என் மலர்

  நீங்கள் தேடியது "Lyca"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்க இருக்கும் 167 வது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை காலை வெளியாக இருக்கிறது. #Thalaivar167 #ARM
  பேட்ட படத்தை தொடர்ந்து ரஜினி அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்திற்கான முன் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வந்த படக்குழு, தற்போது படப்பிடிப்புக்கு முழுமையாக தயாராகி விட்டது. ஏப்ரல் 10-ந் தேதி மும்பையில் இதன் படப்பிடிப்பு தொடங்குகிறது. 

  இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க நயன்தாரா நடிக்கிறார். ரஜினியின் ‘பேட்ட’ படத்துக்கும் முருகதாசின் கத்தி படத்துக்கும் இசையமைத்த அனிருத், இந்தப் படத்துக்கும் இசையமைக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார்.  இந்நிலையில், நாளை காலை 8.30 மணிக்கு இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட இருப்பதாக இப்படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. #Thalaivar167 #ARM
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மிஸ்டர் லோக்கல் திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில், சிவகார்த்திகேயன் அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். #Sivakarthikeyan #VigneshShivan
  சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது ‘மிஸ்டர்.லோக்கல்’ திரைப்படம் உருவாகியுள்ளது. ராஜேஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார். இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

  இப்படத்தை அடுத்து, இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்திலும், இரும்புத்திரை இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்திலும், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்திலும் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.  இந்நிலையில், லைகா நிறுவனம் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க இருக்கிறார். மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு இந்த வருடம் ஜூலை மாதம் தொடங்க இருப்பதாகவும், 2020 இப்படம் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர். 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வரும் ‘இந்தியன் 2’ படம் பற்றி வரும் வதந்திக்கு படக்குழுவினர் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். #Indian2 #Kamal #Kamalhaasan
  கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்-2 படப்பிடிப்பு சென்னையில் கடந்த மாதம் தொடங்கியது. சில காட்சிகளை படமாக்கியதும் கமல்ஹாசனின் வயதான தோற்றத்தில் இயக்குனர் ஷங்கருக்கு திருப்தி ஏற்படாமல் படப்பிடிப்பை நிறுத்திவிட்டதாகவும், பின்னர் கமல் தோற்றத்தை மாற்றியமைத்து மீண்டும் படப்பிடிப்பை நடத்தியதாகவும் கூறப்பட்டது.

  இந்த நிலையில் தற்போது ஷங்கருக்கும், இந்தியன்-2 படத்தை தயாரிக்கும் லைகா புரொடக்‌ஷன் நிறுவனத்துக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மீண்டும் படத்தை நிறுத்திவிட்டதாகவும் தகவல் பரவி உள்ளது. ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்கு வந்த 2.0 படத்தையும் லைகா பட நிறுவனமே தயாரித்தது.

  அந்த படத்துக்கு திட்டமிட்டதை விட கூடுதல் செலவானதால் தயாரிப்பாளர் தரப்பினர் அதிருப்தியில் இருந்ததாகவும் இந்தியன்-2 படத்தின் பட்ஜெட் திட்டமிட்டதை தாண்டக்கூடாது என்று நிர்ப்பந்தித்ததாகவும் இதனால் படப்பிடிப்பை ஷங்கர் நிறுத்திவிட்டார் என்றும் வலைத்தளங்களில் தகவல்கள் பரவின. படம் கைவிடப்படும் நிலையில் இருப்பதாகவும் கூறப்பட்டது.  இதனை லைகா பட நிறுவனம் மறுத்துள்ளது. அந்த நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் இதுகுறித்து கூறும்போது, “இந்தியன்-2 படத்தை கைவிட்டதாக பரவும் வதந்திகள் தவறானது. ஆதாரமற்றது. சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரி அருகில் உள்ள மெமோரியல் ஹாலில் ஒரு வாரமாக முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு உள்ளன. அடுத்தகட்டமாக ஸ்டுடியோவிலும் படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளோம். தற்போது பல இடங்களில் அரங்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன. சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடைபெறும்.”

  இவ்வாறு அவர் கூறினார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஷங்கர் இயக்கத்தில் வெளியான 2.0 படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்தில் கலந்துக் கொள்ள நடிகர் ரஜினி விரும்பவில்லை என்று கூறியிருக்கிறார். #2Point0 #Rajini
  ‌ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்‌‌ஷய் குமார், எமி நடிப்பில் கடந்த நவம்பர் 29-ம் தேதி வெளியான படம் 2.0. 3டி தொழில்நுட்பத்தில் வெளியான இந்த படத்துக்கு உலகம் முழுக்க நல்ல வரவேற்பு கிடைத்தது. வெளியான ஒரு வாரத்தில் உலகம் முழுக்க ரூ. 500 கோடி வசூலைத் தாண்டியது.

  தமிழ் படங்களை பொறுத்தவரை இது மிகப்பெரிய சாதனை. அடுத்த 10 நாட்களில் படத்தின் மொத்த வசூல் ரூ.1000 கோடியை தொட்டது. அதன் பிறகும் கூட 3டி தொழில்நுட்ப தியேட்டர்களில் நன்றாக ஓடிக்கொண்டு இருக்கிறது. படம் மாபெரும் வெற்றி பெற்று பிளாக்பஸ்டர் படங்கள் வரிசையில் இடம்பெற்றுள்ளதை பெரிய அளவில் கொண்டாட தயாரிப்பு தரப்பு திட்டமிட்டது.  ஆனால் ரஜினிகாந்த் இதில் ஆர்வம் காட்டவில்லை. வெற்றிக் கொண்டாட்டத்தில் மீட்டிலோ கலந்துகொள்ள விரும்பவில்லை என்று கூறிவிட்டாராம். ரஜினி இல்லாமல் வெற்றியை எப்படி கொண்டாடுவது என்று முடிவெடுத்து அனைத்து கொண்டாட்டத்தையும் தவிர்த்து விட்டார்கள். #2Point0 #Rajini
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  டெல்டா மாவட்டங்களை கஜா புயல் தீவிரமாக தாக்கியுள்ள நிலையில், லைகா நிறுவனமாம் ரூ.1 கோடியே 1 லட்சம் நிவாரண நிதி வழங்க உள்ளதாக அறிவித்திருக்கிறார்கள். #GajaCycloneRelief #Lyca
  கஜா புயல் தாக்கியதில் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டு உள்ளது.

  புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. புயல் சேதத்தை மதிப்பிடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களுக்கு உதவ திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். 

  நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் சார்பில் ரூ.50 லட்சம் நிதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் சேதுபதி ரூ.25 லட்சமும், சிவகார்த்திகேயன் ரூ.20 லட்சமும் நிவாரணம் வழங்கியுள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை ரஜினி மக்கள் மன்றம் மூலம் வழங்க ரஜினிகாந்த் உத்தரவிட்டுள்ளார். நடிகர் விஜய் தனது ரசிகர் மன்றங்கள் மூலம் நிவாரண பொருட்களை வழங்கி வருகிறார்.   இந்த நிலையில், லைகா நிறுவனம் ரூ.1 கோடியே 1 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்க உள்ளதாக அறிவித்திருக்கிறார்கள். #GajaCycloneRelief #Lyca
  ×