ஷங்கர் குடும்பத்துடன் அசத்தலாக போஸ் கொடுக்கும் ஜேசன் சஞ்சய்

பிரபல இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா திருமணம் சமீபத்தில் சென்னையில் கோலாகலமாக நடந்தது. அதைத் தொடர்ந்து விழாவில் ஷங்கர் மற்றும் குடும்பத்தினர் சிறப்பு போட்டோ சூட் நடத்தியுள்ளனர்.
ஷங்கர் குடும்பத்துடன் அசத்தலாக போஸ் கொடுக்கும் ஜேசன் சஞ்சய்
Published on

பிரபல இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா திருமணம் சமீபத்தில் சென்னையில் கோலாகலமாக நடந்தது. விழாவில் இந்திய திரை உலக பிரபலங்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். விழாவையொட்டி நடந்த இசை நிகழ்ச்சியில் பிரபல இந்தி நடிகரும் தீபிகா படுகோனே கணவருமான ரன்வீர் சிங், இயக்குனர் அட்லி, ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் மற்றும் மகன் ஆகியோர் குத்து நடனம் ஆடி பார்வையாளர்களை மகிழ்வித்தனர். அவர்கள் ஆடிய நடனத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள திரையுலகில் உள்ள பிரபல நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் விழாவில் கலந்துக் கொண்டனர்.

அதைத் தொடர்ந்து விழாவில் ஷங்கர் மற்றும் குடும்பத்தினர் சிறப்பு போட்டோ சூட் நடத்தியுள்ளனர். இந்தப் புகைப்படங்களை அதிதி ஷங்கர் நேற்று தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டார். அதில் ஒரு புகைப்படத்தில் நடிகர் விஜய் மகன் சஞ்சய்யும் இருக்கிறார். இந்த புகைப்படங்கள் வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. லைகா நிறுவனம் தயாரிப்பில் சஞ்சய் இயக்கும் படத்தில் அதிதி ஷங்கர் நடிக்க உள்ளார் என்று தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com