சேவல் சண்டை நடத்திய 6 பேர் கைது

கல்லங்காட்டுவலசு பகுதியில் சேவல் சண்டை சூதாட்டம் நடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் சேவல் சண்டை நடத்திய 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் ரூ.4 ஆயிரம் மதிப்பிலுள்ள சேவல்களையும் பறிமுதல் செய்தனர்.
சேவல் சண்டை நடத்திய 6 பேர் கைது
Published on

குமாரபாளையம்:

குமாரபாளையம் கல்லங்காட்டுவலசு பகுதியில் சேவல் சண்டை சூதாட்டம் நடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் ரவி. சப்-இன்ஸ்பெக்டர். மலர்விழி தலைமையிலான போலீசார் நேரில் சென்று சோதனை நடத்தினர். அப்போது சேவல் சண்டை நடத்திய அதே பகுதியை சேர்ந்த விவசாயி கோகுல்(வயது 23), ராஜகோபால்(26), பவானி, இளங்கோவன்(43), ஈரோடு எலக்ட்ரீசியன் தினேஷ்(29), ஈரோடு நிதி நிறுவன அதிபர் உதயன்(32), ஈரோடு, போட்டோ கடை உரிமையாளர் சிவசுப்ரமணியன்(28) ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் ரூ.4 ஆயிரம் மதிப்புள்ள 2 சேவல்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com