என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Threatenமறியல்"

    • ஜனநாயக உரிமைக்காக போராடுவதால் அவருக்கு இந்த நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
    • பரிசு வழங்கும் விழா ஆஸ்திரிய தலைநகர் ஒஸ்லோவில் அடுத்த மாதம் 10-ந்தேதி நடக்கிறது.

    2025-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    ஜனநாயக உரிமைக்காக போராடுவதால் அவருக்கு இந்த நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. பரிசு வழங்கும் விழா ஆஸ்திரிய தலைநகர் ஒஸ்லோவில் அடுத்த மாதம் 10-ந்தேதி நடக்கிறது.

    இந்தநிலையில் நோபல் பரிசை பெற மரியா நாட்டைவிட்டு சென்றால் அவர் தப்பியோடியவராக அறிவிக்கப்படுவார் என்று வெனிசுலா அரசு தெரிவித்து உள்ளது.

    இதுதொடர்பாக வெனிசுலாவின் அட்டர்னி ஜெனரல் தாரெக் வில்லியம் சாப் கூறும்போது, மரியா கொரினா மீது குற்றவியல் விசாரணைகள் உள்ளன. எனவே அவர் வெனிசுலாவில் இருந்து வெளியே சென்றால் தப்பி ஓடியவராகக் கருதப்படுவார் என்றார்.

    • தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
    • கொலை வழக்கில் தொடர்புடையதாக 11 பேரை போலீசார் கைது செய்தனர்.

    கோவை:

    கோவை கோவில்பாளையத்தை சேர்ந்தவர் கோகுல்(23). இவர் கடந்த 13-ந்தேதி கோவை கோர்ட்டு அருகே 5 பேர் கும்பலால் வெட்டி கொல்லப்பட்டார்.

    மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் இந்த சம்பவத்தை அரங்கேற்றியதோடு மட்டுமல்லாமல், கையில் ஆயுதங்களுடன் அவர்கள் சாவகாசமாக நடந்து சென்றது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், துணை கமிஷனர் சந்தீஷ் ஆகியோர் கொலையாளிகளை பிடிக்க 8 தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் இந்த கொலை வழக்கில் தொடர்புடையதாக 11 பேரை போலீசார் கைது செய்தனர்.

    தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், கடந்த 2021-ம் ஆண்டு ரத்தினபுரியை சேர்ந்த குரங்குஸ்ரீராம் என்பவர் கொலை செய்யப்பட்டார்.

    இதில் கோகுல் கைதாகி ஜெயிலில் அடைக்கப்பட்டதும், இந்த கொலைக்கு பழிவாங்கும் நோக்கிலேயே குரங்குஸ்ரீராமின் நண்பர்கள் கோகுலை கொன்றதும் தெரியவந்தது.

    கோகுல் கும்பலும், குரங்கு ஸ்ரீராம் கும்பலும் கட்டப் பஞ்சாயத்து, அடி-தடி மோதலில் அடிக்கடி ஈடுபட்டுள்ளனர்.

    இதுதவிர இவர்கள் சமூக வலைதளங்களிலும் வீடியோக்களை வெளியிட்டு அடிக்கடி மோதலில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

    குரங்குஸ்ரீராம் கொலையில் தொடங்கி கோகுல் கொலை வரை அவர்கள் சமூக வலைதள பதிவுகள் மூலம் மோதிக்கொண்டனர்.

    குரங்கு ஸ்ரீராமை கொன்றதுமே அவரது நண்பர்கள் குரங்கு ஸ்ரீராமின் கொலைக்கு பழிக்குப்பழி தீர்க்கப்படும் என்ற வாசகத்தை அடிக்கடி சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

    மேலும் ஸ்ரீராம் பிரதர்ஸ், ஸ்ரீராம் பிளட்ஸ் என்ற பெயரில் சினிமாவையே மிஞ்சும் வகையில், கையில் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சினிமா பாடல்களையும், வசனங்களையும் ஒலிக்க விட்டு நடந்தபடி வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளனர்.

    அதிலும் ஒரு பெண்ணின் கையிலும் உருட்டு கட்டையை கொடுத்து அவரின் பின்னால் 5 பேர் நடந்து வருவது போல பாடலை ஒளிபரப்பி தங்களை சினிமா வில்லன்களை போலவே காட்டி கொண்டதும் தெரியவந்தது.

    இப்படி ரவுடிகள் தங்கள் இன்ஸ்டாகிராமில் வீடியோக்கள் வெளியிடுவதை கண்டுபிடித்த போலீசார் அவர்களை களை எடுக்கும் நடவடிக்கையில் இறங்கினர்.

    யார்? யார் எல்லாம் வீடியோக்களை வெளியிட்டனர் என்பதை கண்டறிய போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், துணை கமிஷனர் சந்தீஷ் ஆகியோரின் நேரடி மேற்பார்வையில் ஒரு குழுவையும் அமைத்தனர்.

    அந்த குழுவினர் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பார்வையிட்டு அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    சோதனையின் முடிவில் இன்ஸ்டாகிராமில் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் கத்தி, அரிவாள் ஆயுதங்களுடன் வீடியோ மற்றும் வெறுப்பை தூண்டும் வகையிலும் கருத்துக்களை பதிவிட்ட 11 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

    தொடர்ந்து இது போன்று வேறு யாராவது இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவற்றில் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வீடியோக்களை பகிர்ந்துள்ளனரா? என்பது குறித்தும் போலீசார் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

    இதுபோன்ற வீடியோக்களை வெளியிட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் எச்சரித்துள்ளனர்.

    • சுப்பம்மாள் குடும்பத்திற்கும், சங்கர் என்ற சங்கரசுப்பு குடும்பத்திற்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது.
    • சப்-இன்ஸ்பெக்டர் இம்மானுவேல் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தார்.

    களக்காடு:

    நாங்குநேரி அருகே உள்ள ஸ்ரீவரமங்கைபுரம், வடக்கு தெருவை சேர்ந்தவர் சங்கரலிங்கம். இவரது மனைவி சுப்பம்மாள் (வயது 55). இவரது குடும்பத்திற்கும், துளாச்சேரி தெற்கு தெருவை சேர்ந்த சங்கர் என்ற சங்கரசுப்பு (23) என்பவரது குடும்பத்திற்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு, முன் விரோதம் இருந்து வந்தது.

    இந்நிலையில் கடந்த 22-ந் தேதி சங்கர் என்ற சங்கரசுப்பு, அருணாச்சலம் (20), குமார் (25), ஆலடிபுதூரை சேர்ந்த நயினார் (22), கும்பிளம்பாட்டை சேர்ந்த ராஜா (23), முத்துபாண்டி (24), பட்டப் பிள்ளைபுதூரை சேர்ந்த முத்துராமலிங்கம் (23) ஆகியோர் சேர்ந்து சுப்பம்மா ளின் வீட்டிற்கு சென்று அவரை அவதூறாக பேசி மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து சுப்பம்மாள் நாங்குநேரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் இம்மானுவேல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, சங்கர் என்ற சங்கரசுப்பு, முத்துராமலிங்கம் ஆகிய 2 பேரையும் கைது செய்தார். மேலும் தலைமறைவாக உள்ள 5 பேரை தேடி வருகிறார்.

    • நாராயணன் தனது தாயாருடன் மோட்டார் சைக்கிளில் சுத்தமல்லியை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
    • கண்ணனை மடக்கிப்பிடித்த போலீசார் அவரிடமிருந்து வாளை பறிமுதல் செய்தனர்.

    நெல்லை:

    நெல்லை பேட்டையை அடுத்த சுத்தமல்லி அருகே உள்ள கீழக்கல்லூர் வடக்குதெருவை சேர்ந்தவர் முத்துபாண்டி மகன் சக்தி நாராயணன்(வயது 19).

    இவர் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் தனது தாயாருடன் சுத்தமல்லியை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அவர்களுக்கு பின்னால் சேரன்மகாதேவி தேரடி தெருவை சேர்ந்த கண்ணன் என்ற காவு கண்ணன்(23) என்பவர் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

    அப்போது சக்தி நாராயணன் மோட்டார் சைக்கிளை முந்தி செல்லும் போது அவர்கள் மீது இடித்து விடுவது போல் கண்ணன் சென்றுள்ளார். இதனை சக்தி நாராயணன் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கண்ணன் தான் வைத்திருந்த வாளை எடுத்து தாய் -மகன் இருவரையும் மிரட்டியுள்ளார். இதுகுறித்து சக்திநாராயணன் சுத்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    கைது

    தகவலறிந்த சப்–இன்ஸ்பெக்டர் முத்துராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கண்ணனை மடக்கிப்பிடித்தனர். பின்னர் அவரிடமிருந்து வாளை பறிமுதல் செய்தனர். மேலும் கண்ணன் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். கைதான கண்ணன் மீது ஏற்கனவே வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், ரவுடி பட்டியலில் அவரது பெயர் உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

    • பொய் சொல்லான் மனைவியுடன் சேர்ந்து இருந்தபோது ஏராளமான சொத்துக்கள் கிரேசி பெயரில் வாங்கி கொடுத்ததாக கூறப்படுகிறது.
    • கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஒரு ஆண்டாக கிரேசியிடம் இருந்து பொய் சொல்லான் பிரிந்து உள்ளார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மட்டக்கடை பார்த்தசாரதி தெருவை சேர்ந்தவர் தொழில் அதிபர் பொய் சொல்லான் (வயது 58). பாரதிய ஜனதா நிர்வாகியான இவர் தனது 2-வது மனைவி கிரேசி (42) என்பவருடன் கடந்த 17 ஆண்டுகளாக வாழ்ந்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.

    பொய் சொல்லான் மனைவியுடன் சேர்ந்து இருந்தபோது ஏராளமான சொத்துக்கள் கிரேசி பெயரில் வாங்கி கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஒரு ஆண்டாக கிரேசியிடம் இருந்து பிரிந்து இருந்து வருகிறார்.

    இந்நிலையில் பொய் சொல்லான் அவரது முதல் மனைவியின் தூண்டுதலின் பெயரில் தன்னிடம் உள்ள சொத்துக்களை திருப்பித் தரும்படி கேட்டு, தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருவதாகவும், நேற்று 3 மர்மநபர்களுடன் வீட்டிற்கு வந்து தகராறில் ஈடுபட்டதாகவும், எனவே தனக்கு பாதுகாப்பு அளிக்கும் படி வடபாகம் போலீஸ் நிலையத்தில் கிரேசி புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த், சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜ் ஆகியோர் வழக்குப்பதிவு பொய் சொல்லானை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மர்ம வாலிபர் டிரைவர் சக்திவேலை கத்திமுனையில் மிரட்டி பணத்தை பறிக்க முயன்றார்.
    • புகாரின்பேரில் மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மீஞ்சூரை சேர்ந்த மணிகண்டன் என்பவரை கைது செய்தனர்.

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் (40). லாரி டிரைவர். இவர் மீஞ்சூர் அடுத்த நாலூர் இந்துஜா நகர் அருகே லாரியில் இருந்து பொருட்களை இறக்கி விட்டு வந்து கொண்டிருந்தார்.

    அப்போது மர்ம வாலிபர் டிரைவர் சக்திவேலை கத்திமுனையில் மிரட்டி பணத்தை பறிக்க முயன்றார்.

    இதுகுறித்த புகாரின்பேரில் மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மீஞ்சூரை சேர்ந்த மணிகண்டன் என்பவரை கைது செய்தனர்.

    • அனஸ் மைதீனும், முத்துகிருஷ்ணனும் இணையவழி குரூப் ஒன்றில் ஒருவரை ஒருவர் தாக்கி பேசி பதிவிட்டு வந்துள்ளனர்.
    • முத்துகிருஷ்ணன் மீது கூத்தாநல்லூர் போலீசில் அனஸ் மைதீன் புகார் கொடுத்தார்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் மஜ்ஜியா தெருவை சேர்ந்தவர் அனஸ் மைதீன் (வயது 52). தி.மு.க. பிரமுகர். கூத்தாநல்லூர் குனுக்கடி கிராமத்தை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன்(45). இவர், கூத்தாநல்லூர் நகராட்சி 17-வது வார்டு கவுன்சிலர் பிரவிணாவின் கணவர் ஆவார்.

    அனஸ் மைதீனும், முத்துகிருஷ்ணனும் இணையவழி குரூப் ஒன்றில் ஒருவரை ஒருவர் தாக்கி பேசி பதிவிட்டு வந்துள்ளனர். இதுகுறித்து முத்துகிருஷ்ணன் மீது கூத்தாநல்லூர் போலீசில் அனஸ் மைதீன் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    ஆனாலும் முத்துகிருஷ்ணன் தொடர்ந்து இணையவழி குரூப்பில் அனஸ் மைதீன் குறித்து பதிவிட்டு வந்ததாகவும், பதிலுக்கு அனஸ் மைதீனும் பதிவிட்டு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று முன்தினம் கூத்தாநல்லூரில் உள்ள தி.மு.க. அலுவலகத்திற்கு முத்துகிருஷ்ணன் கையில் அரிவாளுடன் சென்றுள்ளார். அப்போது அங்கு இருந்த அனஸ் மைதீனை, முத்துகிருஷ்ணன் அரிவாளை காட்டி மிரட்டியுள்ளார்.

    இதனை பார்த்த மற்ற தி.மு.க. பிரமுகர்கள் இருவரையும் சமாதானம் செய்தனர். பின்னர் முத்துகிருஷ்ணன் தனது மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து சென்று விட்டார். இதுகுறித்து கூத்தாநல்லூர் போலீசில் அனஸ் மைதீன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துகிருஷ்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தி.மு.க. பிரமுகர் கஜேந்திரன், வேலூர் தாலுகா போலீசில் புகார் அளித்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து, சென்னையில் பதுங்கி இருந்த நபரை கைது செய்தனர்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளான ஊராட்சி மன்ற தலைவர், ஒன்றிய குழு கவுன்சிலர்கள், வார்டு உறுப்பினர்களுக்கு கடந்த சில நாட்களாக சென்னை தலைமை செயலகத்தில் உள்ள முதல்வரின் தனிப்பிரிவில் பணிபுரியும் ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவக்குமார் பேசுவதாக தொடர்பு கொண்டு ஒருவர் பேசி உள்ளார்.

    அப்போது அவர், உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் உங்கள் மீது புகார்கள் வந்துள்ளது.

    நீங்கள் சென்னை வந்து என்னை சந்திக்க வேண்டும். இல்லையென்றால் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறி மிரட்டினார்.

    இது குறித்து உள்ளாட்சி பிரதிநிதிகள் போலீஸ் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர்.

    அவரது செல்போன் எண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அதுபோன்று யாரும் சென்னை தலைமை செயலகத்தில் வேலை செய்யவில்லை என்பது தெரிய வந்தது.

    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் தி.மு.க. ஒன்றிய செயலாளரும், கணியம்பாடி ஒன்றிய குழு துணைத்தலைவர் கஜேந்திரன் என்பவரையும், கடந்த 2 நாட்களுக்கு முன்பு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு சென்னை வரும்படி மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.

    இதுகுறித்து தி.மு.க. பிரமுகர் கஜேந்திரன், வேலூர் தாலுகா போலீசில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சென்னையில் பதுங்கி இருந்த நபரை கைது செய்தனர்.

    போலீசார் அவரை வேலூர் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

    அவர் சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த சுபாஷ் (வயது 29) என்பதும் இவர் போலியான செல்போன் எண் மூலம் பல பேரை மிரட்டி பணம் பறித்ததும் தெரிய வந்துள்ளது. அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கல்லூரி முதல்வரை அவதூறாக பேசியதுடன் கார் ஏற்றி கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தனர்.
    • கைது செய்யப்பட்ட பிரதீஸிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவிலில் சி.எஸ்.ஐ. பேராயத்தால் நிர்வகித்து வரும் கல்லூரி ஒன்று உள்ளது. இந்த கல்லூரியில் விநாயகர் சதுர்த்திக்கு நன்கொடை கேட்டு இந்து அமைப்பு நிர்வாகிகள் சிலர் காரில் உள்ளே சென்றனர். அப்போது அங்கிருந்தவர்களுக்கும், இந்து அமைப்பு நிர்வாகிகளுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது.

    அப்போது கல்லூரி முதல்வரை அவதூறாக பேசியதுடன் கார் ஏற்றி கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

    இந்த சம்பவம் தொடர்பாக கல்லூரி முதல்வர் பொறுப்பு சுசீலா வடசேரி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் வடசேரி போலீசார் குழித்துறை சேர்ந்த இந்து சேனா மாவட்ட தலைவர் பிரதீப் குமார் என்ற மணிகண்டன் (40), சிதறாலை சேர்ந்த பிரதீஸ் (36), பாகோடு கழுவன்திட்டையை சேர்ந்த மூர்த்தி (50) ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். இந்திய தண்டனை சட்டம் 448, 294 பி, 384, 506 (2) ஐபிசி ஆகிய 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் இவர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர்.

    இந்த நிலையில் பிரதிசை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தலைமறைவாக உள்ள மற்ற 2 பேரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.

    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலையை சீவி கொண்டு வருபவர்களுக்கு ரூ.10 கோடி பரிசு தருவதாக சாமியார் பரமகன்சா ஆச்சாரியா அறிவித்தார்.
    • சாமியார் பரமகன்சா ஆச்சாரியாவின் கொடும்பாவியை தீயிட்டு கொளுத்தினார்கள்.

    தூத்துக்குடி:

    தி.மு.க. மாநில இளைஞர் அணி செயலாளரும், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் சென்னையில் நடைபெற்ற சனாதன எதிர்ப்பு மாநாட்டில் சனாதனம் குறித்து பேசினார். இந்நிலையில், உத்தரபிரதேச சாமியார் பரமகன்சா ஆச்சாரியா, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலையை சீவி கொண்டு வருபவர்களுக்கு ரூ.10 கோடி பரிசு தருவதாக அறிவித்தார். இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன் தலைமையில் பழைய பஸ் நிலையம் அருகில் சாமியார் பரமகன்சா ஆச்சாரியா வின் கொடும்பாவியை தீயிட்டு கொளுத்தினார்கள்.

    இதில் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பா ளர்கள் பிரதீப், மகேந்திரன், ராதாகிருஷ்ணன், பாரதி, ஜோசப் அமல்ராஜ், மாநகர அமைப்பாளர் அருண்சுந்தர், துணை அமைப்பாளர்கள் சங்கரநாராயணன், சிவக்குமார் என்ற செல்வின், ரவி, முகம்மது ஜெயலாப்தீன், பிரவீன் குமார், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் சீனிவாசன், பொதுக்குழு உறுப்பினர் ராஜா, வட்ட செயலாளர்கள் கதிரேசன், பொன்ராஜ், சதீஷ்குமார், பகுதி இளைஞர் அணி அமைப்பாளா சூர்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சில வாரங்களில் எங்களது நட்பு காதலாக மாறியது.
    • எழிலரசன் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    கோவை:

    திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் 32 வயது இளம்பெண். இவர் கோவை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தார். அந்த மனுவில், நான் திருச்சியில் வசித்து வந்தேன். எனக்கு கடந்த 2020-ம் ஆண்டு திருவண்ணாமலையை சேர்ந்த எழில் அரசன் என்பவர் பேஸ்புக் மூலம் அறிமுகம் ஆனார்.

    அவர் கோவையில் வேலை பார்த்து வருவதாக தெரிவித்தார். அப்போது அவர் என்னுடன் நட்புடன் இருக்க விரும்புவதாக தெரிவித்தார். நானும் அவரது நட்பை ஏற்றுக்கொண்டேன்.

    இதையடுத்து நாங்கள் 2 பேரும் பேஸ்புக்கில் பேசி வந்தோம். சில வாரங்களில் எங்களது நட்பு காதலாக மாறியது. இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்தோம். இதையடுத்து நான் திருச்சியில் இருந்து புறப்பட்டு, கோவைக்கு வந்தேன்.

    இதையடுத்து எழிலரசனும், நானும், கோவை கணபதி அருகே லட்சுமணபுரத்தில் திருமணம் செய்யாமலேயே லிவிங் டூ கெதர் முறையில் ஒன்றாக வசித்து வந்தோம்.

    அப்போது எழிலரசன் என்னுடன் உடலுறவு கொண்டார். நானும், திருமணம் செய்து கொள்ள போகிறவர் தானே என அனுமதித்தேன்.

    ஆனால் அதன் பிறகு எழிலரசனின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டது. நான் அவரிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டேன். அதற்கு அவர் மறுத்து விட்டார்.

    மேலும் என்னை தகாத வார்த்தைகளால் பேசியதுடன், மிரட்டவும் செய்தார். எனவே என்னை திருமணம் செய்வதாக ஏமாற்றிய எழிலரசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

    புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி, இளம்பெண்ணை ஏமாற்றிய எழிலரசன் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அந்த சிறுவன் சொந்த ஊரான சங்கம்பட்டிக்கு வந்துள்ளார்.
    • 17 வயது நிரம்பிய சிறுவனை ஆறு வயது சிறுவனின் காலில் விழ வைத்து உள்ளனர்.

    மதுரை:

    மதுரை மாவட்டம் செல்லம்பட்டி அருகேயுள்ள சங்கம்பட்டி கிராமத்தில் 17 வயது பட்டியலின சிறுவன் புரட்டாசி மாதம் நடைபெற்ற திருவிழாவின்போது, இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மற்றொரு பிரிவினருக்கும் இடையே விரோதம் இருந்து வந்துள்ளது.

    அப்போது இரு பிரிவினரும் மோதிக்கொண்டனர். இதையடுத்து அந்த சிறுவன் கடந்த சில மாதங்களாக வீட்டிற்கு வராமல் மதுரை விக்கிரமங்கலத்தில் வசித்து வந்தார். அப்போது எதிர்பிரிவை சேர்ந்த சிலர் பயங்கர அயுதங்களுடன் விக்கிரமங்கலம் கிராமத்திற்கு சென்று தேடியுள்ளனர்.

    இந்தநிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அந்த சிறுவன் சொந்த ஊரான சங்கம்பட்டிக்கு வந்துள்ளார். இதனை அறிந்த மாற்று சமூகத்தை சார்ந்த 6 பேர் அவரை கடத்திச் சென்று ஊர் கண்மாய் அருகே வைத்து செல்போனை பறித்து, அடித்து சித்ரவதை செய்ததோடு அனைவரின் காலிலும் விழச்செய்து கொடுமைப்படுத்தி உள்ளனர்.

    மேலும் 17 வயது நிரம்பிய சிறுவனை ஆறு வயது சிறுவனின் காலில் விழ வைத்து உள்ளனர். தொடர்ந்து அச்சிறுவனுக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். இதுகுறித்து சிறுவனின் தந்தை உசிலம்பட்டி நகர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் அதே கிராமத்தைச் சார்ந்த கிஷோர், உக்கிரபாண்டியன், மணிமுத்து, பிரேமா, சந்தோஷ், நித்தீஸ் ஆகியோர் மீது 4 பிரிவின் கீழ் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள்.

    ×