search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Mamata Banarjee"

  • மேற்குவங்கத்தில் தனித்து போட்டியிடப் போவதாக மம்தா பானர்ஜி அறிவிப்பு.
  • திரிணாமுல் காங்கிரஸ் இந்தியா கூட்டணியின் "முக்கிய தூண்".

  மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி இல்லாமல் எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணி இருப்பதை யாராலும் கற்பனைக் கூட செய்யது பார்க்க முடியாது என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

  இந்தியா கூட்டணியில் இருந்து கொண்டே மேற்குவங்கத்தில் தனித்து போட்டியிடப் போவதாக மம்தா பானர்ஜி அறிவித்தார்.

  இதுதொடர்பாக, கட்சியின் 'பாரத் ஜோடோ நியாய யாத்ரா'வின் ஒரு பகுதியாக அசாமில் உள்ள வடக்கு சல்மாராவில் செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், மம்தா பானர்ஜியின் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் இந்தியா கூட்டணியின் "முக்கிய தூண்" என்று குறிப்பிட்டுள்ளார். 

  இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

  இந்தியா கூட்டணியின் தூண் போன்றவர் மம்தா பானர்ஜி. அவர் இல்லாத இந்தியா கூட்டணியை கற்பனை கூட செய்ய முடியாது.

  திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக காங்கிரஸ் கட்சி விவாதித்து வருவதாகவும், அனைவருக்கும் திருப்தி அளிக்கும் வகையிலான தொகுதிப்பங்கீடு விரைவில் நிறைவடையும் என நம்புகிறேன்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  • விஜயகாந்த் இன்று காலை 6.10 மணியளவில் காலமானார்.
  • விஜயகாந்த் உடலுக்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள், தொண்டர்கள், பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி.

  தே.மு.தி.க. நிறுவனரும், நடிகருமாக விஜயகாந்த் (71) உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை 6.10 மணியளவில் காலமானார்.

  தொடர்ந்து, தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்த் உடலுக்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள், தொண்டர்கள், பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

  இந்நிலையில், விஜயகாந்தின் மறைவுக்கு மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

  இதுகுறித்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

  முதுபெரும் பொதுத் தலைவரும், தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்தின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். அவர் இன்று சென்னையில் காலமானார். அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் எண்ணற்ற ரசிகர்களுக்கு எனது அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்.

  இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

  எல்லை பாதுகாப்பு படை அதிகார வரம்பு அதிகரிப்பு விவகாரம், மேற்கு வங்காளத்துக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி. உள்ளிட்ட நிலுவை தொகை குறித்து மம்தா பானர்ஜி பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று தெரிகிறது.
  புதுடெல்லி:

  மேற்கு வங்காளம், பஞ்சாப், அசாம் மாநிலங்களில் சர்வதேச எல்லையில் இருந்து 15 கிலோ மீட்டர் தூரம் வரை எல்லைப் பாதுகாப்பு படையினர் சோதனை, பறிமுதல், கைது நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்து இருந்தது.

  இந்த நடவடிக்கைகளை 50 கிலோ மீட்டர் தூரம் வரை மேற்கொள்ள ஏதுவாக எல்லை பாதுகாப்பு சட்டத்தில் சமீபத்தில் திருத்தம் செய்யப்பட்டது.

  இதற்கு மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் ஏற்கனவே கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

  இந்த நிலையில் மம்தா பானர்ஜி அடுத்த வாரம் டெல்லிக்கு செல்கிறார். அப்போது அவர் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து பேசுகிறார்.

  எல்லை பாதுகாப்பு படை அதிகார வரம்பு அதிகரிப்பு விவகாரம், மேற்கு வங்காளத்துக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி. உள்ளிட்ட நிலுவை தொகை குறித்து அவர் பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று தெரிகிறது.

  மம்தா பானர்ஜி வருகிற 22-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை டெல்லியில் இருக்க திட்டமிட்டுள்ளார். பிரதமர் மோடியை சந்தித்து பேசும் அவர் பின்னர் எதிர்க்கட்சி தலைவர்களையும் சந்தித்து பேச இருக்கிறார்.

  இந்த தகவலை திரிணாமுல் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
  கொல்கத்தாவில் இன்று மம்தா பானர்ஜி தலைமையில் பிரமாண்ட பொதுக்கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், நாடு முழுவதிலும் இருந்து எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். #MamataBanerjee #Megarally
  கொல்கத்தா:

  பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. காங்கிரஸ் தலைமையில் மத்தியில் வலுவான கூட்டணி அமைக்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவிடம் இருந்து ஆட்சியை தட்டிப்பறித்த காங்கிரஸ், அதே போன்று பாராளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையுடன் உள்ளது.

  என்றாலும் பெரும்பாலான மாநிலங்களில் மாநில கட்சிகளே மிகுந்த செல்வாக்குடன் இருப்பதால், அத்தகைய மாநில கட்சிகளை ஒருங்கிணைத்து மெகா கூட்டணியை உருவாக்க காங்கிரஸ் முயற்சி செய்தது. ஆனால் காங்கிரஸ் தலைமையின் கீழ் மாநில கட்சிகள் ஒருங்கிணையும் திட்டத்தை பெரும்பாலான மாநில கட்சிகள் ஏற்கவில்லை.

  பா.ஜனதா கூட்டணியில் இருந்து விலகி, பா.ஜனதாவை வீழ்த்தியே தீர வேண்டும் என்ற கோபத்தில் இருக்கும் ஆந்திர முதல்-மந்திரி சந்திர பாபு நாயுடுவும் மெகா கூட்டணியை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டார். அதேசமயம் பாஜக, காங்கிரஸ் அல்லாத கூட்டணி அமைக்க தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் முயற்சி செய்து வருகிறார்.

  இந்த சூழ்நிலையில் பா. ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டும் முயற்சியில் மேற்கு வங்க முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி களத்தில் தீவிரமாக இறங்கியுள்ளார். மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் பா.ஜனதாவை எதிர்க்கும் கட்சித் தலைவர்களின் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெறும் என்று அறிவித்தார்.  இதற்காக நாடு முழுவதும் 25-க்கும் மேற்பட்ட கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தார். இதனை ஏற்று பல்வேறு தலைவர்கள் கொல்கத்தா வந்துள்ளனர்.


  அதன்படி, கொல்கத்தாவில் உள்ள பிரிகேட் பரேட் மைதானத்தில் இன்று மதியம் பிரமாண்ட பொதுக்கூட்டம் தொடங்கியது. மம்தா தலைமையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் சரத் பவார், தேவேகவுடா,  மல்லிகார்ஜூன கார்கே, சந்திரபாபு நாயுடு,  குமாரசாமி,  அரவிந்த் கெஜ்ரிவால்,  பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா,  மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

  பா.ஜனதா அதிருப்தி தலைவர்கள் யஷ்வந்த் சின்கா, சத்ருகன் சின்கா, அருண்ஷோரி, ராம்ஜெத் மலானி ஆகியோரும் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

  தலைவர்கள் பேசுவதற்காக பிரம்மாண்டமான மேடை அமைக்கப்பட்டுள்ளது. தொண்டர்கள் அனைவருக்கும் பொதுக்கூட்ட நிகழ்ச்சிகள் சென்று சேரும் வகையில் ஆங்காங்கே எல்.இ.டி தொலைக்காட்சித் திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணிகளுக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


  இன்றைய கூட்டத்தில் பங்கேற்றுள்ள அனைத்து தலைவர்களுக்கும் பேச வாய்ப்பு வழங்கப்படும்.  இதைத் தொடர்ந்து தலைவர்கள் சில முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றுவார்கள் என்று தெரிகிறது. இது தவிர எதிர்க்கட்சி தலைவர்கள் தங்களுக்குள் பேசி ஒருமித்த கருத்துக்கு வர உள்ளனர்.  இன்றைய கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளில் ஒருமித்த கருத்து உருவாகாவிட்டால் பாஜகவுக்கு எதிரான மெகா கூட்டணி என்பது கைகூடாமல் போக வாய்ப்புள்ளது. ஆனால் இந்த வாய்ப்பை நழுவ விடக்கூடாது என்பதில் மம்தா பானர்ஜி தீவிரமாக உள்ளார். #MamataBanerjee #Megarally
  கொல்கத்தாவில் நாளை மறுதினம் நடைபெறவுள்ள எதிர்க்கட்சிகளின் மெகா பேரணி பாஜக ஆட்சிக்கு சாவுமணியாக இருக்கும் என மேற்கு வங்காளம் முதல் மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். #MamataBanarjee #OppositionRally
  கொல்கத்தா:

  மேற்கு வங்காளம் முதல் மந்திரியாக பதவி வகித்து வருபவர் மம்தா பானர்ஜி. மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

  வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி நாளை மறுதினம் கொல்கத்தாவில் மெகா பேரணி நடத்த ஏற்பாடு செய்துள்ளார். இதில் இந்தியாவில் உள்ள அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களையும் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

  மம்தாவின் அழைப்பை ஏற்று இந்த பேரணியில் சரத் யாதவ், ஸ்டாலின், பரூக் அப்துல்லா, அகிலேஷ் யாதவ், தேஹஸ்வி யாதவ், சந்திரபாபு நாயுடு, அரவிந்த் கெஜ்ரிவால், குமாரசாமி, உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொள்கிறார்.

  இந்நிலையில், கொல்கத்தாவில் செய்தியாளர்களை சந்தித்த மம்தா பானர்ஜி, நாளை மறுதினம் நடைபெறவுள்ள பேரணி பாஜக ஆட்சிக்கு சாவுமணியாக இருக்கும். பா.ஜ.க 125 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற முடியும் என்று நான் நினைக்கவில்லை. காங்கிரசை பற்றி தெரியவில்லை. பிராந்திய கட்சிகள் முடிவு எடுப்பதாக இருக்கும். பிராந்திய கட்சிகள் இரு கட்சிகளை விடவும் அதிகமான தொகுதிகளை கைப்பற்றும் என தெரிவித்தார். #MamataBanarjee #OppositionRally
  அடுத்த ஆண்டு ஜனவரி 19ம் தேதி நடைபெறவுள்ள மெகா பேரணி முக்கிய திருப்பு முனையாக இருக்கும் என மேற்கு வங்காளம் முதல் மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். #MamataBanarjee #BrigadeRally
  கொல்கத்தா:

  மேற்கு வங்காளம் முதல் மந்திரியாக பதவி வகித்து வருபவர் மம்தா பானர்ஜி. மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

  வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி அடுத்த ஆண்டு ஜனவரி 19-ம் தேதி கொல்கத்தாவில் மெகா பேரணி நடத்த ஏற்பாடு செய்துள்ளார். இதில் இந்தியாவில் உள்ள அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களையும் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

  இதற்காக அவர் அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களையும் சந்தித்து பேரணியில் பங்கேற்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறார்.

  இந்நிலையில், கொல்கத்தாவில் நடந்த கட்சி நிகழ்ச்சி ஒன்றில் மம்தா பானர்ஜி இன்று கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், அடுத்த ஆண்டு ஜனவரி 19ம் தேதி நடைபெறவுள்ள மெகா பேரணி முக்கிய திருப்பு முனையாக இருக்கும் என தெரிவித்தார்.

  மேலும், மெகா பேரணிக்கான ஏற்பாடுகளை விரைந்து முடிக்கும்படி கட்சி நிர்வாகிகளிடம் அவர் கேட்டுக் கொண்டார். #MamataBanarjee #BrigadeRally
  டெல்லியில் நடைபெறவுள்ள கூட்டத்தில் பங்கேற்க வருமாறு மாயாவதி மற்றும் மம்தா பானர்ஜிக்கு ஆர்.எஸ்.எஸ். சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. #RSS invites #Mayawati #MamataBanerjee
  புதுடெல்லி:

  ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கூட்டம் டெல்லி விஞ்ஞான பவனில் வரும் 17–ம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக பல்வேறு மாநில முதல்–மந்திரிகள், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், மதத்தலைவர்கள் உள்பட பலருக்கு ஆர்.எஸ்.எஸ். சார்பில் அழைப்பு விடுக்க திட்டமிட்டு உள்ளது.

  இந்நிலையில், டெல்லியில் நடைபெறவுள்ள கூட்டத்தில் பங்கேற்க வருமாறு மாயாவதி மற்றும் மம்தா பானர்ஜிக்கு ஆர்.எஸ்.எஸ். சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

  இதுதொடர்பாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் கூறுகையில், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரரான மாயாவதிக்கு நேற்று அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டது. இதேபோல் மேற்கு வங்காள முதல்–மந்திரி மம்தா பானர்ஜி, ஆந்திர முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு, உத்தரப்பிரதேச முன்னாள் முதல்–மந்திரி அகிலேஷ் யாதவ் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

  இந்த கூட்டத்தில் மாயாவதி நிச்சயம் பங்கேற்பார். மம்தா பானர்ஜியும், அகிலேஷ் யாதவும் பங்கேற்க வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை என ஆர்.எஸ்.எஸ். வட்டாரங்கள் கூறின.

  பாஜக தலைவர்கள் அளித்த யோசனையின் பேரில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோருக்கும் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.
  டெல்லி சென்றுள்ள மேற்கு வங்காளம் முதல் மந்திரி மம்தா பானர்ஜி காங்கிரசின் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் தேவே கவுடா ஆகியோரை சந்தித்து இன்று ஆலோசனை நடத்தினார். #MamataBanarjee #SoniaGandhi #RahulGandhi #DeveGowda
  புதுடெல்லி:

  மேற்கு வங்காளம் முதல் மந்திரியாக பதவி வகித்து வருபவர் மம்தா பானர்ஜி. மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

  இதற்கிடையே, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்றத்துக்கான தேர்தலில் பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி அடுத்த ஆண்டு ஜனவரி 19-ம் தேதி கொல்கத்தாவில் மெகா பேரணி நடத்த ஏற்பாடு செய்துள்ளார்.

  இந்த பேரணியில் இந்தியாவில் உள்ள அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களையும் கலந்து கொள்ள வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.  அதன் ஒரு பகுதியாக, தலைநகர் டெல்லிக்கு வந்த மம்தா பானர்ஜி அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களையும் சந்தித்து பேரணியில் பங்கேற்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறார்.

  இந்நிலையில், மம்தா பானர்ஜி டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் நேரில் சென்று சந்தித்தார். அப்போது காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியும் உடனிருந்தார். இருவரையும் பேரணியில் கலந்து கொள்ள வருமாறு அழைப்பு விடுத்தார். 

  மேலும்,  டெல்லியில் பாராளுமன்றம் வளாகத்தில் சமாஜ்வாதி கட்சி எம்.பி.யான ஜெயாபச்சன், மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் தேவே கவுடாவை சந்தித்து பேரணியில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார். தொடர்ந்து பல்வேறு கட்சி தலைவர்களை அவர் சந்திக்கவுள்ளார். #MamataBanarjee #SoniaGandhi #RahulGandhi #DeveGowda
  இந்தியாவுடனான வங்காள தேசம் நாட்டின் உறவை என் ஆர் சி அழித்து விடும் என மேற்கு வங்காளம் முதல் மந்திரி மம்தா பானர்ஜி எச்சரிக்கை விடுத்துள்ளார். #MamataBanarjee #NRCBill
  புதுடெல்லி:

  அசாம் மாநிலத்தில் வசிப்போர் குறித்த தேசிய குடிமக்கள் இறுதி வரைவு பதிவேட்டில் 40 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டு உள்ளதை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்துள்ளன. இதனை காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கடுமையாக எதிர்க்கிறது.

  இதற்கிடையே, தலைநகர் டெல்லி சென்றுள்ள திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, எதிர்க்கட்சி தலைவர்களை இன்று சந்தித்துப் பேசினார். மேலும், பாராளுமன்ற வளாகத்தில் மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

  என்ஆர்சி விவகாரம் வங்காளதேசம் உடனான இந்தியாவின் உறவை அழிக்கும். மேற்கு வங்காளம் மாநிலம் முர்ஷிதாபாத்தை சேர்ந்த 833 பேர் அசாம் சிறைகளில் உள்ளார்கள். பாஜக வாக்கு வங்கி அரசியலை மேற்கொள்கிறது. என்ஆர்சி உலகையே பாதிப்புக்கு உள்ளாக்கும். 

  எல்லையை பாதுகாப்பது என்பது மத்திய அரசின் பொறுப்பு. இந்தியாவிற்குள் எத்தனை பேர் ஊடுருவுகிறார்கள் என்பதை மத்திய படைகள் பார்க்க வேண்டும். ஆனால் இப்போது ஊடுருவல்காரர்கள் என்று மக்களை துன்புறுத்துகிறார்கள்.
   
  அசாமிற்கு எதிர்க்கட்சிகள் குழுவை அனுப்ப வேண்டும். முன்னாள் பாஜக தலைவர் யஷ்வந்த் சின்ஹாவை அசாம் செல்ல கேட்டுக் கொண்டுள்ளேன் என மம்தா பானர்ஜி எச்சரிக்கை விடுக்கும் வகையில் கூறியுள்ளார். #MamataBanarjee #NRCBill
  டெல்லி வந்துள்ள மேற்கு வங்காளம் முதல் மந்திரி மம்தா பானர்ஜி இன்று பாராளுமன்ற வளாகத்தில் பாஜக மூத்த தலைவர் அத்வானியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். #MamataBanarjee #Advani #NRCBill
  புதுடெல்லி:

  வங்காளதேசத்தில் இருந்து வந்து இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அடையாளம் காணும் வகையில் அசாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. 

  அதன் இறுதி வரைவு அறிக்கை நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. மொத்தம் உள்ள 3,29,91,384 விண்ணப்பதாரர்களில் 2,89,83,677 பேர் குடிமக்களின் தேசிய பதிவேட்டில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

  சுமார் 40 லட்சம் பேர் பதிவேட்டில்  சேர்க்கப்படவில்லை. தற்போதைய நிலையில் இவர்கள் சட்டவிரோத குடிமக்களாக கருதப்படுவார்கள். எனினும், விடுபட்டவர்கள் தங்கள் பெயர்களை சேர்க்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

  ஆனால், குடிமக்கள் பட்டியலில் 40 லட்சம் பேர் விடுபட்டது தொடர்பாக சர்ச்சை எழுந்தது. இந்த விவகாரம் பாராளுமன்ற இரு அவைகளிலும் எதிரொலித்தது. மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சி எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். 

  இதற்கிடையே,  அசாம் குடிமக்கள் பதிவே