search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Congress"

    • எஸ்.சி, எஸ்.டி மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) ஒரு கூடையில் "முட்டை" போல் சித்தரிக்கப்பட்டுள்ளது
    • இந்த இட ஒதுக்கீட்டுக் கூடையில் முஸ்லிம் சமூகத்தின் மற்றொரு "முட்டையை" ராகுல் காந்தி போடுகிறார்

    கர்நாடகா பாஜகவின் எக்ஸ் பக்கத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக பகை, வெறுப்பு மற்றும் மத மோதல்களை உருவாக்கும் நோக்கில் அனிமேஷன் வீடியோ வெளியிட்டதாக பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, பாஜக சமூக ஊடகப் பொறுப்பாளர் அமித் மாளவியா, பாஜக மாநிலத் தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா ஆகியோருக்கு எதிராக, தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது.

    அந்த அனிமேஷன் வீடியோவில், எஸ்.சி, எஸ்.டி மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) ஒரு கூடையில் "முட்டை" போல் சித்தரிக்கப்பட்டுள்ளது. இது இட ஒதுக்கீட்டைக் குறிக்கிறது. இந்த இட ஒதுக்கீட்டுக் கூடையில் முஸ்லிம் சமூகத்தின் மற்றொரு "முட்டையை" ராகுல் காந்தி போடுகிறார். காங்கிரஸ் தலைவர்கள் எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஓபிசிக்களை விட முஸ்லிம் சமூகத்திற்கு ஆதரவாக அதிக நிதியை கொடுத்து, அவர்களின் இட ஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு கொடுத்து விடுவதாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

    இந்த வீடியோ தேர்தல் நடத்தை விதிகளை மீறுவது மட்டுமின்றி, 1989 ஆம் ஆண்டின் எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றமாகும் என்றும் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

    குறிப்பாக கர்நாடகாவின் மீதமுள்ள 14 தொகுதிகளில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இதுபோன்ற செயல்கள் சமூகங்களிடையே வெறுப்பை தூண்டும் என்று காங்கிரஸ் கவலை தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, பாஜக சமூக ஊடகப் பொறுப்பாளர் அமித் மாளவியா, பாஜக மாநிலத் தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா ஆகியோர் மீது இரு பிரிவினர் இடையே மோதல், வெறுப்பை தூண்டுதல் போன்ற பிரிவுகளில் பெங்களூரு போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது.

    • தற்போது செல்போன் சுவிட்ச் ஆப் ஆகி உள்ளது.
    • ஜெயக்குமார் வீட்டின் பின்பகுதியில் தோட்டத்திற்கு செல்லும் வழியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமரா வேலை செய்யவில்லை.

    நெல்லை:

    நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே. ஜெயக்குமார் தனசிங் கடந்த 2-ந்தேதி மாலை வீட்டில் இருந்து வெளியே புறப்பட்டு சென்றபோது தனது காரை எடுத்துச்சென்றுள்ளார்.

    அப்போது அவர் தனது 2 செல்போன்களையும் எடுத்துக்கொண்டு புறப்பட்டுள்ளார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதற்கிடையே அவரது தோட்டத்திற்கு சற்று தொலைவில் நின்ற அவரது காரை போலீசார் கண்டுபிடித்த நிலையில் அவரது செல்போன்கள் இதுவரை போலீசாரின் கையில் சிக்கவில்லை.

    அந்த செல்போன்கள் எங்கே மாயமானது என்பது தெரியவில்லை. அதனை கண்டுபிடிக்க தனிப்படை தீவிரம் காட்டி வருகின்றனர். தற்போது செல்போன் சுவிட்ச் ஆப் ஆகி உள்ளது. அதனை கைப்பற்றினால் தான் அவரது செல்போனுக்கு கடைசியாக யார் தொடர்பு கொண்டார். அவர் மாயமான 2-ந்தேதி மற்றும் அதற்கு முந்தைய நாட்களில் யாருக்கெல்லாம் அவர் தொடர்பு கொண்டு பேசினார் என்ற விபரம் தெரியவரும் என்பதால் அதனை தேடி வருகின்றனர்.

    அதே நேரத்தில் அவரது வீட்டின் பின்பகுதியில் தோட்டத்திற்கு செல்லும் வழியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமரா வேலை செய்யவில்லை.

    இதனால் யாரேனும் கேமராவை திட்டமிட்டு பழுதாக்கினார்களா? அல்லது கேமரா வேலை செய்யவில்லை என்பதை நன்கு தெரிந்த நபர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாமா? என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காங்கிரஸ் மாவட்ட தலைவர் பிரதீப் சிங்கால் கட்சி அலுவலகத்திற்கு விரைந்தார்.
    • சம்பவம் நடந்த இடத்தில் போலீஸ் படை குவிக்கப்பட்டுள்ளது.

    உத்தரபிரதேச மாநிலம் அமேதியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகம் நேற்று நள்ளிரவில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் தாக்கப்பட்டது.

    வெளியில் நிறுத்தப்பட்டிருந்த கார் உள்ளிட்ட வாகனங்களை மர்மநபர்கள் அடித்து நொறுக்கியுள்ளனர். சத்தம் கேட்டு கட்சி தொண்டர்கள் அங்கு வரும் முன்பு, மர்ம நபர்கள் அங்கிருந்து ஓடிவிட்டனர்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து காங்கிரஸ் மாவட்ட தலைவர் பிரதீப் சிங்கால் கட்சி அலுவலகத்திற்கு விரைந்தார்.

    சம்பவத்தையடுத்து சிஓ சிட்டி மயங்க் திவேதியுடன் பலத்த போலீஸ் படை சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட கட்சியினரை சமாதானப்படுத்த முயன்றது.

    இதுகுறித்து விசாரணை நடத்தி, சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிஓ சிட்டி திவேதி உறுதியளித்துள்ளார்.

    சம்பவம் நடந்த இடத்தில் போலீஸ் படை குவிக்கப்பட்டுள்ளது.

    • செல்பி எடுப்பதற்காக அவரது தோள்களில் கைகளை வைக்க முயன்றார்.
    • டி.கே.சிவகுமார் காங்கிரஸ் தொண்டரை பளார் என அறைந்தார்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநில துணை முதல்-மந்திரி டி.கே.சிவகுமார் கடந்த சனிக்கிழமை தார்வாட் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வினோதா அசூட்டிக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

    அப்போது ஹாவேரி சவனூர் நகரில் பிரசார பேரணியில் பங்கேற்பதற்காக காரில் இருந்து இறங்கியபோது அவரை சூழ்ந்து கொண்டு காங்கிரஸ் தொண்டர்கள் வாழ்த்து கோஷங்கள் எழுப்பினர். கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததால் டி.கே.சிவகுமாரால் அங்கிருந்து மெதுவாகதான் நகர முடிந்தது.

    அப்போது அந்த பகுதியை சேர்ந்த நகராட்சி உறுப்பினரும், காங்கிரஸ் தொண்டருமான அல்லாவுதீன் மணியார் என்பவர் ஆர்வத்தில் துணை முதல்-மந்திரி டி.கே.சிவகுமாருடன் செல்பி எடுப்பதற்காக அவரது தோள்களில் கைகளை வைக்க முயன்றார். இதனால் டி.கே.சிவகுமார் அந்த காங்கிரஸ் தொண்டரை பளார் என அறைந்தார்.

    இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அல்லாவுதீன் மணியாரை கூட்டத்தில் இருந்து ஒதுக்கி தள்ளி டி.கே.சிவகுமாரை காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர். இந்த காட்சி காமிராக்களில் பதிவானது. இது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    டி.கே.சிவகுமார் காங்கிரஸ் உறுப்பினரை அறைந்த சம்பவம் குறித்து பா.ஜனதா ஐ.டி.விங் தலைவர் அமித் மாளவியா எக்ஸ் சமூக வலைதளத்தில் ஒரு கருத்து பதிவிட்டுள்ளார்.

    அதில் டி.கே.சிவகுமார் ஒருவரை தாக்குவது இது முதல் முறையல்ல. டி.கே.சிவகுமாரின் தோளில் கை வைத்தது காங்கிரஸ் மாநகர உறுப்பினர் செய்த குற்றமா? காங்கிரஸ்காரர்கள் ஏன் காங்கிரசுக்கு வேலை செய்ய விரும்புகிறார்கள் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது? அவர்களின் தலைவர்கள் அவர்களை அறைகிறார்கள்.

    அவமானப்படுத்துகிறார்கள். போட்டியிட டிக்கெட் கொடுக்கவில்லை, ஒதுக்கப்படுகிறார்கள். அவர்கள் பக்கத்தில் சுயமரியாதை இல்லையா? என பதிவிட்டுள்ளார்.

    • எஸ்.சி, எஸ்.டி மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) ஒரு கூடையில் "முட்டை" போல் சித்தரிக்கப்பட்டுள்ளது. இது இட ஒதுக்கீட்டைக் குறிக்கிறது
    • இந்த இட ஒதுக்கீட்டுக் கூடையில் முஸ்லிம் சமூகத்தின் மற்றொரு "முட்டையை" ராகுல் காந்தி போடுகிறார்

    கர்நாடகா பாஜகவின் எக்ஸ் பக்கத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக பகை, வெறுப்பு மற்றும் மத மோதல்களை உருவாக்கும் நோக்கில் அனிமேஷன் வீடியோ வெளியிட்டதாக பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, பாஜக சமூக ஊடகப் பொறுப்பாளர் அமித் மாளவியா, பாஜக மாநிலத் தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா ஆகியோருக்கு எதிராக, தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது.

    அந்த அனிமேஷன் வீடியோவில், எஸ்.சி, எஸ்.டி மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) ஒரு கூடையில் "முட்டை" போல் சித்தரிக்கப்பட்டுள்ளது. இது இட ஒதுக்கீட்டைக் குறிக்கிறது. இந்த இட ஒதுக்கீட்டுக் கூடையில் முஸ்லிம் சமூகத்தின் மற்றொரு "முட்டையை" ராகுல் காந்தி போடுகிறார். காங்கிரஸ் தலைவர்கள் எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஓபிசிக்களை விட முஸ்லிம் சமூகத்திற்கு ஆதரவாக அதிக நிதியை கொடுத்து, அவர்களின் இட ஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு கொடுத்து விடுவதாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

    இந்த வீடியோ தேர்தல் நடத்தை விதிகளை மீறுவது மட்டுமின்றி, 1989 ஆம் ஆண்டின் எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றமாகும் என்றும் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

    குறிப்பாக கர்நாடகாவின் மீதமுள்ள 14 தொகுதிகளில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இதுபோன்ற செயல்கள் சமூகங்களிடையே வெறுப்பை தூண்டும் என்று காங்கிரஸ் கவலை தெரிவித்துள்ளது.

    • விசாரணை முடியும் வரை தற்கொலையா என்பதை உறுதியாக கூற முடியாது.
    • ஜெயக்குமாரின் மகன் கொடுத்த புகாரின் படி, காணாமல் போனதாக வழக்கு பதிவு.

    நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் 2 நாட்களுக்கு முன் காணாமல் போன நிலையில் நேற்று சடலமாக மீட்கப்பட்டார்.

    ஜெயக்குமார் எழுதிய 2வது கடிதங்கள் வெளியான நிலையில், நெல்லை மாவட்ட காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

    புகார் அளித்த கடந்த 3ம் தேதி அன்றே உவரி காவல் நிலையத்தில் ஜெயக்குமாரின் மகன், இந்த கடிதத்தையும் கொடுத்திருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    கடிதத்தில் உள்ள நபர்கள் ஒவ்வொரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தி வருவதாக நெல்லை காவல்துறை தெரிவித்துள்ளது.

    விசாரணை முடியும் வரை தற்கொலையா என்பதை உறுதியாக கூற முடியாது.

    ஜெயக்குமாரின் மகன் கொடுத்த புகாரின் படி, காணாமல் போனதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    சடலமாக மீட்கப்பட்டதால், இயற்கைக்கு மாறான மரணம் என தற்போது வழக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.

    • தெலுங்கானாவில் 13-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
    • ரோடு ஷோவில் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசுகிறார்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலத்தில் வருகிற 13-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

    தேர்தலுக்கு இன்னும் ஒரு வார காலமே இருப்பதால் அரசியல் கட்சித் தலைவர்கள் தெலுங்கானாவில் நிலவும் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அனல் பறக்கும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் தெலுங்கானாவில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் இன்று முதல் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர்.

    இன்று நாகர்கர்னூல் தொகுதிக்கு உட்பட்ட கட்வாலியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகின்றனர். அதை தொடர்ந்து அடிலாபாத் தொகுதியின் நிர்மலில் ரோடு ஷோவில் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசுகிறார். பின்னர் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

    வருகிற 9-ந் தேதி மீண்டும் தெலுங்கானாவிற்கு வரும் ராகுல் காந்தி கரீம் நகர் மற்றும் மல்காஜ்கிரி ஆகிய தொகுதிகளில் நடைபெறும் பொதுக் கூட்டங்களில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார்.

    அதே நாளில் பிரியங்கா காந்தி ஜாஹிராபாத் நாடாளுமன்ற தொகுதியின் காமி ரெடியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். அதன் பின்னர் செவல்லா நாடாளுமன்ற தொகுதியின் தந்தூரில் நடைபெறும் பொதுக் கூட்டத்திலும் பேச உள்ளார்.

    இந்த தொகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலில் சந்திரசேகர ராவின் பாரத ராஷ்டிரிய கட்சி வேட்பாளர் ரஞ்சித் ரெட்டி வெற்றி பெற்றார். ரஞ்சித் ரெட்டி பாரத ராஷ்ட்ரிய கட்சியிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து தற்போது காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    10-ந் தேதி மாலை 6 மணிக்கு மேல் பிரியங்கா காந்தி மகபூப் நகர் நாடாளுமன்ற தொகுதியின் ஷாத் நகரில் ரோடு ஷோ மற்றும் பொதுக்கூட்டத்தில் பேச உள்ளார்.

    • வீர மரணம் அடைந்த ராணுவ வீரருக்கு எனது அஞ்சலியை செலுத்துவதுடன், அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
    • தாக்குதலில் காயமடைந்த வீரர்கள் விரைவில் குணமடைய வேண்டும்.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள சுரன்கோட் பகுதியில் விமானப்படை வீரர்களை ஏற்றிக் கொண்டு சென்ற இரண்டு வாகனங்கள் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் விமானப்படை வீரர் ஒருவர் உயிரிழந்தார். 8 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக உதம்பூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    விமானப்படை வீரர்கள் சென்ற வாகனம் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதற்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    விமானப்படை வீரர்கள் சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியது கோழைத்தனமானது. வெட்கக்கேடானது மற்றும் வருத்தமளிக்கிறது.

    வீர மரணம் அடைந்த ராணுவ வீரருக்கு எனது அஞ்சலியை செலுத்துவதுடன், அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். தாக்குதலில் காயமடைந்த வீரர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என கூறியுள்ளார்.

    • குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி போராட்டம்.
    • பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படுகிறது.

    நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், பாளையங்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடந்து வருகிறது.

    2 மருத்துவர் குழு பிரேத பரிசோதனை செய்து வருகின்றனர். பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படுகிறது.

    பிதேர பரிசோதனை முடிந்த பிறகே, இது கொலையா ? தற்கொலையா உ என தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், சம்பவத்தில் உடலை வாங்க மறுத்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.

    சம்பவ இடத்தில் டிஐஜி ஆய்வு செய்து வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    • டெல்லி காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து அர்விந்தர் சிங் லவ்லி விலகினார்
    • காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 3 பேர், இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் உள்ளிட்டோரும் பாஜகவில் இணைந்தனர்

    புதுடெல்லி:

    டெல்லி காங்கிரஸ் தலைவர் அர்விந்தர் சிங் லவ்லி தனது பதவியை கடந்த மாதம் 28 ஆம் தேதி ராஜினாமா செய்தார்.

    காங்கிரஸ் பொதுச்செயலாளர் தீபக் பதரியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டவர்களை கட்சியில் இருந்து நீக்கக்கோரி தொடர்ந்து அழுத்தம் வருவதால் டெல்லி காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறேன் என அர்விந்தர் சிங் லவ்லி தெரிவித்தார்.

    டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியோடு காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்ததற்கும் அவர் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

    இதனையடுத்து, நான் வேறு எந்தக் கட்சியிலும் சேரப்போவது இல்லை. காங்கிரஸ் கட்சியிலேயே தொடர்வேன். கட்சி தொண்டர்களுடன் தொடர்பில் இருப்பேன். கட்சியின் கொள்கைகளை நிலைநாட்டவே இந்த முடிவை எடுத்துள்ளேன். பாராளுமன்ற தேர்தலில் சீட் ஒதுக்குவதில் உள்ள பிரச்சனை காரணம் இல்லை என அர்விந்தர் சிங் லவ்லி தெரிவித்தார்.

    இந்நிலையில், காங்கிரசில் இருந்து விலகிய அர்விந்தர் சிங் லவ்லி பாஜகவில் இணைந்துள்ளார்.

    மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மற்றும் பாஜக மூத்த தலைவர் வினோத் தாவ்டே முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்

    அப்போது காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 3 பேர், இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் உள்ளிட்டோரும் பாஜகவில் இணைந்தனர்

    இவர் பாஜகவில் இணைவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே 2017 ஆம் ஆண்டு காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். மீண்டும் 2018 ஆம் ஆண்டு பாஜகவில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • எல்லாப் பொருளுக்கும் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டு, எல்லாமே விலை உயர்ந்துவிட்டது.
    • பெட்ரோல் மற்றும் டீசல் எவ்வளவு விலை உயர்ந்தது.

    குஜராத் மாநிலம், பனஸ்கந்தா மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பேசினார்.

    அப்போது பேசிய பிரியங்கா காந்தி கூறியதாவது:-

    எனது சகோதரரை இளவரசர் (Shehzada) என பாஜகவினர் அழைக்கின்றனர். இந்த 'இளவரசர்' குமரி முதல் காஷ்மீர் வரை 4000 கி.மீ. நடந்து, மக்களின் பிரச்னைகள் குறித்து கேட்டறிந்தார். மறுபுறத்தில் (Shehanshah) 'ராஜாதிராஜா' நரேந்திர மோடி அரண்மனையில் வாழ்ந்து வருகிறார். தொலைக்காட்சியில் அவரை பார்த்திருக்கிறீர்களா? அவரது முகத்தில் ஒரு துளி தூசியைக் கூட பார்க்க முடியாது. அவரால் எப்படி மக்களின் பிரச்னைகளை புரிந்துகொள்ள முடியும்?

    பெட்ரோல் மற்றும் டீசல் எவ்வளவு விலை உயர்ந்தது அல்லது விவசாயம் எவ்வளவு விலை உயர்ந்தது என்பதை அவர் எப்படி புரிந்துகொள்வார்?

    எல்லாப் பொருளுக்கும் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டு, எல்லாமே விலை உயர்ந்துவிட்டது. இதெல்லாம் மோடிக்கு புரியாது. அவர் கோட்டைக்குள் உள்ளார். அதிகாரத்தால் சூழப்பட்டிருக்கிறார். எல்லோரும் அவரைப் பார்த்து பயப்படுகிறார்கள். அவரை யாரும் எதுவும் சொல்வதில்லை. யாரேனும் குரல் எழுப்பினால், அதை அடக்குவதற்கான முயற்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பூரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் சுசரிதா மொகந்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருந்தார்.
    • எனது சீட்டை திருப்பி கொடுத்து விட்டேன்.நான் மக்கள் சார்ந்த பிரசாரத்தை விரும்பினேன்.

    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநிலத்தில் மொத்தம் 21 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. வருகிற 13-ந்தேதி முதல் ஜூன் 1-ந்தேதி வரை அங்கு 4 கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்கிறது.

    அங்குள்ள பூரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் சுசரிதா மொகந்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருந்தார். இந்த தொகுதியில் பிஜு ஜனதா தளம் சார்பில் அருப் பட்நாயக்கும், பா.ஜனதா சார்பில் சம்பித் பத்ராவும் போட்டியிடுகிறார்கள்.

    இந்த நிலையில் பூரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சுசரிதா மொகந்தி போட்டியில் இருந்து விலகியுள்ளார். தேர்தலில் போட்டியிடுவதற்கான நிதி தன்னிடம் இல்லை என்றும், இதனால் சீட்டை திருப்பி கொடுப்பதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

    இது தொடர்பாக சுசரிதா மொகந்தி கூறியதாவது:-

    எனக்கு கட்சியில் இருந்து நிதி மறுக்கப்பட்டது. சட்டசபை தொகுதிகளில் பலவீனமான வேட்பாளர்களுக்கு டிக்கெட் கொடுக்கப்பட்டது. பா.ஜனதாவும், பிஜு ஜனதா தளமும் பண மழையில் நனைந்துள்ளன. எங்கும் செல்வமாக காணப்படுகிறது. பிரசார செலவுக்கு என்னிடம் பணம் இல்லை. இதனால் நான் போட்டியிட விரும்பவில்லை. எனது சீட்டை திருப்பி கொடுத்து விட்டேன்.

    நான் மக்கள் சார்ந்த பிரசாரத்தை விரும்பினேன். ஆனால் நிதி பற்றாக்குறையால் அதுவும் முடியவில்லை. இதற்கு கட்சி பொறுப்பல்ல. பா.ஜ.க. அரசு கட்சியை முடக்கியுள்ளது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×