search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tamil Cinema"

    • 2015 ஆம் ஆண்டு அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய பிரேமம் திரைப்படம் மூலம் திரைத்துறையில் அறிமுகமாகினார் அனுபமா பரமேஸ்வரன்.
    • கடந்த மாதம் வெளியான டில்லு ஸ்கொயர் திரைப்படத்தில் நடித்து மக்கள் மனதை வென்றார்.

    2015 ஆம் ஆண்டு அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய பிரேமம் திரைப்படம் மூலம் திரைத்துறையில் அறிமுகமாகினார் அனுபமா பரமேஸ்வரன். அதற்கடுத்து மலையாள சினிமாவில் முன்னணி நடிகைகளுள் ஒருவர் ஆனார்.

    தனுஷ் நடிப்பில் வெளிவந்த கொடி திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் காலடியை பதித்தார். பின் மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி பலப் படங்களில் நடித்தார்.

    கடந்த மாதம் வெளியான டில்லு ஸ்கொயர் திரைப்படத்தில் நடித்து மக்கள் மனதை வென்றார். இப்படம் அவருக்கு மிகப்பேரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தது. அதைத்தொடர்ந்து 'பரதா' என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை பிரவீன் காந்த்ரேகுலா இயக்கவுள்ளார். இதற்கு முன் சினிமா பண்டி என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் அடுத்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன் நடிக்கவுள்ளார் என்ற தகவலை லைகா நிறுவனம் அவர்களின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டனர். இப்படத்திற்கான் ஃபர்ஸ்ட் லுக்கை மே 6 அன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்போவதாக தெரிவித்துள்ளனர்.

    இப்படத்தை அறிமுக இயக்குனரான ஏ.ஆர் ஜீவா இயக்கவுள்ளார். சமீபத்தில் லைகா நிறுவனம் குறும்பட போட்டி ஒன்றை நடத்தினர் அதில் தேர்ந்தெடுக்கப்படும் 5 சிறந்த குறும்படத்தின் இயக்குனர்களுக்கு வாய்ப்பு அளிப்பதாக கூறியிருந்தனர். அதில் ஒருவர் தான் ஏ.ஆர் ஜீவா.

    இப்படம் பெண்களை மையப்படுத்தும் கதைக்களத்தோடு அமையும் என எதிர்பார்க்கப் படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ரஜினிகாந்த் தற்போது தனது 170ஆவது படமான 'வேட்டையன்' படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தைத் தொடர்ந்து 171ஆவது படத்திற்காக லோகேஷ் கனகராஜுடன் கை கோர்த்துள்ளார் ரஜினி.

    ரஜினிகாந்த் தற்போது தனது 170ஆவது படமான 'வேட்டையன்' படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிக்கும் இப்படத்தை ஜெய் பீம் பட இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கி வருகிறார். இப்படம் வருகிற அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது.

    விரைவில் ரிலீஸ் தேதி அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. மும்பையில் சில தினங்களாக நடைபெற்றது. அங்கு ரஜினி மற்றும் அமிதாப் பச்சனின் புகைப்படங்கள் நேற்று வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது.

    இப்படத்தைத் தொடர்ந்து 171ஆவது படத்திற்காக லோகேஷ் கனகராஜுடன் கை கோர்த்துள்ளார் ரஜினி. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஜூனில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தின் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே மிகப்பெரிய வர்வேரபை பெற்றது.

    மேலும் இளையராஜா இசையில் ரஜினிகாந்த நடித்த தங்கமகன் படத்தில் இடம்பெற்றிருந்த 'வா வா பக்கம் வா...' பாடல் மறு உருவாக்கம் செய்யப்பட்டு டிஸ்கோ டிஸ்கோ என பாடல் இடம்பெற்றுள்ளது.

    இதையடுத்து கூலி படத்தில் தன்னுடைய இசையை அனுமதியின்றி பயன்படுத்தியதாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு விளக்கம் கேட்டு இளையராஜா தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

    இது கோலிவுட்டில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ரஜினி தற்போது பதிலளித்துள்ளார். வேட்டையன் பட படப்பிடிப்பிற்காக மும்பை சென்ற அவர், படப்பிடிப்பை முடித்துவிட்டு இன்று சென்னை திரும்பினார்.

    அப்போது விமான நிலையத்தில் அவரிடம் இளையராஜா நோட்டீஸ் அனுப்பியது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், "அது இளையராஜாவிற்கும் தயாரிப்பாளருக்கும் உண்டானது" என்றார். மேலும், கூலி பட டைட்டில் டீசர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது ரொம்ப மகிழ்ச்சி என்றும் வேட்டையன் படப்பிடிப்பு 80 சதவீதம் முடிந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பிரபல இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா திருமணம் சமீபத்தில் சென்னையில் கோலாகலமாக நடந்தது.
    • அதைத் தொடர்ந்து விழாவில் ஷங்கர் மற்றும் குடும்பத்தினர் சிறப்பு போட்டோ சூட் நடத்தியுள்ளனர்.

    பிரபல இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா திருமணம் சமீபத்தில் சென்னையில் கோலாகலமாக நடந்தது. விழாவில் இந்திய திரை உலக பிரபலங்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். விழாவையொட்டி நடந்த இசை நிகழ்ச்சியில் பிரபல இந்தி நடிகரும் தீபிகா படுகோனே கணவருமான ரன்வீர் சிங், இயக்குனர் அட்லி, ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் மற்றும் மகன் ஆகியோர் குத்து நடனம் ஆடி பார்வையாளர்களை மகிழ்வித்தனர். அவர்கள் ஆடிய நடனத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.

    தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள திரையுலகில் உள்ள பிரபல நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் விழாவில் கலந்துக் கொண்டனர்.

    அதைத் தொடர்ந்து விழாவில் ஷங்கர் மற்றும் குடும்பத்தினர் சிறப்பு போட்டோ சூட் நடத்தியுள்ளனர். இந்தப் புகைப்படங்களை அதிதி ஷங்கர் நேற்று தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டார். அதில் ஒரு புகைப்படத்தில் நடிகர் விஜய் மகன் சஞ்சய்யும் இருக்கிறார். இந்த புகைப்படங்கள் வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. லைகா நிறுவனம் தயாரிப்பில் சஞ்சய் இயக்கும் படத்தில் அதிதி ஷங்கர் நடிக்க உள்ளார் என்று தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தற்போது படத்தின் சூட்டிங் மும்பையில் நடைப்பெற்று வருகிறது. நேற்று அமிதாப் பச்சனுடன் ரஜினிகாந்த் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகியது.
    • 33 வருடங்களுக்கு பிறகு அமிதாப் பச்சன் ரஜினிகாந்துடன் இணைந்து படத்தில் நடிகவுள்ளார்.

    நடிகர் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், மஞ்சுவாரியர், ராணா டகுபதி, ரித்திகா சிங், பகத் ஃபாசில் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வரும் வேட்டையன் படத்தின் சூட்டிங் விரைவில் நிறைவடையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்படத்தை டிஜே ஞானவேல் இயக்கியுள்ளார். தற்போது படத்தின் சூட்டிங் மும்பையில் நடைப்பெற்று வருகிறது. நேற்று அமிதாப் பச்சனுடன் ரஜினிகாந்த் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகியது.

    33 வருடங்களுக்கு பிறகு அமிதாப் பச்சன் ரஜினிகாந்துடன் இணைந்து படத்தில் நடிகவுள்ளார். அமிதாப் பச்சன் நடிக்கும் முதல் தமிழ் திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

    இப்படத்தை தொடர்ந்து டிஜே ஞானவேல் அடுத்ததாக தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான நானி நடிப்பில் படம் இயக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

     

    முன்னதாக வேட்டையன் படத்தில் வரும் ராணா கதாப்பாத்திரத்திற்கு நானியை அணுகியுள்ளார் கால்ஷீட் பிரச்சனைகளால் அவரால் வேட்டையன் படத்தில்  நடிக்க முடியவில்லை. அப்போது அவர் நானிக்கு ஒரு கதையை கூறியதாகவும் அது அவரை மிகப் பெரிய அளவில் கவர்ந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ரோமஞ்சம் படத்தை இயக்கிய ஜித்து மாதவன் இயக்கத்தில் பகத் பாசில் நடித்த படம் ஆவேஷம் கடந்த மாதம் 11 ஆம் தேதி வெளியாகியது .
    • மஞ்சும்மல் பாய்ஸ் படத்திற்கு இசையமைத்த சுஷின் ஷ்யாம் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    ரோமஞ்சம் படத்தை இயக்கிய ஜித்து மாதவன் இயக்கத்தில் பகத் பாசில் நடித்த படம் ஆவேஷம் கடந்த மாதம் 11 ஆம் தேதி வெளியாகியது . படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. உலகளவில் இதுவரை ஆவேஷம் திரைப்படம் 130 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இதில் ஃபஹத் ஃபாசிலுடன் சஜின் கோபு, சிஜு சன்னி, ஆஷிஷ் வித்யார்த்தி, மன்சூர் அலிக்கான் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். மஞ்சும்மல் பாய்ஸ் படத்திற்கு இசையமைத்த சுஷின் ஷ்யாம் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    படத்தின் பாடல்கள் அனைத்தும் மிக ஹிட்டாகியது குறிப்பாக டேப்சி குரலில் இலுமினாட்டி என்ற பாடல் இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. படத்தில் பகத் பாசில் ரீல் செய்யும் காட்சிகளை மக்கள் இன்ஸ்டாகிராமில் ரீ கிரியேட் செய்து வருகின்றனர். படத்தில் பகத் பாசில் முற்றிலும் மாறுபட்ட கேங்க்ஸ்டர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    பெங்களூருவைச் சேர்ந்த கேங்க்ஸ்டரான ரங்கனைச் (பகத்) சந்திக்கும் மூன்று கல்லூரி மாணவர்கள், அவரால் என்னென்ன பிரச்னைகளைச் சந்திக்கிறார்கள் என்பதே படத்தின் கதை. இந்நிலையில் படம் அமேசான் பிரைம் ஓ.டி.டி.யில் மே 9-ம் தேதி வெளியாகுமென தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து தயாரிப்பு நிறுவனம் விரைவில் அதிகாரபூர்வமாக தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஜோ பட ஜோடி அடுத்து மீண்டும் ஒன்றாக இணைந்து நடிக்கவுள்ளனர். இப்படத்தை அறிமுக இயக்குனரான கலையரசன் தங்கவேல் இயக்கவுள்ளார்.
    • பல வெற்றித் திரைப்படங்களைத் தயாரித்த "ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஸன்ஸ்" நிறுவனம் தயாரிக்கவுள்ளது

    2023 ஆம் ஆண்டு அறிமுக இயக்குனரான ஹரிஹரன் ராம் இயக்கத்தில் ரியோ ராஜ் மற்றும் மாளவிகா மனோஜ் இணைந்து நடித்து ஜோ திரைப்படம் வெளியாகி மக்களிடையே விமர்சனம் ரீதியாகவும் வசூல் ரீதியாகும் நல்ல வரவேற்பை பெற்றது.

    இதைத்தொடர்ந்து ஜோ பட ஜோடி அடுத்து மீண்டும் ஒன்றாக இணைந்து நடிக்கவுள்ளனர். இப்படத்தை அறிமுக இயக்குனரான கலையரசன் தங்கவேல் இயக்கவுள்ளார். இச்சமூதாயத்தில் ஆண்கள் படும் கஷ்டத்தை பற்றி பேசும் படமாக இது இருக்கும் என இயக்குனர் தெரிவித்துள்ளார்.

    இயக்குநர்கள் ஹரி, முத்தையா ஆகியோரை வைத்து, பல வெற்றித் திரைப்படங்களைத் தயாரித்த "ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஸன்ஸ்" நிறுவனம் சார்பாக, மணிகண்டன் கந்தசுவாமியின் மேற்பார்வையில் , அறிமுக இயக்குனர் "பிளாக் ஷீப்" கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் இந்த படம் உருவாகிறது.

    பிளாக் ஷீப் நிறுவனத்தின் இணை தயாரிப்பில் உருவாகும் இந்தத் திரைப்படத்தில், "ஜோ" திரைப்படத்தின் வெற்றி ஜோடியான ரியோ- மாளவிகா மனோஜ் மீண்டும் இணைகிறார்கள். மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவு, சித்துகுமார் இசை, வருண் கே.ஜி.யின் எடிட்டிங், வினோத் ராஜ்குமாரின் கலையமைப்பு, சந்துருவின் டிசைன், மீனாட்சியின் ஆடை வடிவமைப்பு, என ஒரு மெகா இளைஞர்கள் கூட்டணியில் இப்படம் உருவாக உள்ளது. இந்த வருட பிற்பகுதியில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். படத்தின் பூஜை விழா இன்று சென்னையில் சிறப்பாக நடைப்பெற்றது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இப்படத்தை அறிமுக இயக்குனரான சிவபாலன் முத்துகுமார் இயக்கவுள்ளார்.
    • படத்திற்கு ”Bloody Beggar” என தலைப்பிடப்பட்டுள்ளது.

    தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் நெல்சன் திலிப்குமார் முக்கியமானவர். ரஜினிகாந்த் நடிப்பில் இயக்கிய ஜெயிலர் திரைப்படம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. உலகளிவில் 600 கோடி ரூபாய் வசூலித்தது குறிப்பிடத்தக்கது. அதை தொடர்ந்து சமீபத்தில் நெல்சன் அவரது தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். அதற்கு ஃபிலமண்ட் பிக்சர்ஸ் என பெயரிட்டுள்ளார்.

    அந்த நிறுவனம் தயாரிக்கும் முதல் படத்தின் தகவலை இன்று வெளியிட்டார். நெல்சன் தயாரிப்பில் கவின் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குனரான சிவபாலன் முத்துகுமார் இயக்கவுள்ளார். இவர் இதற்கு முன் நெல்சன் திலிப்குமாரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

    படத்திற்கு "Bloody Beggar" என தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தின் டைட்டில் ரிவீலிங்க் வீடியோவை நகைச்சுவை பாணியில் நெல்சன், ரெடின் கிங்ஸ்லி, கவின், சிவபாலன் ஆகியோர் நடித்து வெளியிட்டுள்ளனர். வீடியோ காட்சிகள் தற்பொழுடு வைரலாகி வருகிறது.

     

    கவின் தற்பொழுது நடித்து இருக்கும் ஸ்டார் படம் வரும் மே 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. அடுத்தடுத்து வித்தியாசமான கதைக்களத்தில் நடித்து வருகிறார் கவின்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கடைசியாக அர்ஜுன் தாஸை வைத்து அநீதி என்ற தலைப்பில் ஒரு படமெடுத்திருந்தார்.
    • இந்த சீரிஸ் வருகிற 17ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

    வெயில், அங்காடித் தெரு, அரவான் உள்ளிட்ட சில ஹிட் படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் வசந்த பாலன். ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய இவர், வெயில் படத்திற்காக தேசிய விருது வென்றார். கடைசியாக அர்ஜுன் தாஸை வைத்து அநீதி என்ற தலைப்பில் ஒரு படமெடுத்திருந்தார். கடந்த வருடம் வெளியான இப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது.

    இந்த நிலையில் தற்போது வெப் சீரிஸில் இறங்கியுள்ளார். இந்த சீரிஸீன் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. நடிகை திரிஷா தனது எக்ஸ் பக்கத்தின் மூலம் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசரை வெளியிட்டு படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். பர்ஸ்ட் லுக் போஸ்டரில் கிஷோர் மட்டும் தமிழ் குரல் என்ற செய்தித்தாள் வாசிக்கும் படியான புகைப்படம் இடம்பெற்றிருக்கிறது.

    இந்த சீரிஸிற்கு 'தலைமைச் செயலகம்' எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் கிஷோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, பரத், ரம்யா நம்பீசன், ஸ்ரேயா ரெட்டி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ராதிகா மற்றும் சரத்குமார் அவர்களது ராடன் தயாரிப்பு நிறுவனம் சார்பில் இந்த சீரிஸை தயாரிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். அரசியல் கதைக்களத்தை மையமாக வைத்து இந்த சீரிஸ் உருவாகியுள்ளது.

    சீரிஸின் டீசரைப் பார்க்கையில் ஒரு அரசியல் கட்சி தலைவன், ஒரு சம்பவத்தின் நீதிக்காக குற்றங்கள் செய்து, அதனால் மரண தண்டனை வரை செல்கிறது. அது என்ன சம்பவம், என்ன குற்றம் அந்தத் தலைவன் செய்தான் என்பது விரிவாக இந்த சீரிஸ் சொல்வது போல் தெரிகிறது.

    இந்த சீரிஸ் வருகிற 17ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கடந்த 2015-ம் ஆண்டு ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா டகுபதி, நாசர், சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர் நடித்து வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் பாகுபலி.
    • இந்த நிலையில் பாகுபலி படத்தின் முன் கதை அனிமேஷன் வடிவில், வெப் சீரிஸாக வெளியாகிறது

    கடந்த 2015-ம் ஆண்டு ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா டகுபதி, நாசர், சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர் நடித்து வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் பாகுபலி. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியான இப்படம், உலக அளவில் ரூ.600 கோடியைக் கடந்ததாக தகவல் வெளியானது. இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் 2017-ம் ஆண்டு வெளியாகி முதல் பாகத்தை விட அதிக வசூல் ஈட்டியது. உலகமுழுவதும் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.

    இந்த நிலையில் பாகுபலி படத்தின் முன் கதை அனிமேஷன் வடிவில், வெப் சீரிஸாக வெளியாகிறது. 'பாகுபலி: கிரவுன் ஆப் பிளட்' என்ற தலைப்பில் வருகிற 17-ம் தேதி டிஸ்னி- ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் வெளியாகிறது. இந்த சீரிஸின் கதை பாகுபலி படத்தின் முன் நடிந்த கதையைப் பற்றி என தெரிவித்துள்ளனர்.

    இந்த வெப் சீரிஸை ராஜ மௌளி மற்றும் ஷரத் தேவராஜன் இணைந்து உருவாக்கியுள்ளனர். ஷரத் தேவராஜன் இதற்கு முன் தி லெஜண்ட் ஆஃப் அனுமன் அனிமேடட் சிரீஸை இயக்கியவர். அது மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது.

    'பாகுபலி கிரவுன் ஆப் பிளட்' அனிமேடட் சீரிஸில் பாகு மற்றும் பல்வால்தேவாவின் வாழ்க்கையின் ரகசியத்தை பிரதிபலிக்கும் வகையில் மற்றும் நீண்ட நாட்களுக்கு முன் மறைக்கப்பட்ட உண்மைகளும் , மகிஷ்மதி சாம்ராஜியத்தின் பற்றிய ரகசியங்களை பல டிவிஸ்டுகளுடன் இந்த சீரிஸ் இருக்கும் என ராஜ மௌளி தெரிவித்துள்ளார். இந்த சீரிஸின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த டிரைலர் தற்போது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது .

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • படத்தில் அர்ஜூன் தாஸ் சித்த மருத்துவர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
    • இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து வருகிற மே 10-ந் தேதி திரைக்கு வர உள்ளது.

    மெளன குரு, மகாமுனி போன்ற படங்களை இயக்கியவர் சாந்தகுமார். அடுத்ததாக 'ரசவாதி தி அல்கெமிஸ்ட்' என்ற படத்தை இயக்கியுள்ளார்.

    படத்தின் கதாநாயகனாக அர்ஜூன்தாஸ், கதாநாயகியாக தன்யா ரவிச்சந்திரன் மற்றும் ரம்யா சுப்ரமணியன், ஜி.எம்.சுந்தர், சுஜித் சங்கர், ரேஷ்மா வெங்கடேஷ், சுஜாதா, ரிஷிகாந்த் உள்பட பலர் படத்தில் நடித்துள்ளனர்.

    இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து வருகிற மே 10-ந் தேதி திரைக்கு வர உள்ளது. படத்தின் டிரைலர் சில நாட்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. யூடியூபில் இதுவரை 20 லட்ச பார்வையை ரசவாதி டிரைலர் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    படத்தில் அர்ஜூன் தாஸ் சித்த மருத்துவர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.அவரது கடந்த கால விஷயம் ஒன்று அவரது ஆன்மாவை துளைத்துக் கொண்டிருக்கிறது. போன்ற கதைப்பின்னணியில் அமைந்துள்ளது.

    படத்தின் முதல் பாடலான சாரல் சாரல் பாடலின் வீடியோ தற்பொழுது யூடியூபில் வெளியாகியுள்ளது. இப்பாடலில் தன்யா ரவிச்சந்திரன் மற்றும் அர்ஜூன் தாஸ் இருவருக்கும் உள்ள காதல் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. பாடல் காட்சிகள் சமூக வலைத்தலங்களில் வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தமிழ் படங்களில் குறைவாக நடிப்பது ஏன்?
    • தேர்தலில் வாக்களிக்க வராதது ஏன்?

    பிரபல பார்வையற்ற மாற்றுத்திறனாளி தொழிலதிபரான ஸ்ரீகாந்த் பொல்லா என்பவரின் வாழ்க்கை வரலாறு படமான 'ஸ்ரீகாந்த்' என்ற படத்தில் தொழில் அதிபர் கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ் நடித்துள்ளார். இந்த படத்தில் ஜோதிகாவும் நடித்துள்ளார். படத்தை துஷார் இயக்கி உள்ளார்.

     இப்படம் அடுத்த மாதம் 10-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், இந்த படத்திற்கான செய்தியாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடந்தது. அப்போது பத்திரிக்கையாளர் ஒருவர், ஜோதிகாவிடம் தமிழ் படங்களில் குறைவாக நடிப்பது ஏன்? என்று கேட்டார். அதற்கு பதிலளித்த ஜோதிகா, `தமிழில் நிறைய படங்கள் நடித்துள்ளேன். என்னுடைய நடிப்புத்திறமையை வெளிப்படுத்தும் அளவுக்கு கதைக்களம் அமையவில்லை.

    உதாரணத்திற்கு `காதல் தி கோர்' மாதிரி பெரிய நடிகர்களுடன் சேர்ந்து நடிக்கும் கதை அம்சம் கொண்ட படம் மற்ற மொழி திரைப்படங்களில் உள்ளது. இதுபோன்று தமிழ் திரைப்படங்களிலும் இருந்தால் நன்றாக இருக்கும். இதுபோல் இல்லாமல் ஒரே மாதிரியான கேரக்டரில் நடிப்பதில் எனக்கு விருப்பம் இல்லை என்றார்.

    அதைத்தொடர்ந்து நிறைய இடங்களில் சமூக பொறுப்புகள் குறித்து எல்லாம் பேசுகிறீர்கள் ஆனால் தேர்தலில் நீங்கள் வாக்களிக்கவில்லை என்று பலரும் கருதுகிறார்கள் என்று செய்தியாளர் கேட்ட கேள்விக்கு, `நான் எப்போதுமே வாக்களித்துள்ளேன்.

    ஆனால் சிலநேரங்களில் வேலை நிமித்தமாக வெளிநாடுகளிலோ அல்லது வேறு வேலைகளிலோ ஈடுபட்டிருந்தால் மட்டும் வாக்களிக்க இயலாமல் போயிருக்கலாம். இருப்பினும் வாக்களிப்பது என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம் தானே என்று கூறினார்.

    • தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா, விடிவி கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
    • சென்னையில் உள்ள பெரும்பாலான திரையரங்களிலும் மால்களில் உள்ள திரையரங்குகளில் இன்று ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக்கொண்டு இருக்கிறது

    சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் அரண்மனை 4. இந்த படத்தின் முதல் மூன்று பாகங்களை போன்றே இந்த படத்திலும் சுந்தர் சி நடித்துள்ளார். இவருடன் தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா, விடிவி கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    ஹிப்ஹாப் ஆதி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். குஷ்பு சார்பில் அவ்னி சினிமாக்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளனர். மே 3 { இன்று} திரையரங்குகளில் வெளியானது. நேற்று திரைப்பிரபலங்களுக்கு திரைமுன்னோட்டம் காட்சியிடப்பட்டது. அதைப் பார்த்த அனைவரும் படம் நன்றாகவுள்ளது என கருத்துக்களை பகிர்ந்தனர்.

    சென்னையில் உள்ள பெரும்பாலான திரையரங்களிலும் மால்களில் உள்ள திரையரங்குகளில் இன்று ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக்கொண்டு இருக்கிறது. படம் பார்த்த பெரும்பாலானோர் பாசிடிவ் ரிவியுகளை சமூகவலை தளங்களில் பகிர்ந்துக் கொண்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்களிலும் வேகமாக அரண்மனை 4 படத்திற்கு புக்கிங் பதிவாகி வருகிறது.

    சுந்தர்.சி அவரது மற்ற பாகங்களை போலவே இப்படத்தை எடுத்து இருந்தாலும். இந்த பாகத்தில் விஸ்வல் எஃபக்ட்ஸ்களும், நகைச்சுவை காட்சிகள் மற்றும் திகில் காட்சிகள் நன்றாக வொர்க் அவுட் ஆகியுள்ளது.

    சமீபத்தில் தமிழ் படங்களில் ரீரிலீஸ் படங்களே அதிகம் திரையரங்குகளில் ஓடுகிறது கில்லி படத்தின் ரீ ரிலீஸ் மக்களிடம் பெரும் ஆதரவு பெற்றது. அதைத் தொடர்ந்து இரண்டு நாட்கள் முன்பு அஜித்குமார் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான தீனா, பில்லா போன்ற படங்கள் கில்லியைப் போல் வரவேற்பு கிடைக்கவில்லை.

    இந்நிலையில் மலையாள திரைப்படங்களுக்கு கிடைத்த ஆதரவு கூட சமீபத்தில் வெளிவந்த தமிழ் திரைப்படங்களுக்கு கிடைக்கவில்லை.இச்சூழ்நிலையில்  தற்பொழுது அரண்மனை 4 வெளியாகியுள்ளது.

    கோடை விடுமுறைக்கு தக்க சமையத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கொண்டாடும் திரைப்படமாக இது அமைந்துள்ளது அரண்மனை 4. இப்படத்திற்கு மக்களிடையே பெருமாதரவு பெற்று வெற்றியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×