என் மலர்
உள்ளூர் செய்திகள்

நாங்குநேரி அருகே பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த 2 பேர் கைது
- சுப்பம்மாள் குடும்பத்திற்கும், சங்கர் என்ற சங்கரசுப்பு குடும்பத்திற்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது.
- சப்-இன்ஸ்பெக்டர் இம்மானுவேல் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தார்.
களக்காடு:
நாங்குநேரி அருகே உள்ள ஸ்ரீவரமங்கைபுரம், வடக்கு தெருவை சேர்ந்தவர் சங்கரலிங்கம். இவரது மனைவி சுப்பம்மாள் (வயது 55). இவரது குடும்பத்திற்கும், துளாச்சேரி தெற்கு தெருவை சேர்ந்த சங்கர் என்ற சங்கரசுப்பு (23) என்பவரது குடும்பத்திற்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு, முன் விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் கடந்த 22-ந் தேதி சங்கர் என்ற சங்கரசுப்பு, அருணாச்சலம் (20), குமார் (25), ஆலடிபுதூரை சேர்ந்த நயினார் (22), கும்பிளம்பாட்டை சேர்ந்த ராஜா (23), முத்துபாண்டி (24), பட்டப் பிள்ளைபுதூரை சேர்ந்த முத்துராமலிங்கம் (23) ஆகியோர் சேர்ந்து சுப்பம்மா ளின் வீட்டிற்கு சென்று அவரை அவதூறாக பேசி மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து சுப்பம்மாள் நாங்குநேரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் இம்மானுவேல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, சங்கர் என்ற சங்கரசுப்பு, முத்துராமலிங்கம் ஆகிய 2 பேரையும் கைது செய்தார். மேலும் தலைமறைவாக உள்ள 5 பேரை தேடி வருகிறார்.