என் மலர்

  ஆஸ்திரேலியா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அதிகமான திமிங்கலங்கள் இன்னும் உயிருடன் இருப்பதாக நம்பப்படுகிறது.
  • ஆஸ்திரேலியாவில் திமிங்கலங்கள் கரை ஒதுங்குவது அரிதான விஷயமல்ல.

  கான்பெர்ரா :

  ஆஸ்திரேலியா நாட்டின் டாஸ்மேனியா தீவில் உள்ள மேக்வாரி துறைமுகத்துக்கு அருகே உள்ள கடற்கரையில் நேற்று 200-க்கும் அதிகமான திமிங்கலங்கள் கரை ஒதுங்கின. ஒரே நேரத்தில் கொத்து கொத்தாக திமிங்கலங்கள் கரை ஒதுங்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

  அவற்றில் பாதிக்கும் அதிகமான திமிங்கலங்கள் இன்னும் உயிருடன் இருப்பதாக நம்பப்படுகிறது. எனவே அவற்றை மீட்டு மீண்டும் கடலுக்குள் விடுவதற்கான முயற்சிகளில் கடற்படையினரும், தன்னார்வலர்களும் ஈடுபட்டுள்ளனர்.

  எனினும் திமிங்கலங்கள் கரை ஒதுங்கியுள்ள இடம் சிக்கலான பகுதியாக இருப்பதால் மீட்பு குழுக்களால் உடனடியாக அங்கு செல்ல முடியவில்லை என்று கூறப்படுகிறது.

  அதே சமயம் உள்ளூர் மக்கள் கரை ஒதுங்கிய திமிங்கலங்களை போர்வையால் மூடியும், வாளிகளில் தண்ணீர் ஊற்றியும் அவற்றை உயிருடன் வைத்திருப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆஸ்திரேலியாவில் திமிங்கலங்கள் கரை ஒதுங்குவது அரிதான விஷயமல்ல. கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இதே டாஸ்மேனியா தீவு கடற்கரையில் 500க்கும் அதிகமான திமிங்கலங்கள் கரை ஒதுங்கின. அவற்றில் சுமார் 100 திமிங்கலங்கள் மட்டுமே உயிர் பிழைத்தன.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • காயங்களுடன் கிடந்த நபரை மருத்துவ குழு அணுக விடாமல் கங்காரு தடுத்துள்ளது.
  • உயிருக்கு அச்சுறுத்தலாக இருந்ததால், அந்த விலங்கு சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்.

  சாதுவான விலங்காக கருதப்படும் கங்காரு ஆஸ்திரேலியாவை பூர்வீகமாக கொண்டது. இந்நிலையில் அந்நாட்டின் மேற்கு பகுதியில் மக்கள் தொகை குறைவாக உள்ள நகரமான ரெட்மண்டில் 77 வயது முதியவர் ஒருவர் உடலில் கடுமையான காயங்களுடன் தனது வீட்டில் கிடந்துள்ளார்.

  இது குறித்து அறிந்த உறவினர் ஒருவர் கொடுத்த தகவலின் பேரில் மருத்துவ குழுவினர் ஆம்புலன்சில் சம்பவ இடத்திற்கு சென்ற போது அந்த நபரை அணுக விடாமல் கங்காரு ஒன்று தடுத்துள்ளது. தொடர்ந்து அச்சுறுத்தலாக இருந்ததால், அந்த விலங்கு சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

  பின்னர் அந்த நபரை சோதித்தபோது அவர் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. இது குறித்த விசாரணையின் அடிப்படையில் காங்காருவை அந்த முதியவர் செல்ல பிராணியாக வளர்த்து வந்துள்ளார். தற்போது அவரது உயிரிழப்பிற்கு கங்காரு தாக்கியதே காரணம் என சந்தேகிக்கப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

  இதற்கு முன்னர் 1936 ஆண்டு நியூ சவுத் வேல்ஸ் நகரில் ஒரு பெரிய கங்காருவிடமிருந்து இரண்டு நாய்களை மீட்க முயன்ற வில்லியம் என்ற நபர் அந்த விலங்கால் கடுமையாக தாக்கப்பட்டு உயிரிழந்தார். அதற்கு பின்னர் 86 ஆண்டுகள் கழித்து கங்காரு தாக்கி முதியவர் மரணமடைந்தது, அந்நாட்டின் அபாயகரமான தாக்குதலாக கருதப்படுகிறது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஆஸ்திரேலிய அணி 3வது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றது.
  • நியூசிலாந்துடனான ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் செய்தது ஆஸ்திரேலியா.

  கெய்ர்ன்ஸ்:

  நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. அத்தொடரின் முதல் 2 ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

  இந்நிலையில், தொடரின் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.

  அதன்படி, முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 267 ரன்கள் குவித்தது. பொறுப்புடன் ஆடிய ஸ்டீவ் ஸ்மித் சதமடித்து அசத்தினார். அவர் 105 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். லபுஸ்சேன் 52 ரன்களும், அலெக்ஸ் கேரி 42 ரன்களும் எடுத்தனர்.

  நியூசிலாந்து அணி சார்பில் போல்ட் 2 விக்கெட்டும், டிம் சவுதி, லாக்கி பெர்குசன், சான்ட்னர் தலா 1 விக்கெட்டு வீழ்த்தினர்.

  இதையடுத்து, 268 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. அந்த அணியில் அதிகபட்சமாக கிளென் பிலிப்ஸ் 47 ரன்கள் எடுத்தார்.ஜேம்ஸ் நீஷம் 36 ரன்னும், பின் ஆலன் 35 ரன்னும், சாண்ட்னர் 30 ரன்னும் எடுத்தனர்.

  இறுதியில் நியூசிலாந்து அணி 49.5 ஓவர்களில் 242 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி ஒருநாள் தொடரில் 3-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணியை ஒயிட்வாஷ் செய்துள்ளது.

  ஸ்டீவ் ஸ்மித்துக்கு ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது ஆகியவை அளிக்கப்பட்டது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பப்புவா நியூ கினியா தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
  • இது 7.7 ரிக்டர் அளவுகோலில் பதிவானது.

  சிட்னி:

  ஆஸ்திரேலியாவின் அண்டை நாடான பப்புவா நியூ கினியா அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவாகியிருந்தது.

  இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 65 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.

  சில வினாடிகள் நீடித்த நிலநடுக்கத்தின்போது வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் பீதியடைந்த மக்கள் அலறியடித்தபடி வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்தனர்.

  நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் வெளியாகவில்லை.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பிஞ்ச் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
  • நாளை நடைபெற உள்ள நியூசிலாந்துடனான 3-வது ஒருநாள் போட்டி அவரது கடைசி போட்டி ஆகும்.

  சிட்னி:

  ஆஸ்திரேலிய அணியின் கேப்டனான ஆரோன் பிஞ்ச் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

  நாளை நடைபெற உள்ள நியூசிலாந்துடனான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியுடன் ஓய்வுபெற உள்ளேன் என தெரிவித்துள்ளார்.

  2013-ல் ஒருநாள் போட்டிகளில் அறிமுகமான ஆரோன் பிஞ்ச் இதுவரை 145 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார். 17 சதங்கள், 30 அரை சதங்கள் உள்பட 5,402 ரன்கள் எடுத்துள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 232 ரன்கள் எடுத்துள்ளது.
  • அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா 233 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

  கெய்ர்ன்ஸ்:

  நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது.

  முதலாவது ஒருநாள் போட்டி ஆஸ்திரேலியாவின் கெய்ர்ன்ஸில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீசுவதாக அறிவித்தது.

  அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 232 ரன்கள் எடுத்தனர். கான்வே 46 ரன்னும், வில்லியம்சன் 45 ரன்னும், லாதம் 43 ரன்னும் எடுத்தனர்.

  ஆஸ்திரேலியா சார்பில் மேக்ஸ்வெல் 4 விக்கெட்டும், ஹேசில்வுட் 3 விக்கெட்டும், ஸ்டார்க், ஆடம் ஜாம்பா தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

  இதையடுத்து, 233 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. நியூசிலாந்து பந்து வீச்சாளர்கள் தொடக்கத்தில் அசத்தலாக பந்து வீசினர். இதனால் 44 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

  அடுத்து இறங்கிய அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன் ஆகியோர் நிதானமாக ஆடி அரை சதமடித்தனர். இந்த ஜோடி 6வது விக்கெட்டுக்கு 158 ரன்கள் சேர்த்தது. அலெக்ஸ் கேரி 85 ரன்னில் அவுட்டானார்.

  இறுதியில், ஆஸ்திரேலியா அணி 8 விக்கெட் இழப்புக்கு 233 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. கிரீன் 89 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

  நியூசிலாந்து சார்பில் போல்ட் 4 விக்கெட்டும், மேட் ஹென்றி, பெர்குசன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதன்மூலம் ஆஸ்திரேலியா அணி ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 141 ரன்னில் சுருண்டது.
  • அடுத்து ஆடிய ஜிம்பாப்வே 142 ரன் எடுத்து ஆறுதல் வெற்றி பெற்றது.

  டவுன்ஸ்வில்லி:

  ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ள ஜிம்பாப்வே அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடியது. முதலாவது மற்றும் 2-வது ஒரு நாள் போட்டிகளில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

  இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே பந்துவீச்சை தேர்வு செய்தது.

  அதன்படி முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 31 ஓவர் முடிவில் 141 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் டேவிட் வார்னர் பொறுப்புடன் ஆடி 94 ரன்கள் எடுத்தார்.

  ஜிம்பாப்வே அணி சார்பில் ரியான் பர்ல் 5 விக்கெட்டும், பிராட் இவான்ஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

  இதையடுத்து 142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே அணி ஆடியது. மருமானி மற்றும் கேப்டன் சகபாவா ஆகியோர் நிதானமாக ஆடினர். மருமானி 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். முனியாங்கோ 17 ரன்னில் அவுட்டானார்.

  இறுதியில் ஜிம்பாப்வே அணி 39 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 142 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. அந்த அணியின் கேப்டன் சகபாவா 37 ரன்களுடன் அவுட் ஆகாமல் இருந்தார்.

  ஆஸ்திரேலியா சார்பில் ஹேஸ்லேவுட் 3 விக்கெட்டு வீழ்த்தினார். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஐ.சி.சி. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி 16 நாடுகள் பங்கேற்கின்றன.
  • முதல் சுற்றில் இருந்து 4 நாடுகள் ‘சூப்பர் 12’ சுற்றுக்கு தகுதி பெறும்.

  மெல்போர்ன்:

  ஐ.சி.சி. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 16-ந்தேதி முதல் நவம்பர் 13-ந்தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது.

  இந்தப் போட்டியில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன. இந்தியா, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து உள்பட 8 நாடுகள் நேரடியாக 'சூப்பர் 12' சுற்றில் விளையாடுகிறது. முதல் சுற்றில் இருந்து 4 நாடுகள் 'சூப்பர் 12' சுற்றுக்கு தகுதி பெறும்.

  வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, ஜிம்பாப்வே உள்ளிட்ட 8 நாடுகள் முதல் சுற்றில் விளையாடுகிறது.

  இந்த நிலையில் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

  சிங்கப்பூரில் பிறந்த ஆஸ்திரேலியாவை சேர்ந்த டிம் டேவிட் உலக கோப்பை அணியில் இடம்பெற்று உள்ளார். அவர் 14 இருபது ஓவர் போட்டியில் விளையாடி இருக்கிறார். ஐ.பி.எல். போட்டியில் அவர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

  ஆல் ரவுண்டரான டிம் டேவிட் உலக கோப்பை போட்டிக்கு முன்பு இந்தியாவுக்கு எதிராக நடைபெறும் 20 ஓவர் தொடரிலும் ஆடுகிறார்.

  இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் தொடரில் தொடக்க வீரர் வார்னருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு உள்ளது.

  20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி வீரர்கள் வருமாறு:-

  ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), கும்மின்ஸ் (துணை கேப்டன்), டேவிட் வார்னர், மேக்ஸ்வெல், மிச்சேல் மார்ஷ், ஸ்டீவ் சுமித், கானே ரிச்சர்ட்சன், ஸ்டார்க், ஸ்டோனிஸ், ஆஸ்டன் ஆகர், டிம் டேவிட், ஹாசல்வுட், ஜோஸ் இங்லிஸ், மேக்யூ வாடே, ஆடம் ஜம்பா,  டிம் டேவிட்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ‘டாஸ்மேனியன் புலி’ 1930-ல் வரை பூமியில் வாழ்ந்தன.
  • உலகின் கடைசி டாஸ்மேனியன் புலி 1936-ம் ஆண்டில் இறந்தது.

  மெல்போர்ன் :

  ஆஸ்திரேலியாவின் 'டாஸ்மேனியன் புலி' உலகில் அழிந்துபோன விலங்கினங்களில் ஒன்றாகும். இவை தைலசின் என்றும் அழைக்கப்படுகின்றன. இந்த புலிகள் 1930-ல் வரை பூமியில் வாழ்ந்தன. அதன்பின்னர் வேட்டையாடுதல், ஒருவகையான நோய் காரணமாக இந்த வகை புலி இனங்கள் அழித்தன.

  ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியா மாகாணத்தில் உள்ள உயிரியியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த உலகின் கடைசி டாஸ்மேனியன் புலி 1936-ம் ஆண்டில் இறந்தது.

  இந்த நிலையில், ஸ்டெம் செல், ஜீன் எடிட்டிங் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அழிந்துபோன டாஸ்மேனியன் புலி இனத்தை மீண்டும் பூமிக்கு கொண்டு வரும் முயற்சியில் ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இறங்கியுள்ளனர்.

  டாஸ்மேனியன் புலியை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறது. இந்த சமீபத்திய திட்டம் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மற்றும் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஆராய்ச்சி நிறுவனத்தின் கூட்டு முயற்சியில் வந்துள்ளது.

  இதுகுறித்து ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஆண்ட்ரிவ் பாஸ்க் பேசும்போது, "இதற்காக டாஸ்மேனியன் புலியை போன்ற ஜீன் அமைப்புடைய விலங்கின் ஸ்டெம் செல்லை பிரித்து எடுக்க இருக்கிறோம். பின்னர் ஜீன் எடிட்டிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும். இன்னும் 10 ஆண்டுகளில் டாஸ்மேனியன் புலியை மீண்டும் பார்க்க முடியும் என்று நம்புகிறோம்" என்று தெரிவித்தார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஆஸ்திரேலியாவில் கடுமையான துப்பாக்கி சட்டங்கள் அமலில் உள்ளன.
  • ஆனாலும் அங்கு துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  கான்பெரா:

  ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணம் போகியில் உள்ள கால்நடைகள் பண்ணை மீது நேற்று காலை மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார்.

  இந்த தாக்குதலில் 3 பேர் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் பலியாகினர். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

  தகவலறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று குண்டு பாய்ந்து காயமடைந்தவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை போலீசார் தேடிவருகின்றனர். விசாரணையில், துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.

  உலகிலேயே கடுமையான துப்பாக்கிச் சட்டங்கள் இருந்தும் இந்தத் தாக்குதல் நடந்திருப்பது ஆஸ்திரேலியாவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

  ×