search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பயங்கரவாதி"

    • சமீபகாலமாக பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்படுவது உள்ளிட்ட சம்பவங்கள் நடந்தது.
    • கடந்த நவம்பர் மாதம் லஷ்கர்-இ-தொய்பா தளபதி அக்ரம் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானை தளமாக கொண்ட பயங்கரவாத தளபதிகளில் ஒருவர் ஷேக் ஜமீல்-உர்-ரஹ்மான்.

    காஷ்மீரின் புல்வாமாவை சேர்ந்த இவர் ஐக்கிய ஷிகாத் கவுன்சிலின் பொதுச் செயலாளர் மற்றும் தவ்ரீக்-உல்-முஜாகிதீன் அமைப்பு தலைவராக செயல்பட்டு வந்தார்.

    காஷ்மீரில் நடந்த பல தாக்குதல்களில் தொடர் புடைய ஜமீல்-உர்-ரஹ்மானை, இந்திய அரசு கடந்த 2022-ஆம் ஆண்டு அக்டோபர் தீவிரவாதியாக அறிவித்து தேடி வந்தது.

    இந்நிலையில் ஜமீர்-உர்-ரஹ்மான் பாகிஸ்தானில் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளார்.

    பாகிஸ்தானில் கைபர் பக்துள்கவா மாகாணத்தில் உள்ள அபோதாபாத்தில் அவர் மர்மமான முறையில் இறந்து கிடந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

    அவர் எப்படி உயிரிழந்தார் என்பது குறித்து உறுதியாக தகவல் ஏதும் வெளியாகவில்லை.

    சமீபகாலமாக பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்படுவது உள்ளிட்ட சம்பவங்கள் நடந்தது.

    கடந்த நவம்பர் மாதம் லஷ்கர்-இ-தொய்பா தளபதி அக்ரம் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    டிசம்பர் மாதம் கராச்சியில் லஷ்கர் தீவிரவாதி அபு ஹன்சலா மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    நேற்று முன்தினம் லஷ்கர் உளவுத்துறை தலைவர் அசாம் சீமா மாரடைப்பால் மரணம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • இந்தியாவுக்கு எதிராக பல்வேறு சதி செயலில் ஈடுபட்டவர்.
    • காலிஸ்தான் ஆதரவாளரான இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.

    பஞ்சாபை சேர்ந்தவர் லக்பீர் சிங் லாண்டா. 33 வயதான இவர் தற்போது கனடாவில் வசித்து வருகிறார். காலிஸ்தான் ஆதரவாளரான இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.

    லக்பீர் சிங் லாண்டா இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத செயலில் ஈடுபட்டு வந்தார். கடந்த 2021ம் ஆண்டு மொகாலியில் உள்ள பஞ்சாப் போலீஸ் உளவுத்துறை தலைமையகம் மீது ராக்கெட் தாக்குதல் நடத்த திட்டமிட்டவர்.

    மேலும், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் டார்ன் டரனில் உள்ள சர்ஹாலி போலீஸ் நிலையத்தில் நடந்த தாக்குதல் சம்பவத்தில் லக்பீர்சிங் லாண்டாவுக்கு தொடர்பு இருந்தது தெரியவந்தது.

    கடந்த செப்டம்பர் மாதம் கனடாவை சேர்ந்த பயங்கர வாதிகளின் நெருங்கிய கூட்டாளிகளுடன் தொடர்புடைய 48 இடங்களில் பஞ்சாப் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது சிலர் கைது செய்யப்பட்டனர். இந்த சோதனையின்போது ஒரு வியாபாரியிடம் லாண்டா ஹரிகே என்ற பெயரில் 15 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.

    இந்த நிலையில் இந்தியாவுக்கு எதிராக பல்வேறு சதி செயலில் ஈடுபட்டு வரும் லக்பீர் சிங் லாண்டாவை தற்போது பயங்கரவாத என மத்திய உள்துறை அமைச்சம் அறிவித்துள்ளது.

    • நியூ காலனியில் பாதுகாப்பு படைக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடந்தது.
    • சம்பந்தப்பட்ட பயங்கரவாதியின் அடையாளம் குறித்து போலீசார் விசாரணை.

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அரிஹல் பகுதியில் பாதுகாப்புப் படையினர் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை மேற்கொண்டனர்.

    அப்போது, அரிஹல் பகுதியில் உள்ள நியூ காலனியில் பாதுகாப்பு படைக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடந்தது.

    இதில், அடையாளம் தெரியாத பயங்கரவாதி ஒருவரை பாதுகாப்பு படையினர் துப்பாக்கியால் சுட்டு என்கவுண்டர் செய்தனர்.

    சம்பந்தப்பட்ட பயங்கரவாதியின் அடையாளம் மற்றும் எந்த அமைப்பை சேர்ந்தவர் என்பது குறித்து உடனடியாக தெரியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • ராவல் கோட்டில் உள்ள மசூதிக்கு ரியாஸ் அகமது சென்ற போது அங்கு அவனை மர்ம நபர்கள் தலையில் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.
    • இவன் லஷ்கர்-இ-தொய்பாவின் தலைமை தளபதியான சஜ்ஜாத் ஜாத்தின் நெருங்கிய கூட்டாளியாக இருந்தான்.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் உயர்மட்ட தளபதி ரியாஸ் அகமது. இவன் கடந்த ஜனவரி 1-ந் தேதி காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள தாங்ரி கிராமத்தில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவன்.

    தீவிரவாதிகள் துப்பாக்கிகளால் கண்மூடித்தனமாக சுட்டதில் 7 பேர் உயிரிழந்தனர். 17 பேர் காயம் அடைந்தனர். தீவிரவாதி ரியாஸ் அகமதுவை இந்தியா தீவிரமாக தேடி வந்தது.

    இந்நிலையில் தீவிரவாதி ரியாஸ் அகமது, பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளான். பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ராவல் கோட்டில் உள்ள மசூதிக்கு ரியாஸ் அகமது சென்ற போது அங்கு அவனை மர்ம நபர்கள் தலையில் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.

    பின்னர் அங்கிருந்து தப்பி சென்றனர். அவர்கள் யார் என்பது தெரியவில்லை. தீவிரவாதி ரியாஸ் அகமது முரிட்கேயில் உள்ள லஷ்கர்-இ-தொய்பா முகாமில் செயல்பட்டான். சமீபத்தில் ராவல் கோட்டில் உள்ள முகாமுக்கு மாற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இவன் லஷ்கர்-இ-தொய்பாவின் தலைமை தளபதியான சஜ்ஜாத் ஜாத்தின் நெருங்கிய கூட்டாளியாக இருந்தான். மேலும் அந்த அமைப்பின் நிதியையும் கவனித்து வந்துள்ளான்.

    இந்த ஆண்டில் எல்லைக்கு வெளியே இருந்து செயல்படும் உயர்மட்ட பயங்கரவாத தளபதி கொல்லப்பட்ட 4-வது சம்பவம் இதுவாகும்.

    • இருவரும் மாவட்டத்தின் பெஜ்னி பகுதியில் பல வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர்.
    • மாநில அரசின் சரணடைதல் கொள்கையின்படி இருவருக்கும் மறுவாழ்வு அளிக்க முடிவு.

    சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள சுக்மா என்ற பகுதயில், சட்டவிரோத இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாத குழு உறுப்பினர் உள்பட இரண்டு நக்சலைட்டுகள் இன்று சரணடைந்ததாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    சரணடைந்த தேவா மற்றும் எர்ரா ஆகிய இருவரும், "மனிதாபிமானமற்ற மற்றும் வெற்று மாவோயிஸ்ட் சித்தாந்தத்தால் தாங்கள் ஏமாற்றமடைந்துள்ளதாகவும், எனவே ஆயுதங்களைக் கீழே போட முடிவு செய்துள்ளதாகவும்" போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.

    தேவா ஒரு போராளி படைப்பிரிவின் உறுப்பினராகவும், எர்ரா போராளிகளின் ஒரு பிரிவாகவும், சட்டவிரோதமான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மாவோயிஸ்ட்) கொரோஷேகுடா புரட்சிகர மக்கள் கவுன்சிலின் (ஆர்பிசி) விவசாயக் குழு உறுப்பினராகவும் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இவர்கள் இருவரும் மாவட்டத்தின் பெஜ்னி பகுதியில் பல வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறினர்.

    இந்நிலையில், மாநில அரசின் சரணடைதல் கொள்கையின்படி தேவாவுக்கும், எர்ராவுக்கும் மறுவாழ்வு அளிக்கப்படும் என்று மேலும் கூறினர்.

    • பரிகம் கிராமத்தில் ஒரு இடத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பது தெரியவந்தது.
    • பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது.

    ஜம்மு:

    காஷ்மீர் மாநிலம் புல்வா மா மாவட்டத்தில் அடர்ந்த வனபகுதி ஒன்றில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து பாதுகாப்பு படையினர் லாரோவ்-பரிகம் சாலையில் முற்றுகையிட்டு தேடுதல் வேட்டை நடத்தினார்கள்.

    அப்போது பரிகம் கிராமத்தில் ஒரு இடத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பது தெரியவந்தது. அவர்களை பாதுகாப்பு படையினர் சரண் அடைய எச்சரித்தனர்.

    ஆனால் தீவிரவாதிகள் அதை ஏற்க மறுத்து சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது.

    இன்று காலை துப்பாக்கி சண்டை ஓய்ந்தது. அதன் பிறகு பாதுகாப்பு படையினர் அங்கு தேடுதல் வேட்டை நடத்தினார்கள். அப்போது 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டு இருப்பது தெரிந்தது. அவர் கள் வைத்திருந்த ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    சுட்டுக் கொல்லப்பட்டவர்களில் ஒருவன் லஸ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கத்தின் மூத்த தளபதி என்று தெரியவந்தது. இது பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது.

    • ஜம்மு கூடுதல் காவல்துறை இயக்குநர் (ஏடிஜிபி) முகேஷ் சிங் தெரிவித்துள்ளார்.
    • சம்பவ இடத்திற்கு பாதுகாப்பு படையினர் விரைந்து நடவடிக்கை.

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் இன்று நடைபெற்ற என்கவுன்டரில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

    இந்த தகவலை ஜம்மு கூடுதல் காவல்துறை இயக்குநர் (ஏடிஜிபி) முகேஷ் சிங் தெரிவித்துள்ளார்.

    புதால் பகுதியில் உள்ள குந்தா-கவாஸ் கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து அங்கு போலீசார் மற்றும் ராணுவம் நடத்திய சுற்றிவளைப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கையின் போது என்கவுன்டர் நடந்துள்ளது.

    முற்றுகையிடப்பட்ட கிராமத்திலிருந்து துப்பாக்கிச் சூடு சத்தங்கள் கேட்டதாகவும், சம்பவ இடத்திற்கு பாதுகாப்பு படையினர் விரைந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

    ஜம்முவில் என்கவுன்டர் நடந்து வருவதாக தெரிவித்த, ஏ.டி.ஜி.பி, " இதுவரை ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டுள்ளார்," என்று தெரிவித்தார்.

    • கனடாவின் சுரோவ் பகுதியில் நடந்த துப்பாக்கி சூட்டில் ஹர்தீப்சிங் நிசார் சுட்டுக்கொல்லப்பட்டான்.
    • இந்திய அரசால் வெளியிடப்பட்ட தேடுப்படும் பயங்கரவாதிகள் பட்டியலில் ஹர்தீப்சிங் பெயரும் உள்ளது.

    ஒட்டாவா:

    கனடாவை சேர்ந்தவன் ஹர்தீப்சிங் நிசார். காலிஸ்தான் பயங்கரவாதியான இவன் இந்தியாவில் பல்வேறு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வந்தான். இது தொடர்பாக இவன் மீது பல வழக்குகள் உள்ளது. இந்த நிலையில் கனடாவின் சுரோவ் பகுதியில் நடந்த துப்பாக்கி சூட்டில் ஹர்தீப்சிங் நிசார் சுட்டுக்கொல்லப்பட்டான்.

    இவன் மீது பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் பகுதியில் நடந்த இந்து மத தலைவர் கொல்லப்பட்ட வழக்கு உள்ளிட்ட பல வழக்குகள் இருந்ததால் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அவனை தேடி வந்தனர்.

    சமீபத்தில் இந்திய அரசால் வெளியிடப்பட்ட தேடுப்படும் பயங்கரவாதிகள் பட்டியலில் ஹர்தீப்சிங் பெயரும் உள்ளது. அவன் மீது குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு என்.ஐ.ஏ. அதிகாரிகள் இவனை பற்றி துப்பு கொடுத்தால் ரூ. 10 லட்சம் வெகுமதி அளிக்கப்படும் என அறிவித்தனர். அவனை பயங்கரமாக தேடி வந்த நிலையில் கனடாவில் கொல்லப்பட்டு உள்ளான். அவனை சுட்டுக்கொன்றது யார்? என்று தெரியவில்லை. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

    • ரஜோரிக்கு அருகிலுள்ள தஸ்சல் குஜ்ரான் வனப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக பயங்கரவாதிகளின் நடமாட்டம்.
    • என்கவுன்டரை அடுத்து மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரியில் நேற்று நள்ளிரவில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் பயங்கரவாதி சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ரஜோரிக்கு அருகிலுள்ள தஸ்சல் குஜ்ரான் வனப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக பயங்கரவாதிகளின் நடமாட்டத்தைக் கண்டறிந்ததை அடுத்து ராணுவ வீரர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

    பின்னர், பாதுகாபு்பு படையினர் பயங்கரவாதிகளை சுற்றி வளைத்தனர். அப்போது, பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடந்தது. 

    இந்நிலையில், பயங்கரவாதிகளை நோக்கி பாதுகாப்பு படையினர் என்கவுன்டர் நடத்தினர்.

    இதில் பயங்கரவாதி ஒருவர் கொல்லப்பட்டார் என்றும் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • அனந்த்நாக் நகரில் உள்ள ஜக்லாண்ட் மண்டி அருகே பயங்கரவாதிகளால் சுட்டு தாக்கப்பட்டார்.
    • சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தனர்.

    ஜம்மு- காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் சர்க்கஸ் கலைஞர் ஒருவர் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சர்க்கஸ் கலைஞர் தீபு என்பவர் அனந்த்நாக்கில் உள்ள கேளிக்கை பூங்காவில் தனியார் சர்க்கஸ் மேளாவில் வேலை பார்த்து வந்தார்.

    உதம்பூரை சேர்ந்த தீபு நேற்று மாலை அனந்த்நாக் நகரில் உள்ள ஜக்லாண்ட் மண்டி அருகே பயங்கரவாதிகளால் சுட்டு தாக்கப்பட்டார்.

    இதையடுத்து, தீபு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தனர்.

    • பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளுக்கு காஷ்மீரை சேர்ந்த சிலர் நிதி உதவி உள்ளிட்டவைகளை செய்து வருகின்றனர்.
    • சந்தேகத்திற்கு இடமாக சுற்றி திரிந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். அவரிடம் சோதனை நடத்தியதில் சீன கையெறி குண்டு இருந்தது தெரிய வந்தது.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நாட்டை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டு வரும் பயங்கரவாதிகளை ஒழிக்க மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது.

    பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளுக்கு காஷ்மீரை சேர்ந்த சிலர் நிதி உதவி உள்ளிட்டவைகளை செய்து வருகின்றனர். இதையடுத்து அவர்களை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.

    பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் அத்து மீறி நுழையாமல் இருக்க எல்லைப்பகுதியில் கண்காணிப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன. இந்த நிலையில் கிஷ்ஸ்வார் மாவட்டம் சிரஜ் பகுதியில் போலீசார் மற்றும் மத்திய பாதுகாப்பு படையினர் இணைந்து ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக சுற்றி திரிந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். அவரிடம் சோதனை நடத்தியதில் சீன கையெறி குண்டு இருந்தது தெரிய வந்தது. அதை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவனது பெயர் முகமது யூசுப் சவுகான் என்பதும் ஹிஜ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவன் என்பதும் தெரியவந்தது. அவனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் தங்கள் பகுதியில் யாராவது சந்தேகத்திற்கு இடமாக சுற்றி திரிந்தால் அவர்களை பற்றி உடனடியாக தகவல் கொடுக்க வேண்டும் என பொதுமக்களுக்கு போலீசார் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

    • பஞ்ச்வார் சிங்கை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.
    • போலீசார் காலிஸ்தான் பயங்கரவாதியை சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிச்சென்ற அடையாளம் தெரியாத நபரை தேடி வருகின்றனர்.

    காலிஸ்தான் கமாண்டோ படை- பஞ்ச்வார் குழுவின் தலைவர் பஞ்வார் (63). ஜூலை 2020ல் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் இந்தியாவால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டார்.

    இவர், லாகூரில் உள்ள தனது வீட்டு அமைந்துள்ள ஜனஹர் டவுனில் சன் ஃப்ளவர் ஹவுசிங் சொசைட்டியில் உள்ள பூங்காவில் தனது பாதுகாவலருடன் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த போது, மோட்டார் பைக்கில் வந்த இரு ஆசாமிகள் பஞ்ச்வார் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    மேலும், பஞ்ச்வார் சிங்கை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இறந்ததாக பாகிஸ்தானின் பஞ்சாப் காவல்துறையின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

    ஐஎஸ்ஐ, ராணுவ உளவுத்துறை (எம்ஐ) மற்றும் பயங்கரவாத எதிர்ப்புத் துறை (சிடிடி) உள்ளிட்ட பாகிஸ்தானின் புலனாய்வு அமைப்புகள் அந்தப் பகுதியை சுற்றி வளைத்து விசாரணையைத் தொடங்கியுள்ளன. பயங்கரவாதியை சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிச்சென்ற அடையாளம் தெரியாத நபரை தேடி வருகின்றனர்.

    ×