என் மலர்

  நீங்கள் தேடியது "PM Modi"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • குஜராத் மாநிலத்தில் சட்டசபை தேர்தலுக்காக தீவிர பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.
  • பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இரு பிரதமர்களை இழந்துள்ளோம் என காங்கிரஸ் தலைவர் தெரிவித்தார்.

  அகமதாபாத்:

  குஜராத் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் இரு கட்டமாக நடைபெறுகிறது. இதையொட்டி அங்கு தீவிர பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.

  கேடா மாவட்டத்தில் நேற்று பா.ஜ.க. சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி, தங்களின் வாக்கு வங்கி அரசியல் பாதிக்கும் என்பதால் பயங்கரவாத தாக்குதல்களுக்கு எதிராக காங்கிரஸ் குரல் கொடுப்பதில்லை. பயங்கரவாதிகளின் நலனை விரும்புபவர்களிடம் குஜராத் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். பயங்கரவாதம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. காங்கிரஸ் கட்சியின் அரசியலும் மாறவில்லை. வாக்கு வங்கி அரசியல் இருக்கும் வரை, பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்கும் என்ற அச்சமும் உண்மையானது என தெரிவித்தார்.

  இந்நிலையில், பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இரு பிரதமர்களை இழந்துள்ளோம் என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பதில் கொடுத்துள்ளார்.

  இதுதொடர்பாக, மல்லிகார்ஜூன கார்கே கூறியதாவது:

  நாட்டைப் பலப்படுத்துவதற்கும் ஒருங்கிணைப்பதற்கும் நாங்கள் இரண்டு புகழ்பெற்ற மற்றும் உலகம் மதிக்கும் பிரதமர்களை இழந்துள்ளோம். இது மாநில சட்டசபைக்கான தேர்தல், பாராளுமன்ற தேர்தல் அல்ல.

  மாநிலத்தை பாதிக்கும் பிரச்சனைகளை உங்கள் முன் வைத்துள்ளோம். அரசின் வெற்றி தோல்விகளை அவர் பேசினால் நல்லது.

  பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் யாராவது நாட்டின் சுதந்திரத்திற்காக போராடினார்களா? என கேள்வி எழுப்பினார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பெற்றோர் இல்லாவிட்டாலும், தங்கும் இடம் இல்லாமல் இருந்தாலும் பழங்குடியின சிறுவர்கள் பெரிய கனவுகளை கண்டு என்னை உத்வேகப்படுத்துகிறார்கள் என பிரதமர் மோடி கூறினார்.
  • பிரதமர் மோடி மற்றும் பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் பிரசாரங்களில் குழந்தைகளை தவறாக பயன்படுத்தியதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது.

  அகமதாபாத்:

  குஜராத்தில் வருகிற 1-ந்தேதி முதற்கட்ட சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இறுதிகட்ட பிரசாரம் நடைபெற்று வருகிறது.

  பிரதமர் மோடி அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரித்து வருகிறார். நேற்று நேத்ராங்க் பகுதியில் நடைபெற்ற பேரணியில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார்.

  முன்னதாக அவர் அப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின சமூகத்தை சேர்ந்த அவி (வயது 14), ஜெய் (11) ஆகிய சகோதரர்களை நேரில் சந்தித்து பேசினார். இவர்கள் இருவரும் தாய், தந்தையின்றி தனித்து வளர்ந்து வருகின்றனர்.

  இவர்களது பெற்றோர் நீண்டகாலமாக நோய் வாய்ப்பட்டு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தனர். அன்றிலிருந்து அவி, ஜெய் ஆகியோர் ஒருவரை ஒருவர் கவனித்து வருகின்றனர். பெற்றோரை இழந்த நிலையில் தங்கள் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய கூலி வேலை செய்து வருகின்றனர்.

  வறுமையில் பல கஷ்டங்கள் வந்தாலும் கல்வியை விடக்கூடாது என்ற உறுதியில் சகோதரர்கள் இருவரும் வேலைகளுக்கு இடையே பள்ளி படிப்பை தொடர்ந்து வருகின்றனர். அவி 9-ம் வகுப்பும், ஜெய் 6-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

  இதுபற்றிய தகவல் அறிந்த பிரதமர் மோடி நேற்று தனது சுற்றுப்பயணத்தின் போது சிறுவர்களை நேரில் சந்தித்து பேசினார். அப்போது சிறுவர்களிடம் நீங்கள் என்னவாக விரும்புகிறீர்கள் என கேட்டுள்ளார். அதற்கு அவி, நான் என்ஜினீயராக வேண்டும் என கூறி உள்ளார். ஜெய், நான் மாவட்ட கலெக்டராக விரும்புவதாக கூறி உள்ளார்.

  மாணவர்கள் இருவரையும் பாராட்டிய பிரதமர் மோடி, அரசு சார்பில் அவர்களது வீட்டில் டி.வி., கம்ப்யூட்டர் போன்ற வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்றார். மேலும் அவர்களது படிப்பு செலவை ஏற்பதாகவும் உறுதி அளித்தார்.

  பின்னர் அங்கு நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, தான் சந்தித்து பேசிய பழங்குடியின சிறுவர்களை குறிப்பிட்டு பேசினார். பெற்றோர் இல்லாவிட்டாலும், தங்கும் இடம் இல்லாமல் இருந்தாலும் இந்த சிறுவர்கள் பெரிய கனவுகளை கண்டு என்னை உத்வேகப்படுத்துகிறார்கள் என்றார்.

  பேரணியில் 2 சிறுவர்களை பற்றி பிரதமர் பேசிய வீடியோவை டுவிட் செய்த குஜராத் முதல்-மந்திரி பூபேந்திர படேல், 'பிரதமர் பேசிய அவி மற்றும் ஜெய் என்ற 2 குழந்தைகளின் போராட்டத்தின் மனதை தொடும் கதையை கேளுங்கள்' என குறிப்பிட்டிருந்தார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

  அதே நேரம் பிரதமர் மோடி மற்றும் பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் பிரசாரங்களில் குழந்தைகளை தவறாக பயன்படுத்தியதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது. இதுதொடர்பாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஜி-20 அமைப்பு குறித்து விளக்கவும், அடுத்த ஆண்டு மாநாட்டை நடத்துவது தொடர்பாகவும் மாநில முதல்-மந்திரிகள் கூட்டத்தை டிசம்பர் 5-ந்தேதி டெல்லியில் பிரதமர் மோடி கூட்டியுள்ளார்.
  • கூட்டத்தில் பங்கேற்க மாநில முதல்-மந்திரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தாபானர்ஜி தான் பங்கேற்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

  சென்னை:

  இந்தோனேசியா நாட்டின் பாலிதீவில் நடைபெற்ற ஜி-20 நாடுகளின் மாநாட்டில் அந்த அமைப்பின் தலைவராக பிரதமர் நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டார்.

  இந்த நிலையில் ஜி-20 நாடுகளின் தலைமைப் பொறுப்பை பிரதமர் மோடி வருகிற டிசம்பர் 4-ந்தேதி ஏற்கிறார்.

  இதைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் டெல்லியில் ஜி-20 நாடுகளின் மாநாடு நடைபெறுகிறது.

  இந்த நிலையில் ஜி-20 அமைப்பு குறித்து விளக்கவும், அடுத்த ஆண்டு மாநாட்டை நடத்துவது தொடர்பாகவும் மாநில முதல்-மந்திரிகள் கூட்டத்தை டிசம்பர் 5-ந்தேதி டெல்லியில் பிரதமர் மோடி கூட்டியுள்ளார். இக்கூட்டத்தில் பங்கேற்க மாநில முதல்-மந்திரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தாபானர்ஜி தான் பங்கேற்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

  இந்த சூழலில் தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினும் இந்த கூட்டத்தில் பங்கேற்க வாய்ப்புள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

  இதற்காக அவர் வருகிற 4-ந்தேதி டெல்லி செல்லலாம் என்றும், 5-ந்தேதி கூட்டத்தை முடித்து விட்டு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய மந்திரிகளை சந்திக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • முதல் கட்ட வாக்குப்பதிவுக்கு இன்னும் சில தினங்களே இருப்பதால் குஜராத்தில் தலைவர்கள் முகாமிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
  • பிரதமர் நரேந்திர மோடி ஏற்கனவே 3 முறை தனது சொந்த மாநிலமான குஜராத்துக்கு சென்று பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்தார்.

  அகமதாபாத்:

  182 தொகுதிகளை கொண்ட குஜராத் மாநில சட்டசபைக்கு 2 கட்டங்களாக டிசம்பர் 1 மற்றும் 5-ந்தேதிகளில் தேர்தல் நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை 8-ந்தேதி நடைபெறுகிறது.

  முதல் கட்ட தேர்தலில் 89 தொகுதிகளுக்கும், 2-வது கட்ட தேர்தலில் 93 இடங்களுக்கும் ஓட்டுப்பதிவு நடைபெற இருக்கிறது.

  குஜராத் மாநிலத்தில் பா.ஜனதா நீண்ட காலமாக ஆட்சி செய்து வருகிறது. 1998-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து 6 சட்டசபை தேர்தல்களில் அந்த கட்சி வெற்றி பெற்றுள்ளது. தொடர்ந்து 24 ஆண்டுகளாக பா.ஜனதா அங்கு ஆட்சி நடத்தி வருகிறது. அந்த கட்சி தொடர்ந்து ஆட்சியை தக்க வைத்து கொள்ளும் ஆர்வத்தில் உள்ளது.

  காங்கிரஸ் கட்சி பா.ஜனதாவிடம் இருந்து இந்த முறையாவது ஆட்சியை கைப்பற்றி விட வேண்டும் என்ற வேட்கையில் உள்ளது. குஜராத்தை பொறுத்தவரை பா.ஜனதாவும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே தான் எப்போதும் நேரடி போட்டி இருக்கும்.

  தற்போது முதல் முறையாக அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியும் களம் இறங்குகிறது. டெல்லியை தொடர்ந்து பஞ்சாப்பிலும் ஆட்சியை பிடித்ததால் குஜராத் தேர்தலிலும் ஆம் ஆத்மி குதித்துள்ளது. இதனால் மும்முனை போட்டி நிலவுகிறது.

  ஆளும் பா.ஜனதா அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. காங்கிரஸ் 179 இடங்களிலும், அதன் கூட்டணியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் 2 தொகுதியிலும் நிற்கிறது. ஆம் ஆத்மி கட்சி 181 தொகுதிகளில் வேட்பாளர்களை களத்தில் நிறுத்தி உள்ளது. இது தவிர சிறிய கட்சிகளும் போட்டியிடுகின்றன.

  182 தொகுதியில் மொத்தம் 1621 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இதில் 139 பேர் பெண் வேட்பாளர்கள் ஆவார்கள். 3 பிரதான கட்சிகளும் சேர்ந்து மொத்தம் 38 பெண் வேட்பாளர்களை தான் நிறுத்தி உள்ளது. பா.ஜனதாவில் 18 பேருக்கும், காங்கிரசில் 12 பேருக்கும் டிக்கெட் கொடுக்கப்பட்டு உள்ளது. இது கடந்த முறையை விட கூடுதலாகும்.

  குஜராத் சட்டசபை தேர்தலில் 4.90 கோடி வாக்காளர்கள் ஓட்டு போட தகுதியானவர்கள். இதில் 2.53 கோடி பேர் ஆண் வாக்காளர்கள். பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 2.37 கோடியாகும். தேர்தலுக்காக 51,782 வாக்கு சாவடிகள் அமைக்கப்படுகிறது.

  முதல் கட்ட வாக்குப்பதிவுக்கு இன்னும் சில தினங்களே இருப்பதால் குஜராத்தில் தலைவர்கள் முகாமிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பிரதமர் நரேந்திர மோடி ஏற்கனவே 3 முறை தனது சொந்த மாநிலமான குஜராத்துக்கு சென்று பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்தார். அமித்ஷா உள்ளிட்ட பா.ஜனதா தலைவர்களும் அங்கு ஓட்டு வேட்டையில் ஈடுபட்டனர். ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் ஆர்வத்தில் பா.ஜனதா உள்ளது.

  நடை பயணத்தில் ஈடுபட்டுள்ள ராகுல்காந்தி காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்தார். இதேபோல ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் அங்கு தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டு தனது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.

  இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடியும், கெஜ்ரிவாலும் குஜராத்தில் இன்று போட்டி பிரசாரம் செய்கிறார்கள். வாக்காளர்களை கவரும் வகையில் அவர்கள் ஓட்டு வேட்டையில் ஈடுபடுகிறார்கள். வைர நகரமான சூரத்தில் அவர்கள் ஆதரவு திரட்டுகிறார்கள்.

  மோடி 3 பொதுக்கூட்டங்களில் பேசுகிறார். சூரத்தில் உள்ள மோட்டா வரச்சா, பரூச் மாவட்டம் நேட்ரங், கேடா மாவட்டம் மெகமதாபாத் ஆகிய இடங்களில் மோடி பா.ஜனதா வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்.

  அவர் 25 கிலோ மீட்டர் தூரம் ரோடு ஷோ செல்கிறார். விமான நிலையத்தில் இருந்து பொதுக்கூட்டம் நடைபெறும் மோட்டா வராச்சா வரும் வரை இந்த ரோடு ஷோ நடக்கிறது. இதை சூரத் பகுதி பா.ஜனதா தலைவர் ஜெகதீஷ் படேல் தெரிவித்தார். சூரத் பகுதியில் இருந்து 12 எம்.எல்.ஏ.க்கள் சட்டசபைக்கு செல்கிறார்கள்.

  கெஜ்ரிவால் 2 நாள் பயணமாக சூரத் செல்கிறார். இன்று அவர் ஜவுளி தொழிலில் ஈடுபட்டுள்ள தலைவர்கள், கைவினை கலைஞர்களுடன் உரையாடுகிறார். சூரத்தில் உள்ள டவுன்ஹால் பகுதியில் இந்த உரையாடல் நடக்கிறது. இதில் ஏராளமான மக்கள் கலந்து கொள்கிறார்கள். இந்த பகுதி பா.ஜனதாவின் கோட்டையாகும்.

  மேலும் கெஜ்ரிவால் அங்குள்ள கதர்காம் பகுதியில் ரோடு ஷோவிலும் ஈடுபடுகிறார். ஒரே நேரத்தில் மோடியும், கெஜ்ரிவாலும் குஜராத்தில் இன்று பிரசாரம் செய்வதால் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • உடல் உறுப்புகள் செயலிழந்ததால் விக்ரம் கோகலே சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
  • இந்தி நடிகர் விக்ரம் கோகலே மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

  புதுடெல்லி:

  மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த பழம்பெரும் நடிகர் விக்ரம் கோகலே (77). இந்தி, மராத்தி உள்ளிட்ட மொழிகளில் 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

  கடந்த 5ம் தேதி விக்ரம் கோகலேவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் புனேவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் சிறுநீரகம், இருதயம் உள்ளிட்ட உறுப்புகளின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டன. இதனால் கோமா நிலைக்கு சென்ற விக்ரம் கோகலே, செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார்.

  இதற்கிடையே, விக்ரம் கோகலே உடல் உறுப்புகள் செயல் இழந்ததால் இன்று மதியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நடிகர் விக்ரம் கோகலேவின் மறைவிற்கு திரைத்துறையினர், ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

  இந்நிலையில், நடிகர் விக்ரம் கோகலே மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

  இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், விக்ரம் கோகலே படைப்பாற்றல் மிக்க பல்துறை நடிகராவார். அவரது நீண்ட நடிப்பு வாழ்க்கையில் பல சுவாரசியமான கதாபாத்திரங்களுக்காக அவர் நினைவுகூரப்படுவார். அவரது மறைவு வருத்தம் அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் இரங்கல்கள். ஓம் சாந்தி என பதிவிட்டுள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பி.எஸ்.எல்.வி. சி-54 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
  • ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய இஸ்ரோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

  புதுடெல்லி:

  ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இஸ்ரோ தயாரித்த

  பி.எஸ்.எல்.வி. சி-54 ராக்கெட் இன்று வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இந்த ராக்கெட் இந்தியாவின் 960 கிலோ எடை கொண்ட 'ஓசன்சாட்-03' (இ.ஓ.எஸ்-06) என்ற புவியை கண்காணிக்கும் செயற்கைக்கோள் மற்றும் 8 நானோ செயற்கைக்கோள்களை சுமந்து சென்றது.

  இந்நிலையில், பி.எஸ்.எல்.வி. சி54 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய இஸ்ரோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

  இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், பி.எஸ்.எல்.வி. சி54 ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டதற்கு இஸ்ரோ மற்றும் என்.எஸ்.ஐ.எல். நிறுவனத்திற்கு வாழ்த்துக்கள். இ.ஓ.எஸ்-06 செயற்கைக்கோள் நமது கடல் வளங்களை சிறந்த முறையில் பயன்படுத்த உதவும் என பதிவிட்டுள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பிரதமர் மோடி, அரசியல் சாசனத்தின் சிறப்புகளுடன் மும்பை பயங்கரவாத தாக்குதலையும் நனைவுகூர்ந்தார்.
  • மும்பை பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த பொதுமக்கள், பாதுகாப்பு வீரர்களுக்கு என் அஞ்சலி என குறிப்பிட்டார்.

  உச்சநீதிமன்ற வளாகத்தில் நடைபெறும் அரசியலமைப்பு தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். அங்கு, இந்திய ஜனநாயகங்களின் தாய் என்ற தலைப்பில் அரசியலமைப்பு தின நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

  இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, அரசியல் சாசனத்தின் சிறப்புகளுடன் மும்பை பயங்கரவாத தாக்குதலையும் நனைவுகூர்ந்தார்.

  அப்போது, மும்பை பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த பொதுமக்கள், பாதுகாப்பு வீரர்களுக்கு என அஞ்சலி என குறிப்பிட்டார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அரசியலமைப்பு சபை ஏற்றுக்கொண்டதன் நினைவாக நவம்பர் 26ம் தேதி அரசியலமைப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது.
  • தேசத்திற்கான அவர்களின் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றுவதற்கான உறுதிப்பாட்டை பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

  1949-ம் ஆண்டு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை அரசியலமைப்பு சபை ஏற்றுக்கொண்டதன் நினைவாக நவம்பர் 26ம் தேதி அரசியலமைப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது.

  இந்த நிலையில், அரசியலமைப்புச் சட்டத்தை வழங்கிய பெருமக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தும் வகையில், தேசத்திற்கான அவர்களின் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றுவதற்கான உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.

  இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் "இன்று, அரசியலமைப்பு தினத்தில், நமது அரசியலமைப்பை நமக்கு வழங்கிய பெருமக்களுக்கு நாங்கள் மரியாதை செலுத்துகிறோம். மேலும் நமது தேசத்திற்கான அவர்களின் பார்வையை நிறைவேற்றுவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறோம்" என்று குறிப்பிட்டிருந்தார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நமது வரலாற்று உணர்வை முடக்கப்படாமல் பார்த்துக் கொள்வது நமது பொறுப்பாகும்.
  • இந்திய விடுதலை போராட்ட வரலாற்றில், தவறுகள் தற்போது சரி செய்யப்படுகின்றன.

  முகலாய மன்னர் ஔரங்கசீப் படைகளை தோற்கடித்த அசாமை சேர்ந்த படைத் தளபதி லச்சித் போர்புகானின் 400-வது பிறந்தநாள் விழா கொண்டாடத்தையொட்டி டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி கூறியதாவது:

  இந்தியாவின் வரலாறு அடிமைத்தனம் பற்றியது மட்டுமல்ல,எண்ணற்ற மாமனிதர்களின் வீரத்தைப் பற்றியது, துரதிருஷ்டவசமாக சுதந்திரத்திற்குப் பிறகும் அடிமைக்கால சதியால் எழுதப்பட்ட அதே வரலாறு நமக்கு கற்றுத் தரப்பட்டுள்ளது.

  நம்மை அடிமைப்படுத்திய அந்நியர்கள் பற்றிய தகவல்களை சுதந்திரத்திற்கு பின் மாற்றம் செய்திருக்க வேண்டும், ஆனால், அப்படி செய்யப்படவில்லை. நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் ஆக்கிரமிப்பிற்கு எதிரான போராட்ட வரலாறுகள் வேண்டுமென்றே மறைக்கப்பட்டுள்ளன. இந்த தவறுகள் தற்போது சரி செய்யப்படுகின்றன.

  லச்சித் போர்புகானின் வாழ்க்கை நாடு முதலில் என்ற மந்திரத்தை உயிர்ப்பிக்க நமக்கு உத்வேகம் அளிக்கிறது. வாரிசு மற்றும் உறவினர்களுக்கு பதிலாக நாட்டை உயர்வாக கருத வேண்டும் என்பதை அவரது வாழ்க்கை நமக்கு கற்றுத் தருகிறது.

  நினைவிற்கு எட்டாத காலத்திலிருந்து நமது தேசம் ஞானிகளாலும் துறவிகளாலும் வழி நடத்தப்படுகிறது. உண்மையான கடந்த காலத்தை காணும்போது மட்டுமே, அதன் அனுபவங்களிலிருந்து எதிர்காலத்திற்கான சரியான திசையில் செல்ல முடியும்.

  நமது வரலாற்று உணர்வு ஒரு சில தசாப்தங்களுக்குள் முடக்கப்படாமல் பார்த்துக் கொள்வது நமது பொறுப்பாகும். மீண்டும் மீண்டும் சிலவற்றை நினைவுப்படுத்துவதன் மூலமே அடுத்த தலைமுறைக்கு வரலாற்றின் உண்மையான வடிவத்தை நாம் வழங்க முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சட்டசபை தேர்தலையொட்டி பா.ஜனதா தலைவர்கள் அனைவரும் குஜராத்தில் முகாமிட்டுள்ளனர்.
  • பாதுகாப்பு காரணங்களுக்காக கூட்டம் நடைபெறும் இடத்தின் அருகே டிரோன்கள் பறக்க மாவட்ட கலெக்டர் தடை விதித்திருந்தார்.

  புதுடெல்லி:

  குஜராத்தில் அடுத்த மாதம் 1 மற்றும் 5-ந்தேதிகளில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

  சட்டசபை தேர்தலையொட்டி பா.ஜனதா தலைவர்கள் அனைவரும் குஜராத்தில் முகாமிட்டுள்ளனர். மேலும் பிரதமர் நரேந்திர மோடியும் குஜராத்தில் சூறாவளி பிரசாரம் செய்து வருகிறார். நேற்று ஒரே நாளில் 4 இடங்களில் நடந்த பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசினார்.

  நேற்று மாலை அகமதாபாத்தின் பாவ்லா என்ற இடத்தில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். பாதுகாப்பு காரணங்களுக்காக கூட்டம் நடைபெறும் இடத்தின் அருகே டிரோன்கள் பறக்க மாவட்ட கலெக்டர் தடை விதித்திருந்தார்.

  இந்த நிலையில் பிரதமர் மோடி பங்கேற்ற கூட்டத்தில் மர்ம டிரோன் ஒன்று பறந்தது. உடனே சுதாரித்துக்கொண்ட பாதுகாப்பு படையினர் அந்த டிரோனை சுட்டு வீழ்த்தினர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

  இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி டிரோன்களை பறக்க விட்ட 3 பேரை கைது செய்தனர். அவர்கள் தங்களின் தனிப்பட்ட நோக்கத்துக்காக பிரதமர் மோடியின் தேர்தல் பிரசாரத்தை டிரோனில் வீடியோ எடுப்பதற்காக அதை அனுப்பி இருந்தது தெரிய வந்தது. அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மலேசியாவின் 10-வது பிரதமராக அன்வார் இப்ராகிம் பதவியேற்றார்.
  • புதிய பிரதமராக பதவியேற்ற அன்வார் இப்ராகிமுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

  புதுடெல்லி:

  மலேசியாவில் 222 பாராளுமன்றத் தொகுதிகளுக்கான 15- வது பாராளுமன்ற பொதுத் தேர்தல் கடந்த வாரம் நடந்தது. 75 வயதான முன்னாள் துணைப் பிரதமர் அன்வார் இப்ராகிமின் கூட்டணி சனிக்கிழமை நடந்த தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையான 112 இடங்களில் 82 இடங்களை வென்றது. இந்தத் தேர்தலில் எதிர்பாராதவிதமாக மலாய் இனத்தைச் சார்ந்த முன்னாள் பிரதமர் முகைதின் யாசினின் வலதுசாரி தேசியக் கூட்டணி 72 இடங்களை வென்றது. அதன் கூட்டணிக் கட்சியான பான்-மலேசிய இஸ்லாமியக் கட்சி 49 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.

  இதற்கிடையே, ஐக்கிய மலாய் தேசிய அமைப்பு, அன்வார் தலைமையில் ஆட்சி அமைக்க ஒப்புக்கொண்டதன் மூலம் நிச்சயமற்ற நிலை முடிவுக்கு வந்தது.

  மலேசிய பொதுத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், சீர்திருத்தவாத தலைவர் அன்வார் இப்ராகிமை, புதிய பிரதமராக மலேசிய மன்னர் நியமித்தார். நேற்று மாலை நடைபெற்ற விழாவில் மலேசியாவின் 10-வது பிரதமராக அன்வார் இப்ராகிம் பிரதமராக பதவியேற்றார்.

  இந்நிலையில், மலேசியாவின் புதிய பிரதமராக பதவியேற்ற அன்வார் இப்ராகிமுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.

  இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், மலேசியாவின் பிரதமராக நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துக்கள் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம். இந்தியா-மலேசியா மேம்படுத்தப்பட்ட மூலோபாய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த நெருக்கமாக இணைந்து பணியாற்றுவதை நான் எதிர்நோக்குகிறேன் என பதிவிட்டுள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print