search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காங்கிரஸ் போராட்டம்"

    • ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிப்பு, பா.ஜ.க அரசின் போக்கை கண்டித்து சாமல்பட்டி ரெயில் நிலையம் அருகே ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
    • போராட்டத்தில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    தருமபுரி:

    தருமபுரி ரெயில்வே நிலையம் முன்பு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

    இந்த போராட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர் தீர்த்தராமன் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.

    இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினரை போலீசார் கைது செய்து பஸ்சில் அழைத்து சென்று அதே பகுதியில் ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

    ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிப்பு, பா.ஜ.க அரசின் போக்கை கண்டித்து கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த சாமல்பட்டி ரெயில் நிலையம் அருகே ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

    இதில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கிருஷ்ணகிரி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் செல்லகுமார் தலைமையில் ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் ரெயிலை மறிக்க முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது அவர்களுக்குள் தள்ளு, முள்ளு ஏற்பட்டது.

    போராட்டத்தில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    • திருமங்கலத்தில் தெற்கு மாவட்ட தலைவர் பாண்டியன் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் தேவர் சிலையில் இருந்து ரெயில் நிலையத்துக்கு ஊர்வலமாக வந்தனர்.
    • காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து கோஷமிட்டவாறு ரெயில் நிலையத்திற்குள் செல்ல முயன்றனர்.

    மதுரை:

    மதுரையில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கார்த்திகேயன் தலைமையில் வடக்கு மாவட்ட தலைவர் ஆலந்தூர் ரவிச்சந்திரன் முன்னிலையில் போராட்டம் நடந்தது. ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட, அவர்கள் மீனாட்சி பஜாரில் இருந்து ரெயில் நிலையம் நோக்கி பேரணியாக வந்தனர். பின்பு போலீசார் வைத்திருந்த தடுப்புகளை மீறி ரெயில் நிலையத்திற்குள் செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    இதனால் போலீசாருக்கும், காங்கிரசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவர்கள் அனைவரும் ரெயில் நிலையம் அருகே உள்ள சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 150 பேரை போலீசார் கைது செய்தனர். இதே போல் காங்கிரஸ் கட்சியின் மற்றொரு பிரிவை சேர்ந்தவர்களும் ரெயில் நிலையம் முன்பு மறியலில் ஈடுபட்டனர். அவர்களில் 30 பேர் கைது செய்யப்பட்டனர்.

    மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் தெற்கு மாவட்ட தலைவர் பாண்டியன் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் தேவர் சிலையில் இருந்து ரெயில் நிலையத்துக்கு ஊர்வலமாக வந்தனர்.

    ரெயில்நிலையம் வந்த அவர்களை போலீஸ் டி.எஸ்.பி. வசந்தகுமார் தடுத்து நிறுத்தி, ரெயில் மறியல் நடத்த அனுமதி இல்லை என கூறி கலைந்து செல்லுங்கள் என்றார்.

    ஆனால் காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து கோஷமிட்டவாறு ரெயில் நிலையத்திற்குள் செல்ல முயன்றனர். உடனே பாதுகாப்பு போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

    அவர்கள் அங்குள்ள திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். ரெயில் மறியலுக்கு முயன்ற காங்கிரஸ் கட்சியினரால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    விருதுநகரில் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று காலை கச்சேரி ரோட்டில் உள்ள காமராஜர் சிலை முன்பிருந்து மாணிக்கம் தாகூர் எம்.பி. தலைமையில் 300-க்கும் மேற்பட்டோர் ரெயில் நிலையத்திற்கு ஊர்வலமாக சென்றனர்.

    ரெயில் நிலையம் அருகே அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் கலைந்து செல்லுமாறு கூறினர். ஆனால் காங்கிரஸ் கட்சியினர் மறுப்பு தெரிவித்து அங்கேயே அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் மாணிக்கம் தாகூர் எம்.பி., முன்னாள் கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் மீனாட்சிசுந்தரம் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

    • மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட 120 பேரை போலீசார் கைது செய்தனர்.
    • போராட்டத்தில் ஈடுபட்ட அய்யலுசாமி, ஒன்றிய தலைவர் செல்லத்துரை, வட்டார செயலாளர் ராம்தாஸ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    ராகுல் காந்தி எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்தும், டெல்லியில் அவர் தங்கியிருந்த வீட்டை காலி செய்ய உத்தரவிட்ட மத்திய அரசை கண்டித்தும் நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் சந்திப்பு ரெயில் நிலையத்தில் இன்று ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மாவட்ட தலைவர் சங்கரப்பாண்டியன் தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

    தொடர்ந்து சந்திப்பு ரெயில் நிலையத்திற்குள் போலீசாரின் தடையை மீறி காங்கிரசார் உள்ளே நுழைந்தனர். அப்போது 3-வது நடை மேடையில் தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்த அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயிலை அவர்கள் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட 120 பேரை போலீசார் கைது செய்தனர்.

    தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் முன்னாள் துணைத்தலைவர் வக்கீல் அய்யலுசாமி தலைமையில் கடம்பூர் ரெயில் நிலையத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அய்யலுசாமி, ஒன்றிய தலைவர் செல்லத்துரை, வட்டார செயலாளர் ராம்தாஸ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    தென்காசி மாவட்ட தலைவர் பழனி நாடார் எம்.எல்.ஏ. தலைமையில் காங்கிரசார் இன்று செங்கோட்டை ரெயில் நிலையத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட னர். போராட்டத்தில் ஈடுபட்ட 132 பேரை போலீசார் கைது செய்தனர்.

    • காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் கருப்பு சட்டை அணிந்து கையில் கருப்பு கொடி ஏற்றி வந்தனர்.
    • பா.ஜ.க. அரசின் செயல்பாட்டை கண்டித்து மாநில நிர்வாகிகள் பேசினார்கள்.

    சென்னை:

    ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி சென்னைக்கு வருவதால் தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் கருப்புக் கொடி போராட்டம் நடத்தப்படும் என்று தலைவர் கே.எஸ். அழகிரி அறிவித்தார்.

    சென்னையில் வள்ளுவர் கோட்டம் அருகில் இந்த எதிர்ப்பு போராட்டத்தை இன்று நடத்த திட்டமிட்டனர். இதற்கிடையில் காங்கிரஸ் மாவட்ட தலைவர்களை போலீசார் வீட்டு காவலில் வைத்தனர். கருப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் நேற்று இரவே காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் வெளியே செல்ல விடாமல் வீட்டில் அடைக்கப்பட்டனர்.

    பின்னர் அவர்கள் போலீசாரிடம் போராட்டத்தில் பங்கேற்க மட்டும் அனுமதிக்கும்படி கேட்டுக்கொண்டனர். அதன்படி சென்னையில் உள்ள 6 மாவட்ட காங்கிரஸ் தலைவர்களும் வீட்டுக்காவலில் இருந்து வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் கருப்பு கொடி போராட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.

    பிரதமர் மோடி பிற்பகல் 2.40 மணிக்கு வருவதால் போராட்டத்தை மதியம் 1 மணிக்கு நடத்த காங்கிரஸ் தலைவர்கள் முடிவு செய்தனர். பகல் 12 மணிக்கு மேல் காங்கிரஸ் நிர்வாகிகள் ஒவ்வொருவராக போராட்ட களத்திற்கு வரத் தொடங்கினார்கள். மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கருப்பு சட்டை அணிந்து வந்தார். அகில இந்திய செயலாளர் ஸ்ரீவல்லப பிரசாத், எம்.எல்.ஏ.க்கள் செல்வப்பெருந்தகை, அசன் ஆருண், துரை சந்திரசேகர், கே.வி.தங்கபாலு, மாநில நிர்வாகிகள் கோபண்ணா, சிரஞ்சீவி, ரஞ்சித் குமார், விஜயசேகர், ரவிராஜ், மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், சிவராஜ் ராஜசேகரன், முத்தழகன், டெல்லி பாபு, ரஞ்சன் குமார், அடையார் துரை மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டனர்.

    இதற்காக அங்கு மேடை அமைக்கப்பட்டு இருந்தது. நிர்வாகிகள், தொண்டர்கள் கருப்பு சட்டை அணிந்து கையில் கருப்பு கொடி ஏற்றி வந்தனர். பா.ஜ.க. அரசின் செயல்பாட்டை கண்டித்து மாநில நிர்வாகிகள் பேசினார்கள். திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகளும் ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.

    முதலில் கே.எஸ்.அழகிரி மோடிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார். தொண்டர்கள் அவற்றை பின் தொடர்ந்து முழக்கமிட்டனர்.

    கருப்பு கொடி போராட்டத்தையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு அங்கு போடப்பட்டு இருந்தது. மேடையை சுற்றி இரும்பு தடுப்புவேலி அமைத்து அதற்குள் போராட்டம் நடத்த போலீசார் அனுமதி அளித்தனர். போராட்ட களத்தில் இருந்து காங்கிரஸ் நிர்வாகிகள் வெளியே செல்லாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து கல்யாண மண்டபத்தில் தங்க வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக பஸ்சும், வேன்களும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு இருந்தன.

    சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், துணை பொதுச்செயலாளர் சத்ரியன், து.வெ.வேணு கோபால் மற்றும் நிர்வாகிகள் கருப்பு சட்டை அணிந்து கருப்பு பலூன் பறக்கவிட்டு பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    • போலீஸ் அனுமதியை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக காங்கிரஸ் தலைவர்கள் மீது டெல்லி துக்ளக் ரோடு போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    • இந்திய தண்டனை சட்டம் 186 மற்றும் 188 பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    புதுடெல்லி:

    விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு போன்றவற்றை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக நேற்று முன்தினம் நாடு முழுவதும் காங்கிரசார் போராட்டம் நடத்தினார்கள்.

    தலைநகர் டெல்லியில் நடந்த போராட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி., பிரியங்கா காந்தி மற்றும் காங்கிரஸ் எம்.பி.க்கள், தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    இந்த போராட்டத்துக்கு டெல்லி போலீசார் அனுமதி வழங்கவில்லை, ஆனாலும் அதை மீறி டெல்லி விஜய் சவுக் பகுதியில் நடந்த போராட்டத்தில் பங்கேற்ற ராகுல் காந்தி மற்றும் 65 எம்.பி.க்.கள், தலைவர்கள் உள்ளிட்ட 335 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் பிரியங்கா காந்தியும் கைதானார். பின்னர் மாலையில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

    இந்த நிலையில் போலீஸ் அனுமதியை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக காங்கிரஸ் தலைவர்கள் மீது டெல்லி துக்ளக் ரோடு போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்திய தண்டனை சட்டம் 186 மற்றும் 188 பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    மேலும் அவர்கள் மீது போராட்டம் நடந்த போது எடுக்கப்பட்ட வீடியோ ஆதாரத்துடன் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    • டெல்லியில் ராகுல்காந்தி எம்.பி. தலைமையில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம், ஊர்வலம் நடந்தது.
    • ஊர்வலத்தில் முன்னாள் அமைச்சர் கந்தசாமி பங்கேற்றார். ஊர்வலத்தில் பங்கேற்றவர்களை போலீசார் கைது செய்தனர்.

    புதுச்சேரி:

    அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவுறுத்தலின்படி நாடு முழுவதும் காங்கிரஸ் சார்பில் கவர்னர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது.

    அரிசி, பால், தயிர் போன்ற உணவு பொருட்களுக்கு மத்திய அரசு ஜி.எஸ்.டி. வரி விதிப்பு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், அக்னிபாத் திட்டத்தில் இளைஞர்களுக்கு ஏமாற்றம் என மத்திய அரசின் செயல்பாடுகளை கண்டித்து புதுவை மாநில காங்கிரஸ் சார்பில் கவர்னர் மாளிகை முற்றுகையிடும் போராட்டம் இன்று நடந்தது.

    இதற்காக மிஷன் வீதி மாதா கோவிலில் இருந்து காங்கிரசார் ஊர்வலமாக புறப்பட்டனர். ஊர்வலத்துக்கு மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் தலைமை வகித்தார்.

    ஊர்வலத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ. முன்னாள் அமைச்சர் ஷாஜகான், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் நீலகங்காதரன், கார்த்திகேயன், அனந்தராமன், சீனியர் துணைத்தலைவர் தேவதாஸ், காங்கிரஸ் நிர்வாகிகள் கருணாநிதி, தனுசு, ரகுமான், சரவணன், முன்னாள் கவுன்சிலர்கள் தமிழரசி, கலைவாணன், சடகோபன், வக்கீல் சாமிநாதன் மற்றும் பலர் பங்கேற்றனர்.

    பிரதமர் நரேந்திரமோடி, மத்திய மந்திரி அமித்ஷா ஆகியோரை கண்டித்து கோஷம் எழுப்பியபடி ஆம்பூர் சாலைக்கு வந்தனர். அங்கு போலீசார் பேரிகார்டுகளை அமைத்து அவர்களை தடுத்தனர்.

    அங்கு போலீசாருக்கும், காங்கிரசாருக்கும் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது. பேரிகார்டுகளின் மீது ஏறி தடையை தாண்டி செல்ல முயன்றனர். இதையடுத்து போலீசார் அவர்களை கைதுசெய்தனர். முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ. உட்பட 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

    டெல்லியில் ராகுல்காந்தி எம்.பி. தலைமையில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம், ஊர்வலம் நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் கந்தசாமி பங்கேற்றார். ஊர்வலத்தில் பங்கேற்றவர்களை போலீசார் கைது செய்தனர். முன்னாள் அமைச்சர் கந்தசாமியும் கைது செய்யப்பட்டார்.

    • நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதை கண்டித்து திருச்சியில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
    • மாநகர் மாவட்ட தலைவர் ஜவகர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருச்சி கலை, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் வக்கீல் கோவிந்தராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்

    திருச்சி:

    திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் சோனியாகாந்தியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக அமலாக்கத்துறை மூலமாக 3-வது நாளாக விசாரணைக்கு அழைத்த மத்திய அரசை கண்டித்து ஸ்ரீரங்கம் ராஜகோபுரம், மகாத்மா காந்தி சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மாநகர் மாவட்ட தலைவர் ஜவகர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருச்சி கலை, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் வக்கீல் கோவிந்தராஜ், ஸ்ரீரங்கம் கோட்டத்தலைவர் சிவாஜி சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் வக்கீல் சரவணன், பொருளாளர் இளையராஜா, வட்டார தலைவர்கள் நல்லேந்திரன், லால்குடி சுப்பிரமணியன், கே.பி.ராஜா, கோட்டத்தலைவர் ராஜ்மோகன், வில்ஸ் முத்துக்குமார்,

    ஹெலன், அமிர்தவள்ளி, டேவிட், கிரேசி, ஜார்ஜ், நிஜவிரப்பா, கதிரேசன், முரளி, மாவட்ட பொதுச் செயலாளர்கள் சிவா, அண்ணாசிலை விக்டர், மாவட்ட செயலாளர்கள் ராஜா டேனியல் ராய், பிலால், அனந்த பத்மநாபன், பட்டேல், ஜீவா நகர் ராஜா,

    எஸ்.சி., எஸ்.டி. பிரிவு தலைவி ஜோதி, மாநில மகளிர் அணி செயலாளர் வக்கீல் மோகனாம்பாள், பஞ்சாயத்து ராஜ் பிரிவு தலைவர் அண்ணாதுரை, தியாகராஜன், ஸ்ரீரங்கம் கோட்ட நிர்வாகிகள் செல்வி, குமரன், கதர் ஜெகநாதன், அணில் மாதவன், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட பொதுச்செயலாளர் உறையூர் கிருஷ்ணா, ஜெயம் கோபி, ஸ்ரீரங்கம் கிருஷ்ணா,

    வார்டு தலைவர்கள் முருகன், செளந்தர், சக்தி, வெங்கடேஷ், வடிவேலு, தீலிபன் பன்னை சரவணன், பிரியங்கா பட்டேல், அய்யா கண்ணு, அல்லூர் எழிலரசன் அன்பில் ராஜேந்திரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • சோனியாகாந்தியிடம் விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து ராகுல் தலைமையில் காங்கிரசார் போராட்டம்.
    • பாராளுமன்றத்தை நோக்கி பேரணியாக செல்ல முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    நேஷனல் ஹெரால்டு முறைகேடு வழக்கில் சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறையினர் நேற்று 2வது நாளாக விசாரணை நடத்திய நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் கட்சி எம்.பி.க்கள், நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பாராளுமன்றத்தை நோக்கி பேரணியாக செல்ல முயன்ற அவர்களை விஜய்சவுக் பகுதியில் போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர்களை இழுத்துச் சென்று கைது செய்தனர். ராகுல்காந்தி உள்பட போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வடக்கு நீருற்று பகுதி காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றனர். 6 மணி நேரத்திற்கு பின்னர் ராகுல்காந்தி உள்பட அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

    இந்நிலையில் இந்த போராட்டம் குறித்து டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ள ராகுல்காந்தி, வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம், ஜிஎஸ்டி, அக்னிபாத் உள்ளிட்டவை குறித்து யார் கேள்வி கேட்டாலும் அவர்களை சிறையில் அடைக்குமாறு இந்த நாட்டின் ராஜா உத்தரவிட்டுள்ளார் என்று பிரதமர் மோடி குறித்து புகார் தெரிவித்தார்.

    பாராளுமன்றத்திற்கு உள்ளே விவாதம் நடத்த அனுமதி அவர்கள் மறுப்பதாகவும், வெளியே எங்களை அவர்கள் கைது செய்கிறார்கள் என்றும் ராகுல் கூறினார்.  தாம் போலீசார் காவலில் வைக்கப்பட்டாலும், மக்களுக்காக குரல் எழுப்புவதை அவர்கள் குற்றம் என்று சொன்னாலும், ஒருபோதும் எங்கள் உறுதிபாட்டை அவர்களால் உடைக்க முடியாது என்றும் ராகுல் குறிப்பிட்டார். 

    • டெல்லியில் பாராளுமன்ற வளாகத்தில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் அலுவலகத்தில் இன்று காங்கிரஸ் எம்.பி.க்கள் ஒன்று கூடினார்கள்.
    • சோனியாவிடம் விசாரணை நடத்தும் அமலாக்கத்துறையை கண்டித்து டெல்லி அமலாக்கத்துறை அலுவலகம் நோக்கி பேரணியாக சென்றனர்.

    சென்னை:

    நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக விசாரணைக்கு நேரில் இன்று ஆஜராக வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. இதையடுத்து சோனியா காந்தி இன்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜரானார்.

    இந்தநிலையில் சோனியா காந்திக்கு சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறையை கண்டித்து நாடு முழுவதும் இன்று காங்கிரஸ் கட்சி சார்பில் சத்தியாகிரக போராட்டம் நடைபெற்றது.

    டெல்லியில் பாராளுமன்ற வளாகத்தில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் அலுவலகத்தில் இன்று காங்கிரஸ் எம்.பி.க்கள் ஒன்று கூடினார்கள். அவர்கள் சோனியாவிடம் விசாரணை நடத்தும் அமலாக்கத்துறையை கண்டித்து டெல்லி அமலாக்கத்துறை அலுவலகம் நோக்கி பேரணியாக சென்றனர்.

    இதேபோல் பல்வேறு மாநிலங்களிலும் இன்று காங்கிரஸ் கட்சி சார்பில் சத்தியாகிரக போராட்டம் நடைபெற்றது.

    தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் சென்னையில் இன்று பல இடங்களில் சத்தியாகிரக போராட்டம் நடந்தது. மத்திய சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் சிவ.ராஜசேகரன் தலைமையில் சென்னை துறைமுகம் நாட்டு பிள்ளையார் கோவில் தெருவில் அமைந்துள்ள காந்தி சிலை அருகில் சத்தியாகிரக போராட்டம் நடந்தது.

    அமைதியான வழியில் நடந்த இந்த போராட்டத்தில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு, திருநாவுக்கரசர் எம்.பி. ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

    இந்த போராட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. முருகானந்தம், பொன். கிருஷ்ணமூர்த்தி, டி.வி.துரைராஜ், பொதுக்குழு உறுப்பினர் கராத்தே ரவி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    வடசென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் எம்.எஸ். திரவியம் தலைமையில் வண்ணாரப்பேட்டை தபால் நிலையம் அருகில் சத்தியாகிரக போராட்டம் நடந்தது. இதில் முன்னாள் எம்.எல்.ஏ. உ.பலராமன், கோபண்ணா, கவுன்சிலர் தீர்த்து மற்றும் நூற்றுக்கணக்கான காங்கிரசார் கலந்து கொண்டனர்.

    தமிழக இளைஞர் காங்கிரஸ் சார்பில் சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் இளைஞர் காங்கிரஸ் தலைவர் எம்.லெனின் பிரசாத் தலைமை தாங்கினார். இதில் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூரில் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் செந்தில் குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    பல்லாவரம் நகர தலைவர் தீனதயாளன், தாம்பரம் நகர தலைவர் விஜய் ஆனந்த், மாநில சிறுபான்மை பிரிவு துணை தலைவர் பிரின்ஸ் தேவ சகாயம், அனகாபுத்தூர் நகர தலைவர் அப்துல் காதர், முன்னாள் மாவட்ட தலைவர் சிவராமன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்தும் அமலாக்கத்துறையை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

    காட்டாங்கொளத்தூர் ஒன்றிய அலுவலகம் அருகில் செங்கல்பட்டு தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாவட்ட செயலாளர் வக்கீல் சுந்தரமூர்த்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் ஒன்றிய தலைவர் ஜானகிராமன், மறைமலை நகர் நகர தலைவர் தனசேகரன், கூடுவாஞ்சேரி நகர தலைவர் கிருஷ்ணன், செங்கல்பட்டு நகர தலைவர் பாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மகாராஷ்டிரா அரசை கவிழ்க்கும் குதிரை பேரத்தில் அசாம் மாநில பா.ஜனதா அரசு ஈடுபடுவதாக அவர்கள் குற்றம் சாட்டினார்கள்.
    • மகாராஷ்டிரா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தங்கி இருக்கும் நட்சத்திர ஓட்டல் முன்பு அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    கவுகாத்தி:

    ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அசாம் தலைநகர் கவுகாத்தியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் முகாமிட்டு உள்ளனர்.

    இந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்களால் மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் அசாமை விட்டு சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் வெளியேற கோரி காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மகாராஷ்டிரா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தங்கி இருக்கும் நட்சத்திர ஓட்டல் முன்பு அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அசாம் காங்கிரஸ் தலைவர் பூபன்குமார் போரா, ராஜ்புல் உசேன் எம்.எல்.ஏ. எதிர்கட்சி தலைவர் சைதாலியா ஆகியோர் தலைமையில் போராட்டம் நடந்தது.

    மகாராஷ்டிரா அரசை கவிழ்க்கும் குதிரை பேரத்தில் அசாம் மாநில பா.ஜனதா அரசு ஈடுபடுவதாக அவர்கள் குற்றம் சாட்டினார்கள்.

    ஏற்கனவே ஏக்நாத் ஷிண்டேவுக்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அசாமில் போராட்டம் நடத்தி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    ×