விஜயகாந்த் மறைவுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா இரங்கல்

விஜயகாந்த் இன்று காலை 6.10 மணியளவில் காலமானார்.விஜயகாந்த் உடலுக்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள், தொண்டர்கள், பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி.
விஜயகாந்த் மறைவுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா இரங்கல்
Published on

தே.மு.தி.க. நிறுவனரும், நடிகருமாக விஜயகாந்த் (71) உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை 6.10 மணியளவில் காலமானார்.

தொடர்ந்து, தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்த் உடலுக்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள், தொண்டர்கள், பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், விஜயகாந்தின் மறைவுக்கு மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

முதுபெரும் பொதுத் தலைவரும், தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்தின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். அவர் இன்று சென்னையில் காலமானார். அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் எண்ணற்ற ரசிகர்களுக்கு எனது அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com