search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "May"

  • தென்மேற்கு பருவ காற்று படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகினார்.
  • அடுத்ததாக விஜய் சேதுபதியின் 50 வது படமான மஹாராஜா படத்தில் நடித்துள்ளார்.

  தனக்கென ஒரு பாணியில் நடிப்பை வெளிப்படுத்துபவர் விஜய் சேதுபதி. 2010 ஆம் ஆண்டு வெளியான தென் மேற்கு பருவ காற்று படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகினார்.

  பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற படங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடத்தை பெற்றார்.

  மாஸ்டர், விக்ரம், பேட்ட மற்றும் ஜவான் திரைப்படங்களில் நட்சத்திர நடிகர்களுக்கு வில்லனாக நடித்தார். கத்ரீனா கைஃப் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்து வெளியான மெரி கிறிஸ்துமஸ் திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்பொழுது தமிழ் மற்றும் இந்தி மொழி படங்களில் நடித்து வருகிறார்.

  அடுத்ததாக விஜய் சேதுபதியின் 50 வது படமான மஹாராஜா படத்தில் நடித்துள்ளார். குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சுவாமிநாதன் இந்த படத்தை இயக்கியுள்ளார். விஜய் சேதுபதியுடன் அனுராக் காஷ்யப், மம்தா மோகன் தாஸ், நட்டி நடராஜ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

  இப்படத்திற்கு அஜனீஷ் லோக்னாத் இசையமைக்க தினேஷ் புருஷோத்தம்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த ஆண்டு வெளியான நிலையில். இத்திரைப்படம் வரும் மே மாதம் வெளியாகவுள்ளது.

  உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

  • விண்ணப்பித்து 30 நாளுக்குள் புதிய மின் இணைப்பு வழங்க வேண்டும்.
  • ஒவ்வொரு சேவை குறைபாடுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும்.

  தாராபுரம் :

  மின் நுகர்வோருக்கு தடையில்லா மின் சப்ளை வழங்குவதுடன் மின் நுகர்வோரின் தேவைகள், குறிப்பிட்ட கால இடை வெளிக்குள் பூர்த்தி செய்ய வழிவகை செய்யும் வகையில் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், சில வழி காட்டு தல்களை நிர்ண யித்துள்ளது.அதன்படி விண்ணப்பித்து 30 நாளுக்கு ள் புதிய மின் இணைப்பு வழங்க வேண்டும்.

  புதிய மின் இணைப்பு, தற்காலிக மின் இணைப்பு, மின் இணைப்பு பெயர் மாற்ற சேவைகளுக்கு ஒரு நாள் தாமதத்துக்கு 100 ரூபாய் வீதம், அதிகபட்சம் ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். மின்தடை ஏற்பட்டு குறிப்பிட்ட நேர த்துக்குள் இணைப்பு வழங்கப்பட வில்லை யெனில், ஒவ்வொரு 6 மணி நேரத்துக்கும் 50 ரூபாய் வீதம், அதிகபட்சம் 2,000 ரூபாய், மின்னழுத்த புகாருக்கு 250 ரூபாய் என ஒவ்வொரு சேவை குறை பாடுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும்.

  இத்தகைய விதி கடந்த 2004 செப்டம்பர் மாதம் ஏற்படுத்தப்பட்டது. 19 ஆண்டுகளான நிலையில், பலமுறை மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதே சமயம் இழப்பீடு தொகை உயர்த்தப்படவில்லை.மின்வாரிய சேவை தாமத த்துக்கு வழங்கப்படும் இழப்பீடு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என நுகர்வோர் அமைப்பி னர் வலியுறுத்தி வருகின்ற னர்.

  இதுகுறித்து திருப்பூர் மாவட்ட மின் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:- சமீப ஆண்டுகளாக மின் நுகர்வோருக்கு தடையற்ற மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. மின் நுகர்வோரின் புகார்கள் உடனுக்குடன் நிவர்த்தி செய்யப்பட்டு வருகின்றன. பெரிய ளவிலான தொழில்நுட்ப பிரச்னைகள் தவிர உடனுக்குடன் தீர்க்கப்பட வேண்டி ய பிரச்னை கள், உடனடியாக சரி செய்யப்படு கிறது.

  தற்போது பொதுவான வாட்ஸ் ஆப் எண் வாயிலாக புகார் கூறும் நடைமுறை அமலில் இருப்பதால் மின் நுகர்வோர் தங்களின் புகார்களை உடனுக்குடன் மின் வாரியத்தின் கவனத்து க்கு கொண்டு செல்லவும், உடனுக்குடன் தீர்வு ஏற்படுத்திக் கொடுக்க வும் முடிகிறது. சேவை தாமத த்தால் நுகர்வோருக்கு அபராதம் செலுத்தும் சூழல் இல்லை.

  பழுதான மின் கம்பங்க ளும் அவ்வப்போது மாற்ற ப்பட்டு வருகின்றன. பொது தேர்வு சமயமாக இருப்பதால் தடையற்ற மின் சேவையை வழங்கும் நோக்கில் புதிய மின் கம்பங்களை மாற்றி யமைக்கும் பணி நடத்தப்பட வில்லை. மே மாதம் முதல் மீண்டும் பழுதான மின் கம்பங்களை மாற்றிய மைக்கும் பணி துவங்கும்.இவ்வாறு அவர்கள் கூறி னர்.

  தேனி மாவட்டத்தில் நாளை மே தினத்தை முன்னிட்டு அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள், மூட உத்தரவிடப்பட்டுள்ளது. #TNtasmac
  தேனி:

  தமிழக அரசு மே தினத்தை முன்னிட்டு அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள், உரிமம் பெற்ற மதுபான பார்கள் எப்.எல்-2, எப்.எல்-3, எப்.எல்-3(ஏ), எப்.எல்-3(ஏஏ), எப்.எல்-4(ஏ) மற்றும் எப்.எல்-11 ஆகிய மதுபான கடைகள் நாளை மூடியிருக்க வேண்டும் என்றும், அன்றைய தினத்தில் எவ்வித மது விற்பனையும் மேற்கொள்ள கூடாது என உத்தரவிட்டுள்ளது.

  அதன்படி தேனி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள், உரிமம் பெற்ற மதுபான பார்கள் எப்.எல்-2, எப்.எல்-3, எப்.எல்-3(ஏ), எப்.எல்-3(ஏஏ), எப்.எல்-4(ஏ) மற்றும் எப்.எல்-11 ஆகிய மதுபான கடைகளுக்கு நாளை (புதன்கிழமை) மே தினத்தை முன்னிட்டு கட்டாயம் மதுபான கடைகளை மூடப்பட வேண்டும்.

  அந்த நாளில் மதுபான விற்பனைகள் எதுவும் மேற்கொள்ளக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நாளில் மதுபானம் தொடர்பான விதிமீறல்கள் ஏதும் இருப்பின் சம்மந்தப்பட்ட மதுபான கடைகள் மற்றும் பார் உரிமைதாரர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தெரிவித்து உள்ளார். #TNtasmac
  சொந்த கட்சியினரே கிளர்ச்சியை தொடங்கிய நிலையில், என்னை ஆதரிக்காவிட்டால் பிரெக்ஸிட் ஒருபோதும் நிறைவேறாது என எதிர்ப்பாளர்களுக்கு பிரிட்டன் பிரதமர் தெரேசா மே எச்சரிக்கை விடுத்துள்ளார். #Brexit
  லண்டன்:

  ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகுவதற்கான பிரெக்சிட் விவகாரத்தில் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வந்த பிரெக்ஸிட் செயலாளர் டேவிட் டேவிஸ் சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார். பிரெக்ஸிட் விவகாரத்தை கையாள நான் சரியான நபர் இல்லை என தெரிவித்த டேவிட், ஐரோப்பிய ஒன்றியத்துக்காக பிரிட்டன் பல விஷயங்களை எளிதாக விட்டுக்கொடுக்கிறது என குற்றம் சாட்டியிருந்தார்.

  டேவிட் ராஜினாமா செய்த சில மணி நேரத்தில் வெளியுறவு மந்திரி போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்தார். அரசிலும், ஆளுங்கட்சியிலும் முக்கிய இடத்தில் இருந்த போரிஸ் ஜான்சனின் ராஜினாமா பெரும் அரசியல் அதிர்வை ஏற்படுத்தியது. பிரெக்ஸிட் விவகாரத்தை தெரேசா மே கையாளும் முறையில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அவர் ராஜினாமா செய்ததாக கூறப்பட்டது.

  மேலும், ஆளும் கன்சர்வேடிவ் கட்சி எம்.பி.க்கள் பலர் தெரேசா மே-வை வெளிப்படையாக விமர்சிக்க தொடங்கினர். இதனால், எரிச்சலடைந்த தெரேசா எதிர்பாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை இட்டுள்ளார். 

  அதில், “என் பின்னாள் நின்று எனக்கு ஆதரவாக இருங்கள். இல்லையெனில் பிரெக்ஸிட் ஒருபோதும் நிறைவேறாது”என அவர் தெரிவித்துள்ளார்.
  சரக்கு மற்றும் சேவை வரி மூலமாக மே மாத ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.94 ஆயிரத்து 16 கோடி கிடைத்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்து உள்ளது. #GST
  புதுடெல்லி:

  மத்திய அரசு சரக்கு மற்றும் சேவை வரியை (ஜி.எஸ்.டி.) கடந்த ஆண்டு ஜூலை 1-ந் தேதி முதல் அமல்படுத்தியது. அன்று முதல் மார்ச் 2018-ம் ஆண்டு வரை அரசுக்கு ஜி.எஸ்.டி. மூலமாக ரூ.7.41 லட்சம் கோடி வருவாய் கிடைத்து உள்ளது.

  இந்நிலையில் மே மாத ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.94 ஆயிரத்து 16 கோடி கிடைத்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இதில் மத்திய அரசின் வரி வருவாய் ரூ.15 ஆயிரத்து 866 கோடியும், மாநில அரசின் வரி வருவாய் ரூ.21 ஆயிரத்து 691 கோடியும், மாநிலங்களுக்கு இடையேயான வரி வருவாய் ரூ.49 ஆயிரத்து 120 கோடியும், செஸ் வருவாய் ரூ.7 ஆயிரத்து 339 கோடியும் அடங்கும்.

  இது கடந்த மாதத்தை விட அதிகம். ஏப்ரல் மாத ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.89 ஆயிரத்து 885 கோடியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.  #GST  #Tamilnews 
  இஸ்ரேல் மீது ஈரான் ராணுவம் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதற்கு, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் பிரிட்டன் பிரதமர் தெரசா மே ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். #Trump #theresamay
  வாஷிங்டன்:

  ஈரான் அரசு சிரியாவில் இருந்து தனது எதிரி நாடான இஸ்ரேல் மீது ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது. ஏறக்குறைய 20 ஏவுகணைகளை கொண்டு கோலன் பகுதியிலுள்ள இஸ்ரேலிய நிலைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அவற்றில் சில ஏவுகணைகளை இஸ்ரேல் வழிமறித்து அழித்துள்ளது.

  இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்து உள்ளன. இதுபற்றி தொலைபேசி மூலம் பிரிட்டன் பிரதமர் தெரசா மே உடன் தொடர்பு கொண்டு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேசினார்.  

  அதன்பின்னர் வெள்ளை மாளிகை வெளிட்டுள்ள செய்தியில், ‘சிரியாவில் இருந்து இஸ்ரேல் மீது ஈரான் அரசு நடத்திய முன்னறிவிக்கப்படாத ஏவுகணை தாக்குதல்களுக்கு இரு தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஈரானின் தாக்குதல் போக்கை சரியான முறையில் எப்படி எதிர்கொள்வது என அவர்கள் ஆலோசனை மேற்கொண்டனர்’ என தெரிவிக்கப்பட்டு உள்ளது. #Trump #theresamay
  ×