'ரீ ரிலீஸ்' க்கு தயாராகும் விஜய் சேதுபதி படங்கள் 

விஜய் சேதுபதி நடித்து வெற்றிகரமாக ஓடிய படங்களும் தற்போது 'ரீ ரிலீஸ்' செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகின்றனநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்', "இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா" 2 படங்களும் 'ரீ ரிலீஸ்' செய்யப்பட உள்ளன.
'ரீ ரிலீஸ்' க்கு தயாராகும் விஜய் சேதுபதி படங்கள் 
Published on

தமிழ் சினிமாவில் தற்போது "ரீ-ரிலீஸ்" படங்கள் தியேட்டர்களில் நன்றாக ஓடி கொண்டிருக்கிறது. 'வாரணம் ஆயிரம்', 'வேட்டையாடு விளையாடு', '3', 'விண்ணைத் தாண்டி வருவாயா' உள்ளிட்ட படங்கள் வெற்றிகரமாக ஓடி வருகின்றன.

இந்நிலையில் சமீபத்தில் தரணி இயக்கத்தில் விஜய், திரிஷா, பிரகாஷ்ராஜ் நடிப்பில் உருவான 'கில்லி' படம் "ரீ ரிலீஸ்" செய்யப்பட்டு மிகப்பெரும் வசூல் சாதனை செய்தது. இதையடுத்து, மே 1 - ந்தேதி அஜித்தின் பிறந்தநாளை யொட்டி "பில்லா" ,மற்றும் "தீனா" ஆகிய படங்கள் 'ரீ ரிலீஸ்' செய்யப்பட் உள்ளன.

இந்நிலையில் விஜய் சேதுபதி நடித்து வெற்றிகரமாக ஓடிய படங்களும் தற்போது 'ரீ ரிலீஸ்' செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. கடந்த 2012 -ம் ஆண்டு விஜய் சேதுபதி நடித்த 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்', "இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா" ஆகிய 2 படங்களும் விரைவில் 'ரீ ரிலீஸ்' செய்யப்பட உள்ளன.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com