search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "படங்கள்"

    • காஷ்மீரில் சியாச்சின் பனிப்பாறைக்கு அருகே ஆக்கிரமிப்பு.
    • பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ஒரு பகுதியான ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கில் இந்த சாலை அமைந்துள்ளது.

    புதுடெல்லி:

    இந்தியா-சீனா இடையே கடந்த சில ஆண்டுகளாக எல்லையில் மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது.

    2020-ம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நடந்த மோதல் சம்பவத்துக்கு பிறகு சீனா எல்லை பகுதிகளில் புதிய சாலை, பாலம் அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருவதாக அவ்வப்போது சமூக வலைதளங்களில் படங்கள் வெளியாகி வருகின்றன.

    இந்நிலையில் காஷ்மீரில் சியாச்சின் பனிப்பாறைக்கு அருகே ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ஒரு பகுதியில் சீனா புதிதாக சாலை அமைத்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுதொடர்பாக அந்த பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட சாட்டிலைட் படங்கள் 'எக்ஸ்' தளத்தில் வெளியாகி உள்ளன.

    கடந்த ஆண்டு சியாச்சின் அருகே இதே இடத்தில் சாலை இல்லாத நிலையில் இப்போது புதிதாக சாலை அமைக்கப்பட்டிருப்பது படங்களில் காணப்படுகிறது.

    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ஒரு பகுதியான ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கில் இந்த சாலை அமைந்துள்ளது. பாகிஸ்தானின் கில்கிட்-பால்டிஸ்தான் மாகாணத்தை சீனாவின் சின்ஜியாங் உடன் இணைக்கவே இந்த சாலை அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


    எனினும் இந்த சாலை இந்திய கட்டுப்பாட்டில் இருந்து 50 கிலோ மீட்டருக்கு வடக்கே சியாச்சின் பனிப்பாறையில் உள்ள இந்திரா கர்னல் அருகே அமைந்திருப்பதால் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    கடந்த மார்ச் மாதம் பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் 2 முறை இந்த இடத்தை பார்வையிட்டிருந்தார். இந்நிலையில் சீனாவின் புதிய சாலை பணிகள் குறித்த படங்கள் வலைதளங்களில் வெளியாகி இருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த சாலை முற்றிலும் சட்ட விரோதமானது என்றும், இந்தியா இதற்கு கடுமையான எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் என்றும் முன்னாள் லெப்டினன்ட் ஜெனரல் ராகேஷ் சர்மா தெரிவித்துள்ளார். 

    • தென்மேற்கு பருவ காற்று படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகினார்.
    • அடுத்ததாக விஜய் சேதுபதியின் 50 வது படமான மஹாராஜா படத்தில் நடித்துள்ளார்.

    தனக்கென ஒரு பாணியில் நடிப்பை வெளிப்படுத்துபவர் விஜய் சேதுபதி. 2010 ஆம் ஆண்டு வெளியான தென் மேற்கு பருவ காற்று படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகினார்.

    பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற படங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடத்தை பெற்றார்.

    மாஸ்டர், விக்ரம், பேட்ட மற்றும் ஜவான் திரைப்படங்களில் நட்சத்திர நடிகர்களுக்கு வில்லனாக நடித்தார். கத்ரீனா கைஃப் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்து வெளியான மெரி கிறிஸ்துமஸ் திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்பொழுது தமிழ் மற்றும் இந்தி மொழி படங்களில் நடித்து வருகிறார்.

    அடுத்ததாக விஜய் சேதுபதியின் 50 வது படமான மஹாராஜா படத்தில் நடித்துள்ளார். குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சுவாமிநாதன் இந்த படத்தை இயக்கியுள்ளார். விஜய் சேதுபதியுடன் அனுராக் காஷ்யப், மம்தா மோகன் தாஸ், நட்டி நடராஜ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    இப்படத்திற்கு அஜனீஷ் லோக்னாத் இசையமைக்க தினேஷ் புருஷோத்தம்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த ஆண்டு வெளியான நிலையில். இத்திரைப்படம் வரும் மே மாதம் வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மவுன குரு, மகாமுனி படத்தை இயக்கிய சாந்தகுமார் இயக்கத்தில் ரசவாதி படத்தில் நடித்துள்ளார்
    • ரகுவரனுக்கு அடுத்து குரல் வளமை அர்ஜூன் தாசுக்கே இருக்கிறது.

    தமிழ் சினிமாவில் தன் குரலால் மக்கள் மனதை கட்டிப் போட்ட நடிகர்களில் ஒருவர் அர்ஜூன் தாஸ். நடிகர் ரகுவரனுக்கு அடுத்து குரல் வளமை அர்ஜூன் தாசுக்கே இருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 2019-ல் வெளியான கைதி படத்தில் அன்பு கதாப்பாத்திரம் மக்கள் மனதில் நின்றது. அர்ஜூன் தாஸ் கூறிய 'லைஃப் டைம் செட்டில்மெண்ட்' டயலாக் வைரலாக பரவி, இன்றுவரை மக்கள் காதுகளில் ஒலித்துக்கொண்டு இருக்கிறது.

    'கைதி', 'அந்தகாரம்', 'மாஸ்டர்' என அடுத்தடுத்த படங்களால் கோலிவுட்டை தன் பக்கம் திரும்ப வைத்தவர், 'புத்தம் புது காலை விடியாதா' என்ற ஆந்தாலஜியில் அர்ஜுன் தாஸ் - லிஜோமோல் ஜோடியை வைத்து 'லோனர்ஸ்' எனும் கதையை இயக்கியிருப்பார் ஹலீதா ஷமீம். அதன் பிறகு, முழு நீளப்படத்தில் நாயகனாக அறிமுகமானது இயக்குநர் வசந்தபாலன் இயக்கிய 'அநீதி'. சமீபத்தில் பிஜாய் நம்பியார் இயக்கத்தில் வெளியான போர் படத்தில் நடித்து இருந்தார்.

    அடுத்தடுத்து மிக முக்கியான சுவாரசியமான படத்தில் நடித்து வருகிறார் அர்ஜூன் தாஸ். மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற 'கப்பேலா' திரைப்படத்தின் டோலிவுட் வெர்ஷனில் நடித்தார். சுஜீத் இயக்கத்தில் 'தே கால் ஹிம் ஓஜி' என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.

    பிரபாஸை வைத்து 'சாஹோ' படத்தை இயக்கிய சுஜீத் இயக்கும் இப்படத்தில் பவன் கல்யாண், இம்ரான் ஹாஸ்மி, பிரகாஷ்ராஜ், பிரியங்கா மோகன் ஆகியோர் நடித்து வருகிறார்கள். செப்டம்பர் மாதம் வெளியாக இருக்கிறது.

    மவுன குரு, மகாமுனி படத்தை இயக்கிய சாந்தகுமார் இயக்கத்தில் ரசவாதி படத்தில் நடித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கும் கைதி 2 படத்தில் நடிக்கவிருக்கிறார். 'ஜூன்', 'மதுரம்' ஆகிய படங்களையும் 'கேரளா க்ரைம் ஃபைல்ஸ்' எனும் வெப் சீரிஸையும் இயக்கிய

    மலையாள இயக்குனரான அஹமத் கபீர் இயக்கத்தில் மலையாள சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாக இருக்கிறார் அர்ஜூன் தாஸ்.

    சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தை இயக்கிய விஷால் வெங்கட் படத்தில் நாயகனாக நடிக்க இருக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என பாரபட்சம் பார்க்காமல் நடித்து வருகிறார் அர்ஜூன் தாஸ். இவரது ரசிகர்கள் படத்தின் அப்டேட்டுக்காகவும், ரிலீஸ் தேதிக் குறித்து தெரிந்துக் கொள்ளும் ஆர்வத்திலும் இருக்கின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • அசோக் செல்வன் மீண்டும் போர் தொழில் இயக்குனரான விக்னேஷ் ராஜாவுடன் இணையவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
    • போர் தொழில் படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கும் என ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

    போர் தொழில் திரைப்படம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 9-ஆம் தேதி சரத்குமார், அசோக் செல்வன் நடிப்பில் வெளியானது. பிரகாஷ் எழுத்தில் இந்த படத்தை விக்னேஷ் ராஜா இயக்கினார்.ஜேக்ஸ் பிஜாய் இப்படத்திற்கு இசையமைத்தார் . நடிகர் சரத்குமாருக்கு இந்த படம் மிக பெரிய புகழைப் பெற்றுக் கொடுத்தது. அதேவேளை, தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து மிகவும் நேர்த்தியான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து கொண்டு இருப்பவர் அசோக் செல்வன். நித்தம் ஒரு வானம், ஓ மை கடவுளே,சபா நாயகன் , ப்ளூ ஸ்டார் ஆகிய சிறந்த படங்களில் நடித்து ஒரு முன்னணி கதாநாயகனாக வளர்ந்துக் கொண்டு வருகிறார். இந்நிலையில் அசோக் செல்வன் மீண்டும் போர் தொழில் இயக்குனரான விக்னேஷ் ராஜாவுடன் இணையவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது, போர் தொழில் படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கும் என ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. விரைவில் அதிகாரப் பூர்வமான தகவல் படகுழுவினரிடம் இருந்து வெளியிடப்படும்.




     



     



    ×