போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை- மம்தா

ரெயில் விபத்தை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். சம்பவ இடத்திற்கு பேரிடர் மீட்பு குழுவினர் விரைந்துள்ளனர்.
போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை- மம்தா
Published on

மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் நின்றுகொண்டிருந்த விரைவு ரெயில் மீது சரக்கு ரெயில் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் படுகாயம் அடைந்தனர். ரெயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் பலர் படுகாயம் அடைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இந்த நிலையில், மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

ரெயில் விபத்தை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் சரக்கு ரயிலில் மோதியதாக கூறப்படுகிறது. சம்பவ இடத்திற்கு பேரிடர் மீட்பு குழுவினர் விரைந்துள்ளனர். ரெயில் விபத்து நடந்த இடத்தில் போர்க்கால அடிப்படையில் மீட்பு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com