அமேதி, ரேபரேலி தொகுதி வேட்பாளர்கள் யார்?- காங்கிரஸ் நாளை ஆலோசனை

கடந்த தேர்தலில் அமேதி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட்டார்.ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தி போட்டியிட்டார்.
அமேதி, ரேபரேலி தொகுதி வேட்பாளர்கள் யார்?- காங்கிரஸ் நாளை ஆலோசனை
Published on

காங்கிரஸ் கட்சி அமேதி, ரேபரேலி உள்ளிட்ட பல தொகுதிகளுக்கு இன்னும் வேட்பாளர்களை அறிவிக்காமல் உள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் கமிட்டி நாளை மாலை கூடுகிறது. அப்போது அமேதி, ரேபரேலி தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் குறித்து ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

காங்கிரஸ் கட்சி இதுவரை மக்களவை தேர்தலில் 317 இடங்களுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

கடந்த தேர்தலில் அமேதி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட்டார். இவர் ஸ்மிரிதி இரானியிடம் தோல்வியடைந்தார். ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தி போட்டியிட்டார். தற்போது உடல் நலம் காரணமாக மக்களவை தொகுதியில் சோனியாக காந்தி போட்டியிடவில்லை. இதனால் காங்கிரஸ் கட்சியின் பாரம்பரியமான இந்த இரண்டு தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவிப்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com