சேவல் சண்டை; 4 பேர் கைது

சேலம் சூரமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு நேற்று மதியம் சூரமங்கலம் கல்யாணசுந்தரம் காலனி பகுதியில் உள்ள ஒரு காலி நிலத்தில் பணம் வைத்து சேவல் சண்டை நடப்பதாக தகவல் வந்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு சில வாலிபர்கள் பணம் வைத்து சேவல் சண்டை விளையாட்டில் ஈடுபடுவது தெரியவந்தது.
சேவல் சண்டை; 4 பேர் கைது
Published on

சேலம் சூரமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு நேற்று மதியம் சூரமங்கலம் கல்யாணசுந்தரம் காலனி பகுதியில் உள்ள ஒரு காலி நிலத்தில் பணம் வைத்து சேவல் சண்டை நடப்பதாக தகவல் வந்தது. அதை தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு சில வாலிபர்கள் பணம் வைத்து சேவல் சண்டை விளையாட்டில் ஈடுபடுவது தெரியவந்தது.அப்போது அங்கு பணம் வைத்து சேவல் சண்டை விளையாட்டில் ஈடுபட்ட திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் கோரையர் பாலம் பகுதியைச் சேர்ந்த ராஜா (34), சூரமங்கலம் அருகே உள்ள கல்யாண சுந்தரம் காலனி பகுதியைச் சேர்ந்தவர்கள் பூபதி (44), சுபாஷ் (30), பிரபு (33),ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும் 11 சேவல்களையும் பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com