Bloody Beggar ஆக மாறிய கவின் - புதிய அப்டேட்

இப்படத்தை அறிமுக இயக்குனரான சிவபாலன் முத்துகுமார் இயக்கவுள்ளார்.படத்திற்கு ”Bloody Beggar” என தலைப்பிடப்பட்டுள்ளது.
Bloody Beggar ஆக மாறிய கவின் - புதிய அப்டேட்
Published on

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் நெல்சன் திலிப்குமார் முக்கியமானவர். ரஜினிகாந்த் நடிப்பில் இயக்கிய ஜெயிலர் திரைப்படம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. உலகளிவில் 600 கோடி ரூபாய் வசூலித்தது குறிப்பிடத்தக்கது. அதை தொடர்ந்து சமீபத்தில் நெல்சன் அவரது தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். அதற்கு ஃபிலமண்ட் பிக்சர்ஸ் என பெயரிட்டுள்ளார்.

அந்த நிறுவனம் தயாரிக்கும் முதல் படத்தின் தகவலை இன்று வெளியிட்டார். நெல்சன் தயாரிப்பில் கவின் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குனரான சிவபாலன் முத்துகுமார் இயக்கவுள்ளார். இவர் இதற்கு முன் நெல்சன் திலிப்குமாரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

படத்திற்கு "Bloody Beggar" என தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தின் டைட்டில் ரிவீலிங்க் வீடியோவை நகைச்சுவை பாணியில் நெல்சன், ரெடின் கிங்ஸ்லி, கவின், சிவபாலன் ஆகியோர் நடித்து வெளியிட்டுள்ளனர். வீடியோ காட்சிகள் தற்பொழுடு வைரலாகி வருகிறது.

கவின் தற்பொழுது நடித்து இருக்கும் ஸ்டார் படம் வரும் மே 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. அடுத்தடுத்து வித்தியாசமான கதைக்களத்தில் நடித்து வருகிறார் கவின்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com