாதுகாப்பு அமைப்புகளிடம் ஒப்படைக்கப்படுவாரா அல்லது ஜெர்மனிக்கு திருப்பி அனுப்பப்படுவாரா என்பது குறித்து முடிவு எடுக்கப்பட்டு வருகிறது.

    லுஃப்தான்சா விமானம் அதன் டயர்கள் குளிர்ந்தவுடன் தாய்லாந்திற்கு புறப்படும் என்று வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

    • ஆவூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் விவசாயி பலியானார்
    • மாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    புதுக்கோட்டை,

    விராலிமலை ஒன்றியம், பாக்குடி கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா (வயது 54). விவசாயி. கருப்பையாவும், அதே ஊரை சேர்ந்த விவசாயி செல்வம் என்பவரும் மலம்பட்டிக்கு ஒரு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஆவூர் அருகே இலுப்பூர் மாத்தூர் சாலையில் அவர்கள் சென்று கொண்டிருந்த போது எதிரே விராலிமலை தாலுகா வேலப்படையான்பட்டி கிராமத்தை சேர்ந்த தேவராஜ் என்பவர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள், கருப்பையா ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.

    இதில் படுகாயமடைந்த கருப்பையா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த செல்வத்தை அப்பகுதியினர் மீட்டு சிகிச்சைக்காக திருச்சியில் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த மாத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கருப்பையாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • சில தினங்களுக்கு முன்பு இவர்களுக்குள் மீண்டும் சண்டை நடந்தது.
    • அவரது மனைவி விஜய ராணிஆகிய இருவரையும் அடித்து உதைத்து மிரட்டியுள்ளார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரகுநாதன். இவரது மனைவிவிஜயராணி (வயது45),இவர்களது மகள்வித்யா (24), வித்யாவை புதுவை மாநிலம் கொம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த செல்வராஜூக்கு கடந்த 5ஆண்டு க்கு முன்திருமணம் செய்து கொடுத்தனர்.இவர்களுக்குள் அடிக்கடி சண்டை நடப்பது வழக்கம்.இதே போலகடந்த சில தினங்களுக்கு முன்பு இவர்களுக்குள் மீண்டும் சண்டை நடந்தது. வித்யா சண்டை போட்டுக் கொண்டே தாய் வீடான பூண்டி கிராமத்திற்கு வந்துவிட்டார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த செல்வராஜ் கடந்த 28-ந் தேதி 10.30மணி அளவில் பூண்டி கிராமத்திற்கு சென்று மாமியார் வீட்டின் கதவு,வாசலை உடைத்து உள்ளே புகுந்து மாமனார் ரகுநாதன், அவரது மனைவி விஜய ராணிஆகிய இருவரையும் அடித்து உதைத்து மிரட்டியுள்ளார். இதனால் காயம் அடைந்த கணவன் மனைவி இருவரும் பண்ருட்டி ஆஸ்பத்திரி யில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டனர் இது பற்றி புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்கு பதிவு செய்து செல்வ ராஜை கைது செய்தனர்.

    • போலீஸ்காரர் வாகன ஓட்டியிடம் லஞ்சம் வாங்கியதாகவும், இதனை சக போலீஸ்காரர் தட்டிக் கேட்டதாகவும் கூறப்படுகிறது.
    • 2 போலீஸ்காரர்களும் ஒருவரையொருவர் கைகளாலும், கம்பாலும் தாக்கிக் கொண்டனர்.

    பீகார் மாநிலம் நாலந்தா மாவட்டத்தில் உள்ள சொஹ்சராய் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் முக்கிய சாலையில் போலீசார் வாகன சோதனை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு போலீஸ்காரர் வாகன ஓட்டியிடம் லஞ்சம் வாங்கியதாகவும், இதனை சக போலீஸ்காரர் தட்டிக் கேட்டதாகவும் கூறப்படுகிறது. இதில் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது.

    2 போலீஸ்காரர்களும் ஒருவரையொருவர் கைகளாலும், கம்பாலும் தாக்கிக் கொண்டனர். பட்டப்பகலில் போலீஸ்காரர்கள் முக்கிய சாலையில் சண்டை போட்டுக் கொண்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், சிலர் இந்த சண்டையை வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். வீடியோ வைரலானதைத் தொடர்ந்து போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சாலையில் சண்டை போட்ட 2 போலீஸ்காரர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த இடையப்பட்டி முனியப்பன் கோவில் அருகே பணம் வைத்து பந்தயம் கட்டி சேவல் சண்டை சூதாட்டத்தில் ஒரு கும்பல் ஈடுபட்டு வருவதாக வாழப்பாடி போலீஸ் டி.எஸ்.பிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • டி.எஸ்.பி உத்தரவின் பேரில் நேற்று மாலை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தனிப்படை போலீசார் சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்ட கும்பலை சுற்றி வளைத்தனர்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த இடையப்பட்டி முனியப்பன் கோவில் அருகே பணம் வைத்து பந்தயம் கட்டி சேவல் சண்டை சூதாட்டத்தில் ஒரு கும்பல் ஈடுபட்டு வருவதாக வாழப்பாடி போலீஸ் டி.எஸ்.பி. ஹரிசங்கரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து டி.எஸ்.பி உத்தரவின் பேரில் நேற்று மாலை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தனிப்படை போலீசார் சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்ட கும்பலை சுற்றி வளைத்தனர்.

    அப்போது சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த ஏத்தாப்பூர் பகுதியை சேர்ந்த முருகன் (36), ஆத்தூர் பேட்டை செல்வம் (31), ஏத்தாப்பூர் முருகன் (41), இடையப்பட்டி ஞானசேகரன் (41), வடுகத்தம்பட்டி சரவணகுமார்(33), தும்பல் கோபி (23), காடையாம்பட்டி ஸ்ரீராம்(21), ஏத்தாப்பூர் சசி (25) ஆகியோரை கைது செய்தனர்.

    இவர்களிடம் இருந்து 11 வாகனங்கள், ரூ.4,060 ரொக்கம் மற்றும் 2 சேவல்களை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பிச்சென்ற 3 பேரை தேடி வருகின்றனர்.

    வாழப்பாடி காவல் உட்கோட்டத்தில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வாழப்பாடி டி.எஸ்.பி. ஹரிசங்கரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • செல்போனில் ஜாடை பேசியதாக நினைத்து மாமியார் மண்டையை மருமகள் உடைத்தார்.
    • உறவுக்கார பெண்கள் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் முத்து–சாமிபுரம் காமராஜர் நக–ரைச் சேர்ந்தவர் செல்வி (வயது 45). இவரது மகன் இளங்கோ, மருமகள் மரு–மகள் பொன்னுபிரியா. திருமணத்திற்கு பிறகு தம்ப–தியினர் அதே பகுதியில் தனிக்குடித்தனம் வசித்து வருகிறார்கள்.

    இதற்கிடையே மாமியார், மருமகளுக்கு இடையே அவ்வப்போது சண்டை, சச்சரவு ஏற்பட்டு வந்தது. இதில் அவர்கள் மோதலிலும் ஈடுபட்டு வந்தனர். உறவினர் கள் சமரசம் செய்துவைத்தும் பலனில்லை. இந்த நிலை–யில் சம்பவத்தன்று செல்வி தனது வீட்டு வாசலில் அமர்ந்து செல்போனில் பேசிக்கொண்டு இருந்தார்.

    மேலும் அவர் தன்னைப் பற்றி தான் செல்போனில் ஜாடையாக பேசிக்கொண்டி–ருப்பதாக மருமகள் பொன் னுபிரியா நினைத்தார். இதையடுத்து ஆத்திரம் அடைந்த அவர் மாமியார் என்றும் பாராமல் உடைந்து கிடந்த ஆஸ்பெஸ்டாஸ் ஓட்டால் தலையில் பலமாக அடித்தார். இதில் செல்வி–யின் மண்டை உடைந்தது.

    மேலும் அருகில் வசிக்கும் பொன்னுபிரியாவின் தாய் சுந்தரவள்ளி, உறவினர் ஜெயபிரியா ஆகியோரும் அங்கு வந்து செல்வியை தாக்கியுள்ளனர். இதில் காயடைந்த செல்வி ராஜபா–ளையம் அரசு ஆஸ்பத்திரி–யில் அனுமதிக்கப்பட்டார். அவர் கொடுத்த புகாரின் பேரில் தளவாய்புரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகி–றார்.

    • மோகன் அனுப்பிய புகைப்படத்திற்கு சிபி கார்த்திக் கடினமான வார்த்தையை பயன்படுத்தி பதில் அனுப்பியதாக கூறப்படுகிறது.
    • வாக்குவாதம் அதிகமாக ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் முருகம்பாளை யத்தை சேர்ந்தவர் சிபி கார்த்திக் (வயது21). இவருக்கும் இடுவம்பாளையம் பகுதியை சேர்ந்த டெய்லர் மோகன் என்ற கபாலிக்கும் இடையே இன்ஸ்டா கிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஒருவருக்கொருவர் தகவல் மற்றும் படங்களை பரிமாறிக்கொள்வது வழக்கம்.

    இந்த நிலையில் மோகன் அனுப்பிய புகைப்படத்திற்கு சிபி கார்த்திக் கடினமான வார்த்தையை பயன்படுத்தி பதில் அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் கோபம் அடைந்த மோகன் திருப்பி தரக்குறைவான பதில் அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்குள் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் மங்கலம் சாலை புவனேஸ்வரி நகர் பகுதியில் சிபி கார்த்திக் நின்று கொண்டிருந்தார். அங்கு மோகன் மற்றும் அவருடைய நண்பர்கள் அசோக்குமார் மற்றும் கார்த்திகேயன் ஆகியோர் வந்தனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர்.

    இதில் ஆத்திரம் அடைந்த மோகன், அசோக்குமார் மற்றும் கார்த்திகேயன் ஆகிய 3 பேரும் சேர்ந்து தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சிபி கார்த்திக்கை ஓட ஓட விரட்டி வெட்டினர். இதில் பலத்த காயம் அடைந்த சிபி கார்த்திக் ரத்த வெள்ளத்தில் கிழே சரிந்தார். உடனே அந்த பகுதியை சேர்ந்தவர்கள் சிபி கார்த்திக்கை மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளித்த பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது தொடர்பாக திருப்பூர் மத்திய பகுதி போலீசார் வழக்கு பதிவு செய்து அரிவாளால் வெட்டி கொலை முயற்சி செய்ததாக மூன்று பேரையும் கைது செய்தனர்.

    ×