டி.ஜே ஞானவேலின் அடுத்த படத்தின் கதாநாயகன் யார்?

தற்போது படத்தின் சூட்டிங் மும்பையில் நடைப்பெற்று வருகிறது. நேற்று அமிதாப் பச்சனுடன் ரஜினிகாந்த் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகியது.33 வருடங்களுக்கு பிறகு அமிதாப் பச்சன் ரஜினிகாந்துடன் இணைந்து படத்தில் நடிகவுள்ளார்.
டி.ஜே ஞானவேலின் அடுத்த படத்தின் கதாநாயகன் யார்?
Published on

நடிகர் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், மஞ்சுவாரியர், ராணா டகுபதி, ரித்திகா சிங், பகத் ஃபாசில் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வரும் வேட்டையன் படத்தின் சூட்டிங் விரைவில் நிறைவடையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்படத்தை டிஜே ஞானவேல் இயக்கியுள்ளார். தற்போது படத்தின் சூட்டிங் மும்பையில் நடைப்பெற்று வருகிறது. நேற்று அமிதாப் பச்சனுடன் ரஜினிகாந்த் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகியது.

33 வருடங்களுக்கு பிறகு அமிதாப் பச்சன் ரஜினிகாந்துடன் இணைந்து படத்தில் நடிகவுள்ளார். அமிதாப் பச்சன் நடிக்கும் முதல் தமிழ் திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தை தொடர்ந்து டிஜே ஞானவேல் அடுத்ததாக தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான நானி நடிப்பில் படம் இயக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக வேட்டையன் படத்தில் வரும் ராணா கதாப்பாத்திரத்திற்கு நானியை அணுகியுள்ளார் கால்ஷீட் பிரச்சனைகளால் அவரால் வேட்டையன் படத்தில்  நடிக்க முடியவில்லை. அப்போது அவர் நானிக்கு ஒரு கதையை கூறியதாகவும் அது அவரை மிகப் பெரிய அளவில் கவர்ந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com