search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐபிஎல்"

    • சி.எஸ்.கே.வுக்கு எதிராக 2-வதாக ஆடியே வெற்றி பெற்றது.
    • இரு அணிகளுமே வெற்றிக்காக கடுமையாக போராடுவார்கள் என்பதால் போட்டி பரபரப்பாக இருக்கும்.

    17- வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 22-ந்தேதி சென்னையில் தொடங்கியது. இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இந்த போட்டி தொடர் நடைபெற்று வருகிறது.

    இதில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் உள்ளூர், வெளியூர் என தலா 14 ஆட்டங்களில் மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்'சுற்றுக்கு தகுதி பெறும்.

    நடப்பு சாம்பியனும், ஐ.பி.எல். கோப்பையை 5 முறை வென்ற அணியுமான சென்னை சூப்பர் கிங்ஸ் 4 வெற்றி, 4 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 5- வது இடத்தில் உள்ளது.

    சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த 4 ஆட்டத்தில் சி.எஸ்.கே. 3-ல் வெற்றி (பெங்களூரு 6 விக்கெட், குஜராத் 63 ரன், கொல்கத்தா 7 விக்கெட்) பெற்றது. ஒன்றில் (லக்னோ 6 விக்கெட்) தோற்றது. வெளியூரில் ஆடிய 4 போட்டியில் ஒன்றில் வெற்றி (மும்பை 20 ரன்) பெற்றது. 3 ஆட்டத்தில் (டெல்லி 20 ரன், ஐதராபாத் 6 விக்கெட், லக்னோ 8 விக்கெட்) தோற்றது.

    ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் 9-வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை நாளை (28-ந்தேதி) மீண்டும் சந்திக்கிறது. இந்த ஆட்டம் சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. சேப்பாக்கத்தில் நடைபெறும் 5-வது ஆட்டம் இதுவாகும். இதனால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். அவர்கள் மற் றொரு கோலாகலத்துக்கு தயாராகி விட்டனர்.

    ஐதராபாத்தில் கடந்த 5- ந் தேதி நடந்த ஆட்டத்தில் தோற்றதற்கு சி.எஸ்.கே. பழிதீர்க்கும் ஆர்வத்தில் இருக்கிறது. சன்ரைசர்ஸ் ஐதராபாத்துக்கு பதிலடி கொடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் 5-வது வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த போட்டியில் 210 ரன் குவித்தும் சென்னை அணி தோல்வியை தழுவியதால் ரசிகர்கள் பெரிதும் ஏமாற்றம் அடைந்தனர். பந்துவீச்சும், பீல்டிங்கும் மிகவும் மோசமாக இருந்தது. பிளே ஆப் சுற்றுக்கு நுழைய இனி ஒவ்வொரு ஆட்டமும் முக்கியமானது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெறுவது அவசியமாகும்.

    பேட்டிங்கில் ஷிவம் துபே 22 சிக்சர்களுடன் 311 ரன்னும், கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 1 சதம், 2 அரை சதத்துடன் 349 ரன்னும் எடுத்து நல்ல நிலையில் உள்ளனர். பந்துவீச்சில் முஸ்டாபிசுர் ரகுமான் 12 விக்கெட்டும், பதிரனா 11 விக்கெட்டும் கைப்பற்றி உள்ளனர். ஆல்ரவுண்டர் வரிசையில் ஜடேஜா இருக்கிறார்.

    ரகானே தொடர்ந்து மோசமாக ஆடி வருகிறார். நாளைய போட்டிக்கான அணியில் பெரிய அளவில் மாற்றம் இருக்கும் என்று கருதப்படுகிறது.

    டோனி கடைசி கட்ட ஓவர்களில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதனால் சி.எஸ்.கே. ரசிகர்கள் அவரது பேட்டிங்கை காண மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் 5 வெற்றி, 3 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று 3- வது இடத்தில் இருக்கிறது. அந்த அணி சென்னையை மீண்டும் வீழ்த்தி 6-வது வெற்றியை பெறும் வேட்கையில் உள்ளது.

    இந்த தொடரில் ஐதராபாத் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் குவிப்பில் சாதனைகளை படைத்துள்ளது. முதலில் பேட்டிங் செய்தால் அந்த அணி ஸ்கோரை அதிகமாக குவித்து விடுகிறது. அதே நேரத்தில் 2- வது பேட்டிங் செய்யும் போது திணறி விடுகிறது.

    சி.எஸ்.கே.வுக்கு எதிராக 2-வதாக ஆடியே வெற்றி பெற்றது. இதனால் சேப்பாக்கத்தில் நம்பிக்கையுடன் விளையாடும்.

    ஐதராபாத் அணியில் டிரெவிஸ் ஹெட் (325 ரன்), அபிஷேக் சர்மா (288), கிளாசன் (275), ஷபாஸ் அகமது உள்ளிட்ட அதிரடி பேட்ஸ்மேன்கள் உள்ளனர். பந்து வீச்சில் டி.நடராஜன் (12 விக்கெட்), கேப்டன் கம்மின்ஸ் (10) நல்ல நிலையில் இருக்கிறார்கள். இரு அணிகளும் 20 முறை மோதியுள்ளன. இதில் சென்னை 14-ல், ஐதராபாத் 6-ல் வெற்றி பெற்றுள்ளன. இரு அணிகளுமே வெற்றிக்காக கடுமையாக போராடுவார்கள் என்பதால் போட்டி பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • ஐ.பி.எல். வரலாற்றில் முதல் முறையாக 4 தொடக்க வீரர்கள் 50 ரன்களுக்கு மேல் எடுத்தனர்.
    • அதிக சிக்சர் அடித்த அணி என்ற சாதனையை பஞ்சாப் படைத்தது.

    கொல்கத்தா:

    ஐ.பி.எல். போட்டியில் பஞ்சாப் அணி கொல்கத்தாவுக்கு எதிராக 262 ரன் இலக்கை எடுத்துப் புதிய வரலாறு படைத்தது.

    கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த 42-வது லீக் ஆட்டத்தில் முதலில் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 261 ரன் எடுத்தது. இதனால் பஞ்சாப் அணிக்கு 262 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    பில்சால்ட் 37 பந்தில் 75 ரன்னும் (6 பவுண்டரி, 6 சிக்சர்), சுனில் நரீன் 32 பந்தில் 71 ரன்னும் (9 பவுண்டரி, 4 சிக்சர்), வெங்கடேஷ் அய்யர் 23 பந்தில் 39 ரன்னும் (3 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டும், சாம்கரண், ராகுல் சஹார் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    பின்னர் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் 8 பந்து எஞ்சியிருந்த நிலையில் 262 ரன் இலக்கை எடுத்து 20 ஓவர் போட்டியில் புதிய வரலாறு படைத்தது. அந்த அணி 18.4 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 262 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    ஜானி பேர்ஸ்டோ அதிரடியாக விளையாடி சதம் அடித்தார். அவர் 48 பந்தில் 108 ரன்னும் (8 பவுண்டரி, 9 சிக்சர்), சஷாங் சிங் 28 பந்தில் 68 ரன்னும் (2 பவுண்டரி, 8 சிக்சர்), பிரப்சிம்ரன் சிங் 20 பந்தில் 54 ரன்னும் (4 பவுண்டரி, 5 சிக்சர்) எடுத்தனர். பஞ்சாப் அணிக்கு கிடைத்த 3-வது வெற்றி இதுவாகும். கொல்கத்தா அணிக்கு 3-வது தோல்வி ஏற்பட்டது.

    இந்தப் போட்டியில் பல புதிய சாதனைகள் நிகழ்த்தப்பட்டன. 262 ரன்னை சேஸ் செய்ததன் மூலம் 20 ஓவர் போட்டியில் பஞ்சாப் அணி புதிய சாதனை படைத்தது.

    இதற்கு முன்பு கடந்த மார்ச் மாதம் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் தென் ஆப்பிரிக்கா 259 ரன் இலக்கை எடுத்து வெற்றி பெற்றதே சாதனையாக இருந்தது. இதை பஞ்சாப் அணி நேற்று முறியடித்துப் புதிய உலக சாதனை நிகழ்த்தியது.

    ஐ.பி.எல். போட்டியை பொறுத்தவரை ராஜஸ்தான் ராயல்ஸ் கடந்த 2020-ம் ஆண்டு பஞ்சாப்புக்கு எதிராக 224 ரன்களை சேசிங் செய்ததே சாதனையாக இருந்தது. மேலும் அதே ராஜஸ்தான் அணி இதே கொல்கத்தா மைதானத்தில் கொல்கத்தாவுக்கு எதிராக கடந்த 16-ந்தேதி 224 ரன் இலக்கை எடுத்து வெற்றி பெற்று இருந்தது. இந்த ரன் சேசிங்கை பஞ்சாப் அணி நேற்று முறியடித்தது.

    இந்த ஆட்டத்தில் மொத்தம் 42 சிக்சர்கள் (கொல்கத்தா 18 + பஞ்சாப் 24) அடிக்கப்பட்டன. இது புதிய சாதனையாகும். ஐதராபாத்தில் கடந்த மாதம் 27-ந்தேதி சன்ரைசர்ஸ்-மும்பை இந்தியன்ஸ் மோதிய போட்டியில் 38 சிக்சர்கள் அடிக்கப்பட்டதே சாதனையாக இருந்தது.

    24 சிக்சர்கள் எடுத்ததன் மூலம் ஐ.பி.எல். போட்டியில் ஒரு ஆட்டத்தில் அதிக சிக்சர் அடித்த அணி என்ற சாதனையை பஞ்சாப் படைத்தது. கடந்த 20-ந்தேதி டெல்லிக்கு எதிராக ஐதராபாத் 22 சிக்சர்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது. இதை பஞ்சாப் முறியடித்து அதிக சிக்சர் மழை பொழிந்தது.

    ஒட்டுமொத்த 20 ஓவரில் 2-வது அதிக சிக்சர்கள் ஆகும். மங்கோலியாவுக்கு எதிராக கடந்த ஆண்டு நடந்த ஆட்டத்தில் நேபாளம் 26 சிக்சர்கள் அடித்து இருந்தது.

    ஐ.பி.எல். வரலாற்றில் முதல் முறையாக 4 தொடக்க வீரர்கள் 50 ரன்களுக்கு மேல் எடுத்தனர். கொல்கத்தா அணியில் பில்சால்ட் (75), சுனில் நரீன் (71), பஞ்சாப் அணியில் பிரப்சிம்ரன் சிங் (54), பேர்ஸ்டோ (108) ஆகியோர் அரை சதத்துக்கு மேல் ரன்களை எடுத்தனர்.

    மேலும் 4 தொடக்க வீரர்களும் சேர்ந்து 308 ரன்கள் எடுத்துள்ளனர். இதுவும் ஐ.பி.எல்.லில் சாதனையாகும்.

    இதற்கு முன்பு கடந்த ஆண்டு குஜராத்-லக்னோ போட்டியில் தொடக்க வீரர்கள் 293 ரன்கள் எடுத்து இருந்தனர்.

    மேலும் 5 அரை சதங்கள் 25 அல்லது அதற்கு குறைவான பந்துகளில் (ஸ்டிரைக்ரேட் 200) அடிக்கப்பட்டதும் சாதனையாகும். பில்சால்ட் 25 பந்திலும், நரீன் 23 பந்திலும், பிரப்சிம்ரன் சிங் 18 பந்திலும், பேர்ஸ்டோ 23 பந்திலும், சஷாங் சிங் 23 பந்திலும் அரை சதத்தை தொட்டனர்.

    பஞ்சாப் அணி 7-வது முறையாக 200 ரன்னுக்கு மேற்பட்ட இலக்கை சேஸ் செய்துள்ளது. இதற்கு முன்பு மும்பை அணி 6 தடவை 200 ரன்னுக்கு மேற்பட்ட இலக்கை எடுத்து இருந்தது.

    • டெல்லி அணி இதுவரை 9 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 5 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்றுள்ளது.
    • 5 முறை சாம்பியனான மும்பை அணி இந்த சீசனில் தடுமாறி வருகிறது.

    புதுடெல்லி:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று (சனிக்கிழமை) இரண்டு லீக் ஆட்டங்கள் அரங்கேறுகின்றன. டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் மாலை 3.30 மணிக்கு தொடங்கும் 43-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    டெல்லி அணி இதுவரை 9 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 5 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்றுள்ளது. கடந்த ஆட்டத்தில் டெல்லி அணி 4 ரன் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தியது. அந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்து 224 ரன்கள் குவித்த டெல்லி எதிரணியை 220 ரன்னுக்கு கட்டுப்படுத்தி 'திரில்' வெற்றியை தனதாக்கியது. முந்தைய 4 ஆட்டங்களில் 3-ல் வெற்றியை ருசித்த நம்பிக்கையோடு இந்த ஆட்டத்தில் களம் இறங்குகிறது.

    டெல்லி அணியில் பேட்டிங்கில் கேப்டன் ரிஷப் பண்ட் அசத்தி வருகிறார். டிரிஸ்டான் ஸ்டப்ஸ், ஜேக் பிராசர் மெக்குர்க், ஆல்-ரவுண்டர் அக்ஷர் பட்டேல் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர். தொடக்க வீரர் பிரித்வி ஷா கணிசமான பங்களிப்பை அளிக்க வேண்டியது அவசியமானதாகும். மோசமான பார்ம் காரணமாக கடந்த ஆட்டத்தில் வெளியில் வைக்கப்பட்ட டேவிட் வார்னருக்கு பதிலாக களம் கண்ட ஷாய் ஹோப் சோபிக்காததால் வார்னருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கலாம். பந்து வீச்சில் சுழற்பந்து வீச்சாளர்கள் குல்தீப் யாதவ், அக்ஷர் பட்டேல், வேகப்பந்து வீச்சாளர்கள் முகேஷ் குமார், கலீல் அகமது ஆகியோர் வலுசேர்க்கிறார்கள். அன்ரிச் நோர்டியா அதிக ரன்களை விட்டுக்கொடுப்பது தலைவலியாக இருக்கிறது. இம்பேக்ட் வீரராக முந்தைய ஆட்டத்தில் ஆடிய ராசிக் சலாம் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். அவர் தனது இடத்தை தக்கவைத்து கொள்வார்.

    5 முறை சாம்பியனான மும்பை அணி இந்த சீசனில் தடுமாறி வருகிறது. அந்த அணி 8 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி, 5 தோல்வி கண்டு 6 புள்ளிகளை பெற்றுள்ளது. மும்பை அணியில் பேட்டிங்கில் ரோகித் சர்மா, திலக் வர்மா, சூர்யகுமார் பார்மில் உள்ளனர். இஷான் கிஷன், டிம் டேவிட், கேப்டன் ஹர்திக் பாண்ட்யா ஆகியோரும் சிறப்பாக செயல்பட்டால் மேலும் வலுப்பெறும். பந்து வீச்சில் ஜஸ்பிரித் பும்ரா, ஜெரால்டு கோட்ஜீ பலம் சேர்க்கிறார்கள். ஆனால் மற்ற பவுலர்களிடம் இருந்து போதிய ஒத்துழைப்பு இல்லாதது பாதகமாக உள்ளது.

    கடந்த ஆட்டத்தில் ராஜஸ்தானிடம் 9 விக்கெட் வித்தியாசத்தில் கண்ட மோசமான தோல்வியை மறந்து வெற்றிப் பாதைக்கு திரும்ப மும்பை முனைப்பு காட்டும். இந்த சீசனில் தொடக்கத்தில் தொடர்ச்சியாக 3 தோல்விக்கு பிறகு டெல்லியை 29 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்ததால் மும்பை அணி கூடுதல் நம்பிக்கையுடன் களம் காணும். ஆனால் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்க டெல்லி அணி வரிந்து கட்டும். எனவே இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இவ்விரு அணிகளும் 34 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 19 ஆட்டங்களில் மும்பையும், 15 ஆட்டங்களில் டெல்லியும் வெற்றி கண்டுள்ளன.

    லக்னோவில் இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகும் மற்றொரு லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் சந்திக்கின்றன.

    முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் அணி 8 ஆட்டங்களில் ஆடி 7 வெற்றி, ஒரு தோல்வியுடன் (குஜராத் அணிக்கு எதிராக) கம்பீரமாக முதலிடத்தில் பயணிக்கிறது. அந்த அணியின் பேட்டிங்கில் ரியான் பராக், கேப்டன் சஞ்சு சாம்சன், ஜோஸ் பட்லர், ஜெய்ஸ்வால் ஆகியோர் பட்டையை கிளப்புகிறார்கள். பந்து வீச்சில் யுஸ்வேந்திர சாஹல், டிரென்ட் பவுல்ட், அவேஷ் கான், சந்தீப் ஷர்மா உள்ளிட்டோர் கைகொடுக்கிறார்கள்.

     

    லக்னோ அணி 8 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 3 தோல்வி கண்டுள்ளது. உள்ளூர் மற்றும் வெளியூரில் நடைபெற்ற கடந்த 2 ஆட்டங்களில் தொடர்ச்சியாக சென்னையை வீழ்த்திய அந்த அணி 'ஹாட்ரிக்' வெற்றியை ருசிக்கும் ஆவலில் உள்ளது. லக்னோ அணியில் பேட்டிங்கில் கேப்டன் லோகேஷ் ராகுல், நிகோலஸ் பூரன், கடந்த ஆட்டத்தில் சதம் விளாசிய மார்கஸ் ஸ்டோனிஸ், குயின்டான் டி காக்கும், பந்து வீச்சில் யாஷ் தாக்குர், மொசின் கான், ரவி பிஷ்னோய், குருணல் பாண்ட்யாவும் நம்பிக்கை அளிக்கிறார்கள்.

    ஜெய்ப்பூரில் நடந்த தனது முதலாவது லீக் ஆட்டத்தில் 20 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தானிடம் தோற்று இருந்த லக்னோ அணி அதற்கு பழிதீர்க்க எல்லா வகையிலும் முயற்சிக்கும். அதேநேரத்தில் தனது ஆதிக்கத்தை நிலை நாட்ட ராஜஸ்தான் அணி முழு பலத்தையும் வெளிப்படுத்தும். எனவே இந்த மோதலில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் வாகை சூடினால் ஏறக்குறைய பிளே-ஆப் சுற்றை எட்டி விடும்.

    இவ்விரு ஆட்டங்களையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. 

    • பேர்ஸ்டோ 45 பந்தில் சதம் விளாசினார்.
    • ஷஷாங்க் சிங் 23 பந்தில் அரை சதம் விளாசினார்.

    கொல்கத்தா:

    ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் இன்று நடைபெற்ற 42-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.

    இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய கொல்கத்தா அணி தொடக்கம் முதல் இறுதி வரை அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். குறிப்பாக தொடக்க வீரர்களான சுனில் நரேன் - சால்ட் இருவரும் அரைசதம் விளாசி அசத்தினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 138 ரன்கள் குவித்தது.

    இதனால் கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 260 ரன்கள் குவித்தது. பஞ்சாப் தரப்பில் அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மற்ற பஞ்சாப் வீரர்கள் ரன்களை வாரி வழங்கினர். சாம் கரண் 4 ஓவரில் 60 ரன்களை வீழ்த்தினார்.

    இதனை தொடர்ந்து கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக பிரப்சிம்ரன் சிங்- பேர்ஸ்டோ களமிறங்கினர். தொடக்கம் முதலே அதிரடி காட்டிய பிரப்சிம்ரன் சிங் 18 பந்தில் அரை சதம் கடந்தார். இவர் 54 ரன்னில் எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆனார்.

    அடுத்து வந்த ரிலீ ரோசோவ் 26 ரன்னில் வெளியேறினார். தொடக்கம் மெதுவாக ஆரம்பித்த பேர்ஸ்டோ பின்னர் அதிரடி காட்டி சதம் விளாசினார். இதனால் கொல்கத்தா அணி 15 ஓவரில் 201 ரன்கள் குவித்தது.

    இதனால் கொல்கத்தா அணிக்கு 5 ஓவரில் 61 ரன்கள் தேவைப்பட்டது. இந்நிலையில் பேர்ஸ்டோ மற்றும் ஷஷாங்க் சிங் ஜோடி அதிரடியாக விளையாடினர். குறிப்பாக ஷஷாங்க் சிங் ஒவ்வொரு பந்தையும் பவுண்டரி சிக்சருமாக மாற்றினார். இதனால் 23 பந்தில் அரை சதம் விளாசினார்.

    பேர்ஸ்டோ 108 ரன்னிலும் ஷஷாங்க் சிங் 68 ரன்னிலும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இறுதியில் பஞ்சாப் அணி 18.4 ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து 262 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

    • கொல்கத்தா தரப்பில் சுனில் நரேன் 71 ரன்னும் சால்ட் 75 ரன்களும் குவித்தனர்.
    • சாம் கரண் 4 ஓவரில் 60 ரன்களை வாரி வழங்கினார்.

    கொல்கத்தா:

    10 அணிகள் இடையிலான 17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. அந்த வகையில் இன்று (வெள்ளிக்கிழமை) கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் 42-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

    இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் சாம் கரன் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக சுனில் நரேன் - சால்ட் களமிறங்கினர். இருவரும் பஞ்சாப் அணியின் பந்து வீச்சை பஞ்சு பஞ்சாக பறக்கவிட்டனர்.

    இருவரும் அரைசதம் விளாசி அசத்தினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 138 ரன்கள் குவித்தது. சுனில் நரேன் 71 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து சிறிது நேரத்தில் சால்ட் 75 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த வெங்கடேஷ் ஐயர் - ரஸல் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். அதிரடியாக விளையாடிய ரஸல் 24 ரன்கள் ரன்களில் ஆட்டமிழந்தார்.

    இதனையடுத்து ஷ்ரேயாஸ் - வெங்கடேஷ் ஜோடி டெத் ஓவரில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

    இதனால் கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 261 ரன்கள் குவித்தது. பஞ்சாப் தரப்பில் அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மற்ற பஞ்சாப் வீரர்கள் ரன்களை வாரி வழங்கினர். குறிப்பாக சாம் கரண் 4 ஓவரில் 60 ரன்களை விட்டுக் கொடுத்தார்.

    • சமீபத்தில், ஐ.பி.எல். டிக்கெட்களை கள்ள சந்தையில் விற்ற ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
    • கள்ள சந்தையில் டிக்கெட்கள் விற்பனை செய்வது தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    சென்னை:

    சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஐ.பி.எல். போட்டிகளுக்கான டிக்கெட்களை கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்கு எதிராக அளித்த புகார் மனுவை பரிசீலிக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்கும் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.

    சென்னை ஐகோர்ட்டில், வக்கீல் சத்திய பிரகாஷ் தாக்கல் செய்த மனுவில், "சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை காண நியாயமான கட்டணத்தில் டிக்கெட் பெறுவது இமாலய இலக்காக உள்ளது.

    தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், ஆன்லைன் மூலம் டிக்கெட்களை விற்கிறது. ஆனால் விற்பனை தொடங்கிய சிறிது நேரத்திலேயே டிக்கெட்கள் விற்று தீர்ந்து விடுகின்றன. சில சமூக விரோதிகள், டிக்கெட்களை மொத்தமாக வாங்கி, அதனை 10 மடங்கு அதிக விலைக்கு கள்ளச்சந்தையில் விற்கின்றனர்.

    குறைந்த கட்டண டிக்கெட்கள் கூட, 14 ஆயிரம் முதல் 16 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுகின்றன. டிக்கெட்டுகளை வாங்கி அதிக விலைக்கு விற்பதன் பின்னணியில், மாபியா கும்பல் இயங்கி வருகிறது.

    சமீபத்தில், ஐ.பி.எல். டிக்கெட்களை கள்ள சந்தையில் விற்ற ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 8 டிக்கெட்களும், 31 ஆயிரத்து 500 ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. அதனால், இந்த மாபியா கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், விதிகளை மீறி செயல்படும் சேப்பாக்கம் மைதான அதிகாரிகளுக்கும், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க அதிகாரிகளுக்கும் எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி இருந்தார்.

    இந்த மனு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, கள்ள சந்தையில் டிக்கெட்கள் விற்பனை செய்வது தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து, விளையாட்டு போட்டிகள் முடியும் நேரத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாகக் கூறிய நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கை மனுவை பரிசீலித்து முடிவெடுக்கும்படி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்கும் உத்தரவிட்டனர்.

    • கோலி தனது ஆட்டத்தின் நடுவில் அதிரடியை இழந்தது போல் தோன்றுகிறது.
    • கோலியிடம் இருந்து ஒவ்வொரு ரன்னாக வருகிறது.

    நடப்பு ஐ.பி.எல். தொடரில் பெங்களூரு அணி வீரர் விராட் கோலி 9 ஆட்டத்தில் 430 ரன்கள் எடுத்து முதலிடத்தில் உள்ளார். ஒரு சதம், மூன்று அரை சதம் அடித்தார்.

    ஆனால் அவரது ஸ்டிரைக் ரேட் குறைவாக இருப்பதாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. நேற்றைய ஐதராபாத்துக்கு எதிரான போட்டியில் கோலி 43 பந்தில் 51 ரன்கள் எடுத்தார்.

    இந்த நிலையில் கோலி அதிரடியாக விளையாட வேண்டும் என்று இந்திய அணி முன்னாள் கேப்டன் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-

    கோலி தனது ஆட்டத்தின் நடுவில் அதிரடியை இழந்தது போல் தோன்றுகிறது. நீங்கள் இன்னிங்ஸின் 14 அல்லது 15-வது ஓவரில் அவுட் ஆனதும், உங்களது ஸ்டிரைக் ரேட் 118-ல் இருக்கிறது என்றால் அதை உங்களிடம் இருந்து அணி எதிர்பார்க்கவில்லை.

    கோலியிடம் இருந்து ஒவ்வொரு ரன்னாக வருகிறது. உங்களுக்கு அடுத்து தினேஷ் கார்த்திக், லோம்ரர் இருக்கிறார்கள். எனவே நீங்கள் கொஞ்சம் ரிஸ்க் எடுக்க வேண்டும். இந்த அணுகுமுறைதான் பெங்களூரு அணிக்கு தேவை. கோலி ஆட்டத்தை தவறவிடுகிறார். அவர் பெரிய ஷாட்களை முயற்சிக்க வேண்டும் என்றார்.

    • பஞ்சாப் அணி நிலையற்ற ஆட்டத்தால் தடுமாறுகிறது.
    • பந்து வீச்சில் ஹர்ஷல் பட்டேல், சாம் கர்ரன், அர்ஷ்தீப் சிங், ரபடா ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.

    கொல்கத்தா:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று (வெள்ளிக்கிழமை) கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் 42-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பஞ்சாப் கிங்சை எதிர்கொள்கிறது.

    முன்னாள் சாம்பியனான கொல்கத்தா அணி இதுவரை 7 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி (ஐதராபாத், பெங்களூரு (2 முறை) டெல்லி, லக்னோ அணிகளுக்கு எதிராக), 2 தோல்வியுடன் (சென்னை, ராஜஸ்தானிடம்) 10 புள்ளிகள் பெற்று வலுவான நிலையில் உள்ளது.

    கொல்கத்தா அணியில் பேட்டிங்கில் சுனில் நரின் (286 ரன்), பில் சால்ட் (249), ஆந்த்ரே ரஸ்செல், கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர், ரிங்கு சிங் ஆகியோர் அதிரடி காட்டுகிறார்கள். பந்து வீச்சில் ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி, வைபவ் அரோரா, ஆல்-ரவுண்டர்கள் சுனில் நரின், ஆந்த்ரே ரஸ்செல் வலுசேர்க்கிறார்கள். அதிக விலைக்கு வாங்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ரன்களை வாரி வழங்குவதை கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டியது முக்கியமானதாகும்.

    பஞ்சாப் அணி நிலையற்ற ஆட்டத்தால் தடுமாறுகிறது. அந்த அணி 8 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி, 6 தோல்வியை சந்தித்துள்ளது. கடைசி 4 ஆட்டங்களில் தொடர்ச்சியாக தோற்றதும் இதில் அடங்கும். எஞ்சிய 6 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டும் பிளே-ஆப் வாய்ப்பில் நீடிக்க முடியும் என்பதால் இனி ஒவ்வொரு ஆட்டமும் பஞ்சாப்புக்கு வாழ்வா-சாவா? போன்றது.

    அந்த அணியில் பேட்டிங்கில் பின்வரிசை வீரர்களான ஷசாங்க் சிங், அஷூதோஷ் ஷர்மா அவ்வப்போது கலக்குகிறார்கள். தொடக்க மற்றும் மிடில் வரிசை பேட்டிங் வலுவற்றதாக இருப்பது பாதகமான அம்சமாகும். பிரப்சிம்ரன் சிங், லிவிங்ஸ்டன், ரோசவ், பேர்ஸ்டோ ஆகியோர் தொடர்ந்து சொதப்புகிறார்கள். தோள்பட்டை காயம் காரணமாக கடந்த 3 ஆட்டங்களை தவற விட்ட கேப்டன் ஷிகர் தவான் இன்றைய ஆட்டத்திலும் விளையாட வாய்ப்பில்லை. அடுத்த ஆட்டத்திற்கு முன்பாக அவர் உடல்தகுதியை எட்டி விடுவார் என்று நம்புவதாக பஞ்சாப் பந்து வீச்சு பயிற்சியாளர் சுனில் ஜோஷி நேற்று தெரிவித்தார்.

    பந்து வீச்சில் ஹர்ஷல் பட்டேல், சாம் கர்ரன், அர்ஷ்தீப் சிங், ரபடா ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். சுழற்பந்து வீச்சாளர் ஹர்பிரீத் பிரார் ஏற்றம் கண்டால் மேலும் பலம் சேர்க்கும்.

    நடப்பு தொடரில் 4 முறை 200 ரன்களுக்கு மேல் குவித்து இருக்கும் கொல்கத்தா அணி தனது மின்னல்வேக பேட்டிங்கை தொடர ஆர்வம் காட்டும். அதே நேரத்தில் சரிவில் இருந்து மீண்டு வெற்றிப் பாதைக்கு திரும்ப பஞ்சாப் அணி எல்லா வகையிலும் போராடும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இவ்விரு அணிகளும் இதுவரை 32 தடவை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் கொல்கத்தா 21 ஆட்டத்திலும், பஞ்சாப் 11 ஆட்டத்திலும் வெற்றி பெற்று இருக்கின்றன.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    கொல்கத்தா: பில் சால்ட், சுனில் நரின், ரகுவன்ஷி, வெங்கடேஷ் அய்யர், ஸ்ரேயாஸ் அய்யர் (கேப்டன்), ரிங்கு சிங், ஆந்த்ரே ரஸ்செல், ரமன்தீப் சிங் அல்லது வைபவ் அரோரா, மிட்செல் ஸ்டார்க், வருண் சக்ரவர்த்தி, ஹர்ஷித் ராணா.

    பஞ்சாப்: பிரப்சிம்ரன் சிங், ரோசவ் அல்லது பேர்ஸ்டோ, சாம் கர்ரன் (கேப்டன்) லியாம் லிவிங்ஸ்டன், ஜிதேஷ் ஷர்மா, ஷசாங்க் சிங், அஷூதோஷ் ஷர்மா, ஹர்பிரீத் பிரார், ஹர்ஷல் பட்டேல், ரபடா, அர்ஷ்தீப் சிங்.

    இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. 

    • சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் எடுத்தது.
    • ஆர்சிபி தரப்பில் ஸ்வப்னில் சிங், கரன் சர்மா, கேமரூன் க்ரீன் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் ஐதராபாத்- பெங்களூரு அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய ஆர்சிபி அணி கோலி- பட்டிதாரின் அரை சதம் மற்றும் கேமரூன் க்ரீனின் அதிரடியால் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் குவித்தது. ஐதராபாத் தரப்பில் உனத்கட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இந்த ஸ்கோரை ஐதராபாத் அணி எளிதாக எட்டிவிடும் என நினைத்த ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது ஆர்சிபி. ஐதராபாத் அணியின் தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மார்க்ரம் 7, நிதிஷ் ரெட்டி 13, கிளாசன் 7, அபிஷேக் 31, சமத் 10 என விக்கெட்டுகளை இழந்தனர்.

    இறுதி கட்டத்தில் வந்த பேட் கம்மின்ஸ் 15 பந்தில் 31 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அடுத்த வந்த புவனேஸ்வர் குமார் 3 பவுண்டரிகளை விளாசி 13 ரன்னில் வெளியேறினார். இறுதி வரை போராடிய ஷபாஸ் அகமது 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இறுதியில் சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் எடுத்தது. இதனால் ஆர்சிபி அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆர்சிபி தரப்பில் ஸ்வப்னில் சிங், கரன் சர்மா, கேமரூன் க்ரீன் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    • சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிராக விராட் கோலி அரை சதம் விளாசினார்.
    • அரை சதம் விளாசியதன் மூலம் விராட் கோலி சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

    நடப்பு ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்றைய லீக் ஆட்டத்தில் ஐதராபாத்- பெங்களூரு அணிகள் மோதுகிறது.

    இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக விராட் கோலி 51, பட்டிதார் 50 ரன்கள் குவித்தனர்.

    அரை சதம் விளாசியதன் மூலம் விராட் கோலி சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவது இதுவரை நடைபெற்ற 17 ஐ.பி.எல் சீசன்களில் 10 சீசன்களில் 400-க்கும் அதிக ரன்களை எடுத்த ஒரே வீரர் என்ற சாதனையைத் கோலி படைத்து உள்ளார்.

    அந்தவகையில், கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் சீசனில் 16 போட்டிகளில் விளையாடிய விராட் கோலி 4 அரைசதங்கள் உட்பட 557 ரன்கள் எடுத்துள்ளார். அதேபோல், 2013-ம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் சீசனில் 6 அரைசதங்கள் உட்பட மொத்தம் 634 ரன்களை குவித்திருக்கிறார். 2015-ம் ஆண்டு 505 ரன்களும், 2016 -ம் ஆண்டு 16 போட்டிகளில் விளையாடிய விராட் கோலி 4 சதங்கள் மற்றும் 7 சதங்கள் உட்பட 973 ரன்களை குவித்து அசத்தி இருக்கிறார். 2018-ம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் சீசனில் 14 போட்டிகள் விளையாடிய விராட் 4 அரைசதங்கள் உட்பட மொத்தம் 530 ரன்கள் எடுத்துள்ளார்.

    2019-ம் ஆண்டில் மொத்தம் 14 போட்டிகளில் விளையாடி 1 சதம் மற்றும் 2 அரைசதங்கள் உட்பட மொத்தம் 464 ரன்களும், 2020-ம் ஆண்டு 466 ரன்களையும் எடுத்திருக்கிறார் விராட் கோலி. அதேபோல், 2021-ம் ஆண்டில் 15 போட்டிகள் விளையாடிய அவர் 3 அரைசதங்கள் உட்பட மொத்தம் 405 ரன்களும், கடந்த 2023-ம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் சீசனில் 14 போட்டிகளில் விளையாடி 2 சதங்கள் மற்றும் 6 அரைசதங்கள் உட்பட மொத்தம் 639 ரன்களை விராட் கோலி குவித்துள்ளார்.

    இதனை தொடர்ந்து நடப்பு ஆண்டில் நடைபெற்று வரும் ஐ.பி.எல்லின் 17-வது சீசனில் 400 ரன்களுக்கும் மேல் குவித்துள்ளார். இவ்வாறாக இதுவரை நடைபெற்ற 17 சீசன்களில் சுமார் 10 சீசனில் 400-க்கும் அதிகமான ரன்கள எடுத்து சாதனை படைத்துள்ளார் விராட் கோலி.

    • ஆர்சிபி அணியில் படித்தார் 20 பந்தில் 50 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
    • ஐதராபாத் தரப்பில் உனத்கட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் ஐதராபாத்- பெங்களூரு அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி ஆர்சிபி அணியின் தொடக்க வீரர்களாக டுபிளிசிஸ்- விராட் கோலி களமிறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 48 ரன்கள் எடுத்தது. டுபிளிசிஸ் 25 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வில் ஜாக் 6 ரன்னில் அவுட் ஆனார்.

    இதனையடுத்து கோலி- பட்டிதார் ஜோடி அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தியது. அதிரடியாக விளையாடிய பட்டிதார் 20 பந்தில் 50 ரன்கள் விளாசி அவுட் ஆனார். மந்தமாக விளையாடிய விராட் கோலி 43 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

    இதனை தொடர்ந்து கேமரூன் க்ரீன்- தினேஷ் கார்த்திக் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார்.

    இதனால் ஆர்சிபி அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் குவித்தது. ஐதராபாத் தரப்பில் உனத்கட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

    • ஐதராபாத் அணி இதுவரை 7 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 2 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது.
    • பெங்களூரு அணி 8 போட்டிகளில் விளையாடி 1-ல் வெற்றியும் 7-ல் தோல்வியும் அடைந்து கடைசி இடத்தில் உள்ளது.

    ஐதராபாத்:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய 41-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    ஐதராபாத் அணி இதுவரை 7 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 2 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. பெங்களூரு அணி 8 போட்டிகளில் விளையாடி 1-ல் வெற்றியும் 7-ல் தோல்வியும் அடைந்து கடைசி இடத்தில் உள்ளது. இந்த போட்டி ஆர்சிபி அணிக்கு முக்கியமான போட்டியாகும்.

    ×