search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pooja ceremony"

    • 2018 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் மற்றும் ஐஷ்வர்யா நடிப்பில் வெளியான கனா படத்தில் தர்ஷன் நடித்து பிரபலாமானார்.
    • குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று இரண்டாம் பரிசை வென்றார்.

    2018 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் மற்றும் ஐஷ்வர்யா நடிப்பில் வெளியான கனா படத்தில் தர்ஷன் நடித்து பிரபலாமானார். ஒத்தயடி பாதியில் பாட்டின் மூலம் மக்களுக்கு பரிட்சையமாகினார். அதைத் தொடர்ந்து 2019 ஆண்டு வெலிவந்த தும்பா படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்தார்.

    குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று இரண்டாம் பரிசை வென்றார். அஜித் நடித்த துணிவு படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார். தர்ஷனுடன் ஆர்ஷா சந்தினி பைஜு இணைந்து நடிக்கவுள்ளார். இதற்கு முன் மலையாள திரைப்படமான முகுந்த உன்னி அசோசியேட்ஸ் திரைப்படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.

    இவர்களுடன் காளி வெங்கட், வினோதினி வைத்தியனாதன் மற்றும் KPY 2 தீனா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.

    தற்பொழுது தர்ஷனின் அடுத்த படத்திற்கான பூஜை விழா நேற்று சிறப்பாக நடந்து முடிந்தது. இதை அறிமுக இயக்குனரான ராஜ்வேல் இயக்கவுள்ளார். பிரேமம் திரைப்படத்திற்கு இசையமைத்த ராஜேஷ் முருகேசன் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார். பிலே ஸ்மித் ஸ்டூடியோஸ், விவா எண்டர்டெயின்மண்ட் மற்றும் சவுத் ஸ்டூடியோஸ் இப்படத்தை தயாரிக்கவுள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஜோ பட ஜோடி அடுத்து மீண்டும் ஒன்றாக இணைந்து நடிக்கவுள்ளனர். இப்படத்தை அறிமுக இயக்குனரான கலையரசன் தங்கவேல் இயக்கவுள்ளார்.
    • பல வெற்றித் திரைப்படங்களைத் தயாரித்த "ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஸன்ஸ்" நிறுவனம் தயாரிக்கவுள்ளது

    2023 ஆம் ஆண்டு அறிமுக இயக்குனரான ஹரிஹரன் ராம் இயக்கத்தில் ரியோ ராஜ் மற்றும் மாளவிகா மனோஜ் இணைந்து நடித்து ஜோ திரைப்படம் வெளியாகி மக்களிடையே விமர்சனம் ரீதியாகவும் வசூல் ரீதியாகும் நல்ல வரவேற்பை பெற்றது.

    இதைத்தொடர்ந்து ஜோ பட ஜோடி அடுத்து மீண்டும் ஒன்றாக இணைந்து நடிக்கவுள்ளனர். இப்படத்தை அறிமுக இயக்குனரான கலையரசன் தங்கவேல் இயக்கவுள்ளார். இச்சமூதாயத்தில் ஆண்கள் படும் கஷ்டத்தை பற்றி பேசும் படமாக இது இருக்கும் என இயக்குனர் தெரிவித்துள்ளார்.

    இயக்குநர்கள் ஹரி, முத்தையா ஆகியோரை வைத்து, பல வெற்றித் திரைப்படங்களைத் தயாரித்த "ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஸன்ஸ்" நிறுவனம் சார்பாக, மணிகண்டன் கந்தசுவாமியின் மேற்பார்வையில் , அறிமுக இயக்குனர் "பிளாக் ஷீப்" கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் இந்த படம் உருவாகிறது.

    பிளாக் ஷீப் நிறுவனத்தின் இணை தயாரிப்பில் உருவாகும் இந்தத் திரைப்படத்தில், "ஜோ" திரைப்படத்தின் வெற்றி ஜோடியான ரியோ- மாளவிகா மனோஜ் மீண்டும் இணைகிறார்கள். மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவு, சித்துகுமார் இசை, வருண் கே.ஜி.யின் எடிட்டிங், வினோத் ராஜ்குமாரின் கலையமைப்பு, சந்துருவின் டிசைன், மீனாட்சியின் ஆடை வடிவமைப்பு, என ஒரு மெகா இளைஞர்கள் கூட்டணியில் இப்படம் உருவாக உள்ளது. இந்த வருட பிற்பகுதியில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். படத்தின் பூஜை விழா இன்று சென்னையில் சிறப்பாக நடைப்பெற்றது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • விநாயகர் மற்றும் மகாலட்சுமி சிலைகள் பிரதிஷ்டை செய்து கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.
    • கோ பூஜை, அஸ்வ பூஜை, கஜ பூஜை மற்றும் எதி பூஜை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    கவுண்டம்பாளையம்,

    கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ள எண்.4.வீரபாண்டி பேரூராட்சி மற்றும் கூட லூர் கவுண்டம்பாளையம் நகராட்சி இந்து முன்னணி நடத்தும் 2-ம் ஆண்டு மாபெரும் 1508 திருவிளக்கு பூஜை விழா வீரபாண்டி மாரியம்மன் கோவில் திடலில் நடைபெற்றது.

    விநாயகர் மற்றும் மகாலட்சுமி சிலைகள் பிரதிஷ்டை செய்து கணபதி ஹோமத்துடன் தொடங்கிய இந்த விழாவில் முதலாவதாக சிலம்பாட்ட நிகழ்ச்சி, ஒயிலாட்டம் மற்றும் பரதநாட்டியம் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    அதனைத் தொடர்ந்து கோ பூஜை, அஸ்வ பூஜை, கஜ பூஜை மற்றும் எதி பூஜை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    திருவிளக்கு பூஜையை இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதனை ஸ்ரீ வாராஹி மந்திராலயத்தை சேர்ந்த மணிகண்ட சுவாமிகள் மற்றும் சிவ நாசர் இந்த பூஜையை நடத்தி வைத்தார்.

    இந்த பூஜையில் கலந்து கொண்ட குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு விளக்கு, பூக்கள், எண்ணை, மஞ்சள், குங்குமம், வளையல், கண்ணாடி, சிப்பு, வெற்றிலை மற்றும் பாக்குகளை விழா குழுவினர் வழங்கினர்.

    இதனையடுத்து அனைத்து பக்தர்களும் விநாயகருக்கு பூஜை செய்து விளக்கு பூஜையில் கலந்து கொண்டனர். அதன்பிறகு ஆன்மிக சொற்பொழிவுகள் நடைபெற்றன.இறுதியாக அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    இந்த விழாவில் வீரபாண்டி, கூடலூர் கவுண்டம்பாளையம், நாயக்கனூர், சாமநாயக்கன்பாளையம், காளிபாளையம், திரு மலைநாயக்கன்பாளையம் உள்ளிட்ட ஊர்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    ×