search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சீக்கியர்கள்"

    • கீர்த்தன் எனப்படும் பக்தி பாடல்கள் பாடுவதில் திறன் கொண்டவர் ராஜ் சிங்
    • அடையாளம் தெரியாதவர்கள் சுட்டதில் துப்பாக்கி குண்டு சிங்கின் வயிற்றில் பாய்ந்தது

    அமெரிக்காவின் தென்கிழக்கில் உள்ள மாநிலம் அலபாமா. இதன் தலைநகரம் மோன்ட்கோமரி (Montgomery).

    இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தின் பிஜ்னோர் மாவட்ட டண்டா சகுவாலா (Tanda Sahuwala) கிராமத்தை சேர்ந்த "கோல்டி" (Goldy) என அழைக்கப்படும் 29 வயதான ராஜ் சிங் (Raj Singh) சுமார் ஒன்றரை வருட காலமாக அமெரிக்காவில் தங்கியிருந்தார்.

    "கீர்த்தன்" (kirtan) எனப்படும் சீக்கிய மதத்தின் பக்தி பாடல்கள் பாடுவதில் திறன் மிக்கவரான ராஜ் சிங், அலபாமா மாவட்டத்தில் உள்ள ஒரு குர்துவாரா (Gurdwara) எனப்படும் சீக்கிய வழிபாட்டு தலத்திற்கு வெளியே நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத சிலர், ராஜ் சிங்கை சுட்டனர். இதில் துப்பாக்கி குண்டு அவரது வயிற்று பகுதியில் பாய்ந்ததில் அவர் அங்கேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    ஒரு சில இனத்தவர்கள் மீது வெறுப்புணர்வினால் வேறு சில இனத்தவர்கள் தாக்குதலிலோ அல்லது வன்முறை செயலிலோ ஈடுபடும் வெறுப்புணர்வு குற்றம் (hate crime) எனும் வகையிலான குற்றமாக இது இருக்கலாம் என ராஜ் சிங் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.


    இப்பிராந்தியத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் மீது நடத்தப்படும் இரண்டாவது கொலை சம்பவம் இது.

    மேலும், அமெரிக்காவில், 2024 பிப்ரவரியிலும், 2023 ஜூலையிலும் இந்திய வம்சாவளியினர் மீது வெறுப்புணர்வு கொண்ட தனி நபர்களால் வெவ்வேறு சம்பவங்களில் இருவர் சுட்டு கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    உயிரிழந்த ராஜ் சிங்கின் உடலை இந்தியாவிற்கு கொண்டு வர உதவி செய்ய கோரி, பிரதமர் நரேந்திர மோடிக்கு அவரது குடும்பத்தினர் கடிதம் எழுதியுள்ளனர்.

    தனது தந்தையின் உயிரிழப்பிற்கு பிறகு தனது தாயையும் இரண்டு சகோதரிகளையும் ஒரு சகோதரனையும் காப்பாற்றும் பொறுப்பில் இருந்த ராஜ் சிங் கொல்லப்பட்டது அவரது சொந்த ஊரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • பாஜகவை பொறுத்தவரை டர்பன் அணிந்த ஒவ்வொருவரும் காலிஸ்தானியர்களாக தெரிகிறார்கள்.
    • என்னை மத ரீதியாக தாக்கி பேசுகிறார்கள், டர்பன் அணிந்திருந்ததால் என்னை காலிஸ்தானியர் என கூறுவதாக பேசியுள்ளார்.

    பாஜகவை பொறுத்தவரை டர்பன் அணிந்த ஒவ்வொருவரும் காலிஸ்தானியர்களாக தெரிகிறார்கள். சீக்கியர்களை மோசமாகச் சித்தரிக்கும் பாஜகவின் பிரிவினைவாத அரசியலை வன்மையாக கண்டிக்கிறேன் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

    மேற்கு வங்க காவல்துறை அதிகாரி ஒருவரின் வீடியோவை தனது X பக்கத்தில் மம்தா பானர்ஜி பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் பேசும் காவல்துறை அதிகாரி, என்னை மத ரீதியாக தாக்கி பேசுகிறார்கள், டர்பன் அணிந்திருந்ததால் என்னை காலிஸ்தானியர் என கூறுவதாக பேசியுள்ளார்.

    அந்த வீடியோ பதிவில்,"பாஜகவின் பிரிவினைவாத அரசியல் அரசியலமைப்பு சட்டத்தையே மீறும் வகையில் அமைந்துள்ளது. பாஜகவை பொறுத்தவரை டர்பன் அணிந்த ஒவ்வொருவரும் காலிஸ்தானியர்களாக தெரிகிறார்கள். மேற்கு வங்கத்தில் சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்க உறுதியான நடவடிக்கை எடுப்பேன். அதைச் சீர்குலைக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 

    • 3 நகரங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக 10 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார்
    • சீக்கியர்கள் சிலர், ‘கோ பேக் ராகுல்’ என எழுதப்பட்ட போஸ்டர்களை கையில் பிடித்தபடி கோஷம் எழுப்பினர்.

    நியூயார்க்:

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், சான்பிரான் சிஸ்கோ, வாஷிங்டன், நியூயார்க் ஆகிய 3 நகரங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக 10 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். சான்பிரான்சிஸ்கோ, வாஷிங்டனில் நிகழ்ச்சிகளை அவர் முடித்துவிட்டார்.

    இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் நியூயார்க்கில் நடந்த நிகழ்ச்சியில் ராகுல் கலந்து கொண்டார். அப்போது அவரை வரவேற்பதற்காக ஏராளமானோர் திரண்டிருந்தனர். அந்த சமயத்தில் ராகுலுக்கு திடீர் எதிர்ப்பு கிளம்பியது. சாலையோரத்தில் வரிசையாக நின்ற சீக்கியர்கள் சிலர், 'கோ பேக் ராகுல்' என எழுதப்பட்ட போஸ்டர்களை கையில் பிடித்தபடி கோஷம் எழுப்பினர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள், பஞ்சாப்பை தனி நாடாக அறிவிக்கக் கோரி வரும் காலிஸ்தான் அமைப்பின் ஆதரவாளர்கள் என்பதும், 1984-ல் நடந்த சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, ராகுலை கண்டித்து போராட்டம் நடத்தியதும் தெரியவந்தது.

    • நேற்று வடக்கு கலிபோர்னியா போலீசார் மோதலில் ஈடுபட்ட 17 சீக்கியர்களை கைது செய்தனர்.
    • கும்பலிடம் இருந்து பல்வேறு பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் உள்ள வடக்கு கலிபோர்னியாவில், வார இறுதி நாளில் 2 சீக்கிய குழுவினர் மோதலில் ஈடுபட்டனர். இது தொடர்பாக வடக்கு கலிபோர்னியா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மோதலில் ஈடுபட்டவர்களை தேடி வந்தனர்.

    இந்நிலையில் நேற்று வடக்கு கலிபோர்னியா போலீசார் மோதலில் ஈடுபட்ட 17 சீக்கியர்களை கைது செய்தனர். இவர்களில் 2 பேர் இந்தியாவில் நடந்த கொலை மற்றும் பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்புடையவர்கள் ஆவர்.

    இந்த கும்பலிடம் இருந்து போலீசார் ஏ.ஆர். 15 மற்றும் ஏ.கே.47 துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள், மிஷின் துப்பாக்கிகள் உள்பட பல்வேறு பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

    இது தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறும்போது, கைது செய்யப்பட்டவர்களில் 2 பேர் இந்தியாவில் பல கொலைகளில் தேடப்படும் முக்கிய குற்றவாளிகள். கைது செய்யப்பட்ட அனைவரிடமும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

    ×