கே.ஜி.எஃப் நாயகனின் அடுத்த அவதாரம் - டாக்ஸிக் படத்தின் பூஜை விழா

கே.ஜி.எஃப் திரைப்படத்தில் நடித்து இந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்தார் யாஷ்.கே.ஜி.எஃப் சாப்டர் 2 படத்தை தொடர்ந்து டாக்ஸிக் என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.
கே.ஜி.எஃப் நாயகனின் அடுத்த அவதாரம் -  டாக்ஸிக் படத்தின் பூஜை விழா
Published on

யாஷ் கன்னட சினிமாவின் முன்னணி நடிகராவார். ராக்கி என்ற கன்னட திரைப்படத்தின் கதாநாயகனாக அறிமுகமாகினார். அதைத்தொடர்ந்து பல படங்களில் நடித்தார்.

கே.ஜி.எஃப் திரைப்படத்தில் நடித்து இந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்தார் யாஷ். அப்படத்திற்கு பிறகு உலகமெங்கும் ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார்.

கே.ஜி.எஃப் சாப்டர் 2 படத்தை தொடர்ந்து டாக்ஸிக் என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை இயக்குனர் கீதா மோகன்தாஸ் இயக்கவுள்ளார். இப்படம் டிரக் மாஃபியா உலகில் நட்க்கும் கேங்ஸ்டர் டிராமாவாக இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளனர்.

படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜை விழாவுடன் தொடங்கப்பட்டது. இதுக்குறித்து பூஜை விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தயாரிப்பு நிறுவனம் அவர்களது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.

இப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் ப்ரோடக்ஷன்ஸ் தயாரிக்கவுள்ளது. இந்த பூஜை விழாவில் நடிகர் யாஷ் அவரது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கலந்துக்கொண்டார். இப்படம் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது என குறிப்பிடத்தக்கது.

படத்தில் நடிக்கும் பிரபலங்கள் குறித்து விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விழாவில் எடுக்கப்பட்ட யாஷின் புகைப்படம் தற்பொழுது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com