search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பனி"

    • உறைபனியால் வாகனங்களை இயக்குவதிலும் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் இருந்தது.
    • பல இடங்களில் காஷ்மீரை போன்று பனி கட்டி, கட்டியா படர்ந்து காணப்பட்டது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை உறைபனியின் தாக்கம் அதிகமாக காணப்படும்.

    ஆனால் இந்த ஆண்டு சற்று தாமதமாக ஜனவரி மாத தொடக்கத்திலேயே உறைபனியின் தாக்கம் ஆரம்பித்தது. மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலுமே உறைபனியின் தாக்கம் உள்ளது. உறைபனியுடன் அவ்வப்போது நீர்ப்பனியும் சேர்ந்து கொட்டி வந்தது.

    இதுதவிர காலை நேரங்களிலேயே மேக கூட்டங்கள் அதிகளவில் திரண்டு காலை 11 மணி வரை பகல் நேரமே இரவாக காட்சியளிக்கிறது. அதன்பிறகு குறைந்து வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது.

    மாலையில் மீண்டும் உறைபனியின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி விடுகிறது. இப்படி தினந்தோறும் காணப்படும் உறைபனியால் மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    ஊட்டியில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை கடுமையான உறைபனி காணப்பட்டது. காந்தல், தலைகுந்தா, பிங்கர் போஸ்ட் உள்ளிட்ட பகுதிகளில் உறைபனியின் தாக்கம் அதிகமாக இருந்தது.

    உறைபனி காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் உள்ள புல்தரைகள், குதிரை பந்தய சாலையில் உள்ள புல் தரைகள் மற்றும் சாலையோரங்களில் உள்ள செடிகள், கொடிகள், புல் தரைகள் மீதும் உறைபனி படர்ந்து காணப்பட்டது.

    இதனால் அந்த பகுதிகள் முழுவதும் புற்கள் இருந்த தடமே மறைந்து வெள்ளை கம்பளிஆடை போர்த்தியது போன்று வெண்மை நிறத்தில் காட்சியளித்தன. இதுதவிர வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மோட்டார் சைக்கிள், கார்கள் மீதும் உறைபனி கொட்டியிருந்தது. இதனை வாகன உரிமையாளர்கள் அகற்றினர். உறைபனியால் வாகனங்களை இயக்கு வதிலும் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் இருந்தது.

    காஷ்மீரில் தான் அதிகளவு குளிர் காணப்படும். ஆனால் தமிழகத்தில் உள்ள ஊட்டியிலும் தற்போது உறைபனியின் தாக்கம் அதிகரிப்பு காரணமாக கடுமையான குளிர் நிலவுகிறது. இதனால் ஊட்டி தற்போது மினி காஷ்மீராகவே மாறி காணப்பட்டது. பல இடங்களில் காஷ்மீரை போன்று பனி கட்டி, கட்டியா படர்ந்து காணப்பட்டது.

    உறைபனியின் தாக்கம் அதிகமாக இருந்ததுடன் கடும் குளிரும் காணப்பட்டது இதன் காரணமாக பொதுமக்கள் தங்கள் அத்தியாவசிய தேவைக்கு கூட வெளியில் வர முடியாத நிலை காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் தங்கள் பொதுமக்கள் வீட்டிற்கு ள்ளேயே முடங்கினர். வீட்டிற்குள்ளும் குளிர் வாட்டியதால் தீ மூட்டி குளிர் காய்ந்தனர்.

    பள்ளி, கல்லூரி செல்லும் குழந்தைகள் மற்றும் அதிகாலையில் வேலைக்கு செல்வோர், தேயிலை தோட்ட பணிக்கு செல்வோர் குளிரை தாங்கும் ஆடைகளை அணிந்து கொண்டு சென்றனர். சில இடங்களில் பொது மக்கள், ஆட்டோ, சுற்றுலா வாகன டிரைவர்கள் குளிரில் இருந்து தப்பிக்க ஆங்காங்கே தீ மூட்டி குளிர் காய்ந்து வருகின்றனர். ஊட்டியில் இன்று அதிகபட்ச வெப்பநிலையாக 23.2 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 0.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகி உள்ளது.

    மேலும் மாவட்டத்தின் பல இடங்களில் காலை முதலே பனிமூட்டமும் காணப்படுகிறது. இதனால் சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் வாகன ஓட்டிகளுக்கு தெரிவதில்லை.

    வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடியே வாகனத்தை இயக்கி செல்கின்றனர். தொடர்ந்து உறைபனியின் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்வதால், தேயிலை, மலைக்காய்கறிகள் உள்ளிட்ட பயிர்களும் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    • கடும் பனியால் மாநிலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
    • முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, காலை 9 மணிக்கு முன்பு எந்த பள்ளியும் திறக்கப்பட கூடாது.

    புதுடெல்லி:

    வடஇந்திய பகுதிகளில் கடுமையான குளிர்கால சூழல் காணப்படுகிறது. இதனால், டெல்லி, பஞ்சாப், அரியானா போன்ற மாநிலங்களில் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டு உள்ளது. டெல்லியில் கடும் குளிரான சூழலில் அனைத்து பள்ளிகளும் இன்று திறக்கப்படுகின்றன.

    இதுபற்றி டெல்லி கல்வி துறை வெளியிட்ட செய்தியில், அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகளின் மாணவர்கள் அனைவரும் இன்று (15.01.2024) முதல் அவர்களுடைய பள்ளிகளுக்கு வரவேண்டும். இதில், நர்சரி, தொடக்க பள்ளிகளும் அடங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    எனினும், கடுமையான பனிபடர்ந்த சூழலில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, காலை 9 மணிக்கு முன்பு எந்த பள்ளியும் திறக்கப்பட கூடாது. மாலை 5 மணிக்கு பின்னர் எந்த வகுப்பும் கூடாது. அடுத்த உத்தரவு வரும்வரை இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்பட வேண்டும் என அந்த உத்தரவு தெரிவிக்கின்றது.

    குளிரான சூழல் அதிகரித்து வரும் நிலையில், உத்தர பிரதேசத்தின் கவுதம புத்த நகரின் கல்வி துறை, நர்சரி முதல் 8-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் நாளை (16-ந்தேதி) வரை மூடப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    • விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய செயல்பாடுகளையும் மோசமாக பாதிப்பு.
    • பனிப்பொழிவு இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்ல வேண்டியிருந்தது.

    குளு குளு பனி பொழிவுக்கு பெயர்போன காஷ்மீரில், இந்த குளிர்காலத்தில் பள்ளத்தாக்கு உள்பட எங்கும் பனிப்பொழிவு இல்லாதது சுற்றுலா பயணிகளை ஏமாற்றம் அடையச் செய்தது. இதனால், பயணிகள் சோகத்துடன் வீடு திரும்பினர்.

    சுற்றுலா மட்டுமல்லாமல், பனி சார்ந்த செயல்பாடுகளும் குறிப்பாக, விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய செயல்பாடுகளையும் மோசமாக பாதித்துள்ளது.

    புத்தாண்டு தினத்தன்று குல்மார்க் பகுதியில் பனிச்சறுக்கு மற்றும் பிற பனி தொடர்பான செயல்பாடுகளை அனுபவிக்கும் நம்பிக்கையில் இங்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்தனர். ஆனால், பனிப்பொழிவு இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்ல வேண்டியிருந்தது.

    இதுகுறித்து டெல்லியை சேர்ந்த பங்கஜ் சிங் என்பவர் கூறுகையில்"குல்மார்க்கில் பனியை ரசிப்பதற்காக ஜனவரி 3 முதல் ஜனவரி 9 வரை ஏழு நாள் பேக்கேஜை முன்பதிவு செய்து வந்தோம். ஆனால் இங்கு பனி இல்லை. பெரும்பாலான இடங்களில் வெள்ளை நிலப்பரப்பை நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால் அது வடக்கின் மற்ற பகுதிகளைப் போல பழுப்பு நிறத்தில் இருந்தது. " என்று ஏமாற்றத்துடன் கூறினார்.

    • சுற்றுலா பயணிகள் இல்லாமல் ஏற்காட்டின் அனைத்து சுற்றுலா தளங்களும் வெறிச்சோடி காணப்படுகிறது.
    • புறநகர் பகுதிகளான எடப்பாடி, தலைவாசல், தம்மம்பட்டி, கரியகோவில் உள்பட பல பகுதிகளில் மழை பெய்தது.

    சேலம்:

    ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டிற்கு சேலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும், கர்நாடகா, ஆந்திர மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

    இதற்கிடையே கடந்த சில மாதங்களாக ஏற்காட்டில் பெய்த தொடர் மழையால் ஏற்காடு மலைப்பாதையில் எங்கு பார்த்தாலும் பச்சை பசேலென காட்சி அளிக்கிறது. இதனால் அங்கு கடும் குளிர் நிலவி வருகிறது.

    இந்த நிலையில் ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக பனி பொழிவு அதிகமாக உள்ளது. இதனால் மேலும் குளிர் வாட்டி வதைத்து வருகிறது. இதற்கிடையே நேற்று முன்தினம் மாலை தொடங்கிய சாரல் மழை தொடர்ந்து இன்று காலை வரை பெய்து வருகிறது.

    40 மணி நேரத்திற்கும் மேலாக ஏற்காட்டில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால் கடும் குளிர் நிலவி வருகிறது. ஏற்கனவே பனி பொழிவும் அதிகரித்துள்ளதால் பொது மக்கள் வீட்டில் முடங்கி உள்ளனர். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி உள்ளது. மேலும் சுற்றுலா பயணிகள் இல்லாமல் ஏற்காட்டின் அனைத்து சுற்றுலா தளங்களும் வெறிச்சோடி காணப்படுகிறது.

    ஏற்காட்டில் தொடர்ந்து பனி மற்றும் மழை பெய்து வருவதால் காபி கொட்டைகளை காய வைக்க முடியாத சூழல் உள்ளது.

    இதே போல மாவட்டத்தின் புறநகர் பகுதிகளான எடப்பாடி, தலைவாசல், தம்மம்பட்டி, கரியகோவில் உள்பட பல பகுதிகளில் மழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. சேலம் மாநகரில் இன்று காலையும் சாரல் மழை பெய்தது. இதனால் பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்களுக்கு செல்வோர் அவதிப்பட்டனர்.

    மாவட்டத்தில் அதிக பட்சமாக ஏற்காட்டில் 22.8 மி.மீ. மழை பெய்துள்ளது . எடப்பாடி 16, தலைவாசல் 15, தம்மம்பட்டி 12, கரியகோவில் 12, ஆனைமடுவு 6, சங்ககிரி 2.2, ஆத்தூர் 1, ஓமலூர் 1 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 88 மி.மீ. மழை பெய்துள்ளது.

    • டெல்லியில் கடும் குளிர் வாட்டி வதைப்பதால் பனிமூட்டம் நீடிக்கிறது.
    • இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 11 விமானங்கள் தரையிறங்க தாமதம் ஆனது.

    புதுடெல்லி:

    தலைந்கர் டெல்லியில் உள்பட வடமாநிலங்களில் கடும் பனி மூட்டம் நிலவுகிறது. கடும் பனிமூட்டத்தால் விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமாக நிலையில் உள்ளது என காற்றின் தரம் குறித்த ஆராய்ச்சி அமைப்பு தெரிவிக்கிறது.

    பனிப்பொழிவு காரணமாக டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் 11 சர்வதேச விமானங்களும், 3 உள்ளூர் விமானங்களும் தரையிறங்குவதில் தாமதம் ஆனது.

    பனிமூட்டம் காரணமாக பல விமானங்கள் திருப்பிவிடப்பட்டும் வருகின்றன.

    மேயர் மகேஷ் திறந்து வைத்தார்

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் நகரில் கடந்த 17 ஆண்டுகளாக நாஞ்சில் பொழுதுபோக்கு பொருட்காட்சி நிறுவனம் உலக அதிசயங்கள் மற்றும் பல்வேறு அதிசயங்களை தத்ரூபமாக வடிவமைத்து, குமரி மாவட்ட மக்களை அதிசயிக்க வைத்து வருகிறது.

    இந்த நிறுவனம் 18-வது ஆண்டாக இந்த ஆண்டு "பனி உலகம் (ஸ்னோவேர்ல்டு)-ஆஸ்திரேலிய பறவைகள்" என்ற பெயரிலான பொழுது போக்கு பொருட்காட்சியை, நாகர்கோவில் இந்து கல்லூரி அருகில் உள்ள மாநகராட்சி பொருட்காட்சி திடலில் அமைத்துள்ளது.

    பனிமலைக்கு சென்று வந்ததை நினைவுபடுத்தும் வகையில் பனிக்கட்டிகளால் ஆன மலையை உருவாக்கியும், ஆஸ்திரேலியாவில் உள்ள பறவைகள், விலங்குகளை தத்ரூபமாக வடிவமைத்தும் காட்சிப்படுத்தியுள்ளனர்.

    இந்த பொருட்காட்சியின் திறப்பு விழா நேற்று மாலை நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினராக நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், ஆணையர் ஆனந்த் மோகன் ஆகியோர் கலந்துகொண்டு பொருட்காட்சியை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.

    பின்னர் அவர்கள் பொருட்காட்சி திடலில் அமைக்கப்பட்டு இருந்த ஜில்லென்ற பனிமலை, ஆஸ்திரேலிய பறவைகள் மற்றும் விலங்குகளை பார்வையிட்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மண்டல தலைவர்கள் முத்துராமன், ஜவகர், அகஸ்டீனா கோகிலவாணி, கவுன்சிலர்கள் ராணி, ரமேஷ், ஸ்ரீலிஜா மற்றும் கவுன்சிலர்கள், மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்த், வக்கீல் சதாசிவன், நாஞ்சில் பொழுதுபோக்கு பொருட்காட்சி நிறுவனத்தை சேர்ந்த ஏ.பாரூக் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    பின்னர் நாஞ்சில் பொழுதுபோக்கு பொருட் காட்சி நிறுவன பாரூக் கூறியதாவது:-

    மக்களின் பேராதரவை பெற்ற ராட்டினங்களுடன் கூடிய "ஸ்னோ வேர்ல்டு-ஆஸ்திரேலிய பறவைகள்" பொருட்காட்சி 20-ந்தேதி தொடங்கி வருகிற ஜூன் மாதம் 4-ந்தேதி வரை தினமும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை நடை பெறும். இந்த பொருட் காட்சியில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தேவையான பொருட்கள், சமையலறை சாதனங்கள், சிறுவர்க ளுக்கான விளை யாட்டுப்பொருட்கள், வீட்டு உபயோகப்பொருட்கள், பெண்களுக்கு தேவையான அழகு சாதனப்பொருட்கள், நாற்காலி, ஷோபா கம் பெட்டுகள், டிரஸ்சிங் டேபிள், பெட்ஷீட்டுகள், தரைவிரிப்புகள், நிலம் மற்றும் வீட்டு வசதி நிறுவனங்கள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள், கல்வி சார்ந்த நிறுவனங்கள் இந்த பொருட்காட்சியில் அரங்கு கள் அமைத்துள்ளன.

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் நாவிற்கு சுவையான பாப்கார்ன், பஞ்சுமிட்டாய், சோலாப்பூரி, பானிபூரி, டெல்லி அப்பளம், ஊட்டி மிளகாய் பஜ்ஜி, ஐஸ் கிரீம், குளிர்பானங்கள், டீ-காபி, மதுரை பேமஸ் ஜிகர்தண்டா உள்ளிட்ட சிற்றுண்டி கடைகளும் இடம் பெற்றுள்ளன.

    குடும்பத்தோடு விளையாடி மகிழ ஜெயிண்ட் வீல், கொலம்பஸ், பிரேக் டான்ஸ், கோஸ்டர், பேன்சி கார்கள், மினி ரெயில், ஹெலிகாப்டர் மற்றும் பல விளையாட்டுகள் இடம்பெற்றுள்ளது. இரவை பகலாக்கும் மின்ஒளியில் நடைபெறும் இந்த பொருட்காட்சி கோடை கால விடுமுறை முழுவதும் குடும்பத்தோடு கொண்டாடி மகிழ்ந்திடும் வகையில் அமையும் என்பதில் சந்தேகமில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • கடும் பனிப்பொழிவு நிலவியதால் வாகன ஓட்டிகள் அவதி.
    • சம்பா நெற்பயிர்களில் புகையான் தாக்கம் ஏற்பட வாய்ப்பு இருக்கும்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, பூம்புகார், திருவெண்காடு, கொள்ளிடம் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்யாமல் வெயில் அடித்தது. ஆனால் இரவில் பனிப்பொழிவு நிலவி வருகிறது. காலை 8 மணி வரையும் பனிப்பொழிவு நிலவி வருகிறது.

    இதனால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு செல்கின்றனர்.

    பனிப்பொழிவு காரணமளாக நடைபயிற்சி செய்பவர்கள், கடைவீதிக்கு பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் குறைந்த அளவே காணப்பட்டனர். சீர்காழி சுற்றுவட்டாரப் பகுதிகளில் முழுவதுமாக கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் சம்பா நெற்பயிர்களில் புகையான் தாக்கம் ஏற்பட வாய்ப்பு அதிகமாக இருக்கும் என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    • டெல்லியில் 3 டிகிரி செல்சியஸ் அளவுக்கு கடும் குளிர் வாட்டி வதைக்கும் நிலையில், 4 நாட்கள் அடர் பனி மூட்டம் நீடிக்கும்.
    • டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று சுமார் 100 விமானங்கள் தரையிறங்குவதில் தாமதம் ஆனது.

    டெல்லி, உத்தரபிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட வட மாநிலங்களில் வழக்கத்திற்கு மாறாக கடும் பனி மூட்டம் நிலவுகிறது.

    டெல்லியில் 3 டிகிரி செல்சியஸ் அளவுக்கு கடும் குளிர் வாட்டி வதைக்கும் நிலையில், 4 நாட்கள் அடர் பனி மூட்டம் நீடிக்கும் என இந்திய வானிலை மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. அடர் பனி மூட்டத்தால் ரெயில், விமான போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

    பனிப்பொழிவு காரணமாக டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று சுமார் 100 விமானங்கள் தரையிறங்குவதில் தாமதம் ஆனது.

    மேலும் இரவு 11.45 மணிக்கு ஒரு ஸ்பைஸ் ஜெட் விமானம் மற்றும் அதிகாலை 2.15 மணிக்கு ஒரு இண்டிகோ விமானம் ஆகிய 2 விமானங்கள் ஜெய்ப்பூருக்கு திருப்பிவிடப்பட்டன. இந்த சீசனில் மூடு பனி காரணமாக விமானங்கள் திருப்பிவிடப்படுவது இது முதல் முறையாகும்.

    இதுதொடர்பாக அதிகாரி ஒருவர் கூறுகையில், விமானங்கள் திட்டமிடப்பட்ட நேரத்தில் வருவது அல்லது புறப்படும் நேரத்தில் இருந்து 15 நிமிடங்களுக்கு மேல் மாற்றம் ஏற்பட்டால் அது தாமதம் என வகைப்படுத்தப்படும் என்றார்.

    ×