என் மலர்
நீங்கள் தேடியது "Chenai Youth Arrest"
- தி.மு.க. பிரமுகர் கஜேந்திரன், வேலூர் தாலுகா போலீசில் புகார் அளித்தார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து, சென்னையில் பதுங்கி இருந்த நபரை கைது செய்தனர்.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளான ஊராட்சி மன்ற தலைவர், ஒன்றிய குழு கவுன்சிலர்கள், வார்டு உறுப்பினர்களுக்கு கடந்த சில நாட்களாக சென்னை தலைமை செயலகத்தில் உள்ள முதல்வரின் தனிப்பிரிவில் பணிபுரியும் ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவக்குமார் பேசுவதாக தொடர்பு கொண்டு ஒருவர் பேசி உள்ளார்.
அப்போது அவர், உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் உங்கள் மீது புகார்கள் வந்துள்ளது.
நீங்கள் சென்னை வந்து என்னை சந்திக்க வேண்டும். இல்லையென்றால் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறி மிரட்டினார்.
இது குறித்து உள்ளாட்சி பிரதிநிதிகள் போலீஸ் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர்.
அவரது செல்போன் எண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அதுபோன்று யாரும் சென்னை தலைமை செயலகத்தில் வேலை செய்யவில்லை என்பது தெரிய வந்தது.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் தி.மு.க. ஒன்றிய செயலாளரும், கணியம்பாடி ஒன்றிய குழு துணைத்தலைவர் கஜேந்திரன் என்பவரையும், கடந்த 2 நாட்களுக்கு முன்பு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு சென்னை வரும்படி மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.
இதுகுறித்து தி.மு.க. பிரமுகர் கஜேந்திரன், வேலூர் தாலுகா போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சென்னையில் பதுங்கி இருந்த நபரை கைது செய்தனர்.
போலீசார் அவரை வேலூர் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
அவர் சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த சுபாஷ் (வயது 29) என்பதும் இவர் போலியான செல்போன் எண் மூலம் பல பேரை மிரட்டி பணம் பறித்ததும் தெரிய வந்துள்ளது. அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.






