ரிலீசுக்கு தயாராகும் விஜய் சேதுபதியின் 50 - வது படம்

தென்மேற்கு பருவ காற்று படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகினார்.அடுத்ததாக விஜய் சேதுபதியின் 50 வது படமான மஹாராஜா படத்தில் நடித்துள்ளார்.
ரிலீசுக்கு தயாராகும் விஜய் சேதுபதியின் 50 - வது படம்
Published on

தனக்கென ஒரு பாணியில் நடிப்பை வெளிப்படுத்துபவர் விஜய் சேதுபதி. 2010 ஆம் ஆண்டு வெளியான தென் மேற்கு பருவ காற்று படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகினார்.

பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற படங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடத்தை பெற்றார்.

மாஸ்டர், விக்ரம், பேட்ட மற்றும் ஜவான் திரைப்படங்களில் நட்சத்திர நடிகர்களுக்கு வில்லனாக நடித்தார். கத்ரீனா கைஃப் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்து வெளியான மெரி கிறிஸ்துமஸ் திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்பொழுது தமிழ் மற்றும் இந்தி மொழி படங்களில் நடித்து வருகிறார்.

அடுத்ததாக விஜய் சேதுபதியின் 50 வது படமான மஹாராஜா படத்தில் நடித்துள்ளார். குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சுவாமிநாதன் இந்த படத்தை இயக்கியுள்ளார். விஜய் சேதுபதியுடன் அனுராக் காஷ்யப், மம்தா மோகன் தாஸ், நட்டி நடராஜ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு அஜனீஷ் லோக்னாத் இசையமைக்க தினேஷ் புருஷோத்தம்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த ஆண்டு வெளியான நிலையில். இத்திரைப்படம் வரும் மே மாதம் வெளியாகவுள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com