search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஜனாதிபதி திரவுபதி முர்மு கருப்பாக இருப்பதால் காங்கிரஸ் எதிர்த்தது: பிரதமர் மோடி கடும் தாக்கு
    X

    ஜனாதிபதி திரவுபதி முர்மு கருப்பாக இருப்பதால் காங்கிரஸ் எதிர்த்தது: பிரதமர் மோடி கடும் தாக்கு

    • ஜனாதிபதி தேர்தலின்போது திரவுபதி முர்முவை வேட்பாளராக நிறுத்தியபோது, காங்கிரஸ் ஏன் எதிர்ப்பு தெரிவித்தது என்று ஆச்சர்யம் அடைந்தேன்.
    • அப்போது என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால், தற்போது பழங்குடியினர் என்ற திரவுபதி முர்மு-வை ஏன் தோற்கடிக்க முயற்சித்தார்கள் என்பது தெரிகிறது.

    சாம் பிட்ரோடா ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில் "சில சண்டைகளை விட்டுவிட்டு மக்கள் ஒன்றாக வாழக்கூடிய மகிழ்ச்சியான சூழலில் 75 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறோம். கிழக்கில் உள்ளவர்கள் சீனர்களைப் போலவும், மேற்கில் உள்ளவர்கள் அரேபியர்களைப் போலவும், வடக்கில் உள்ளவர்கள் வெள்ளையர்களைப் போலவும், தெற்கில் உள்ளவர்கள் ஆப்ரிக்கர்களைப் போன்று தோற்றமளிக்கிறார்கள். இந்தியாவைப் போன்ற பலதரப்பட்டோர் வாழும் தேசத்தை மகிழ்ச்சியாக வைத்து இருக்க முடியும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

    இதற்கு பா.ஜனதா தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    இது தொடர்பாக பிரதமர் மோடி தெலுங்கானா மாநிலம் வாரங்கல்லில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசும்போது கடும் கண்டனம் தெரிவித்தார்.

    இது தொடர்பாக பிரதமர் மோடி கூறியதாவது:-

    இளவரசர் (ராகுல் காந்தி), நீங்கள் சாம் பிட்ரோடா கருத்துக்கு பதில் அளிக்க வேண்டும். நமது நாட்டு மக்களவை நிறம் அடிப்படையில் அவமதிப்பதை நாட்டு ஏற்றுக் கொள்ளாது. மோடி இதை உண்மையிலேயே பொறுத்துக் கொள்ளமாட்டார்.

    ஜனாதிபதி தேர்தலின்போது திரவுபதி முர்முவை வேட்பாளராக நிறுத்தியபோது, காங்கிரஸ் ஏன் எதிர்ப்பு தெரிவித்தது என்று ஆச்சர்யம் அடைந்தேன். அப்போது என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால், தற்போது பழங்குடியினர் என்ற திரவுபதி முர்மு-வை ஏன் தோற்கடிக்க முயற்சித்தார்கள் என்பது தெரிகிறது.

    இளவரசரின் (ராகுல் காந்தி) மாமா அமெரிக்காவில் உள்ளார். அவர்தான் இளவரசருக்கு வழிகாட்டி. கருப்பாக உள்ளவர்கள் தென்ஆப்பிரிக்காவில் இருந்து வந்தவர்கள் எனக் கூறுகிறார். தற்போது, அவர்கள் திரவுபதி முர்முவை ஆப்பிரிக்கர் என நினைத்தார்கள் என்பது தற்போது என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அவருடைய தோல் கருமையாக இருப்பதால் அவர் தோற்கடிக்கப்பட வேண்டும் என்று நினைத்தார்கள்.

    இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×