search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீடியோ வைரல்"

    • மரியாதை செய்துவிட்டு தான் செல்ல வேண்டும் என கூறி குணாளை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
    • வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வைரலாக பரப்பி வருகின்றனர்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் செஞ்சி ரோடு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 39),இவர் திண்டிவனம் செஞ்சி ரோட்டில் பேட்டரி கடை நடத்தி வருகிறார்.இவரது கடையில் டி. வி. நகர் பகுதியை சேர்ந்த குணால் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 17-ந் தேதி இரவு கடையை மூடிவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் செல்ல முற்பட்டபோது எம்.ஜி. ஆர் நகர் பகுதியைச் சேர்ந்த பார்த்திபன் அவரது கூட்டாளிக ளான சபரீசன், ஜாஸ்மி ன்,அமீர்,மற்றும் 5-க்கும் மேற்ப ட்டோர் திடீரென கடை ஊழியர் குணாளின் வாகனத்தை நிறுத்தி இந்த தெருவில் நீ வேகமாக செல்லக்கூடாது எங்களை பார்த்துவிட்டு மரியாதை செய்துவிட்டு தான் செல்ல வேண்டும் என கூறி குணாளை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதை கண்ட கடை உரிமையாளர் பா.ம.க. நிர்வாகி ரமேஷ் மற்றும் அவரது மனைவி பரமேஸ்வரி ஆகியோர் ஏன் எங்கள் கடையில் வேலை செய்யும் நபரை அடிக்கிறீர்கள் என கேட்டதற்கு ரமேஷ் மற்றும் பரமேஸ்வரியையும் சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்த மோட்டார் சைக்கிள்,கடை போர்டு போன்ற பொருட்களை அடித்து சேதப்படுத்திவிட்டு உங்களை கொலை செய்து விடுவோம் என மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். அருகில் இருந்தவர்கள் அதை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வைரலாக பரப்பி வருகின்றனர். இது சம்பந்தமாக பரமேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் பார்த்திபன் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது வழக்கு பதிவு செய்து சபரிசன் மற்றும் ஜாஸ்மின் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள பார்த்திபன் மற்றும் அவரது கூட்டாளிகளை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.மேலும் இது சம்பந்தமாக தகவல் அறிந்த மயிலம் பா.ம.க. எம்.எல்.ஏ. சிவக்குமார் பா.ம.க. நிர்வாகி ரமேஷ் மற்றும் பரமேஸ்வரி ஆகியோர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அவர் கூறுகையில் முக்கிய குற்றவாளியான பார்த்திபனை உடனடியாக கைது செய்ய வேண்டும். வணிகர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருவது வேதனையாக உள்ளது. உடனடியாக போலீசார் இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    ×