அரண்மனையில் வாழும் ராஜாதிராஜா..! பிரதமர் மோடிக்கு பிரியங்கா காந்தி பதிலடி

எல்லாப் பொருளுக்கும் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டு, எல்லாமே விலை உயர்ந்துவிட்டது.பெட்ரோல் மற்றும் டீசல் எவ்வளவு விலை உயர்ந்தது.
அரண்மனையில் வாழும் ராஜாதிராஜா..! பிரதமர் மோடிக்கு பிரியங்கா காந்தி பதிலடி
Published on

குஜராத் மாநிலம், பனஸ்கந்தா மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பேசினார்.

அப்போது பேசிய பிரியங்கா காந்தி கூறியதாவது:-

எனது சகோதரரை இளவரசர் (Shehzada) என பாஜகவினர் அழைக்கின்றனர். இந்த 'இளவரசர்' குமரி முதல் காஷ்மீர் வரை 4000 கி.மீ. நடந்து, மக்களின் பிரச்னைகள் குறித்து கேட்டறிந்தார். மறுபுறத்தில் (Shehanshah) 'ராஜாதிராஜா' நரேந்திர மோடி அரண்மனையில் வாழ்ந்து வருகிறார். தொலைக்காட்சியில் அவரை பார்த்திருக்கிறீர்களா? அவரது முகத்தில் ஒரு துளி தூசியைக் கூட பார்க்க முடியாது. அவரால் எப்படி மக்களின் பிரச்னைகளை புரிந்துகொள்ள முடியும்?

பெட்ரோல் மற்றும் டீசல் எவ்வளவு விலை உயர்ந்தது அல்லது விவசாயம் எவ்வளவு விலை உயர்ந்தது என்பதை அவர் எப்படி புரிந்துகொள்வார்?

எல்லாப் பொருளுக்கும் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டு, எல்லாமே விலை உயர்ந்துவிட்டது. இதெல்லாம் மோடிக்கு புரியாது. அவர் கோட்டைக்குள் உள்ளார். அதிகாரத்தால் சூழப்பட்டிருக்கிறார். எல்லோரும் அவரைப் பார்த்து பயப்படுகிறார்கள். அவரை யாரும் எதுவும் சொல்வதில்லை. யாரேனும் குரல் எழுப்பினால், அதை அடக்குவதற்கான முயற்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com