அர்ஜூன் தாஸ் படத்தின் "சாரல் சாரல்" பாடல் வீடியோ வெளியீடு

படத்தில் அர்ஜூன் தாஸ் சித்த மருத்துவர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து வருகிற மே 10-ந் தேதி திரைக்கு வர உள்ளது.
அர்ஜூன் தாஸ் படத்தின் "சாரல் சாரல்" பாடல் வீடியோ வெளியீடு
Published on

மெளன குரு, மகாமுனி போன்ற படங்களை இயக்கியவர் சாந்தகுமார். அடுத்ததாக 'ரசவாதி தி அல்கெமிஸ்ட்' என்ற படத்தை இயக்கியுள்ளார்.

படத்தின் கதாநாயகனாக அர்ஜூன்தாஸ், கதாநாயகியாக தன்யா ரவிச்சந்திரன் மற்றும் ரம்யா சுப்ரமணியன், ஜி.எம்.சுந்தர், சுஜித் சங்கர், ரேஷ்மா வெங்கடேஷ், சுஜாதா, ரிஷிகாந்த் உள்பட பலர் படத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து வருகிற மே 10-ந் தேதி திரைக்கு வர உள்ளது. படத்தின் டிரைலர் சில நாட்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. யூடியூபில் இதுவரை 20 லட்ச பார்வையை ரசவாதி டிரைலர் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தில் அர்ஜூன் தாஸ் சித்த மருத்துவர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.அவரது கடந்த கால விஷயம் ஒன்று அவரது ஆன்மாவை துளைத்துக் கொண்டிருக்கிறது. போன்ற கதைப்பின்னணியில் அமைந்துள்ளது.

படத்தின் முதல் பாடலான சாரல் சாரல் பாடலின் வீடியோ தற்பொழுது யூடியூபில் வெளியாகியுள்ளது. இப்பாடலில் தன்யா ரவிச்சந்திரன் மற்றும் அர்ஜூன் தாஸ் இருவருக்கும் உள்ள காதல் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. பாடல் காட்சிகள் சமூக வலைத்தலங்களில் வைரலாகி வருகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com