பண்ருட்டி அருகே மாமனாரை தாக்கிய வாலிபர் கைது

சில தினங்களுக்கு முன்பு இவர்களுக்குள் மீண்டும் சண்டை நடந்தது. அவரது மனைவி விஜய ராணிஆகிய இருவரையும் அடித்து உதைத்து மிரட்டியுள்ளார்.
பண்ருட்டி அருகே மாமனாரை தாக்கிய வாலிபர் கைது
Published on

கடலூர்: 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரகுநாதன். இவரது மனைவிவிஜயராணி (வயது45),இவர்களது மகள்வித்யா (24), வித்யாவை புதுவை மாநிலம் கொம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த செல்வராஜூக்கு கடந்த 5ஆண்டு க்கு முன்திருமணம் செய்து கொடுத்தனர்.இவர்களுக்குள் அடிக்கடி சண்டை நடப்பது வழக்கம்.இதே போலகடந்த சில தினங்களுக்கு முன்பு இவர்களுக்குள் மீண்டும் சண்டை நடந்தது. வித்யா சண்டை போட்டுக் கொண்டே தாய் வீடான பூண்டி கிராமத்திற்கு வந்துவிட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த செல்வராஜ் கடந்த 28-ந் தேதி 10.30மணி அளவில் பூண்டி கிராமத்திற்கு சென்று மாமியார் வீட்டின் கதவு,வாசலை உடைத்து உள்ளே புகுந்து மாமனார் ரகுநாதன், அவரது மனைவி விஜய ராணிஆகிய இருவரையும் அடித்து உதைத்து மிரட்டியுள்ளார். இதனால் காயம் அடைந்த கணவன் மனைவி இருவரும் பண்ருட்டி ஆஸ்பத்திரி யில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டனர் இது பற்றி புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்கு பதிவு செய்து செல்வ ராஜை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com