search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kashmir"

    • திர்ப்பாளர்களை சமாதானப்படுத்த அரசாங்கம் பல கோடி ரூபாய் மானியத்தை அறிவித்தனர்.
    • படுகாயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    முசாபராபாத்:

    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உணவு, எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. எதிர்ப்பாளர்களை சமாதானப்படுத்த அரசாங்கம் பல கோடி ரூபாய் மானியத்தை அறிவித்தனர்.

    ஆனாலும் பொதுமக்கள் அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில், முசாபராபாத்தில் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.

    துணை ராணுவ வீரர்களின் வாகன கான்வாய் முசாபராபாத் சென்றடைந்த போது, ஷோரன் டா நக்கா கிராமத்திற்கு அருகே பொதுமக்கள் கற்கள் வீசி தாக்குதல் நடத்தினர். துணை ராணுவ வீரர்கள் பொதுமக்களை கலைந்து போகுமாறு வலியுறுத்தினர். ஆனாலும் அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீசி துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

    இதில் பொதுமக்களில் 3 பேர் இறந்தனர். மேலும் 6 பேர் படுகாயமடைந்தனர். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதில் சிலரது நிலைமை மோசமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அப்பகுதியில் இணைய சேவை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

    • மக்கள் சாலைகளில் இறங்கி போராட்டம் நடத்தினர்.
    • போராட்டத்துக்கு அழைப்பு விடுத்த தலைவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பணவீக்கம், அதிகவரி, மின்சார பற்றாக்குறை ஆகியவற்றை கண்டித்து மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

    இந்த போராட்டத்தை ஜம்மு காஷ்மீர் கூட்டு அவாமி குழு என்ற அமைப்பு தொடங்கியது. வர்த்தகர்களும் போராட்டத்தை குதித்தனர். மக்கள் சாலைகளில் இறங்கி போராட்டம் நடத்தினர். பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் சுதந்திரம் தேவை என கோஷம் எழுப்பினர். இதில் முஷாபராபாத் உள்பட சில மாவட்டங்களில் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டு மோதல் உருவானது. பல வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. பேராட்டக்காரர்களை கலைக்க துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. சில இடங்களில் போலீசார், பாதுகாப்பு படையினரை மக்கள் தாக்கினார்கள். இதில் சில போலீஸ்காரர்களை பள்ளத்தில் தள்ளி விட்டனர்.

    இந்த மோதலில் ஒரு போலீஸ்காரர் உயிரிழந்தார். 90 பேர் காயமடைந்தனர். இதையடுத்து போலீசாரும்,துணை ராணுவப்படையினரும் குவிக்கப்பட்டனர். அவர்கள் கண்ணீர் குண்டுகளை வீசினர். இதனால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. போராட்டத்துக்கு அழைப்பு விடுத்த தலைவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இதனால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தீவிரம் அடைந்துள்ளது.

    • பிரதமர் மோடி வெறுப்புணர்வு பிரசாரத்தை கையில் எடுத்துள்ளார்.
    • பிரதமர் பதவியில் இருப்பவர் அநாகரீகமான செயலில் ஈடுபடக்கூடாது.

    ஸ்ரீநகர்:

    காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரியும், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலை வருமான பரூக் அப்துல்லா பிரசார கூட்டத்தில் பேசியதாவது:-

    பிரதமர் மோடி ஓட்டுக்காக இந்துக்களையும் முஸ்லிம்களையும் பிரிக்கும் முயற்சிகளில் ஈடுபடுகிறார். அவரை அனைவரும் ஒன்று சேர்ந்து அதிகாரத்தில் இருந்து விரட்ட வேண்டும்.

    முஸ்லிம்கள், இந்துக்கள் மத்தியில் திட்டமிட்டு பிரதமர் மோடி வெறுப்புணர்வு பிரசாரத்தை கையில் எடுத்துள்ளார். பிரதமர் பதவியில் இருப்பவர் இத்தகைய அநாகரீகமான செயலில் ஈடுபடக்கூடாது.

    பிரதமர் மோடி வெளி நாட்டுக்கு செல்லும் போது இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், புத்த மதத்தினர் அனைவருக்கும் அவர்தான் பிரதமர். ஆனால் அவர் உள்ளூரில் ஓட்டுக் கேட்கும் போது, அனைவரையும் மத ரீதியாக பிரிக்க முயற்சி செய்கிறார்.

    பிரதமர் மோடி எப்போ தும் ராமரை பற்றியே பேசிக் கொண்டிருக்கிறார். இதற்கு முன்பு அவர் ராமரை பற்றி அதிகம் பேசியதில்லை. தேர்தல் என்றதும் ராமரை கையில் எடுத்துள்ளார்.

    ராமரை பிரதமர் மோடி அருகில் இருந்து பார்த்தது போலவே பேசுகிறார். ஓட்டுக்காக அவர் எந்த பொய்யையும் சொல்வார். கடந்த தேர்தலின் போது புல்வாமா தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் கொல்லப் பட்ட விவகாரத்திலும் நிறைய சதி உள்ளது.

    வெடிகுண்டுகளுடன் அந்த பகுதியில் கார், 3 வாரங்களாக சுற்றிக்கொண்டே இருந்தது. குறிப்பிட்ட பகுதிக்கு வந்ததும் அப்பாவி மக்களை கொல்லும் வகையில் தாக்குதல் நடத்தப்பட்டது.

    பிரதமர் மோடி இந்த தாக்குதலுக்கு வெளி யாட்கள் தான் காரணம் என்றார். பிறகு பாகிஸ்தா னில் துல்லிய தாக்குதல் நடத்தியதாக கூறினார். இந்த பொய்யை சொல்லியே மோடி கடந்த முறை தேர்தலில் வெற்றி பெற்றார்.

    இப்போது மத ரீதியாக வெறுப்புணர்வை தூண்டி பேசி வருகிறார். காஷ்மீரில் 370-வது சட்டப் பிரிவு நீக்கப்பட்டதை ஏற்க இயலாது. இதற்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும்.

    தற்போது இருப்பது காந்தியின் இந்தியாவில் அல்ல. மோடியின் இந்தியா. மோடி இந்தியாவில் முஸ்லிம்கள், இந்துக்கள் தனித்தனியாக இருக்க வேண்டும் என்கிறார்கள். அதை நாங்கள் ஏற்கமாட்டோம்.

    இவ்வாறு பரூக் அப்துல்லா பேசினார்.

    • ஜம்மு காஷ்மீரின் பல பகுதிகளில் பனிப்பொழிவு மிகுதியாக உள்ளது
    • பனிமழை மற்றும் பனிக்காற்றால் ஜம்மு காஷ்மீரின் பல பகுதிகளில் கடும் குளிர் நிலவி வருகிறது.

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக இயல்பை விட அளவுக்கு அதிகமான வெப்பம் பதிவாகி வருகிறது. மேலும், ஒவ்வொரு நாளும் வெப்பம் அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகம் என்றும், ஒவ்வொரு பகுதிக்கும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

    தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதுமே கடும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது.

    அதே சமயம் ஜம்மு காஷ்மீரின் பல பகுதிகளில் பனிப்பொழிவு மிகுதியாக உள்ளது. பனிமழை மற்றும் பனிக்காற்றால் ஜம்மு காஷ்மீரின் பல பகுதிகளில் கடும் குளிர் நிலவி வருகிறது.

    இந்நிலையில் காஷ்மீரின் சோனாமார்க் பகுதியில் உள்ள சர்பால் என்ற இடத்தில் பெரும் பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. வனப்பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவால் சேதம் எதுவும் இல்லை என முதற்கட்டத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பனிச்சரிவு காரணமாக வனப்பகுதியை ஒட்டியுள்ள 4 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் திடீரென பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
    • துப்பாக்கி சண்டையில் ராணுவ வீரர் ஒருவர் காயமடைந்தார்.

    பந்திபோரா:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் பந்திபோராவில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்புப் படையினர் அப்பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    அங்குள்ள சிந்திபந்தி கிராமத்தில் பாதுகாப்பு படையினர் வீடு வீடாக சென்று சோதனை நடத்தினர். அப்போது ஒரு வீட்டில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் திடீரென பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து பாதுகாப்பு படையினர் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு துப்பாக்கிச் சண்டை வெடித்தது. இந்த துப்பாக்கி சண்டையில் ராணுவ வீரர் ஒருவர் காயமடைந்தார்.

    இதுகுறித்து உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, போலீசார் மற்றும் ராணுவத்தின் கூட்டுக் குழு பந்திபோராவில் சுற்றிவளைத்து பாதுகாப்பு மற்றும் பயங்கரவாதிகளை தேடும் நடவடிக்கையை மேற்கொண்டதாக தெரிவித்தார்.

    • உறைபனியால் வாகனங்களை இயக்குவதிலும் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் இருந்தது.
    • பல இடங்களில் காஷ்மீரை போன்று பனி கட்டி, கட்டியா படர்ந்து காணப்பட்டது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை உறைபனியின் தாக்கம் அதிகமாக காணப்படும்.

    ஆனால் இந்த ஆண்டு சற்று தாமதமாக ஜனவரி மாத தொடக்கத்திலேயே உறைபனியின் தாக்கம் ஆரம்பித்தது. மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலுமே உறைபனியின் தாக்கம் உள்ளது. உறைபனியுடன் அவ்வப்போது நீர்ப்பனியும் சேர்ந்து கொட்டி வந்தது.

    இதுதவிர காலை நேரங்களிலேயே மேக கூட்டங்கள் அதிகளவில் திரண்டு காலை 11 மணி வரை பகல் நேரமே இரவாக காட்சியளிக்கிறது. அதன்பிறகு குறைந்து வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது.

    மாலையில் மீண்டும் உறைபனியின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி விடுகிறது. இப்படி தினந்தோறும் காணப்படும் உறைபனியால் மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    ஊட்டியில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை கடுமையான உறைபனி காணப்பட்டது. காந்தல், தலைகுந்தா, பிங்கர் போஸ்ட் உள்ளிட்ட பகுதிகளில் உறைபனியின் தாக்கம் அதிகமாக இருந்தது.

    உறைபனி காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் உள்ள புல்தரைகள், குதிரை பந்தய சாலையில் உள்ள புல் தரைகள் மற்றும் சாலையோரங்களில் உள்ள செடிகள், கொடிகள், புல் தரைகள் மீதும் உறைபனி படர்ந்து காணப்பட்டது.

    இதனால் அந்த பகுதிகள் முழுவதும் புற்கள் இருந்த தடமே மறைந்து வெள்ளை கம்பளிஆடை போர்த்தியது போன்று வெண்மை நிறத்தில் காட்சியளித்தன. இதுதவிர வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மோட்டார் சைக்கிள், கார்கள் மீதும் உறைபனி கொட்டியிருந்தது. இதனை வாகன உரிமையாளர்கள் அகற்றினர். உறைபனியால் வாகனங்களை இயக்கு வதிலும் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் இருந்தது.

    காஷ்மீரில் தான் அதிகளவு குளிர் காணப்படும். ஆனால் தமிழகத்தில் உள்ள ஊட்டியிலும் தற்போது உறைபனியின் தாக்கம் அதிகரிப்பு காரணமாக கடுமையான குளிர் நிலவுகிறது. இதனால் ஊட்டி தற்போது மினி காஷ்மீராகவே மாறி காணப்பட்டது. பல இடங்களில் காஷ்மீரை போன்று பனி கட்டி, கட்டியா படர்ந்து காணப்பட்டது.

    உறைபனியின் தாக்கம் அதிகமாக இருந்ததுடன் கடும் குளிரும் காணப்பட்டது இதன் காரணமாக பொதுமக்கள் தங்கள் அத்தியாவசிய தேவைக்கு கூட வெளியில் வர முடியாத நிலை காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் தங்கள் பொதுமக்கள் வீட்டிற்கு ள்ளேயே முடங்கினர். வீட்டிற்குள்ளும் குளிர் வாட்டியதால் தீ மூட்டி குளிர் காய்ந்தனர்.

    பள்ளி, கல்லூரி செல்லும் குழந்தைகள் மற்றும் அதிகாலையில் வேலைக்கு செல்வோர், தேயிலை தோட்ட பணிக்கு செல்வோர் குளிரை தாங்கும் ஆடைகளை அணிந்து கொண்டு சென்றனர். சில இடங்களில் பொது மக்கள், ஆட்டோ, சுற்றுலா வாகன டிரைவர்கள் குளிரில் இருந்து தப்பிக்க ஆங்காங்கே தீ மூட்டி குளிர் காய்ந்து வருகின்றனர். ஊட்டியில் இன்று அதிகபட்ச வெப்பநிலையாக 23.2 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 0.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகி உள்ளது.

    மேலும் மாவட்டத்தின் பல இடங்களில் காலை முதலே பனிமூட்டமும் காணப்படுகிறது. இதனால் சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் வாகன ஓட்டிகளுக்கு தெரிவதில்லை.

    வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடியே வாகனத்தை இயக்கி செல்கின்றனர். தொடர்ந்து உறைபனியின் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்வதால், தேயிலை, மலைக்காய்கறிகள் உள்ளிட்ட பயிர்களும் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    • விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய செயல்பாடுகளையும் மோசமாக பாதிப்பு.
    • பனிப்பொழிவு இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்ல வேண்டியிருந்தது.

    குளு குளு பனி பொழிவுக்கு பெயர்போன காஷ்மீரில், இந்த குளிர்காலத்தில் பள்ளத்தாக்கு உள்பட எங்கும் பனிப்பொழிவு இல்லாதது சுற்றுலா பயணிகளை ஏமாற்றம் அடையச் செய்தது. இதனால், பயணிகள் சோகத்துடன் வீடு திரும்பினர்.

    சுற்றுலா மட்டுமல்லாமல், பனி சார்ந்த செயல்பாடுகளும் குறிப்பாக, விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய செயல்பாடுகளையும் மோசமாக பாதித்துள்ளது.

    புத்தாண்டு தினத்தன்று குல்மார்க் பகுதியில் பனிச்சறுக்கு மற்றும் பிற பனி தொடர்பான செயல்பாடுகளை அனுபவிக்கும் நம்பிக்கையில் இங்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்தனர். ஆனால், பனிப்பொழிவு இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்ல வேண்டியிருந்தது.

    இதுகுறித்து டெல்லியை சேர்ந்த பங்கஜ் சிங் என்பவர் கூறுகையில்"குல்மார்க்கில் பனியை ரசிப்பதற்காக ஜனவரி 3 முதல் ஜனவரி 9 வரை ஏழு நாள் பேக்கேஜை முன்பதிவு செய்து வந்தோம். ஆனால் இங்கு பனி இல்லை. பெரும்பாலான இடங்களில் வெள்ளை நிலப்பரப்பை நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால் அது வடக்கின் மற்ற பகுதிகளைப் போல பழுப்பு நிறத்தில் இருந்தது. " என்று ஏமாற்றத்துடன் கூறினார்.

    • காயம் அடைந்த அவர் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    • போலீஸ்காரர் மீது தாக்குதல் நடத்திய 3 பயங்கரவாதிகளை போலீசார் கைது செய்து உள்ளனர்.

    ஸ்ரீநகர்:

    காஷ்மீர் தலைநகரான ஸ்ரீநகரில் கடந்த 9-ந் தேதி போலீஸ்காரர் முகமது ஹபீஸ் ஷாக் வீட்டுக்கு திரும்பிச் சென்று கொண்டிருந்த போது அவர் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினார்கள். இதில் காயம் அடைந்த அவர் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இந்த நிலையில் போலீஸ்காரர் மீது தாக்குதல் நடத்திய 3 பயங்கரவாதிகளை போலீசார் கைது செய்து உள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • உலக காஷ்மீரி பண்டிட் புலம்பெயர்ந்தோர் கூட்டமைப்பு என்ற அமைப்பை தொடங்கி உள்ளனர்.
    • இந்த அமைப்பு சார்பில் நடந்த மாநாட்டில் சத்குரு பங்கேற்று சிறப்புரை நிகழ்த்தினார்.

    ஜம்மு:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நிகழ்ந்த காஷ்மீரி பண்டிட்கள் மீதான இனப் படுகொலையை உலகம் அங்கீகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் புலம்பெயர்ந்த காஷ்மீரி பண்டிட்கள் ஒன்றிணைந்து, உலக காஷ்மீரி பண்டிட் புலம்பெயர்ந்தோர் கூட்டமைப்பு என்ற அமைப்பை தொடங்கி உள்ளனர். இந்த அமைப்பு சார்பில் நடந்த மாநாட்டில் சத்குரு பங்கேற்று சிறப்புரை நிகழ்த்தினார்.

    அந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

    உலகளவில் காஷ்மீரி பண்டிட்கள் மீதான கருத்துருவாக்கத்தை மாற்ற வேண்டியது மிகவும் அவசியம். குறைந்தப்பட்சம் இந்தியாவில் வாழும் அனைத்து இந்தியர்களும் நம்முடைய காஷ்மீரி பண்டிட்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட அவலங்களைக் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். தனி நபராகவும் குடும்பமாகவும் நீங்கள் சந்தித்த வலிகளை 10 முதல் 20 நிமிட குறும்படங்களாக தயாரித்து வெளியிட வேண்டும். இதற்கு திரையரங்குகள் தேவையில்லை. நம் அனைவரிடமும் மொபைல் போன்களும், கம்ப்யூட்டர்களும் உள்ளன. இந்த தொழில்நுட்பங்களே போதுமானது.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவுகளில், உங்கள் ஒவ்வொருவருடைய ஆழமான வலிகளுக்கும் என் இதயம் அனுதாபம் கொள்கிறது. காஷ்மீர் கருத்துருவாக்கத்தை மீண்டும் பேச வேண்டிய நேரமிது. காஷ்மீர் இளைஞர்கள் இந்தப் பொறுப்பை கையிலெடுக்க வேண்டும். காஷ்மீரின் தலையெழுத்தை மாற்றி எழுதவேண்டும்.

    நம்மால் நடந்து முடிந்தவற்றை சரிசெய்ய முடியாது. ஆனால், கொண்டாட்டம் மிகுந்த எதிர்காலத்தை உருவாக்க நம்மால் உறுதி எடுக்கமுடியும். காஷ்மீரின் எதிர்காலம் மற்றும் கருத்துருவாக்கத்தை மாற்றும் பணியில் இளைஞர்கள் சக்திவாய்ந்த மற்றும் பொறுப்பு மிக்கவர்களாக திகழ வேண்டும். என் வாழ்த்துக்களும், ஆசியும் உங்களுடன் இருக்கும்." என பதிவிட்டுள்ளார்.

    இதுதவிர, காஷ்மீரின் செழிப்பான கலாச்சாரம் மற்றும் ஆன்மீக அம்சங்களைப் பாதுகாக்க, ஆதரவு அளிக்க தான் தயாராக இருக்கிறேன். இந்தியாவின் தென் பகுதிகளில் நீங்கள் காஷ்மீர் தினம் என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சியை நடத்தலாம். அதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் நாங்கள் செய்து தருகிறோம். அந்நிகழ்ச்சி மூலம் உங்களுடைய கலை, இலக்கியம், இசை என அனைத்தையும் பிற மக்கள் அறிந்து கொள்ளட்டும். உங்களுடைய கதைகள் வலிகளுடன் மட்டும் நின்று விடாமல், காஷ்மீர் கலாச்சாரத்தின் அழகையும், உங்களுக்குள் இருக்கும் துடிப்பான அதிர்வுகளையும் வெளிப்படுத்தும் வண்ணம் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    • அரசு பணி நியமனங்களை பெற்ற 30 ஆயிரம் பேருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
    • காஷ்மீரில் 2 எய்ம்ஸ், 7 புதிய மருத்துவ கல்லூரிகள் திறப்பு மூலம் சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    காஷ்மீரில் மத்திய அரசு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. இதை பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    2019ம் ஆண்டு முதல் இதுவரை ஜம்மு காஷ்மீரில் கிட்டத்தட்ட 30 ஆயிரம் அரசு பணியிடங்கள் நிரப்பப்பட்டு உள்ளன என்றும், இவற்றில் கடந்த 1 முதல் 1½ ஆண்டுகளில் கிட்டத்தட்ட 20 ஆயிரம் வேலைகள் வழங்கப்பட்டு உள்ளன என்றும் என்னிடம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    ஜம்மு காஷ்மீர் ஒவ்வொரு இந்தியனின் பெருமையாகும். பழைய சவால்களை விட்டு விட்டு புதிய வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டிய நேரம் இதுவாகும். வேகமான வளர்ச்சிக்கு புதிய அணுகுமுறையிலும், புதிய சிந்தனையுடனும் பணியாளர்கள் செயல்பட வேண்டிய அவசியம் உள்ளது.

    நாம் அனைவரும் இணைந்து ஜம்மு காஷ்மீரை புதிய உச்சத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். அரசு பணி நியமனங்களை பெற்ற 30 ஆயிரம் பேருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

    அரசாங்க திட்டங்கள் பலன்கள் எந்த பாகுபாடும் இல்லாமல் சமூகத்தின் ஒவ்வொரு பிரிவையும் சென்றடைய வேண்டும் என்பதே எங்கள் முயற்சியாகும்.

    காஷ்மீரில் 2 எய்ம்ஸ், 7 புதிய மருத்துவ கல்லூரிகள் திறப்பு மூலம் சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    காஷ்மீருக்கு ரெயில்கள் மூலம் இணைப்பை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

    இவ்வாறு மோடி பேசினார்.

    • உக்ரைன் போர் சூழலுடன் காஷ்மீர் விவகாரத்தை இணைத்து பேசினார்.
    • தொடர்ந்து பொய்களை கூறும் மனபாங்குடன் இதுபோன்ற பேச்சுக்கள் உள்ளன.

    ரஷியாவுக்கு எதிரான தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் பேசிய பாகிஸ்தான் தூதர், காஷ்மீர் விவகாரத்தை எழுப்பினார். உக்ரைன் போர் சூழலுடன் காஷ்மீர் விவகாரத்தை இணைத்து பேசினார்.

    இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. ஐ.நா.வுக்கான நிரந்தர இந்திய பிரதிநிதி ருசிரா கம்போஜ் கூறும்போது, "இந்தியாவுக்கு எதிராக அர்த்தமற்ற விஷயங்களை குறிப்பிட்டு ஐ.நா. அமைப்பை மீண்டும் ஒருமுறை தவறாக பயன்படுத்த வெளிநாட்டு குழு ஒன்று முயற்சித்து உள்ளது. தொடர்ந்து பொய்களை கூறும் மனபாங்குடன் இதுபோன்ற பேச்சுக்கள் உள்ளன. இது எந்த மதிப்புக்கும் உரியவை அல்ல.

    ஜம்மு-காஷ்மீர் எப்போதும் இந்தியாவுடன் ஒருங்கிணைந்த ஒரு பகுதியாகும். எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நிறுத்துமாறு பாகிஸ்தானை கேட்டு கொள்கிறோம். இதனால் எங்கள் குடிமக்கள் தங்களது வாழ்வுரிமை மற்றும் சுதந்திரத்தை அனுபவிக்க முடியும்" என்றார்.

    • கொல்லப்பட்ட பயங்கரவாதி பல பயங்கரவாத குற்றங்களில் ஈடுபட்ட நபர் என்பதும், சமீபத்தில் ஒரு என்கவுண்டரில் இருந்து தப்பினார்.
    • பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையில், ஏகே ரக துப்பாக்கிகள், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் மீட்கப்பட்டன.

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் பாஸ்குச்சான் பகுதியில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே இன்று காலை துப்பாக்கிச் சண்டை நடந்தது.

    இந்த என்கவுன்டரில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். அந்த பயங்கரவாதி நசீர் அகமது பட் என அடையாளம் தெரியவந்தது. பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்புடையவர் என தெரிய வந்தது. பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையில், ஏகே ரக துப்பாக்கிகள், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் மீட்கப்பட்டன.

    மேலும், கொல்லப்பட்ட பயங்கரவாதி பல பயங்கரவாத குற்றங்களில் ஈடுபட்ட நபர் என்பதும், சமீபத்தில் ஒரு என்கவுண்டரில் இருந்து தப்பினார் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

    முன்னதாக வெள்ளிக்கிழமை அன்று பாரமுல்லா பகுதியில் நடந்த என்கவுன்டரில், தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமது உடன் தொடர்புடைய இரண்டு உள்ளூர் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×