கிஷோர் கதையின் நாயகனாக நடிக்கும் "மஞ்ச குருவி"

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கிஷோர்.இவர் கதையின் நாயகனாக நடிக்கும் புதிய படத்திற்கு "மஞ்ச குருவி" என்று பெயரிடப்பட்டுள்ளது.
மஞ்ச குருவி
மஞ்ச குருவி
Published on

ஆடுகளம், பொல்லாதவன், வட சென்னை, ஹரிதாஸ் போன்ற படங்களில் நடித்து அனைவரையும் கவர்ந்தவர் கிஷோர். இவர் அறிமுக இயக்குனர் அரங்கன் சின்னதம்பி இயக்கும் படத்தில் கிஷோர் நாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் புதுமுகம் விஷ்வா, நீரஜா, கஞ்சா கருப்பு, சாரபாம்பு சுப்புராஜ், கோலி சோடா பாண்டி, பருத்திவீரன் சுஜாதா, செந்தி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் வில்லனாக அகில இந்திய குங்ஃபூ தலைமை பயிற்சியாளர் மாஸ்டர் ராஜநாயகம் வில்லனாக நடித்துள்ளார்.

மஞ்ச குருவி
மஞ்ச குருவி

மஞ்ச குருவி

இப்படத்திற்கு "மஞ்ச குருவி" என்று பெயரிடப்பட்டுள்ளது. வி.ஆர்.கம்பைன்ஸ் சார்பில், விமலா ராஜநாயகம் "மஞ்ச குருவி" படத்தை தயாரிக்கின்றனர். இப்படத்திற்கு வேல் ஒளிப்பதிவு செய்ய, ராஜா முகமது படத்தொகுப்பாளர் பணியாற்றுகிறார். இப்படத்திற்கு சௌந்தர்யன் இசையமைத்திருக்கிறார். இன்றைய சமூக சூழலில், மாற்றங்கள் மட்டுமே மனிதனை நல்வழி படுத்தும் என்னும் கருத்தில், ஒருவன் தன்னை மாற்றிக் கொள்ள எதையெல்லாம் இழக்கிறான் என்ற கருவோடு, மஞ்ச குருவி படம் தயாராகி, இறுதிக்கட்ட பணிகள் நடைப்பெற்று வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com