அர்ஜூன் தாஸின் அடுத்தடுத்த லைன் அப்ஸ்

மவுன குரு, மகாமுனி படத்தை இயக்கிய சாந்தகுமார் இயக்கத்தில் ரசவாதி படத்தில் நடித்துள்ளார்ரகுவரனுக்கு அடுத்து குரல் வளமை அர்ஜூன் தாசுக்கே இருக்கிறது.
அர்ஜூன் தாஸின் அடுத்தடுத்த லைன் அப்ஸ்
Published on

தமிழ் சினிமாவில் தன் குரலால் மக்கள் மனதை கட்டிப் போட்ட நடிகர்களில் ஒருவர் அர்ஜூன் தாஸ். நடிகர் ரகுவரனுக்கு அடுத்து குரல் வளமை அர்ஜூன் தாசுக்கே இருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 2019-ல் வெளியான கைதி படத்தில் அன்பு கதாப்பாத்திரம் மக்கள் மனதில் நின்றது. அர்ஜூன் தாஸ் கூறிய 'லைஃப் டைம் செட்டில்மெண்ட்' டயலாக் வைரலாக பரவி, இன்றுவரை மக்கள் காதுகளில் ஒலித்துக்கொண்டு இருக்கிறது.

'கைதி', 'அந்தகாரம்', 'மாஸ்டர்' என அடுத்தடுத்த படங்களால் கோலிவுட்டை தன் பக்கம் திரும்ப வைத்தவர், 'புத்தம் புது காலை விடியாதா' என்ற ஆந்தாலஜியில் அர்ஜுன் தாஸ் - லிஜோமோல் ஜோடியை வைத்து 'லோனர்ஸ்' எனும் கதையை இயக்கியிருப்பார் ஹலீதா ஷமீம். அதன் பிறகு, முழு நீளப்படத்தில் நாயகனாக அறிமுகமானது இயக்குநர் வசந்தபாலன் இயக்கிய 'அநீதி'. சமீபத்தில் பிஜாய் நம்பியார் இயக்கத்தில் வெளியான போர் படத்தில் நடித்து இருந்தார்.

அடுத்தடுத்து மிக முக்கியான சுவாரசியமான படத்தில் நடித்து வருகிறார் அர்ஜூன் தாஸ். மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற 'கப்பேலா' திரைப்படத்தின் டோலிவுட் வெர்ஷனில் நடித்தார். சுஜீத் இயக்கத்தில் 'தே கால் ஹிம் ஓஜி' என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.

பிரபாஸை வைத்து 'சாஹோ' படத்தை இயக்கிய சுஜீத் இயக்கும் இப்படத்தில் பவன் கல்யாண், இம்ரான் ஹாஸ்மி, பிரகாஷ்ராஜ், பிரியங்கா மோகன் ஆகியோர் நடித்து வருகிறார்கள். செப்டம்பர் மாதம் வெளியாக இருக்கிறது.

மவுன குரு, மகாமுனி படத்தை இயக்கிய சாந்தகுமார் இயக்கத்தில் ரசவாதி படத்தில் நடித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கும் கைதி 2 படத்தில் நடிக்கவிருக்கிறார். 'ஜூன்', 'மதுரம்' ஆகிய படங்களையும் 'கேரளா க்ரைம் ஃபைல்ஸ்' எனும் வெப் சீரிஸையும் இயக்கிய

மலையாள இயக்குனரான அஹமத் கபீர் இயக்கத்தில் மலையாள சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாக இருக்கிறார் அர்ஜூன் தாஸ்.

சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தை இயக்கிய விஷால் வெங்கட் படத்தில் நாயகனாக நடிக்க இருக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என பாரபட்சம் பார்க்காமல் நடித்து வருகிறார் அர்ஜூன் தாஸ். இவரது ரசிகர்கள் படத்தின் அப்டேட்டுக்காகவும், ரிலீஸ் தேதிக் குறித்து தெரிந்துக் கொள்ளும் ஆர்வத்திலும் இருக்கின்றனர்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com