என் மலர்
இந்தியா

பாறைகளுக்கிடையே விழுந்த ஐபோன்... 7 மணிநேரம் போராடி மீட்ட போலீசார்- வைரலாகும் வீடியோ
- மீட்பு குழுவினர் விரைந்து வந்து ஐபோனை மீட்க முயற்சி செய்தனர்.
- கேரள மீட்பு குழுவினர் மற்றும் உதவியவர்களுக்கு பெண் நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டார்.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஆண்டிலியா சேலட் என்ற இளம்பெண் தனது விடுமுறையை மகிழ்ச்சியுடன் கழிப்பதற்காக தனது நண்பர்களுடன் கேரளாவுக்கு சுற்றுலா சென்றிருந்தார். அங்கு எதிர்பாராத விதமாக அவரது ஐபோன் பாறைகளுக்கிடையே விழுந்தது.
இதுகுறித்து அவர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் மீட்பு குழுவினர் அங்கு விரைந்து வந்து ஐபோனை மீட்க முயற்சி செய்தனர். அவர்களது இந்த முயற்சியில் பொதுமக்களும் உதவினர்.
இதற்கிடையே அங்கு பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதனை பொருட்படுத்தாமல் அவர்கள் கடுமையாக போராடி 7 மணிநேரத்திற்கு பிறகு ஐபோனை மீட்டு இளம்பெண்ணிடம் ஒப்படைத்தனர். இதனால் பெரும் மகிழ்ச்சியடைந்த அவர் கேரள மீட்பு குழுவினர் மற்றும் உதவியவர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டார்.
இதற்கு ஆயிரக்கணக்கானோர் தங்களது விருப்பம் மற்றும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.






