search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "corona"

  • அமெதிலியா எம் டண்டன் ஆன்லைன் மூலம் ஆராய்ச்சியை மேற்கொண்டார்.
  • கோவிட் 19 பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தாம்பத்தியம் மிக மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளது.

  அமெரிக்காவை தலைமை இடமாகக் கொண்ட பாஸ்டன் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் அமெதிலியா எம் டண்டன் ஆன்லைன் மூலம் ஆராய்ச்சியை மேற்கொண்டார்.

  இது குறித்து ஜன்னல் ஆப் செக்ஸ்வல் மெடிசினில் வெளியிடப்பட்ட ஆய்வு கட்டுரையில், கோவிட் 19 பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தாம்பத்தியம் மிக மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளது.

  குறிப்பாக நீண்ட நாட்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்கள் பாலியலில் அதிக அளவில் ஆர்வம் காட்டுவதில்லை. அவர்களுக்கு பாலியல் நல்வாழ்வில் உடலில் உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

  ஆன்லைன் ஆய்வில் பங்கேற்ற பாதிக்கும் மேற்பட்ட பெண்கள் கொரோனா பாதிப்பு இல்லை என தெரிவித்தனர். மீதி பெண்கள் ஆசை தூண்டுதல் உணர்வு மற்றும் திருப்தி இல்லை என தெரிவித்துள்ளதாக கூறியுள்ளார்.

  • தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருவதாவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
  • சீதோசன நிலை மாறி இருப்பதால் அனைவரும் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

  ஜெய்ப்பூர்:

  ராஜஸ்தான் முன்னாள் முதல்-மந்திரி அசோக் கெலாட் கடந்த சில நாட்களாக கடும் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். உடனே அவர் ஜெய்ப்பூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். பரிசோதனையில் அசோக்கெலாட்டுக்கு கொரோனா மற்றும் பன்றிக்காய்ச்சல் இருந்தது தெரியவந்தது.

  அவரது உடல்நிலை சீராக தற்போது சீராக இருப்பதாகவும், தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருவதாவும் மருத்துவ மனை நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

  இது தொடர்பாக அசோக் கெலாட் எக்ஸ் வலை தள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், டாக்டர்கள் மருத்துவ பரிசோதனையில் எனக்கு கொரோனா மற்றும் பன்றி காய்ச்சல் இருப்பது தெரியவந்ததால் அடுத்த 7 நாட்கள் யாரையும் சந்திக்க முடியாத சூழ்நிலையில் இருக்கிறேன். சீதோசன நிலை மாறி இருப்பதால் அனைவரும் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். 

  • ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் அரசியலில் இருந்து விலகி, வணிக வாழ்க்கையை தொடர இருக்கிறார்.
  • புதிய பொறுப்புகளை ஏற்கவும், தனது குடும்பத்துடன் கூடுதல் நேரம் செலவழிக்கவும் அரசியலில் இருந்து விலகுவதாக தெரிவித்தார்

  ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் ஸ்காட் மோரிசன் அரசியலில் இருந்து விலகுவதாக தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து அவர் கூறியதாவது, "ஆஸ்திரேலியாவை மேலும் வலுவான பாதுகாப்புமிக்க செழிப்பான ஒரு நாடாக மாற்ற, நாட்டின் உயரிய நிலையில் சேவையாற்றும் ஒரு வாய்ப்பை எனக்கு கொடுத்ததற்காக குடும்பத்தினர், நண்பர்கள், வாக்காளர்கள் ஆகியோருக்கு நன்றி. அனைத்துலக பெருநிறுவத்துறையில் புதிய பொறுப்புகளை ஏற்கவும், தனது குடும்பத்துடன் கூடுதல் நேரம் செலவழிக்கவும் இந்த முடிவை எடுத்துள்ளேன். மேலும், உலகளாவிய கார்ப்ரேட் துறையில் புதிய சவால்களை எடுப்பேன்" எனத் தெரிவித்தார்.

  கொரோனா பெருந்தொற்று காலங்களின் போது, அமைச்சரவைக்கோ, பதவியில் இருப்பவர்களுக்கோ அல்லது பொதுமக்களுக்கோ தெரிவிக்காமல், இரகசியமாக பல அமைச்சர்களின் பதவிகளில் தன்னை நியமித்துக் கொண்டவர் ஸ்காட் மோரிசன் என்பது குறிப்பிடதக்கது.  

  • அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 382 பேருக்கு தொற்று பாதிப்பு.
  • உத்தரகண்ட், மணிப்பூர் மற்றும் நாகாலாந்து தலா ஒருவர் பாதிப்பு.

  இந்தியாவில் கடந்த ஒரே நாளில் கொரோனாவின் துணை மாறுபாடு வகை ஜேஎன்.1 தொற்று பாதிப்பின் புதிய எண்ணிக்கை 1,513 ஆகி பதிவாகியுள்ளது.

  இந்திய ஜேஎன் 1 வகை கொரோனா தொற்று ஜெனோமிக்ஸ் கூட்டமைப்பின் (INSACOG) அறிவிப்பின்படி, மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் உள்பட தொற்று பாதிப்பின் புதிய எண்ணிக்கை 1,513ஆக உள்ளது.

  இதில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 382 பேரும், கர்நாடகாவில் 249 பேரும் ஜேஎன்1 வகை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

  தொடர்ந்து, ஆந்திராவில் 189 பேரும், கேரளாவில் 156 பேரும், குஜராத்தில் 126 பேரும், மேற்கு வங்கத்தில் 96 பேரும், கோவா 90 பேரும், தமிழ்நாட்டில் 89 பேரும்,

  ராஜஸ்தானில் 38 பேரும், தெலுங்கானாவில் 32 பேரும்,

  சத்தீஸ்கரில் 25 பேரும், டெல்லியில் 21 பேரும், உத்தரபிரதேசத்தில் 9 பேரும், அரியானாவில் 5 பேரும், ஒடிசாவில் 3 பேரும், உத்தரகண்ட், மணிப்பூர் மற்றும் நாகாலாந்து தலா ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

  கொரோனா தொற்று பாதிப்பின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், விழிப்புடன் இருக்குமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

  • "கொரோனா.. உடல் காத்தோம்.. உயிர் காத்தோம்.." என்கிற புத்தக வெளியீட்டு விழா.
  • விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துக் கொண்டு பேசினார்.

  மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் எழுதிய "கொரோனா.. உடல் காத்தோம்.. உயிர் காத்தோம்.." என்கிற புத்தக வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

  இந்த விழாவில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துக் கொண்டு பேசினார். 

  அப்போது அவர்,"கொரோனா நோய் குறித்து புத்தகங்களில் நிறைய வெளிவர வேண்டும். இல்லையென்றால் ஒரு 20, 30 ஆண்டுகளுக்குப் பிறகு, உலகம் முழுவதும் கொரோனா வந்தது. அப்போது பாஜக ஆட்சி செய்தது. மோடி ஆட்சி செய்தார். அதனால்தான் இந்தியாவிற்கு கொரோனா வரவில்லை என்று சொன்னாலும் சொல்வார்கள்" என்றார்.

  • புதிதாக தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 609 ஆக உள்ளது
  • தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 92 சதவீதம் பேர் வீட்டிலிருந்தே சிகிச்சை பெற்று குணமாகி வருவதாக தகவல்

  கொரோனாவின் புதிய வகையான 'ஜேஎன்.1' வகை தொற்று, பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. கடந்த சில வாரங்களாக ஜே.என்.1 வகை உருமாறிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவ தொடங்கியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் புதிதாக தொற்று   பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு இலக்கங்களாக இருந்த நிலையில், தற்போது மூன்று இலக்கங்களாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 609 ஆக உள்ளது.

  இதனை தொடர்ந்து, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,368 ஆக உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், புதிய வகை கொரொனா தொற்றால் கேரளாவில் இரண்டு பேரும், கர்நாடகாவில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 92 சதவீதம் பேர் வீட்டிலிருந்தே சிகிச்சை பெற்று குணமாகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களுக்கு செல்லும் போது முக கவசம் அணியவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நோயிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4.4 கோடியாக அதிகரித்துள்ளது என்றும் பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் விகிதம் 98.81 சதவீதமாக உள்ளது எனவும் மத்திய சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

  • காய்ச்சல் பாதிப்பு இருந்தால் அருகே உள்ள சுகாதார மையம் மற்றும் ஆஸ்பத்திரிக்கு செல்ல அறிவுறுத்தி வருகின்றனர்.
  • பயணிகளுக்கு உதவும் வகையில் பிரத்யேகமாக மே ஐ ஹெல்ப் யூ சேவை கோவை விமான நிலையத்தில் செயல்பட்டு வருகிறது.

  கோவை:

  ஜே.என்.1 கொரோனா தொற்று பரவ தொடங்கியதில் இருந்து இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாள்தோறும் அதிகரித்து வருகிறது.

  அண்டை மாநிலமான கேரளாவில் தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை மற்றும் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.

  இதையடுத்து கேரளத்தையொட்டி உள்ள தமிழக எல்லையான கோவை மாவட்டத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

  மாவட்டத்தில் சுகாதாரத்துறை மூலம 4 நடமாடும் காய்ச்சல் கண்டறியும் குழு, 36 மருத்துவ குழுக்களும் அமைக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

  மேலும் கோவை மாநகராட்சியில் உள்ள 5 மண்டலங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

  மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளிலும் மாநகராட்சி பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் இணைந்து வீடு, வீடாக சென்று காய்ச்சல் பாதிப்பு உள்ளதா என பரிசோதித்து வருகின்றனர்.

  காய்ச்சல் பாதிப்பு இருந்தால் அருகே உள்ள சுகாதார மையம் மற்றும் ஆஸ்பத்திரிக்கு செல்ல அறிவுறுத்தி வருகின்றனர்.

  கோவை விமான நிலையத்திலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.

  கோவை விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, ஐதராபாத், டெல்லி, மும்பை உள்ளிட்ட பல நகரங்களுக்கும், ஷார்ஜா, சிங்கப்பூர் ஆகிய வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

  இந்த நிலையில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வருவதை அடுத்து, வெளிநாடுகளில் இருந்து கோவை வரும் பயணிகள் அனைவருக்கும் காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

  இதுகுறித்து விமான நிலைய இயக்குநர் செந்தில்வளவன் கூறியதாவது:-

  ஒவ்வொரு நாளும் சராசரியாக 23 முதல் 29 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

  கோவையில் இருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு செல்பவர்களுக்கு உதவும் வகையில் கோவை-மும்பை இடையே தினமும் காலை 9 மணிக்கும், இரவு 9 மணிக்கும் புதிய விமானங்கள் இயக்கப்படுகின்றன.

  இதுதவிர ஷார்ஜாவுக்கு வாரத்தில் 5 நாட்களும், சிங்கப்பூருக்கு வாரத்தின் அனைத்து நாட்களும் விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது.

  உருமாறிய கொரோனா பரவலை கண்காணிக்கும் வகையில், வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு காய்ச்சல் கண்டறியும் உபகரணங்கள் மூலம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

  இதுதவிர முதியவர்கள் குழந்தைகளுடன் வரும் பெண்கள் உள்ளிட்ட பயணிகளுக்கு உதவும் வகையில் பிரத்யேகமாக மே ஐ ஹெல்ப் யூ சேவை கோவை விமான நிலையத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த சேவைக்கு பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.

  இவ்வாறு அவர் தெரிவித்தார்.

  • கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,334 ஆக உயர்வு.
  • கேரளாவில் அதிகபட்சமாக 1,249, தமிழகத்தில் 190 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

  இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

  இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 761 புதிய கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. மேலும், நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கொரோனா பாதிப்பால் 12 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

  நாட்டில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,423 இலிருந்து 4,334 ஆக அதிகரித்துள்ளது.

  இதில், கேரளாவில் அதிகபட்சமாக 1,249, கர்நாடகாவில் 1,240, மகாராஷ்டிராவில் 914, தமிழ்நாட்டில் 190, சத்தீஸ்கர் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் தலா 128 என கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையாக உள்ளன.

  புதியதாக 12 பேர் இறந்துள்ளனர். இதில், ஐந்து பேர் கேரளாவில் இருந்தும், நான்கு பேர் கர்நாடகாவிலிருந்தும், இரண்டு பேர் மகாராஷ்டிராவிலிருந்தும், ஒருவர் உத்தரபிரதேசத்திலிருந்தும் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
  • தொற்றின் பாதிப்பு தீவிரமடைந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
  • கொரோனாவின் தாக்கத்தால் உயிரிழந்துள்ள சம்பவம் மக்களிடையே பதற்றம்.

  சென்னை ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்த 42 வயதான நபர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

  சம்பந்தப்பட்ட நபர் கடந்த 31ம் தேதி அன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

  இந்நிலையில், அந்த நபருக்கு தொற்றின் பாதிப்பு தீவிரமடைந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

  தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

  இந்த சூழலில், சென்னையில் ஒருவர் கொரோனாவின் தாக்கத்தால் உயிரிழந்துள்ள சம்பவம் மக்களிடையே மீண்டும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

  • இரண்டு பேர் கொரோனா தொடர்பான பாதிப்பால் உயிரிழப்பு.
  • கர்நாடகாவில் மொத்த பாதிப்பின் எண்ணிக்கை 702 ஆக உயர்வு.

  கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 173 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இரண்டு பேர் கொரோனா தொடர்பான பாதிப்பால் உயிரிழந்துள்ளதாகவும் அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

  இதன்மூலம், கர்நாடகாவில் மொத்த பாதிப்பின் எண்ணிக்கை 702 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  கடந்த 24 மணி நேரத்தில், 37 நோயாளிகள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  பெங்களூருவில் அதிகபட்ச சோதனைகள் நடத்தப்பட்டன. நடத்தப்பட்ட 2,616 சோதனைகளில், 82 பேருக்கு தொற்று உறுதியாக கண்டறியப்பட்டுள்ளது. இது மாநிலத்தின் பிற மாவட்டங்களுடன் ஒப்பிடும்போது மிக அதிகம் என தெரியவந்துள்ளது.