லைகா நிறுவனம் வெளியிட்ட புதுப்பட அப்டேட்

2015 ஆம் ஆண்டு அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய பிரேமம் திரைப்படம் மூலம் திரைத்துறையில் அறிமுகமாகினார் அனுபமா பரமேஸ்வரன்.கடந்த மாதம் வெளியான டில்லு ஸ்கொயர் திரைப்படத்தில் நடித்து மக்கள் மனதை வென்றார்.
லைகா நிறுவனம் வெளியிட்ட புதுப்பட அப்டேட்
Published on

2015 ஆம் ஆண்டு அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய பிரேமம் திரைப்படம் மூலம் திரைத்துறையில் அறிமுகமாகினார் அனுபமா பரமேஸ்வரன். அதற்கடுத்து மலையாள சினிமாவில் முன்னணி நடிகைகளுள் ஒருவர் ஆனார்.

தனுஷ் நடிப்பில் வெளிவந்த கொடி திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் காலடியை பதித்தார். பின் மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி பலப் படங்களில் நடித்தார்.

கடந்த மாதம் வெளியான டில்லு ஸ்கொயர் திரைப்படத்தில் நடித்து மக்கள் மனதை வென்றார். இப்படம் அவருக்கு மிகப்பேரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தது. அதைத்தொடர்ந்து 'பரதா' என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை பிரவீன் காந்த்ரேகுலா இயக்கவுள்ளார். இதற்கு முன் சினிமா பண்டி என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் அடுத்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன் நடிக்கவுள்ளார் என்ற தகவலை லைகா நிறுவனம் அவர்களின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டனர். இப்படத்திற்கான் ஃபர்ஸ்ட் லுக்கை மே 6 அன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்போவதாக தெரிவித்துள்ளனர்.

இப்படத்தை அறிமுக இயக்குனரான ஏ.ஆர் ஜீவா இயக்கவுள்ளார். சமீபத்தில் லைகா நிறுவனம் குறும்பட போட்டி ஒன்றை நடத்தினர் அதில் தேர்ந்தெடுக்கப்படும் 5 சிறந்த குறும்படத்தின் இயக்குனர்களுக்கு வாய்ப்பு அளிப்பதாக கூறியிருந்தனர். அதில் ஒருவர் தான் ஏ.ஆர் ஜீவா.

இப்படம் பெண்களை மையப்படுத்தும் கதைக்களத்தோடு அமையும் என எதிர்பார்க்கப் படுகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com