search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kolkata"

    • கவர்னர் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக அப்பெண் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
    • இந்த சம்பவம் மேற்கு வங்கத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.மம்தா பானர்ஜி மத்திய அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறார்.

    மேற்கு வங்கத்தில் கவர்னராக இருப்பவர் ஆனந்த் போஸ். மாநில அரசுக்கும் கவர்னருக்கும் இடையே மோதல் இருந்து வருகிறது.



    இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரசாரத்திற்காக தற்போது மேற்கு வங்கம் வந்துள்ளார். அவர் இரவில் ராஜ்பவனில் தங்க உள்ளார். இந்நிலையில் தற்போது திடீர் திருப்பமாக ராஜ்பவனில் பணியாற்றும் தற்காலிக பெண் ஊழியர் ஒருவர், கவர்னர் மீது பாலியல் புகார் கொடுத்துள்ளார்.

    அங்குள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் அவர் புகார் கொடுத்துள்ளார். உடனே அவரை போலீசார் 'ஹரே தெரு' காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவர் எழுத்துப்பூர்வமாக கவர்னர் மீது புகார் கொடுத்தார்.




    அதில் தன்னை கவர்னர் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக அப்பெண் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த சம்பவம் மேற்கு வங்கத்தில் தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில் பிரதமர் மோடி 2 நாள் பிரசார பயணத்திற்கு வந்துள்ளதால் தற்போது இது தொடர்பாக விசாரணை செய்ய வரும் போலீசாரை ராஜ் பவனுக்குள் நுழைய கவர்னர் தடை விதித்து உள்ளார்.

    • மும்பை - தமிழ்நாடு அணிகளுக்கு இடையே நடந்த ரஞ்சி கோப்பை அரையிறுதி போட்டியில் ஷ்ரேயாஸ் விளையாடினார்
    • அப்போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் அவர் 95 ரன்கள் எடுத்தார்

    இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடைபெற்ற 2-வது தேசிய போட்டியின் போது முதுகு வலி ஏற்பட்டதாக ஷ்ரேயாஸ் ஐயர் தொடரின் மீதமுள்ள 3 போட்டிகளில் இருந்து விலகினார்.

    பின்னர், மும்பை - தமிழ்நாடு அணிகளுக்கு இடையே நடந்த ரஞ்சி கோப்பை அரையிறுதி போட்டியில் ஷ்ரேயாஸ் விளையாடினார். அப்போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் அவர் 95 ரன்கள் எடுத்தார்.

    அதன் பிறகு, ரஞ்சி கோப்பை இறுதி போட்டியில் மும்பை - விதர்பா அணிகள் மோதின. அப்போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றது.

    அப்போட்டியின் 4 மற்றும் 5-ம் நாட்களில், முதுகு வலி காரணமாக ஷ்ரேயாஸ் விளையாடவில்லை. முதுகு வலி காரணமாக கடந்த ஆண்டு அவர் அறுவை சிகிக்சை செய்திருந்தார்.

    இந்நிலையில், முதுகு வலி காரணமாக வரும் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் கேப்டன் ஷ்ரேயஸ், முதல் சில போட்டிகளில் விளையாடுவது சந்தேகம் என்று கூறப்படுகிறது. இது கொல்கத்தா அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

    ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் வரும் மார்ச் 22-ம் தேதி தொடங்கவுள்ளது. இத்தொடருக்கான முதல் இரண்டு வாரங்களுக்கான போட்டி அட்டவணையை பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

    • அமலாக்கத்துறை அதிகாரிகள் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள, அமலாக்கத் துறையின் செயல் இயக்குநர் கொல்கத்தா விரைந்தார்.
    • மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த போசை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.

    ரேஷன் விநியோக ஊழல் வழக்கு தொடர்பாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும், வடக்கு 24 பர்கான்ஸ் மாவட்டத்தில் உள்ள பங்கான் நகராட்சியின் முன்னாள் தலைவருமான சங்கர் ஆதியாவிடம் விசாரணை நடத்த கடந்த 5ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்றனர். அப்போது, அவர்கள் சென்ற வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 3 அதிகாரிகள் காயமடைந்தனர்.

    இந்நிலையில், இந்த தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள அமலாக்கத்துறை செயல் இயக்குநர் ராகுல் நவீன் கொல்கத்தா விரைந்துள்ளார். நள்ளிரவில் கொல்கத்தா விரைந்த ராகுல் ரவீன் -க்கு துணை ராணுவ படை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை அதிகாரிகள் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்வதற்காக கொல்கத்தா சென்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், அமலாக்கத்துறையின் விசாரணையில் உள்ள இதர வழக்குகளையும் விசாரிப்பார் என கூறப்படுகிறது.

    அதனைத்தொடர்ந்து, தாக்குதலால் காயமடைந்த அமலாக்கத்துறை அதிகாரிகளை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க உள்ளார். மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த போசை சந்திக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    • மதுரையில் இருந்து கொல்கத்தாவிற்கு கதிசக்தி ரெயில் சேவை தென்மண்டல தபால்துறை ஏற்பாடு செய்துள்ளது.
    • 35கிலோவுக்கு மேல் உள்ள பார்சல்களை தபால்துறை மூலம் அனுப்பி வைக்கலாம்.

    மதுரை, பிப்.22-

    மதுரை தென்மண்டல தபால்துறை சார்பில் மதுரையில் இருந்து கொல்கத்தாவிற்கு கதிசக்தி பார்சல் ரெயில் இயக்கப்பட உள்ளது.

    மதுரை கோட்ட ரெயில்வே நிர்வாகம் மற்றும் தென்மண்டல தபால்துறைத்தலைவர் சார்பில் கதிசக்தி பார்சல் ரெயில் திட்டம் கடந்த மாதம் அறிமுகப்ப டுத்தப்பட்டது.

    இந்த திட்டத்தின் படி, வணிகர்களின் இருப்பிடத்திற்கே சென்று தபால்துறையினர் பார்சல்களை பெற்று அதனை ரெயில் மூலம் அனுப்பி வைத்து, அங்கிருந்து சம்பந்தப்பட்ட நிறுவனம் அல்லது அலுவலகத்திற்கு கொண்டு சேர்ப்பர். இதற்காக கையாளும் கட்டணம் மற்றும் பார்சல் கட்டணம் வசூலிக்கப்படும்.

    ரெயில்வேயில் முதல் முறையாக ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு ஒரு கிலோ எடை கொண்ட பார்ச லுக்கான கட்டணம் என்ற அடிப்படையில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் படி, மதுரை-சென்னை தேஜஸ் ரெயிலில் தபால்துறை மூலம் பார்சல் அனுப்பி வைக்கப்பட்டது. இந்திய ரெயில்வேயில் 15 பகுதிகளில் இருந்து தபால்துறையுடன் இணைந்து இந்த ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே கடந்த வியாழக்கிழமை மேலும் 4 இடங்களில் இருந்து இந்த பார்சல் ரெயில் இயக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, தென்னக ரெயில்வேயில் முற்றிலும் பார்சல் பெட்டிகளை கொண்ட கதிசக்தி பார்சல் ரெயில் மதுரை கூடல்நகர் ரெயில் நிலையத்தில் இருந்து இன்று (புதன்கிழமை) இயக்கப்பட உள்ளது.

    இந்த ரெயில் மதுரையில் இருந்து திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், தாம்பரம், கூடூர், விஜயவாடா வழியாக கொல்கத்தாவில் உள்ள ஹவுரா ரெயில் நிலையம் வரை செல்கிறது. மற்ற சரக்கு ரெயில்களை போல இல்லாமல், கதிசக்தி ரெயில் விரைவில் பார்சல்களை டெலிவரி செய்யும் வகையில் தடையற்ற ரெயில் போக்குவரத்துக்கு ரெயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

    இந்த ரெயில் வாரந்தோறும் இயக்கப்பட உள்ளது. இதில் 35கிலோவுக்கு மேல் உள்ள பார்சல்களை தபால்துறை மூலம் அனுப்பி வைக்கலாம். ரெயிலில் அனுப்பப்படும் பார்சல்களுக்கு காப்பீடு வசதியும் உள்ளது. மதுரை சுற்றுவட்டாரத்தை சேர்ந்த சிறு, குறுந்தொழில் முனைவோர், விவசாயிகள், வணிகர்களுக்கு இந்த ரெயில் வசதியாக இருக்கும்.

    இதற்கான ஏற்பாடுகளை தென்மண்டல தபால் துறைத்தலைவர் ஜெய்சங்கர் தலைமையில் ரெயில்வே தபால்சேவை கண்கா ணிப்பாளர் ஜவகர் உள்ளிட்ட தபால்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

    மேற்கு வங்கத்தில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் நாளை மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
    கொல்கத்தா:

    பாராளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. கடைசி கட்ட தேர்தல் மே 19-ம் தேதி நடந்தது. இதில், மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா உத்தர் பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்ட 200ம் எண் வாக்குச்சாவடியில் நடந்த வாக்குப்பதிவு செல்லாது என தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.



    மேலும் இந்த வாக்குச்சாவடியில் நாளை மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
    மேற்கு வங்காள முதல்- மந்திரி மம்தா பானர்ஜியை சந்திப்பதற்காக நடிகர் கமல்ஹாசன் கொல்கத்தா புறப்பட்டு சென்றார். #MamataBanerjee #LSPolls #KamalHaasan

    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் மேற்கு வங்காள முதல்- மந்திரி மம்தா பானர்ஜியை சந்திப்பதற்காக இன்று காலை கொல்கத்தாவுக்கு புறப்பட்டு சென்றார். இன்று அவர் மம்தா பானர்ஜியை சந்தித்து பேசுகிறார். அதன்பிறகு உடனே சென்னைக்கு திரும்புவார் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    மம்தா பானர்ஜியை கமல் சந்திப்பது இது 3வது முறை. முதல் முறை சந்தித்தபோது தன்னை கார் வரை வந்து வழியனுப்பி வைத்த அரசியல் தலைவர் என்று புகழ்ந்து இருந்தார்.


    அடுத்து கட்சி தொடங்காமல் அ.தி.மு.க. அரசை விமர்சித்து வந்த போது 2017-ம் ஆண்டு நவம்பர் 10-ந்தேதி சந்தித்தார். தற்போது பாராளுமன்ற தேர்தல் சமயத்தில் மம்தாவை கமல் சந்திப்பது பரபரப்பாகி உள்ளது. #MamataBanerjee #LSPolls #KamalHaasan

    கொல்கத்தாவில் துணிக்கடை கட்டிடத்தின் தரை தளத்தில் தீப்பிடித்தது. கொழுந்துவிட்டு எரிந்த தீ அடுத்தடுத்த மாடிகளுக்கு மளமளவென பரவியது. #Kolkata #Building #FireAccident
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளத்தின் தலைநகர் கொல்கத்தாவின் தெற்கு பகுதியில் உள்ள கரியாஹட் என்ற இடத்தில் 5 மாடிக்கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த கட்டிடத்தின் தரை தளம் மற்றும் முதல் தளத்தில் துணிக்கடை ஒன்றின் குடோன் உள்ளது. மற்ற தளங்களில் குடியிருப்புகள் உள்ளன.

    இந்த நிலையில், நேற்று அதிகாலை 1 மணியளவில் திடீரென இந்த கட்டிடத்தின் தரை தளத்தில் தீப்பிடித்தது. கொழுந்துவிட்டு எரிந்த தீ அடுத்தடுத்த மாடிகளுக்கு மளமளவென பரவியது. இதனால் பதறிப்போன மக்கள் அலறி அடித்துக்கொண்டு வீடுகளை விட்டு வெளியேறினர்.

    இதையடுத்து, இது பற்றி தீ அணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 20-க்கும் மேற்பட்ட வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    அதிர்ஷ்டவசமாக இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அதே சமயம் துணி குடோனில் இருந்த லட்சக்கணக்கிலான மதிப்புடைய சரக்குகள் தீக்கிரையாகின. தீ விபத்து எப்படி நேரிட்டது என்பது குறித்து தெரியவில்லை. இது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.  #Kolkata #Building #FireAccident
    கொல்கத்தாவில் இன்று மம்தா பானர்ஜி தலைமையில் பிரமாண்ட பொதுக்கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், நாடு முழுவதிலும் இருந்து எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். #MamataBanerjee #Megarally
    கொல்கத்தா:

    பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. காங்கிரஸ் தலைமையில் மத்தியில் வலுவான கூட்டணி அமைக்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவிடம் இருந்து ஆட்சியை தட்டிப்பறித்த காங்கிரஸ், அதே போன்று பாராளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையுடன் உள்ளது.

    என்றாலும் பெரும்பாலான மாநிலங்களில் மாநில கட்சிகளே மிகுந்த செல்வாக்குடன் இருப்பதால், அத்தகைய மாநில கட்சிகளை ஒருங்கிணைத்து மெகா கூட்டணியை உருவாக்க காங்கிரஸ் முயற்சி செய்தது. ஆனால் காங்கிரஸ் தலைமையின் கீழ் மாநில கட்சிகள் ஒருங்கிணையும் திட்டத்தை பெரும்பாலான மாநில கட்சிகள் ஏற்கவில்லை.

    பா.ஜனதா கூட்டணியில் இருந்து விலகி, பா.ஜனதாவை வீழ்த்தியே தீர வேண்டும் என்ற கோபத்தில் இருக்கும் ஆந்திர முதல்-மந்திரி சந்திர பாபு நாயுடுவும் மெகா கூட்டணியை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டார். அதேசமயம் பாஜக, காங்கிரஸ் அல்லாத கூட்டணி அமைக்க தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் முயற்சி செய்து வருகிறார்.

    இந்த சூழ்நிலையில் பா. ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டும் முயற்சியில் மேற்கு வங்க முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி களத்தில் தீவிரமாக இறங்கியுள்ளார். மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் பா.ஜனதாவை எதிர்க்கும் கட்சித் தலைவர்களின் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெறும் என்று அறிவித்தார்.  இதற்காக நாடு முழுவதும் 25-க்கும் மேற்பட்ட கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தார். இதனை ஏற்று பல்வேறு தலைவர்கள் கொல்கத்தா வந்துள்ளனர்.


    அதன்படி, கொல்கத்தாவில் உள்ள பிரிகேட் பரேட் மைதானத்தில் இன்று மதியம் பிரமாண்ட பொதுக்கூட்டம் தொடங்கியது. மம்தா தலைமையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் சரத் பவார், தேவேகவுடா,  மல்லிகார்ஜூன கார்கே, சந்திரபாபு நாயுடு,  குமாரசாமி,  அரவிந்த் கெஜ்ரிவால்,  பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா,  மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

    பா.ஜனதா அதிருப்தி தலைவர்கள் யஷ்வந்த் சின்கா, சத்ருகன் சின்கா, அருண்ஷோரி, ராம்ஜெத் மலானி ஆகியோரும் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

    தலைவர்கள் பேசுவதற்காக பிரம்மாண்டமான மேடை அமைக்கப்பட்டுள்ளது. தொண்டர்கள் அனைவருக்கும் பொதுக்கூட்ட நிகழ்ச்சிகள் சென்று சேரும் வகையில் ஆங்காங்கே எல்.இ.டி தொலைக்காட்சித் திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணிகளுக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


    இன்றைய கூட்டத்தில் பங்கேற்றுள்ள அனைத்து தலைவர்களுக்கும் பேச வாய்ப்பு வழங்கப்படும்.  இதைத் தொடர்ந்து தலைவர்கள் சில முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றுவார்கள் என்று தெரிகிறது. இது தவிர எதிர்க்கட்சி தலைவர்கள் தங்களுக்குள் பேசி ஒருமித்த கருத்துக்கு வர உள்ளனர்.  இன்றைய கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளில் ஒருமித்த கருத்து உருவாகாவிட்டால் பாஜகவுக்கு எதிரான மெகா கூட்டணி என்பது கைகூடாமல் போக வாய்ப்புள்ளது. ஆனால் இந்த வாய்ப்பை நழுவ விடக்கூடாது என்பதில் மம்தா பானர்ஜி தீவிரமாக உள்ளார். #MamataBanerjee #Megarally
    கொல்கத்தா விமானத்தை கடத்தி தகர்க்க போவதாக மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். #PlaneHijackThreat

    கொல்கத்தா:

    கொல்கத்தா நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையத்தில் இருந்து மும்பைக்கு இன்று காலை 8.15 மணிக்கு ஜெட் ஏர்வேஸ் பயணிகள் விமானம் புறப்பட தயாராக இருந்தது. விமானத்தில் பயணிகள் அனைவரும் அமர்ந்து இருந்தனர்.

    அப்போது இருக்கையில் அமர்ந்து இருந்த வாலிபர் ஒருவர் செல்போனில் பேசினார். நடுவானில் பறக்கும் போது இந்த விமானத்தை கடத்தி தகர்க்க போவதாகவும், பயணிகள் அனைவரையும் கொல்ல போவதாகவும் மிரட்டல் விடுத்தார்.

    இதை அவர் அருகில் இருக்கையில் அமர்ந்திருந்த மற்ற பயணிகள் கேட்டனர். அந்த வாலிபர் தனது முகத்தை துணியால் மறைத்து கட்டி இருந்தார்.

    இதனால் அவர் பயங்கரவாதியாக இருக்கலாம் என கருதிய பயணிகள் விமானியிடமும், ஊழியர்களிடமும் தெரிவித்தனர். அவர்கள் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கூறினர்.

    இதையடுத்து அங்கு விரைந்து வந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அந்த வாலிபரை கைது செய்தனர். விசாரணையில் அவரது பெயர் ஜெ பொத்தார் என தெரிய வந்தது. அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். இச்சம்பவத்தால் கொல்கத்தா விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. #PlaneHijackThreat

    வங்கிக்கடன் மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் மெகுல் சோக்சியின் கூட்டாளி தீபக் குல்கரினியை கொல்கத்தா விமான நிலையத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று கைது செய்தனர். #MehulChoksi #DeepakKulkarni #ED
    கொல்கத்தா:

    பஞ்சாப் நேசனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன்மோசடி விவகாரம் தொடர்பாக வைர வணிகர்கள் நீரவ் மோடி, மெகுல்சோக்சி உள்ளிட்டோரை, சிபிஐ மற்றும் அமலாக்கப் பிரிவினர் தேடி வருகின்றனர்.

    அவர்கள் இருவரும் வெளிநாடு தப்பிச் சென்று தலைமறைவாக உள்ளனர். இந்நிலையில், ஹாங்காங்கில் இருந்து கொல்கத்தா விமான நிலையத்திற்கு வந்து இறங்கிய, மெகுல்சோக்சியின் கூட்டாளியான தீபக் குல்கர்னியை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.



    பஞ்சாப் நேசனல் வங்கி கடன்மோசடி வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்த இவர், ஹாங்காங்கில் உள்ள மெகுல்சோக்சியின் போலி நிறுவனத்தின் இயக்குநராக செயல்படுகிறார்.

    முன்னதாக இவர் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை லுக் அவுட் நோட்டீஸ் அளித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்ட தீபக் குல்கர்னியிடம் அமலாக்கத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். #MehulChoksi #DeepakKulkarni #ED
    கொல்கத்தாவில் ரெயில் தண்டவாளத்தில் வெடிகுண்டு இருப்பதாக பரவிய புரளியால் மின்சார ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் சுமார் 1 மணி நேரம் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. #Kolkata #Bomb
    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநில தலைநகர் கொல்கத்தாவில் சீல்டா என்கிற பகுதியில் இருந்து பல்வேறு இடங்களுக்கு மின்சார ரெயில் இயக்கப்படுகிறது. இந்த நிலையில், நேற்று காலை சீல்டா மற்றும் பூங்கா சர்க்கஸ் ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் சந்தேகத்திற்கிடமான பொருள் ஒன்று கிடப்பதை ரெயில்வே ஊழியர் கண்டார்.

    உடனே இது குறித்து அவர் மேல் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். இதற்கிடையில் தண்டவாளத்தில் கிடப்பது வெடிகுண்டு என வேகமாக தகவல்கள் பரவின. இதனால் மின்சார ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. சுமார் 1 மணி நேரம் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதையடுத்து, ரெயில்வே பாதுகாப்புபடை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் தண்டவாளத்தில் கிடந்த பொருளை ஆய்வு செய்தபோது அது வெடிகுண்டு அல்ல என்பதும், யாரோ வேண்டுமென்றே புரளி கிளப்பியதும் தெரியவந்தது.

    அதனை தொடர்ந்து ரெயில்வே பாதுகாப்புபடை வீரர்கள் தண்டவாளத்தில் கிடந்த பொருளை அப்புறப்படுத்தியதும், ரெயில் போக்குவரத்து சீரானது. இந்த சம்பவம் தொடர்பாக ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 
    இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் இன்று கோலாகலமாக துவங்கிய நிலையில், முதல்நாளான இன்று கேரள அணி கொல்கத்தாவை 2-க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் வீழ்த்தியுள்ளது. #ISL2018 #ATKvKBFC
    கொல்கத்தா:

    இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி தொடர் 2014-ம் ஆண்டு முதல் இந்தியாவில் நடந்து வருகிறது. அறிமுக ஆண்டில் அட்லெடிகோ டி கொல்கத்தா அணியும், 2015-ம் ஆண்டில் சென்னையின் எப்.சி.அணியும், 2016-ம் ஆண்டில் அட்லெடிகோ டி கொல்கத்தா அணியும், கடந்த ஆண்டில் (2017) சென்னையின் எப்.சி. அணியும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றின. இந்த நிலையில் 5-வது ஐ.எஸ்.எல். கால்பந்து திருவிழா இன்று தொடங்கியது.

    சென்னை எப்.சி உட்பட 10 அணிகள் பங்கேற்கும் இந்த முதல் ஆட்டத்தில் கேரளாவும், கொல்கத்தாவும் மோதுகின்றன. முதல் ஆட்டத்தின் முதல்பாதி சுற்று முடிவடைந்த நிலையில், இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.

    இடைவெளி முடிந்து மீண்டும் துவங்கியஆட்டத்தில் அதிரடியாக விளையாடிய கேரள அணி 2 கோல்களை அடித்தது. நேரம் முடிவடைய இருந்த சூழலில் கோல் எதுவும் அடிக்க முடியாமல் கொல்கத்தா திணற, 2-0 என்ற கோல் கணக்கில் கேரள அணி வெற்றி பெற்றுள்ளது.

    நாளை பெங்களுரு எப்.சி மற்றும் சென்னை எப்.சி ஆகிய அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற உள்ளது. #ISL2018 #ATKvKBFC
    ×