search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிஷோர்"

    • ராமர் கோவிலில் நேற்று கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது.
    • இந்த விழாவில் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், சச்சின் டெண்டுல்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    கடந்த 2019-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பின் மூலம் அயோத்தி சர்ச்சையானது முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலில் நேற்று கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது.


    இந்த விழாவில், பிரபலங்கள் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், சச்சின் டெண்டுல்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ராமர் கோவில் திறப்புக்கு ஆதரவாக பல நடிகர்கள் கருத்து தெரிவித்து வந்தாலும், மதச்சார்பற்ற நாட்டில் மசூதியை இடித்துவிட்டு கோவிலை கட்டுவது சரியா என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    இந்த நிலையில், ராமர் கோவில் திறப்பை விமர்சித்து நடிகர் கிஷோர் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "கோவில், மன்னர்கள் மற்றும் அரசியலை வைத்து அடக்குவது என்பது நாம் இதுவரை பார்த்திராத ஒன்று அல்ல. இன்று நாம் மன்னர்களின் காலத்திற்கு சென்றுவிட்டதாக உணர்கிறேன். கடவுளின் பெயரால் சாமியார்களுடன் கைகோர்த்து, மக்களை அடக்கி வருகின்றனர்.


    கோவிலை கட்டி அதில் தங்களின் பெயர்களை செதுக்கி வைத்து கொள்வது, கோவிலை கட்டிய நபர்களின் கையை வெட்டுவது, தங்களின் பெருமையை பேசி வானுயர பேனர் வைத்து கொள்வது முடிவின்றி தொடர்கிறது. மதமும், கடவுளும் அரசியல்வாதிகளின் கைகளில் சிக்குவதும், அவர்களை கேள்வி கேட்க முடியாத இடத்துக்கு எடுத்து செல்வதும் மிகவும் ஆபத்தானது. நாட்டின் கலாசாரத்தின் எதிர்காலத்திற்கும் தீங்கு விளைவிக்கும்" என பதிவிட்டுள்ளார்.


    • சந்தன கடத்தல் வீரப்பன் வாழ்க்கையை வெப் தொடராக இயக்குனர் ஏ.எம்.ஆர். ரமேஷ் இயக்கி வருகிறார்.
    • இந்த தொடருக்கு எதிராக வீரப்பன் மனைவி முத்துலட்சுமி தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    சந்தன கடத்தல் வீரப்பன் வாழ்க்கையை 'வனயுத்தம்' என்ற பெயரில் இயக்குனர் ஏ.எம்.ஆர். ரமேஷ் திரைப்படமாக இயக்கினார். இவர் தமிழில் குப்பி, காவலர் குடியிருப்பு போன்ற படங்களை இயக்கியுள்ளார். தற்போது சந்தன கடத்தல் வீரப்பன் வாழ்க்கையை வெப் தொடராக இயக்கி வருகிறார். இதில் வீரப்பன் கதாபாத்திரத்தில் நடிகர் கிஷோர் நடிக்கிறார்.


    கிஷோர்

    இந்த வெப்தொடரின் படப்பிடிப்பு சத்தியமங்கலம் காடுகளில் தொடங்கி உள்ளது. இதில், வீரப்பனை வேட்டையாடும் போலீஸ் அதிகாரியாக விவேக் ஓபராயும், வீரப்பனின் தந்தை கதாபாத்திரத்தில் கயல் தேவராஜும், குற்ற உளவியல் நிபுணராக டைரக்டர் ரமேஷ் மகள் விஜேதாவும், நடிகர் ராஜ்குமார் வேடத்தில் விவேக் ஓபராயின் தந்தை சுரேஷ் ஓபராயும் நடிக்கின்றனர்.


    கிஷோர்

    தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி மொழிகளில் இந்த தொடர் உருவாகிறது. இத்தொடருக்கு தடை விதிக்கக்கோரி வீரப்பன் மனைவி முத்துலட்சுமி தரப்பில் பெங்களூரு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு இருப்பதாகவும், இந்த வழக்கை சட்டப்படி சந்திப்பேன் என்றும் இயக்குனர் ஏ.எம்.ஆர்.ரமேஷ் தெரிவித்திருந்தார்.

    இதைத்தொடர்ந்து, வீரப்பன் வெப் தொடருக்கு எதிரான தடையை நீக்கி நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்துள்ளது. இதனால் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கும் என்று இயக்குனர் ஏ.எம்.ஆர்.ரமேஷ் அறிவித்து உள்ளார்.

    • தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கிஷோர்.
    • இவர் கதையின் நாயகனாக நடிக்கும் புதிய படத்திற்கு "மஞ்ச குருவி" என்று பெயரிடப்பட்டுள்ளது.

    ஆடுகளம், பொல்லாதவன், வட சென்னை, ஹரிதாஸ் போன்ற படங்களில் நடித்து அனைவரையும் கவர்ந்தவர் கிஷோர். இவர் அறிமுக இயக்குனர் அரங்கன் சின்னதம்பி இயக்கும் படத்தில் கிஷோர் நாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் புதுமுகம் விஷ்வா, நீரஜா, கஞ்சா கருப்பு, சாரபாம்பு சுப்புராஜ், கோலி சோடா பாண்டி, பருத்திவீரன் சுஜாதா, செந்தி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் வில்லனாக அகில இந்திய குங்ஃபூ தலைமை பயிற்சியாளர் மாஸ்டர் ராஜநாயகம் வில்லனாக நடித்துள்ளார்.

    மஞ்ச குருவி

    மஞ்ச குருவி

    இப்படத்திற்கு "மஞ்ச குருவி" என்று பெயரிடப்பட்டுள்ளது. வி.ஆர்.கம்பைன்ஸ் சார்பில், விமலா ராஜநாயகம் "மஞ்ச குருவி" படத்தை தயாரிக்கின்றனர். இப்படத்திற்கு வேல் ஒளிப்பதிவு செய்ய, ராஜா முகமது படத்தொகுப்பாளர் பணியாற்றுகிறார். இப்படத்திற்கு சௌந்தர்யன் இசையமைத்திருக்கிறார். இன்றைய சமூக சூழலில், மாற்றங்கள் மட்டுமே மனிதனை நல்வழி படுத்தும் என்னும் கருத்தில், ஒருவன் தன்னை மாற்றிக் கொள்ள எதையெல்லாம் இழக்கிறான் என்ற கருவோடு, மஞ்ச குருவி படம் தயாராகி, இறுதிக்கட்ட பணிகள் நடைப்பெற்று வருகிறது.

    ×