search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரவிந்தர் சிங் லவ்லி"

    • டெல்லி காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து அர்விந்தர் சிங் லவ்லி விலகினார்.
    • பா.ஜ.க.வில் இணைய உள்ளதாக வெளியான தகவலை அவர் மறுத்துள்ளார்.

    புதுடெல்லி:

    டெல்லி காங்கிரஸ் தலைவர் அர்விந்தர் சிங் லவ்லி தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். டெல்லி காங்கிரஸ் உள் விவகாரத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் தீபக் பதரியா தலையிடுவதாக கூறி அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    தீபக் பதரியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டவர்களை கட்சியில் இருந்து நீக்கக்கோரி தொடர்ந்து அழுத்தம் வருவதால் டெல்லி காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறேன் என அர்விந்தர் சிங் லவ்லி தெரிவித்தார்.

    இதற்கிடையே, அர்விந்தர் சிங் லவ்லி பா.ஜ.க. பக்கம் தாவலாம் என தகவல்கள் வெளியானது.

    இந்நிலையில், நான் வேறு எந்தக் கட்சியிலும் சேரப்போவது இல்லை. காங்கிரஸ் கட்சியிலேயே தொடர்வேன். கட்சி தொண்டர்களுடன் தொடர்பில் இருப்பேன். கட்சியின் கொள்கைகளை நிலைநாட்டவே இந்த முடிவை எடுத்துள்ளேன். பாராளுமன்ற தேர்தலில் சீட் ஒதுக்குவதில் உள்ள பிரச்சனை காரணம் இல்லை என அர்விந்தர் சிங் லவ்லி தெரிவித்தார்.

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் டெல்லி காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்த சம்பவம் அக்கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்தற்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜினாமா.
    • டெல்லியில் உள்ள 7 மக்களவை தொகுதிகளில் 4ல் ஆம் ஆத்மி, 3ல் காங்கிரஸ் போட்டி.

    டெல்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்தர் சிங் லவ்லி திடீரென பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.

    ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்தற்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜினாமா செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    தொகுதி பங்கீட்டில் காங்கிரஸ் மேலிடம் தங்களின் கருத்துக்களை கேட்கவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    டெல்லியில் உள்ள 7 மக்களவை தொகுதிகளில் 4ல் ஆம் ஆத்மி, 3ல் காங்கிரஸ் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

    • டெல்லி அரசு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.
    • காற்று மாசு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவும் வலியுறுத்தி இருக்கிறார்.

    டெல்லியில் காற்று மாசை குறைக்க டெல்லி மற்றும் மத்திய அரசு போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்று டெல்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்தர் சிங் லவ்லி குற்றம்சாட்டி உள்ளார். மேலும் டெல்லியில் நிலவும் காற்று மாசு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவும் வலியுறுத்தி இருக்கிறார்.

    இந்த விவகாரம் தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அரவிந்தர் சிங் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் முக கவசம் மற்றும் வெங்காய மாலை அணிந்திருந்தனர். டெல்லியில் நிலவும் காற்று மாசு மற்றும் வெங்காய விலை உயர்வை குறிக்கும் வகையில், அவர்கள் இவ்வாறு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இது குறித்து பேசிய அரவிந்தர் சிங், "எதிர்கட்சி தலைவர்கள் பிரச்சினைகள் குறித்து பேசும் போது, டெல்லி அரசு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. நிலைமை மோசமான பிறகுதான் அவர்கள் நடவடிக்கை எடுக்கின்றனர், அதுவும் அவர்கள் தற்காலிக தீர்வுக்கான வழியை பின்பற்றுகின்றனர். காற்று மாசு விவகாரம் தொடர்பாக அரசாங்கம் ஆண்டு முழுக்க கவனம் செலுத்த வேண்டும்."

    "காற்று மாசு ஏற்பட முக்கிய காரணம் தூசிகள் தான். மெட்ரோ கட்டுமானங்கள் டெல்லியில் ஐந்து ஆண்டுகள் வரை தாமதமாகி இருக்கின்றன. இதே நிலைதான் மேம்பாலம் மற்றும் இதர உள்கட்டமைப்பு சார்ந்த கட்டுமான பணிகளின் போதும் தொடர்கிறது. பொது போக்குவரத்து முறை முற்றிலுமாக தகர்ந்துவிட்டது. வாகன போக்குவரத்து காரணமாக டெல்லியில் 40 சதவீத மாசு ஏற்படுவதாக சமீபத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது," என்று தெரிவித்தார்.

    ×