திருமணத்திற்கு மறுத்து இளம்பெண்ணுக்கு மிரட்டல்- வாலிபர் மீது வழக்கு

சில வாரங்களில் எங்களது நட்பு காதலாக மாறியது.எழிலரசன் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
திருமணத்திற்கு மறுத்து இளம்பெண்ணுக்கு மிரட்டல்- வாலிபர் மீது வழக்கு
Published on

கோவை:

திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் 32 வயது இளம்பெண். இவர் கோவை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தார். அந்த மனுவில், நான் திருச்சியில் வசித்து வந்தேன். எனக்கு கடந்த 2020-ம் ஆண்டு திருவண்ணாமலையை சேர்ந்த எழில் அரசன் என்பவர் பேஸ்புக் மூலம் அறிமுகம் ஆனார்.

அவர் கோவையில் வேலை பார்த்து வருவதாக தெரிவித்தார். அப்போது அவர் என்னுடன் நட்புடன் இருக்க விரும்புவதாக தெரிவித்தார். நானும் அவரது நட்பை ஏற்றுக்கொண்டேன்.

இதையடுத்து நாங்கள் 2 பேரும் பேஸ்புக்கில் பேசி வந்தோம். சில வாரங்களில் எங்களது நட்பு காதலாக மாறியது. இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்தோம். இதையடுத்து நான் திருச்சியில் இருந்து புறப்பட்டு, கோவைக்கு வந்தேன்.

இதையடுத்து எழிலரசனும், நானும், கோவை கணபதி அருகே லட்சுமணபுரத்தில் திருமணம் செய்யாமலேயே லிவிங் டூ கெதர் முறையில் ஒன்றாக வசித்து வந்தோம்.

அப்போது எழிலரசன் என்னுடன் உடலுறவு கொண்டார். நானும், திருமணம் செய்து கொள்ள போகிறவர் தானே என அனுமதித்தேன்.

ஆனால் அதன் பிறகு எழிலரசனின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டது. நான் அவரிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டேன். அதற்கு அவர் மறுத்து விட்டார்.

மேலும் என்னை தகாத வார்த்தைகளால் பேசியதுடன், மிரட்டவும் செய்தார். எனவே என்னை திருமணம் செய்வதாக ஏமாற்றிய எழிலரசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி, இளம்பெண்ணை ஏமாற்றிய எழிலரசன் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com