search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமேதி"

    • ராகுல் காந்தி இரண்டு நாட்களுக்கு ஒருமுறை வெளியிடும் அறிக்கையில் வயநாடு அவரது குடும்பம் என குறிப்பிடுவது நமக்குத் தெரியும்.
    • சிலர் வீடுகளை மாற்றுவதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், ஒருவர் குடும்பத்தை மாற்றிவிட்டார் என்பதை நாம் முதன்முறையாக பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி இந்த முறை அமேதி தொகுதியில் போட்டியிடவில்லை.

    2014 தேர்தலில் அமேதியில் ராகுல் காந்தி- ஸ்மிரிதி இரானி போட்டியிட்டனர். ராகுல் காந்தி வெற்றி பெற்றார். 2019-ம் ஆண்டு இருவரும் மீண்டும் போட்டியிட்டனர். அப்போது ராகுல் காந்தி வயநாடு தொகுதியிலும் போட்டியிட்டார். அமேதி தொகுதியில் ஸ்மிரிதி இரானி வெற்றி பெற்றார்.

    தற்போது ஸ்மிரிதி இரானி மீண்டும் அமேதி தொகுதியில் போட்டியிடுகிறார். ராகுல் காந்தி வயநாட்டில் போட்டியிடுகிறார்.

    வயநாட்டில் வருகிற 26-ந்தேதி வாக்குப்பதி நடைபெற இருக்கிறது. அமேதியில் மே 20-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.

    இந்த நிலையில் ராகுல் காந்தி குடும்பத்தை மாற்றிவிட்டார் என ஸ்மிரிதி இரானி என விமர்சித்துள்ளார். இது தொடர்பாக ஸ்மிரிதி இரானி கூறியதாவது:-

    ராகுல் காந்தி இரண்டு நாட்களுக்கு ஒருமுறை வெளியிடும் அறிக்கையில் வயநாடு அவரது குடும்பம் என குறிப்பிடுவது நமக்குத் தெரியும். சிலர் வீடுகளை மாற்றுவதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், ஒருவர் குடும்பத்தை மாற்றிவிட்டார் என்பதை நாம் முதன்முறையாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஏப்ரல் 26-ந்தேதிக்குப் பிறகு அவர் இங்கு வரும்போது, நம்மை மதம் மற்றும் ஜாதி அடிப்படையில் பிரிக்க முயற்சி செய்வார்.

    அவர் சனாதனத்திற்கு எதிரானவர் என்பது தெரிந்த பிறகும், ராமபக்தர்கள் அவரை ராம் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு அழைத்தனர். அமேதியை பிரதிநிதித்துவப்படுத்தியவர் (எம்.பி.) ஆணவத்தால் அழைப்பை மறுத்தது வருத்தமளிக்கிறது" என்றார்.

    ராகுல் காந்தியை விமர்சனம் செய்திருந்த நிலையில், அமேதி தொகுதிக்காக ஸ்மிரிதி இரானி செய்த ஐந்து பணிகளை தெரிவிக்கட்டும் என காங்கிரஸ் தலைவர் சவால் விட்டுள்ளார்.

    • கடந்த முறை ராகுல் காந்தி அமேதி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
    • தற்போது அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளுக்கு இன்னும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை.

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி கடந்த வருடம் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். காந்தி குடும்பத்திற்கு பாரம்பரியமான அமேதி தொகுதியிலும், கேரள மாநிலத்தின் வயநாடு தொகுதியிலும் போட்டியிட்டார். அமேதி தொகுதியில் ஸ்மிரிதி இரானியிடம் தோல்வி கண்டார். வயநாட்டில் வெற்றி பெற்றார்.

    இந்த முறை வயநாடு தொகுதியில் மட்டும் போட்டியிடுகிறார். வயநாடு தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். வருகிற 26-ந்தேதி வயநாடு தொகுதிக்கு வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.

    உத்தர பிரதேச மாநிலம் அமேதி தொகுதிக்கு மே 20-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இந்த தொகுதிக்கான வேட்பாளரை காங்கிரஸ் கட்சி இன்னும் அறிவிக்காமல் உள்ளது.

    இந்த நிலையில் ராகுல் காந்தியிடம் மீண்டும் அமேதி தொகுதியில் போட்யிடுவீர்களா? என கேட்கப்பட்டது. இதற்கு ராகுல் காந்தி கூறியதாவது:-

    அமேதி தொகுதி குறித்து கட்சி முடிவு எடுக்கும். கட்சியின் எந்த உத்தரவை நான் பெற்றாலும் அதற்கு கட்டுப்படுவேன். எங்களுடைய கட்சியில் இதுபோன்ற முடிவுகள் மத்திய தேர்தல் குழு கூட்டத்தில்தான் எடுக்கப்படும்.

    ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தி போட்டியிட்டு வந்தார். தற்போது உடல்நலத்தை கருத்தில் கொண்டு மக்களவை தேர்தலில் போட்டியிடுவதில்லை என முடிவு செய்துள்ளார். இதனால் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    இதனால் ரேபரேலி தொகுதியில் பிரியங்காவின் கணவர் வதேரா போட்டியிட வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. இரண்டு தொகுதிகளிலும் காந்தி குடும்பத்தை சேர்ந்தவர்கள்தான் போட்டியிட வேண்டும் என உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

    உத்தர பிரதேசம் மாநிலத்தில் மொத்தம் 80 தொகுதிகள் உள்ளன. காங்கிரஸ் கட்சி சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. காங்கிரஸ் 17 இடங்களில் போட்டியிடுகிறது.

    உத்தர பிரதேச மாநிலத்தில் ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது, வருகிற வெள்ளிக்கிழமை (நாளைமறுதினம்) முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.

    • ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளதாக தகவல்.
    • ஸ்மிரிதி இரானியிடம் புகார் அளித்ததும் உடனடியாக நடவடிக்கை எடுக்க ஏற்பாடுபாடு.

    பா.ஜனதா கட்சியின் உத்தர பிரதேச மாநில அமேதி தொகுதி எம்.பி.யும், மத்திய மந்திரியுமான ஸ்மிரிதி இரானி தனது சொந்த தொகுதிக்கு 3 நாள் பயணமாக சொந்த தொகுதிக்கு சென்றுள்ளார்.

    நேற்று அவர்கள் தொகுதிகளை சேர்ந்தவர்கள் புகார் மனுக்கள் அளித்தனர். அப்போது ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர்கள் பலர் புகார் அளிக்க வந்திருந்தனர். அவர்கள் நாங்கள் ஓய்வு பெற்ற போதிலும், வேலைப் பார்த்தபோது எங்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. இன்னும் சம்பளம் வழங்கப்படாமல் நிலுவையில்தான் உள்ளது. அதை பெற்றுத்தர உதவ வேண்டும் எனத் தெரிவித்தனர்.

    ஸ்மிரிதி இரானி உடனடியாக மாவட்ட கல்வி ஆய்வாளரை தொடர்பு கொண்டார். அவரிடம், உங்கள் முன் நிலுவையில் இருக்கும் அனைத்து கோப்புகளையும் உடனடியாக சரிபார்த்து அனுப்புங்கள் என உத்தரவிட்டார். அதுவும் இன்றைக்குள் அனுப்ப வேண்டும் எனக் கூறினார்.

    மேலும், கொஞ்சம் மனிதாபிமானத்தை காட்டுங்கள். இது அமேதி. இங்குள்ள ஒவ்வொருவரும் என்னை அணுகலாம். யோகி ஆதித்ய நாத் அரசு, சம்பளம் நிலுவையில் உள்ள ஆசிரியர்கள் அவர்களுடைய சம்பளத்தை உடனடியாக பெற வேண்டும் என விரும்புகிறது. அதனால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

    தனது தொகுதியான அமேதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் கலந்துகொண்டு மக்களின் குறைகளை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேட்டறிந்தார். #RahulGandhi
    லக்னோ :

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள தனது பாராளுமன்ற தொகுதியான அமேதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

    தனது தொகுதிக்குட்பட்ட அரசு விளைபொருள் கொள்முதல் கூடத்தில் இரு நாட்கள் காத்திருந்து உயிரிழந்த விவசாயி குடும்பத்தாரை ராகுல் காந்தி சந்தித்து நேற்று ஆறுதல் கூறினார். பின்னர், புர்ஸத்கஞ்ச் பகுதியில் காங்கிரஸ் தொண்டர்களிடையே பேசிய ராகுல் காந்தி பிரதமர் மோடியையும், மத்திய அரசையும் கடுமையாக தாக்கி பேசினார்.

    இந்நிலையில், பயணத்தின் இரண்டாம் நாளான இன்று தொகுதி மக்களின் குறை கேட்பு கூட்டதில் கலந்துகொண்டு மக்களின் குறைகளை ராகுல் கேட்டறிந்தார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் அவரிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர். இதைத்தொடர்ந்து, தாலா எனும் கிராமத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விவசாயிகள் சந்திப்பில் பங்கேற்று விவசாயிகளுடன் அவர் கலந்துரையாட உள்ளார்.

    இறுதியாக சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட்கள் தேடுதல் வேட்டையின் போது கடந்த 20-ம் தேதி பலியான துணை ராணுவ வீரரான அனில் மயூரியாவின் வீட்டிற்கு சென்று ராகுல் காந்தி ஆறுதல் கூறுவார் என மாநில காங்கிரஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #RahulGandhi
    ×